Friday, June 11, 2010

பீர்க்கன் தோல் துவையல்


தேவையான பொருட்கள்
மீடியம் சைஸ் பீர்க்கங்காய் ஒன்றின் தோல்(காய் இளசாக இருந்தால் சுவை நன்றாக இருக்கும்
பச்சை மிளகாய் - 3 அல்லது காய்ந்த மிளகாய்-4 (சுவைக்கேற்ப)
தேங்காய்-கால் மூடி
கடலைப் பருப்பு-1 ஸ்பூன்
உளுந்துப் பருப்பு-1 ஸ்பூன்
புளி-கொட்டைப் பாக்களவு
வெங்காயம்-சிறிது(விரும்பினால்)
உப்பு
எண்ணெய்

செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் காயவைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் பருப்பு வகைகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பச்சை மிளகாய்,புளி சேர்த்து வதக்கி, தேங்காய் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வதக்கவும்.
வதக்கியவற்றை ஆறவைத்து, உப்பு சேர்த்து கொற-கொறப்பாக அரைத்தெடுக்கவும்.
சுவையான பீர்க்கன் தோல் துவையல் ரெடி.சாதம்,சப்பாத்தி,இட்லி,
தோசை எல்லாவற்றுக்கும் பொருத்தமாய் இருக்கும்.

இந்த சட்னி ரெசிப்பியை நிதுபாலா-வின் 'பெஸ்ட் அவுட் ஆப் வேஸ்ட்' ஈவன்ட்டிற்கு அனுப்புகிறேன்.


16 comments:

  1. ஆஹா...படங்களை இப்படி பார்க்க அழகாக இருக்கின்றது...முன்னே எல்லாம் slideshowயில் பொறுமையே இருக்காது பார்க்க...இப்பொழுது சூப்பப்ர்...வாழ்த்துகள்...சூப்பர் துவையல் ...அப்படியே இட்லியுடன் சாப்பிடுவேன்...

    ReplyDelete
  2. superb recipe Mahi..thanks for sending it to my event..

    ReplyDelete
  3. ஆஹா.. வாசனை இங்கே வரை வீசுதே..!!

    ReplyDelete
  4. ஆஹா துவையல் சூப்பராயிருக்கு.தயிர் சாதத்திற்க்கு தொட்டு கொள்ள பிடிக்கும்...

    ReplyDelete
  5. Kelvi pattu iruken aana sapitathillai. Enaku idlina romba pidikum. Super combination :)

    ReplyDelete
  6. பீர்க்கை தோலில் துவையலே செய்து விட்டீர்களே சூப்பர்.

    ReplyDelete
  7. மகி,எனக்கு இப்பவே வேணும் இட்லியும் துவையலும்.

    ReplyDelete
  8. superb chutney mahi...excellent with idlys

    ReplyDelete
  9. மகி சூப்பரா இருக்குது இட்லியும் சட்னியும்!!!

    ReplyDelete
  10. இட்லியும் துவையலும் எனக்கும் ஒரு பார்சல் ப்ளீஸ்.

    ReplyDelete
  11. hi,yen amma idhe madhri pannuvanga romba taste aa irrukkum.same quantities. same colour. same taste....very nice...mahi...

    ReplyDelete
  12. இட்லியைப் பார்த்தாலே மெதுனஸ் தெரிகிறது.சூப்பர்.

    ReplyDelete
  13. மகி, நல்லாயிருக்கு. பீர்க்ங்காய் என்பதன் ஆங்கில பெயர் என்ன?. பார்க்க நல்லா இருக்கு.

    ReplyDelete
  14. கீதா, மிகவும் நன்றி!
    நிது, நன்றி!
    ஜெய் அண்ணா,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி!
    மேனகா,நான் ஒயிட் ரைஸ்கூட பிசைந்து சாப்பிடுவேன்..நன்றி!
    மஞ்சு,செய்து பாருங்க.நல்லா இருக்கும்.
    ஸாதிகா அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ஆசியாக்கா,அப்படியே எடுத்துக்கோங்க..:) வருகைக்கு மிக்க நன்றி!
    வேணி,நன்றிங்க!
    சுகந்திக்கா,நன்றி!
    இமா, பார்சல் தானே? அனுப்பிட்டா போச்சு..:)
    பிரியா,வருகைக்கும் கருந்த்துக்கும் நன்றிங்க
    கோமா,நல்வரவு! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
    வானதி,பீர்க்கங்காயின் ஆங்கிலப் பெயர் "ridged gourd " இங்கே, ஏஷியன் மார்க்கெட், இந்தியன் ஸ்டோர்ல கிடைக்கும்..வாங்கிப் பாருங்க.எங்க வீட்டில இந்த காய் எங்க பேவரிட்.
    புவனா,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  15. I always inspired by you, your thoughts and way of thinking, again, thanks for this nice post.

    - Norman

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails