Thursday, June 24, 2010

சால்ஸா சாஸ்

தேவையான பொருட்கள்
வெங்காயம்(பெரியது)-1
தக்காளி(மீடியம் சைஸ்)-4
பச்சைமிளகாய்-4
காய்ந்தமிளகாய்-2
புதினா-7இலைகள்

தனியா-1ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/4ஸ்பூன்
மல்லித்தூள்-1/2ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
எண்ணெய்-சிறிது
உப்பு

செய்முறை
வெங்காயம்,மிளகாய்,தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
மிக்ஸியில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் போட்டு, நாலைந்து முறை பல்ஸ்-ல் அரைக்கவும். இறுதியாக எண்ணெய் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஸ்பைஸி சால்ஸா ரெடி..சிப்ஸ்,கட்லட்,போண்டா,பஜ்ஜி இவற்றுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.
இதிலே காய்ந்த மிளகாயை தவிர்த்து, காரத்துகேற்ப பச்சை மிளகாயை சேர்த்து,அத்துடன் நாலைந்து ஸ்பினாச் இலைகளையும் சேர்த்து அரைத்தெடுத்தால் க்ரீன் சால்ஸா தயார்.
வெங்காயம்,தக்காளி,மிளகாயை முடிந்தளவு பொடியாக நறுக்கவேண்டும்.அரைத்தெடுக்கும்போது எல்லாப்பொருட்களும் ஒன்றும்-பாதியுமாக மட்டுமே அரைபட்டிருக்கவேண்டும்..இல்லையெனில் சால்ஸா சட்னி ஆகிவிடும்! :)


முக்கிய குறிப்பு
இந்த சால்ஸா-வை ஒவ்வொரு முறையும் செய்வது என் கணவர்தான்.ரெசிப்பியும் அவர் சொல்லியதுதான்.டைப்பிங்,போட்டோஸ் மட்டுமே நான் செய்தது.

(இந்த ரெசிப்பியை நானே தான் அவரிடம் கேட்டு ப்ளாக்ல போட்டிருக்கேன்..அவரா போடச் சொன்னாருன்னு யாரும் தவறா நினைச்சுடாதீங்க... :) :) : ) )

19 comments:

 1. மகி சல்சா எனக்குதான் :-). நான் ரொம்ப நாளா ட்ரை பண்ணனும்னு நெனைச்சுட்டு இருந்த ரெசிபி. இந்த வாரம் செய்யப்போறேன்.

  ReplyDelete
 2. //இல்லையெனில் சால்ஸா சட்னி ஆகிவிடும்! :)//

  அப்ப சாப்பிடும் போது இது சால்ஸா சாஸ் இல்ல இது சால்ஸா சட்னின்னு நெனச்சி சாப்பிட்டு விட வேண்டியதுதான். ஹி..ஹி..

  ReplyDelete
 3. //இந்த சால்ஸா-வை ஒவ்வொரு முறையும் செய்வது என் கணவர்தான்//

  எவ்வளவு தங்கமான மனசு உங்களுக்கு . ஆனா பல பேரு இந்த உண்மைய ஒத்துக்கிறது இல்லையே..

  ReplyDelete
 4. //ரெசிப்பியும் அவர் சொல்லியதுதான்.டைப்பிங்,போட்டோஸ் மட்டுமே நான் செய்தது.//

  இதை கேட்டு ஆனந்த கண்ணீரே வருது . தந்தை குலமே வாழ்க..!! இதுக்காகவே என் அடுத்த அவார்ட் உங்களுக்கு கண்டிப்பா இருக்கு.

  ReplyDelete
 5. //இந்த ரெசிப்பியை நானே தான் அவரிடம் கேட்டு ப்ளாக்ல போட்டிருக்கேன்..அவரா போடச் சொன்னாருன்னு யாரும் தவறா நினைச்சுடாதீங்க... :) :) : ) ) //

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 6. ம்..அப்புறம்..சாஸ் சூப்பர்.. பாக்கும் போதே ஜொள்ள்ள்ள்ள்ள்

  ReplyDelete
 7. அருமையாக இருக்கின்றது சால்ஸா....சூப்பர்ப்....தங்கமான கணவர் தான் போங்க...எப்ப பார்த்தாலும் பொறாமை பட வைக்கின்றிங்க...எல்லாம் பழைய நினைவுகள்....

  ReplyDelete
 8. delicious salsa...both are great...lucky you....

  ReplyDelete
 9. சூப்பர்ர்ர் சால்சா!! செய்து பார்க்கனும்...

  ReplyDelete
 10. சூப்பர் சால்சா,அட அட இன்று தான் சாலசா பற்றி பேச்சு வந்தது,இங்கு வந்து பார்த்தால் ரெசிப்பி.நன்றி.

  ReplyDelete
 11. yummy sauce,never had the homemade one...luks yum.

  ReplyDelete
 12. குடும்பமே கலைக் குடும்பமாயிருக்கே.. :)) முடிஞ்சா அவகோடா சட்னி எப்படி பண்றதுன்னு அண்ணாத்தைய செஞ்சு காமிக்கச் சொல்லுங்க.. :)

  ReplyDelete
 13. //ரெசிப்பியும் அவர் சொல்லியதுதான்.// நம்பவே... மாட்டேன். கொள்கலன், கண்டெய்னர் எல்லாம் காணோமே!! ;)

  ReplyDelete
 14. Mahi, nan thaan anaikey sonnen illa, avar samayal than superb-nu:-)

  Salsa nalla irukku..

  avara poda sonnarunu yaarum thavara nenichudatheena// illai, illai nenikavey illai!!!

  ReplyDelete
 15. ரொம்ப நல்லா இருக்கு மஹி , இன்னும் என்ன திறமை இருக்கோ எல்லாத்தையும் எடுத்து விடுங்கோ.

  ReplyDelete
 16. Mahi, super. My favorite recipe.

  ReplyDelete
 17. சல்சா டான்ஸ் தான் கேள்விபட்டு இருக்கேன்... இது புதுசா இருக்கே மேடம்.... சால்சா சாஸ்... ஒகே ஒகே நோ டென்ஷன்... ஆனா... சூப்பர் காரசார recipe ... தேங்க்ஸ்ங்க....

  ReplyDelete
 18. @தெய்வசுகந்திக்கா,நன்றி!
  @ஜெய் அண்ணா,வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!மாத்திச்சொல்லி பழக்கமில்லீங்க,அதான் அவர் செய்த ரெசிப்பியெல்லாம் அவர் இருக்க போட்டோஸ் கூடவே போடறேன்! :-))
  @கீதா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  @வேணி,மிக்க நன்றி!
  @நன்றி மேனகா!
  @ஆசியாக்கா,நிச்சயம் செய்து பாருங்க.காரசாரமா சூப்பரா இருக்கும்.
  @நன்றிங்க ப்ரேமா!
  @//முடிஞ்சா அவகோடா சட்னி எப்படி பண்றதுன்னு அண்ணாத்தைய செஞ்சு காமிக்கச் சொல்லுங்க.. :)//சொல்லிட்டேன்..சிப்போட்லே ஸ்பெஷல் Guacamole செய்யராறாம்! டெஸ்ட் பண்ண எலிதான் மிஸ்ஸிங்..நீ எப்ப வரேன்னு சொல்லு,செய்துடலாம். :) :)))
  @/கொள்கலன், கண்டெய்னர் எல்லாம் காணோமே!! ;)/ இந்த முறை நோ டிக்டேஷன் இமா..அதான் அதெல்லாம் வரலை.
  @சௌம்யா,நன்றிங்க!
  @நிது,நீங்க நம்பணும்னுதானே அந்த வரிகள மெனக்கெட்டு எழுதறேன்.தேங்க்ஸ் நிது!
  @சாரு,கட்டாயம் அப்பப்ப அப்டேட் பண்ணுவேன்..நன்றி சாரு!
  @வானதி,நன்றி!
  @புவனா,உங்க ரங்ஸ்-கிட்ட செய்ய சொல்லுங்க..சூப்பரா வரும்! :)

  கருத்து தெரிவித்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails