Monday, June 21, 2010

கத்தரிக்காய்-உருளைக்கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய்-5
உருளைக்கிழங்கு(சிறியது)-1
வெங்காயம்-சிறிது
பச்சைமிளகாய்-1
மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
தேங்காய்த்துருவல்-2ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
க.பருப்பு,உ.பருப்பு-தலா 1/2ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
கத்தரி,உருளையை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாய் நறுக்கிவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து,கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து, வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கத்தரி,உருளை,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தேவையான உப்பு சேர்த்து,கொஞ்சமாய் தண்ணீர்தெளித்து வேகவிடவும்.

காய்கள் வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்தப் பொரியல் அரிசிம்பருப்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்..பச்சைப்பயறு அல்லது எல்லாவிதமான பருப்பு கடைசலுடன் சாப்பிடலாம்..வெரைட்டி ரைஸ்-க்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு
விரும்பினால் உருளைக்கிழங்கின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.(என்னவருக்கு பிடிக்காது,அதனால் கொஞ்சமாய் சேர்ப்பேன்)
மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்க்காமல், காரத்திற்கேற்ப பச்சைமிளகாயின் அளவை அதிகரித்தும் இந்தப் பொரியலை செய்யலாம்.
சின்னவெங்காயம் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

21 comments:

 1. delicious poriyal...never tried this combination...looks good

  ReplyDelete
 2. கோயமுத்தூர் சமையல் அமெரிக்காவுல நல்லா வெல போறாப்ல இருக்கு, ஹூம், ஜமாய்ங்க.

  ReplyDelete
 3. Mahi, while cooking my mom uses 200g cup for weighing rice, dal etc ie, the basic... from my childhood, so i still follow that method...so app. i took 40g for that rasam. i have no proper scale except for baking cakes

  ReplyDelete
 4. சுலபமான பொரியல்தான் இது என்றாலும் புகைப்படமும் செய்முறை எழுதியுள்ள விதமும் உடனேயே செய்ய தூண்டுகிறது மகி!

  ReplyDelete
 5. மகி இப்பதான் நானும் இதையே போட்டிருக்கிறேன். ஆனா நான் தக்காளி சேர்த்து செய்வேன். பச்சைபயறும் இந்த பொரியலும் என்னோட favorite combination.

  ReplyDelete
 6. கத்திரிகாய் பி டி கத்திரிகாயா..ஹி.ஹி..ஆள விடுங்க சாமீ..எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்..

  ReplyDelete
 7. பொரியல் சூப்பரா இருக்கு

  ReplyDelete
 8. அதிகம் மற்ற பொருட்கள் சேர்காத இந்த ஈஸி பொரியல் எனக்கு ரொம்ப பிடித்தது .

  ReplyDelete
 9. Sema colourla parkave attractivea iruku. Naanum try panren :)

  ReplyDelete
 10. மிக அருமையாக இருக்கு,செய்து பார்க்கிறேன்..

  ReplyDelete
 11. இமா,வேணி,கவுண்டரய்யா,மனோமேடம்,
  தெய்வசுககந்திஅக்கா,ஜெய் அண்ணா,சாரு,மஞ்சு,மேனகா

  தங்கள் அனைவரின் வருகைகும்,மேலான கருத்துகளுக்கும் நன்றி!

  ReplyDelete
 12. இத கண்டிப்பா பண்ணிடலாம் மஹி :) ஆனா ஒரு நாளைக்கு ஒரு காய் தான் போடுவேன்.. ஓக்கை?

  //அதிகம் மற்ற பொருட்கள் சேர்காத இந்த ஈஸி பொரியல் எனக்கு ரொம்ப பிடித்தது//

  என்னைய விட சோம்பேறியா இருக்காரே? :)) அப்படியே சாப்பிடுங்க ஜெய்லானி.. இன்னமும் ஈஸி.. ஹி ஹி.. :)))))))

  ReplyDelete
 13. //என்னைய விட சோம்பேறியா இருக்காரே? :)) அப்படியே சாப்பிடுங்க ஜெய்லானி.. இன்னமும் ஈஸி.. ஹி ஹி.. :)))))))//

  இது வரை நா அப்படிதான் சாப்பிட்டு வரேன் .தெரியாதா... ஹய்யோ.. ஹ்ய்யோ...

  :-))

  ReplyDelete
 14. //யம், யம். :P// இது //மேலான கருத்து//
  அதுக்கு நன்றி. என்னவோ சொல்றீங்க மகி. புரியலை. பாவாயில்லை, நன்றி! :)

  ReplyDelete
 15. mahima

  super all..

  very easy to prepare//

  nice..

  thank you

  ReplyDelete
 16. ரெம்ப நாள் ஆச்சுப்பா இது சாப்ட்டு... அம்மா அடிக்கடி செய்வாங்க... அப்புறம் தான் உங்க tag பாத்தேன்... ஓ.... கோவை ஸ்பெஷல்? சொர்கமே என்றாலும்.... ஹும்.... நம்ம ஊரு தான் போங்க..... இந்த வாரம் செஞ்சு பாக்கறேன்... தேங்க்ஸ்

  ReplyDelete
 17. அம்மணி,நீ தினமும் சமைக்கிறே அப்படீங்கறதே என் காதில தேன் பாய்ஞ்ச மாதிரியிருக்கு.:):):)
  /ஆனா ஒரு நாளைக்கு ஒரு காய் தான் போடுவேன்.. ஓக்கை?/டபுள் ஓக்கை!

  /அப்படியே சாப்பிடுங்க ஜெய்லானி..//இது வரை நா அப்படிதான் சாப்பிட்டு வரேன் .தெரியாதா... ஹய்யோ.. ஹ்ய்யோ...////என்னதிது,ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் மிஞ்சறாங்களே..யாராவது என்னைக் காப்பாத்துங்க!! :-)

  புரிலையா இமா,இட்ஸ் ஓக்கை! :) மறுபடியும் நன்றி!

  சிவா,வாங்க,நல்வரவு! ஆமாம்..இது ஈஸியான ரெசிப்பிதான்..சீக்கிரம் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

  நன்றி வானதி!

  கரெக்ட்டா சொன்னீங்க புவனா! சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான்!

  ReplyDelete
 18. //புரிலையா இமா,// அவ்வ்வ்வ்!! இப்போ வந்து என்ன எழுதி இருக்கேன்னு படிச்சேனா... அமோ...கமா புரிஞ்சு போச்சு. சிரிக்கவும் பயமா இருக்கே!! :-)))

  ReplyDelete
 19. No kidding Imma, watch your smilies carefully,okie? ;)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails