Sunday, March 21, 2010

என்னைக் கவர்ந்த பத்து பெண்கள்

என்னைக் கவர்ந்த பத்து பெண்கள்..மகளிர் தினத்தின் ஸ்பெஷல் தொடர்பதிவாக துவங்கி சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டிருக்கிறது..ஒவ்வொருவருக்கும் தன்னைப் பெற்று வளர்த்த தாயிலிருந்துதான் உலகமே தொடங்குகிறது.என் தாயும், என் மூத்த சகோதரியும் எனக்குப் பிடித்த பெண்கள் பட்டியலில் முதலிடம் பெறுவார்கள். ஆனால் உறவினர்கள் இந்த லிஸ்ட்ல வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தத் தொடர் பதிவு வந்திருக்கு..எனவே அவர்களை எண்ணிக்கையில் சேர்க்காமல் என்னைக் கவர்ந்த பத்து பெண்கள் பட்டியல்..இப்போதைக்கு நினைவிற்கு வரும் பெண்மணிகள் இவர்கள்..நிறையப் பேர் இந்தப் பதிவை எழுதிட்டாங்க, அவர்கள் பதிவில் வந்தவர்கள் என் பதிவிலும் ரிபீட் ஆகக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எழுதிருக்கேன்..ஹேப்பி ரீடிங்! :)



கோனியம்மன்
இவங்க எங்க ஊர்ல பிரசித்தமான பெண் தெய்வம்..கோவை மாநகரின் காவல் தெய்வம் என்பது மருவி கோனியம்மன்னு பெயர் வந்திருக்குன்னு சொல்லுவாங்க.இந்த அன்னையின் முகத்தைப் பாத்தாலே மெய் மறந்துபோகும்.கோனியம்மன் மட்டுமில்லாமல், எங்கள் கல்லூரியில் இருக்கும் நிர்மலமாதா, அருகிலேயே புலியகுளம் புனித அந்தோணியார் கோயில் மேரி மாதா உட்பட எல்லாப் பெண் தெய்வங்களையும் எனக்குப் பிடிக்கும்.

டெய்சி டீச்சர், சிஸ்டர் லிண்டா
டெய்சி டீச்சர்..நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கையில் என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை.. என் வயதிலேயே அவர்களுக்கும் ஒரு மகன்.என்னையும் தன் மகள் போலவே ஸ்பெஷல் அன்புடன் நடத்தியவர்..வருடங்களாகியும் இன்னும் நினைவில் நிற்கும் ஆசிரியை.
சிஸ்டர் லிண்டா..நான் பி.எஸ்.சி. படிக்கையில் தமிழ் போதித்த சகோதரி..மிகவும் பொறுமையான குணம்..அவர் விளக்கம் தரத்தர அத்தனையையும் கட- கடவென குறிப்பெடுத்துக் கொண்டது நினைவு வருகிறது.

சிவகாமியின் சபதம் சிவகாமி

கல்கியின் இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்து முடித்தவுடன் எனக்குள் எழுந்த கேள்வி சிவகாமி எடுத்த முடிவு சரியா இல்லையா என்பதுதான்..புலிகேசி சிவகாமியை சிறை வைத்திருக்கும் மாளிகைக்கு வரும் மாமல்லர் சிவகாமியைத் தன்னுடன் வந்துவிடுமாறு கேட்கையில், 'இப்படி ஒளிந்து வரமாட்டேன்..உலகறிய படை திரட்டி வந்து என்னைச் சிறை எடுத்தவனை அழித்து என்னை சிறை மீட்டுப் போ' என்று கூறிய சிவகாமியின் சுய மரியாதை என்னைக் கவர்ந்த ஒன்று. ஆனால் ஒருத்திக்காக இரு நாடுகள் போரிட்டு பலர் உயிரிழந்து, சிவகாமி விடுதலையாகி இறைவனுக்கு தொண்டு புரியப் போகையில், அவளது சுயமரியாதையின் விலை மிக அதிகமோ என்றும் தோன்றுகிறது!!


ரமணி
சந்திரன்

இவரது நாவல்கள்ள நான் முதல் முதலில் படித்த நாவல் 'மயங்குகிறாள் ஒரு மாது' ..விவரம் தெரியாத வயதிலேயே ரொம்ப பிடித்த எழுத்தாளரா மாறிட்டாங்க..இப்பல்லாம் இவரது கதைகளைப் படிக்கும்பொழுது கொஞ்சம் காமெடியா இருந்தாலும், இன்னும் இவங்க எழுத்துகள்ள எனக்கு இருக்கும் மயக்கம் முழுவதும் தெளியவில்லை. எல்லாக் கதைகளையும் சுபமாகவே முடிப்பாங்க.

டாக்டர்.ஜெயா ஸ்ரீதர்
எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி பரவ ஆரம்பித்த புதிதில் ஜூனியர் விகடன்ல "எய்ட்ஸ் எரிமலை" என்ற தொடரை எழுதியவர்..இப்பொழுதும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சேவை செய்துவருகிறார். நடிகர் ஜெமினி கணேசனின் மகள். நினைவெல்லாம் நித்யா என்ற படத்தில் ஹீரோயினா நடிச்சிருக்காங்க.

எல்லன் டி ஜெனரஸ்
இவர் ஒரு காமெடியன்,நடிகை, டிவில டாக் ஷோ நடத்துபவர். பைண்டிங் நீமோ படத்துல டோரி என்ற பெண் மீன் கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்திருக்காங்க...2007 -ஆம் வருட ஆஸ்கர் அவார்ட் விழாவைத் தொகுத்து வழங்கியிருக்காங்க..இந்த வருடம் அமெரிக்கன் ஐடல்- நடுவர்கள்ள ஒருத்தர்.எனக்கு இவரது காமெடி டாக் ஷோ மிகவும் பிடிக்கும்.


பின்னணிப்
பாடகி சித்ரா

கேரளாவிலிருந்து தமிழ்த் திரையுலகிற்கு பறந்து வந்த சின்னக்குயில்..இவரது சிரித்த முகமும்,இனிமையான குரலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சிம்ரன்
தமிழ்த் திரையுலகில் பிடித்த நடிகைகள் பலர் இருந்தாலும், இப்ப,இந்த நிமிஷம் நினைவுக்கு வரது இவர்தான். :)

தன்னம்பிக்கை பெண்கள்
வாழ்க்கையில் வரும் சிறு சிறு பிரச்சனைகள் முதல் எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ,உடைந்து போகாமல், இன்னொருவரை எதிர்பார்க்காமல்,பிறருக்கு கஷ்டங்கள் தராமல், நலிந்தோருக்கு உதவி புரிந்து, ஒரு முறை வாழக் கிடைத்த வாழ்வை அர்த்தமுள்ளதாய் வாழ்ந்து முடித்த,வாழ்ந்து கொண்டிருக்கின்ற,வாழப்போகும் அனைத்து தன்னம்பிக்கைப் பெண்களையும் எனக்குப் பிடிக்கும். இவர்களை பத்து பெண்கள் என்று சிறிய எண்ணிக்கையில் அடக்க முடியாது..ஏனென்றால் உலகெங்கும் கோடிக்கணக்கில் இவர்கள் இருக்கிறார்கள்..சிலர் பிரபலங்களாக,பலர் குடத்திலிட்ட விளக்குகளாக...

இந்தத் தொடர் பதிவு எழுதும்படி என்னை அன்புடன் அழைத்த தோழி விஜிக்கு என் நன்றிகள். தொடர் பதிவைத் தொடருங்கள் என்று நான் அழைப்பது..
திருமதி.ஆசியா உமர்

11 comments:

  1. அழகான இடுகை மஹி. சிவப்பு ரோஜாக்களோடு, எளிமையாக அழகாக வெளியிட்டு இருக்கிறீர்கள். எழுதி உள்ள விதமும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பிடித்த பெண்கள் வரிசை அருமை மஹி

    ReplyDelete
  3. மஹி சூப்பர். நல்ல அழகாவே எழுதியிருக்கிங்க. என் அழப்பை ஏற்று நல்ல அழகா எழுதியதற்க்கு நன்றி. எனக்கும் சித்ரா பிடிக்கும். என் கூட படித்தவங்க பழகுவதற்க்கும் நல்ல டைப். பேசுகிற போதும் குரலும் நல்ல இனிமை+மெல்ல தான் பேசுவாங்க.
    டாக் ஷோ நானும் விரும்பி பார்ப்பேன். அமெரிக்கன் ஐடியல் நானும் பார்ப்பேன், அவங்களோட கமெண்ட்ஸ் ரொம்ப நல்லாவே இருக்க்கும். நைஸ் செலக்‌ஷன் மஹி.

    ReplyDelete
  4. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. அருமை மஹி.. கிச்சனைத் தாண்டி உங்களையழைத்து வந்த விஜிக்குத் தான் முதல் நன்றி..

    கடைசி பத்தியில கண் கலங்கிடுச்சு.. அருமை..

    ReplyDelete
  6. அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  7. மகி, அது எப்புடி கிட்டத்தட்ட என் selectionம் உங்களுடையதும் ஒரே மாதிரியே இருக்கு. என்னுடையது விரைவில் வரும்......( யார் கேட்டா என்று முணுமுணுப்பது காதில் விழுது. சும்மா ஒரு விளம்பரம் தான்)

    ReplyDelete
  8. அய்யோ என்னையும் இந்த தொடரில் மாட்டியாச்சா,பாடகி சித்ரா எனக்கு மிகவும் பிடிக்கும்,மற்ற தேடலும் அருமை,சரி நானும் ட்ரை பண்றேன்.மிக்க நன்றி மகி.

    ReplyDelete
  9. மஹி நல்லா தேர்ந்தெடுத்து எழுதியிருக்கீங்க.......

    ReplyDelete
  10. /( யார் கேட்டா என்று முணுமுணுப்பது காதில் விழுது./ நான் கேக்கல வானதி! ;)
    /சும்மா ஒரு விளம்பரம் தான்)/அப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க? என் கிச்சன் அவ்வளோ பிரபலமாயிடுச்சு,அதனால நீங்க இங்கே விளம்பரம் பண்ணறீங்களா? ரொம்ப நன்றிங்க!!ஹி,ஹி!
    ~~~
    ஆசியாக்கா, குட் கேர்ள்-ஆ உடனே எழுதிட்டீங்க..நன்றி!
    ~~~
    நன்றி கொய்னி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails