தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் ப்ளோர் - 2கப்
சர்க்கரை - 3/4 கப்
ஆல்மண்ட்(பாதாம்) - 1கப்
முட்டை - 2
வெனிலா எஸ்சென்ஸ் - 2ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 1/2ஸ்பூன்
செமி ஸ்வீட் சாக்லட் சிப்ஸ் - 1/4 கப்
எண்ணெய் - 1/4கப்
செய்முறை
முட்டையை இரண்டு மணி நேரம் முன்பு பிரிட்ஜ்-லிருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
மிதமான சூட்டில் பாதாம்களை வறுத்து எடுத்து வைக்கவும். (சூடு மிகக் குறைவாக இருக்க வேண்டும்..சுமார் 5 நிமிடங்களில் பாதாம் வறுபட்டு வெடிக்க ஆரம்பிக்கும். அப்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்)
ஆல் பர்ப்பஸ் ப்ளோர் உடன் பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு முறை சலித்துக்கொள்ளவும்.
முட்டைகளை உடைத்து அத்துடன் வெனிலா எஸ்சென்ஸ் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கவும்.
அத்துடன் எண்ணெயை சேர்த்து கலக்கவும்.
முட்டை கலவையுடன் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும்வரை கலக்கவும்.
இத்துடன் சலித்து வைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
வறுத்து வைத்த பாதாம்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.
மாவு தூவிய டேபிள்டாப்பில் பிஸ்கோட்டி கலவையை எடுத்து வைக்கவும். கைகளில் மாவு தொட்டுக்கொண்டு, மாவுக்கலவையை நீளமாகத்தட்டவும். பின்னர் மாவுக்கலவையை இரண்டாகப் பிரிக்கவும்.
ஒரு பகுதியில் சாக்லேட் சிப்ஸ்-களை பதித்து, எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் மாவுக் கலவைகளை வைக்கவும்.
350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் வைத்து 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.
பிஸ்கோட்டியை அவன்-ல் இருந்து வெளியே எடுத்து வைக்கவும். சுமார் 7 நிமிடங்கள் கழித்து பேக்கிங் ட்ரே-யில் இருந்து எடுத்து கத்தியால் தேவையான அளவிற்கு நறுக்கவும்.
நறுக்கிய பிஸ்கோட்டிகளை பேக்கிங் ட்ரேயில் அடுக்கி மீண்டும் 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.
பேக்கிங் ட்ரேயை வெளியே எடுத்து பிஸ்கோட்டிகளை திருப்பி அடுக்கி மேலும் 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.
பிஸ்கோட்டிகள் தயார்! காபி, டீ அல்லது பாலுடன் பரிமாறுங்கள்.
எக்லெஸ் பிஸ்கோட்டிக்கான செய்முறை காண இங்கே க்ளிக் செய்யவும்.
குறிப்பு
- பிஸ்கோட்டிகளுடன் விருப்பமான நட்ஸ் வகைகள் சேர்த்து பேக் செய்யலாம்.
- சாக்லேட்டை மெல்ட் செய்து இறுதியாக பிஸ் கோட்டிகள் மீது ஊறி, பிரிட்ஜில் குளிரவைத்துஉபயோக்கிகலாம்.
- கேக் செய்வது போல பல்வேறு சுவைகளில் இந்த பிஸ்கோட்டிகளையும் செய்யலாம்.
ஏற்கனவே பார்த்து ரசிச்சு ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சதுதான்.. மறுபடியும் ரசிக்கத் தான் முடியுது.. என்னைக்கு ருசிக்கப் போறேனோ :)
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு மஹி , கூடவே காபி வேற போட்டு வச்சு இருக்கிங்க செய்து தான் சாப்பிட முடியலை . கற்பனைல ஒரு இரண்டு பீஸ் எடுத்துகிட்டேன் , ரொம்ப நல்லா இருந்தது.
ReplyDeleteநல்ல அருமையான ரெசிப்பி. பாதாமிற்க்கு பதில் வேறு எந்த பருப்பு சேர்க்கலாம்.
ReplyDeleteநீங்க செய்கிற கேக், பிஸ்கட், மற்றும் ஸ்வீட்ஸ் எல்லாமே அருமை..
ReplyDelete(என்ன மாதிரி ஆளுங்களுக்கு முட்டை இல்லாமலும் கொஞ்சம் செய்ங்க மஹி.)
நன்றி சந்தனா,சாரு, தர்ஷினி, விஜி!!
ReplyDeleteவிஜி,ஆல்மண்டுக்கு பதிலா வால்நட்,பிகான்,கேஷூ போடலாம்..ஆரஞ்சு ப்ளேவர், லெமன் ப்ளேவர் சேர்த்தும் செய்யலாம்.
கண்ணாலேயே சுவைத்ததற்கு நன்றி சாரு.:)
சந்தனா, பிரிண்ட் அவுட் எடுத்து வைச்சிருப்பது எக்லஸ் பிஸ்கோட்டி..தர்ஷினி மாதிரி சைவம் சாப்பிடறவங்களுக்கு..இதுதான் உனக்கான ரெசிப்பி. :)
தர்ஷினி, உங்களுக்காகத்தானே "இங்கு" போய்ப் பாருங்கன்னு லிங்க் குடுத்திருக்கேன்! :)
மகி, இந்த ரெசிப்பி முன்பு ஒரு முறை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. நேரம் கிடைக்கும் போது மீண்டும் செய்து பார்க்க வேண்டும்.
ReplyDeleteநன்றி வானதி..செய்து பாருங்க!
ReplyDelete