Wednesday, June 16, 2010

ஒரு பொன்மாலைப்பொழுது..


இது ஒரு பொன்மாலைப் பொழுது..
வானமகள் நாணுகிறாள்..
வேறு உடை பூணுகிறாள்!

இந்தப் பாடலை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது..எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத எவர்க்ரீன் பாடலிது..இங்கே க்ளிக் பண்ணி கேளுங்க! :)

மஞ்சள் வெயில் பூமியைக் குளிப்பாட்டும் ஒரு
மாலைப்பொழுது...
தென்றல் காற்றில் தலையாட்டும் மலர்கள்..கொஞ்சம் மஞ்சள் வெயிலையும் பூசிக்கொண்டு
முகமன் கூறும் ஒரு இனிய மாலைப் பொழுது...

மேற்கில் புதையும் சூரியனின் பொன்னிற ஒளியில் நனைந்து
மரங்கள் தம் நிழலை பூமியில் சாய்த்து
இளைப்பாறும் இரவுக்கு தயாராகும் வேளை...

அந்திசாயும் வேளையில் அங்கங்கே தலைநீட்டும் குட்டி முயல்கள்..

மரத்தில் தாயுடன் சண்டையிடும் காக்கைக் குஞ்சு..

நட்புப்புன்னகையுடன் கடக்கும் தெரியாத முகங்கள்..

கையில் கேமராவுடன் காலாற ஒரு நடை போயிட்டு வரலாம்னு கிளம்பினேன்..என் கேமராவில் சிறை பிடித்த காட்சிகள்தான் இவை.

போட்டோ எடுப்பதற்காகன்னு ஸ்பெஷல் வாக் எல்லாம் போகவே இல்லைங்க..வழக்கமா போறதுதான்..நேற்று மட்டும் மறக்காம கேமரா எடுத்துட்டுப்போனேன்..நம்பிட்டீங்கள்ல?;)

நான் நிதானமா ஒண்ணரை மணி நேரம் நடந்து, வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்..பின்னாலேயே என் கணவரும் வந்துட்டாரு..சிம்பிள் வெஜிடபிள் சேமியா உப்மாவோடு டின்னர் முடிந்தது.

பொறுமையாய்ப் படித்து, எங்க ஊரை சுத்திப்பார்த்ததுக்கு நன்றி!

இன்னும் எங்க ஊரைச் சுற்றிப் பார்க்க ஆவலா? இங்கே வாங்க!

21 comments:

  1. summa sollakkoodaathu, unga oor romba nallaa irukku Mahi. Very nice clicks...so beautiful. delicious upma. lovely dish

    ReplyDelete
  2. kalaila unga blog pakkam vantha,kannuku kulirchiya irruku...Arumaiyana recipe kutave,arumaiyana pictures.Thanks a lot for ur valauble comments also.

    ReplyDelete
  3. Mahi, arumayana padankal..tamil unga kitta chumma thulli vilayaduthu..migavum nandru:-)

    ReplyDelete
  4. படங்களும் அதற்கு விளக்கமும் சூப்பர்..!!

    சிம்பிள் உப்புமா வாஆஆஆஆஆஆ..!!

    பாதிக்கு மேல பச்சைமிளகாயா தெரியுதேஏஏஏஏஜெய்லானீஈஈஈ.எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...!!

    :-))

    ReplyDelete
  5. வேணி,யு.எஸ்.ல இதுவரை நான் இருந்த இடங்கள் எல்லாமே அழகாய்த்தான் இருந்திருக்கு.கனடாவும் இதே மாதிரிதானே இருக்கும்?

    ப்ரேமா,நான் போஸ்ட் பண்ணியது உங்க மார்னிங் டைம்-ஆ? ரொம்ப சந்தோஷமா இருக்கு,உங்க கமெண்ட்டைப் பார்த்து. :)

    நிது,அப்படின்னா சொல்றீங்க? துள்ளி விளையாடுதா? ;) நன்றி!

    வானதி,இந்த முயல்தான் ஒரு நிமிஷம் நின்னு போஸ் குடுத்துச்சு..மற்றவை எல்லாம் ஒரே ஓட்டமா ஓடிப் போயிடுச்சு! :)

    ஜெய் அண்ணா,ஓடாதீங்க,நில்லுங்க.அது எல்லாமே கலர் குடைமிளகாய்,கேரட்-பீன்ஸ்..காரமெல்லாம் இல்லை.சாப்பிட வாங்க. :) :)

    ReplyDelete
  6. படங்கள் அருமை,விளக்கமும் சூப்பர்.

    ReplyDelete
  7. படங்கள் எல்லாம் சூப்பர் , சேமியா உப்புமா வாவ் ,சிம்ப்ளி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

    ReplyDelete
  8. பூவும்
    உப் பூ மாவும்
    நல்லாருக்கு.

    ReplyDelete
  9. ஆசியாக்கா,சாரு,மேனகா,மதுமிதா வருகைக்கும்,மேலான கருத்துகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  10. ஹாய் மகி,
    போடோஸ் பாத்த உடனே இது ஒரு பொன்மாலை பொழுது ,
    வானமகள் நானுகிறாள், னு பாட்டு நினைவு வருகிறது .
    nice pictures.
    hey கண்டு பிடிச்சாசா .
    கரெக்ட் மகி அந்த சௌம்யா தான் நான்.

    ReplyDelete
  11. சன் செட் படம் ஒன்னுகூட இல்லாம பொன் மாலைப் பொழுதை ஏத்துக்க மாட்டோம்ல..

    ReplyDelete
  12. Arumaiyana post Mahi. Unga koodaye oru evening walk pona mathiri iruku. Romba azhagana rasanai :)

    ReplyDelete
  13. வாவ்... படங்கள் எல்லாம் சூப்பர்...அதை விட உப்புமா சூப்பர்.... ரெசிபி போட்டா என்னவாம்?.... (என் கஷ்டம் எனக்கு...)

    ReplyDelete
  14. மகி படங்களும் விளக்கமும் அருமை!!!!!!!!!!!!

    ReplyDelete
  15. சௌம்யா,இதோ அந்த பாடல் லிங்க்கையும் சேர்த்துடறேன்! :)

    /சன் செட் படம் ஒன்னுகூட இல்லாம பொன் மாலைப் பொழுதை ஏத்துக்க மாட்டோம்ல../Grrrrrrrr! எட்டுமணி வரை சன்செட் ஆகவே இல்லை..உனக்காக வேணா, உங்கண்ணாத்தய சன்செட் போட்டோஸ் எடுத்துதரச் சொல்லி ஏட் பண்ணறேன்.

    மஞ்சு,இன்னும் நிறைய போட்டோஸ் எடுத்து வைச்சிருக்கேன்..அப்பப்ப என்னுடன் வாக்
    கூட்டிட்டுப்போறேன் உங்களை!

    புவனா,அந்த சேமியா உப்புமாவை க்ளிக் பண்ணிப்பாருங்க! முதல்லயே ரெசிப்பி குடுத்திருக்கேன்! :)
    http://mahikitchen.blogspot.com/2010/01/blog-post_22.html

    சுகந்திக்கா,வாங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  16. பாடல் கேட்டுக் கொண்டே ரசித்துப் படித்தேன். அழகு படங்கள் மகி. //நிதானமா ஒண்ணரை மணி நேரம் நடந்து//புரியுது. இந்த உப்புமாவை சாப்பிட வைக்கிறதுக்குத் தானே!
    //வழக்கமா போறதுதான்.// ம். //நம்பிட்டீங்கள்ல?// ம். ம். ;)


    ரோஸ் ஸ்வீட்.
    இரண்டாவது படமும் அழகாக இருக்கிறது.
    படம் 3. என்ன பூ?
    4. ? மரம்?
    5. ;) காட்டு மொப்ஸி.
    6. ;( காக்கைகள் இங்கே இல்லை.

    பி.கு
    உங்கள் உப்புமா குறிப்புப் பார்த்துச் சமைத்துச் சாப்பிட்டுப் பார்த்து இருக்கிறேன். சுவையாக இருந்தது மகி.

    ReplyDelete
  17. nice song mahi,
    i love illayyraj hits.
    nice attachment.

    ReplyDelete
  18. ரசித்து பார்த்ததுக்கு நன்றி இமா! நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியலை.:(

    6.இங்கேயும் அதிகம் இல்லை,இருப்பதுவும் இப்படி பெரிய காக்கைகளா தானிருக்கு..இதை அண்டங் காக்காய்-னு சொல்லுவோம் எங்க ஊர்ல.இன்னொரு வகை சிறுதலைக் காகம்.ஆடி18,புரட்டாசி அமாவாசை டைம்ல முன்னோர்களுக்கு படையல் வைக்கும்போது சிறுதலைக் காகத்துக்குதான் வெயிட்டிங் பலமா இருக்கும்.[எப்பூடி?? :) நீங்க ஒண்ணு கேட்டா,நான் வேற ஒண்ணு சொல்லுவேன்.:)))))]

    வருகைக்கும்,பி.கு.,-விற்கும் நன்றிங்க!

    சௌம்யா,பாட்டு கேட்டீங்களா? நன்றி!

    ReplyDelete
  19. நட்புப்புன்னகையுடன் கடக்கும் தெரியாத முகங்கள்..
    ...

    imama enta varigal romba romba pidithu eruku mahima..

    enta varthaigalai nan enda kirukalkalil use panikola permision venum..

    nandri
    siva

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails