Tuesday, March 9, 2010

ஆரஞ்ச் கப்கேக்

தேவையான பொருட்கள்
செல்ப் ரைசிங் ப்ளோர் - 2கப்
பேக்கிங் சோடா-1/4ஸ்பூன்
சர்க்கரை-1கப்
ஆரஞ்ச் பழம்-2
மஞ்சள் மற்றும் சிவப்பு கலர்-சில துளிகள்
முட்டை-3
வெண்ணெய்-115 கிராம்
(முட்டையும்,வெண்ணெயும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்)

செய்முறை
மாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து சலித்துக்கொள்ளவும்.

ஆரஞ்சுப் பழங்களின் தோலை காய்துருவியில் துருவி வைக்கவும். பழங்களைப் பிழிந்து ஜூஸ் எடுத்து வைக்கவும்.

வெண்ணெயை எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும். வெண்ணெய் கொஞ்சம் மென்மையானதும் சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.

சர்க்கரை,வெண்ணெய் சேர்ந்து உளுந்துமாவு பதத்துக்கு வரும் வரை கலக்கவும்.

முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து மஞ்சள் கருக்களை மட்டும் வெண்ணெய்+சர்க்கரை கலவையுடன் சேர்க்கவும். வெள்ளைகருக்களை தனியாக வைக்கவும்.

துளிகள் சிவப்பு மற்றும் துளிகள் மஞ்சள் நிறத்தையும் சேர்த்து கலக்கவும். நன்கு கலந்தபின்னர் ஆரஞ்ச் ஜூசையும் சேர்த்து கலக்கவும்.

மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து விஸ்க் கொண்டு மெதுவாக கலக்கவும்.

வெள்ளைக் கருவை நன்றாக நுரைக்கும்படி கலந்து மாவுக் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

இறுதியாக துருவிய ஆரஞ்சுத் தோல் சேர்த்து கலக்கவும்.

கப் கேக் பானில் லைனர் வைத்து ஒரொரு கப்பிலும் முக்கால் பாகம் கேக் மிக்ஸ்-ஐ வைக்கவும்.

350Fப்ரீஹீட் செய்த அவனில் 35நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.

கப்கேக் ரெடியாகிவிடும். அதனை நன்றாக ஆறவிட்டு(2மணி நேரங்கள்) உங்களுக்கு விருப்பமான ஐசிங் கொண்டு அலங்கரிக்கவும்.



8 comments:

  1. Mahi, looking yummy!! Why are you adding baking soda for the self rising flour?. Isn't it already added??

    ReplyDelete
  2. The pack said only Baking powder and salt are added..thats y!! :)

    Thanks Vanathy!

    ReplyDelete
  3. Awesome looking cup cake. Loved the presentation.

    ReplyDelete
  4. இது நான் செய்யமாட்டேன் , நீங்க வந்து தான் செஞ்சு தரணும் . 4 கேக் எடுத்துகிடேன் ( பெருமூச்சு தான் விட முடியுது) ரொம்ப நல்லா இருக்கு உங்கள் கப் கேக்

    ReplyDelete
  5. இதுவும் நல்லாயிருக்கு மஹி.. ம்ம்.. பசிக்குது.. வெரி யம்மி..

    ReplyDelete
  6. நன்றிங்க சிட்சாட்,சாரு,சந்தனா!
    சாரு,நாலு என்ன கணக்கா? தாராளமா எல்லாத்தையும் எடுத்துக்கோங்க, உங்களுக்கில்லாததா? :)

    ReplyDelete
  7. கப் கேக் சூப்பர்ர் மகி!!

    ReplyDelete
  8. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேனகா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails