பீச் மஷ்ரூம்-200கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/4கப்
பச்சை மிளகாய்-2
புதினா -15இலைகள்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது
இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
மல்லித்தூள்-3/4ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
சீரகத்தூள்-1/2ஸ்பூன்
கரம் மசாலா-1/4ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
காளானை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,புதினா சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கிய பின்னர், மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,மல்லித் தூள்,சீரகத்தூள்,உப்பு சேர்த்து குறைந்த தணலில் நன்றாக வதக்கவும்.(மசாலாக்கள் கருகாமல் வதக்க வேண்டும்)
சுத்தம் செய்த காளானை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
ஆறேழு நிமிடங்களில் காளான் வெந்துவிடும்..இறுதியாக கரம் மசாலா தூள் சேர்த்து மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறவும்.
கடாய் மஷ்ரூம் சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்..வெரைட்டி ரைஸ்,சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம்.
பின்குறிப்பு
கடாய்ல செய்ததால இதுக்கு கடாய் மஷ்ரூம்னு நானே பேர் வைச்சுட்டேன்..இதான் கடாய் மஷ்ரூமான்னு எனக்கு தெரியாதுங்க.:)
அப்புறம், இதிலே உபயோகித்த புதினா இலைகள் எங்க தோட்டத்துல(!) விளைஞ்சது.:):)
அப்புறம், இதிலே உபயோகித்த புதினா இலைகள் எங்க தோட்டத்துல(!) விளைஞ்சது.:):)
ஈவினிங் டைமுக்கு அப்படியே சாப்பிட்டு ஒரு புதினா டீ குடிச்சாப்போதுமே !!!ஆ....ஹா....
ReplyDeleteWow, kadai mushroom looks tastee, interesting variation to the usual recipe
ReplyDeleteஅருமையாக இருக்கு...
ReplyDeleteromba nalla irukku Mahi....excellent try
ReplyDeleteVery tempting mahi,want to try it...very very delicious.
ReplyDeleteகடாய் மஷ்ரூம் இப்படியே தான் நானும் செய்வேன்,இது ஏற்கனவே ஹிட்டான ரெசிப்பி
ReplyDeleteஅது கடாய் மஷ்ரூம் இல்ல. பீச் மஷ்ரூம்.
ReplyDeleteமுதல் ரெண்டு படம் + கடாய்ல போட்ட உடனே மஷ்ரூம் அழகா இருக்கு.
//தோட்டத்துல(!) விளைஞ்சது.// எனக்கும் ஒரு கட்டு குரியர் ப்ளீஸ்.
டிஷ் பார்க்க ஆசையாக இருக்கு.
ஆனால்... ஒரு சந்தேகம்!
இது யார் சமைத்தது?
குறிப்பு யார் டிக்டேட் பண்ணியது?? யார் டைப் பண்ணியது???
சாயலே இல்லையே!! ;)
கடாய் மஷ்ரூம் சூப்பர்ப்...அதுக்குள்ளே புதினா தோட்டத்தில் வந்துவிட்டதா...சூப்பப்ர்ப்...மகி போட்டோஸுனை slideshowவில் போடாமல் அப்படியே போட்டால் இன்னும் கலக்கலாக இருக்கும்...
ReplyDeleteMahi, looking yummy. I like your mushrooms photo.
ReplyDeleteஜெய்லானி அண்ணா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! புதினா டீ & மஷ்ரூம்..சூப்பர் காம்பினேஷன்! :)
ReplyDelete~
ஆமாங்க மலர்..எப்பவும் ஒரே மாதிரி செய்வதற்கு பதிலா ஒரு முறை இப்படி செய்யலாம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~
பாராட்டுக்கு நன்றி மேனகா!
~
வேணி,பட்டன் மஷ்ரூம் வாங்கி போரடித்துப் போனதால் இப்ப விதவிதமா மஷ்ரூம்ஸ் ட்ரை பண்ணிட்டு இருக்கோம்..நன்றி!
~
பிரேமா,வீட்டுக்கு வாங்க..சாப்பிட்டுட்டு போகலாம்! :) நன்றி!
~
ஓ..நீங்களும் இப்படியேதான் செய்வீங்களா? சூப்பரா இருந்தது,இந்த மஷ்ரூம்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசியாக்கா!
~
/எனக்கும் ஒரு கட்டு குரியர் ப்ளீஸ்./புதினா இப்போதைக்கு பத்து இலை,பதினைந்து இலை ரேஞ்சுக்கு தான் இமா காய்க்குது:) கட்டு..ஹ்ம்ம்..அடுத்த சீசனுக்கு அனுப்பிடறேன்.
/இது யார் சமைத்தது? குறிப்பு யார் டிக்டேட் பண்ணியது?? யார் டைப் பண்ணியது????/ ஆக்கமும்,அமைப்பும்:):) நானே!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~
/போட்டோஸுனை slideshowவில் போடாமல் அப்படியே போட்டால் இன்னும் கலக்கலாக இருக்கும்.../கீதா,யார்கிட்ட புலம்பலாம்னு:) இருந்தேன்..நீங்களே கேட்டுட்டீங்க..என்னோட பிக்காசா அக்கவுண்ட்ல இனி ஸ்பேஸ் இல்ல.ஒரு காலத்துல நானும் ப்ளாக் ஆரம்பிப்பேன் என்று தெரியாததால, அங்கே எக்கச்சக்க ஆல்பம் அப்லோட் பண்ணிட்டேன்..இப்ப நோ ஸ்பேஸ்! :(
குஸ்குஸ் ரெசிப்பி போடும்போதே ஒரு போட்டோ கூட அப்லோட் பண்ண முடில.இப்போதைக்கு ஒரு ஆல்பத்தை டெலீட் பண்ணிருக்கேன்.விரைவில் ஏதாவது செய்யறேன்.
புதினா,நர்சரில இருந்து வாங்கிவந்தோம்..அதான்,இவ்வளவு சீக்கிரம்!:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா!
~
/I like your mushrooms photo/ நன்றி வானதி..எனக்கும் அந்த போட்டோஸ் ரொம்ப பிடித்தது.
வாவ்... சூப்பர்... நாளிக்கி கெஸ்ட் வர்றாங்க (என்னை நம்பி..) இந்த recipe ட்ரை பண்ணிட வேண்டியது தான்... சிம்பிள் அண்ட் சூப்பர்... தேங்க்ஸ் மகி
ReplyDeleteஇப்ப கவலையினை விடுங்க...நீங்களே இன்னொரு மெயில் ஐடியினை உங்கள் blog membersயில் add செய்துவிடுங்க...அந்த accountயில் இருந்தும் post செய்யுங்கள்...photos எல்லாம் அந்த accountயில் போய்விடும்...
ReplyDeleteபுவனா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! செய்து பார்த்து சொல்லுங்க.
ReplyDelete~
கீதா, உங்க டைம்லி ஹெல்ப்பிற்கு மிக்க நன்றி..இன்னொரு யூசர் ஐடி-யை இணைத்துக்கொண்டேன். :)
மகி சூப்பர்!!!!!!!!!!!!
ReplyDeleteமஷ்ரூம்ஸும் வீட்டுல விளைஞ்சதா மஹி?? :)))
ReplyDeleteஅண்ணாத்தைக்கு இருக்கக் கூட இடந்தராம வீடு முழுக்க தோட்டமாவே மாத்திட்டதா கேள்விப்பட்டேன். :)))
இப்ப இருக்கற நிலைமையில எதையும் செஞ்சு பாக்கற மூட் இல்ல :)) அதனால.. வெயிட்டீஸ்..
தமிழ் குடும்பத்தில ஓடுதே அது உங்க வாரமா ,? ....
ReplyDeletehttp://kudumbamtamil.blogspot.com/2010/06/blog-post_06.html?utm_source=feedburner&utm_medium=feed&utm
/மஷ்ரூம்ஸும் வீட்டுல விளைஞ்சதா மஹி?? :))) / ஆமாம்..விரைவில் காளான் வளர்ப்பு:) பற்றி ஒரு தனிப் பதிவு போடப்போறேன்!! grrrrrrrrrrrrrrr!! இருக்கற இத்துனூண்டு இடத்திலே காளான் வேறயா?
ReplyDeleteவருகைக்கும், வழக்கம் போல குசும்பு:) பின்னூட்டத்துக்கும் நன்றி அம்மணி!
சுகந்திக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஜெய்லானி அண்ணா,ஆமாம்..அது நானேதான்!:) நேத்திலிருந்து எங்க வீட்டில் பவர் கட்..இன்னும் வரல...இப்பக் கூட ப்ரென்ட் வீட்டுல இருக்கேன். கவனித்து கேட்டதற்கு நன்றி!
very nice mushroom mahi send this type of receips often da
ReplyDeleteThanks for the comment chithu!
ReplyDelete