Wednesday, March 24, 2010

பரோட்டா


பரோட்டா...பலமுறை முயற்சி செய்து ஓரளவிற்கு செய்து பழகிட்டேன்.அதிலிருந்து ப்ரோசன் பாராட்டா வாங்கறதில்ல..மொத்தமா செய்து பிரீஸ் பண்ணிடுவேன்.

பரோட்டா செய்யும்போது ஆல் பர்ப்பஸ் மாவு யூஸ் பண்ணறதுக்கு பதிலா இண்டியன் ஸ்டோர்ல கிடைக்கும் 'மைதா மாவு' யூஸ் பண்ணினால் பரோட்டா ஸாஃப்ட்டா இருக்கு..ஆல் பர்ப்பஸ் ப்ளோர்ல செஞ்சா கொஞ்சம் ரப்பர் மாதிரி ஆயிடுது..இது ஒரு இணைய தளத்துல பாத்த டிப்ஸ்..ரெண்டு மாவுலயும் செய்து பார்த்தப்போ நல்லாவே வித்யாசம் தெரியுது. ஸோ, வெளிநாடுகள்ள இருக்கறவங்க நம்ம ஊர் கடைல கிடைக்கும் மாவுல ட்ரை பண்ணுங்க.

இது கடந்த முறை ஆல் பர்ப்பஸ் மாவுல செய்த பரோட்டா..



இந்த முறை திருமதி. அப்சரா அவர்கள் கொடுத்திருந்த ரெசிப்பியைப் பார்த்து, மைதா மாவுல செய்தேன்..அவங்க சொல்லியிருந்த அளவுக்கு பேக்கிங் பவுடர் சேர்க்க பயம்ம்மா :) இருந்ததால, அரை ஸ்பூன்தான் சேர்த்தேன்.பரோட்டா சூப்பரா வந்தது!! என் கணவர் எனக்கு 'பரோட்டா மாஸ்டர்'னு பட்டமே குடுத்துட்டார் போங்க. :D


அப்சரா,ஈசியான ரெசிப்பி தந்ததற்கு நன்றிங்க! :)

15 comments:

  1. Mahi(பரோட்டா மாஸ்டர்), looking yummy!! I will try this very soon.

    ReplyDelete
  2. looking yummy.... need more oil i think. :-(

    ReplyDelete
  3. பரோட்டா சூப்பரா இருக்குதுங்க, அப்படியே எடுத்து சாப்டலாம் போல இருக்குதுங்க.

    ReplyDelete
  4. Super o super parotta. I never attempt to make them at home. But after seeing ur illustrative pics, might consider making them :):) Your clicks are good.

    ReplyDelete
  5. பரோட்டா சூப்பர்பா இருக்கு சைட் டிஷ் கொடுங்க மஹி....//என் கணவர் எனக்கு 'பரோட்டா மாஸ்டர்'னு பட்டமே குடுத்துட்டார் போங்க.//ம்ம்...பட்டமெல்லாம் வாங்கிட்டீங்க!!!

    ReplyDelete
  6. பரோட்டா இனி உங்களிடம் ஆர்டர் கொடுக்கலாம்,சூப்பர்.மகி உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுத்து இருக்கிறேன்,என் ப்ளாக்கில் பெற்றுக்கொள்ளவும்.

    ReplyDelete
  7. பரோட்டா சுப்பர்.
    Mahi pls collect this award from my blog
    http://vijisvegkitchen.blogspot.com/2010/03/blog-post_26.html

    ReplyDelete
  8. பின்னூட்டம் தந்த அன்புள்ளங்களுக்கு நன்றி!
    ஆசியாக்கா&விஜி அவார்டுக்கு நன்றி!

    ReplyDelete
  9. //பலமுறை முயற்சி செய்து ஓரளவிற்கு செய்து பழகிட்டேன்.//

    பாவம் மஹி உங்க வீட்டு எலி :))

    ReplyDelete
  10. கண்டிப்பாஆஆஆஆஆஆஆ நானும் ஒரு நாள் முயற்சி பண்ணிப் பார்ப்பேன் மஹி! யம்மி..

    ReplyDelete
  11. //பாவம் மஹி உங்க வீட்டு எலி :))//ஹி,ஹி,எங்க வீட்டு எலி ரொம்ப சமர்த்து.நான் சமைச்சு குடுக்கறதை அமைதியா சாப்பிடும்.இப்ப எனக்கு பட்டம் குடுத்திருக்குன்னு சொல்லிருக்கேனே,பாக்கலையா நீ? ;)

    விடாமுயற்சியுடன்,'முயற்சி செய்து பார்ப்பேன்':) என்று சொன்னதுக்கு நன்றி!

    ReplyDelete
  12. மகி ரொம்ப அருமை பரோட்டா.

    ஒகே 25 பரோட்டா பார்சல் பிளீஸ்/

    ReplyDelete
  13. நன்றி ஜலீலாக்கா..அடுத்த முறை பரோட்டா செய்யும்போது கட்டாயம் அனுப்பிடறேன்.:)

    ReplyDelete
  14. மஹி இப்போதுதான் உங்களுடைய இந்த பகுதியை பார்வையிடுகின்றேன்.உங்கள் கைவண்னத்தில் பரோட்டா மிக அருமையாக உள்ளது.இது உங்கள் கைவண்ணம்.எனக்கு எதற்க்கு மஹி நன்றி?
    வாழ்த்துக்கள் மஹி...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails