Tuesday, June 22, 2010

வெஜிடபிள் பிஸ்ஸா

டாப்பிங்
பிஸ்ஸா சாஸ் - 1/2கப்
மொஸரெல்லா சீஸ்-1/2கப்
நறுக்கிய வெங்காயம்,தக்காளி,குடைமிளகாய்,வெள்ளரி மற்றும் விருப்பமான காய்கறிகள் - சிறிது

பிஸ்ஸா பேஸ்
ஆல்பர்ப்பஸ் ப்ளோர்-2கப்
ஏக்டிவ் ட்ரை யீஸ்ட்-1டீஸ்பூன்
ஆலிவ் ஆயில்-2டீஸ்பூன்
சர்க்கரை-1டேபிள்ஸ்பூன்
உப்பு-1டீஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர்-1கப்

செய்முறை
ஒரு கப்வெதுவெதுப்பான நீரில் யீஸ்ட்,சர்க்கரை,உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் (சற்றே சூடான இடத்தில்) வைக்கவும்.
மாவுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, நுரைத்திருக்கும் யீஸ்ட் கலவையை சிறிதுசிறிதாக ஊற்றி பிசையவும்.
மாவு கெட்டியாக இல்லாமல், தளர இருக்கவேண்டும். பிசைந்த மாவின்மீது சிறிது ஆலிவ் ஆயில் தடவி,ஈரத்துணியால் மூடி இரண்டு மணி நேரம் (சற்றே சூடான இடத்தில்) வைக்கவும்.
மாவு நன்கு உப்பியிருக்கும்.


மாவிலிருக்கும் காற்று குமிழ்கள் மறையும்படி நன்றாகப் பிசைந்து மீண்டும் ஒருமணிநேரம் வைக்கவும்.மாவு திரும்பவும் சற்றே அதிகரித்திருக்கும். அதனை மீண்டும் நன்றாகப் பிசைந்து, சப்பாத்திக்கட்டையால் தேவையான வடிவத்துக்கு தேய்க்கவும்.
தேய்த்த பிஸ்ஸா பேஸை பேக் செய்யும் பானில்(நான் கேக் பேக்செய்யும் பான்தான் உபயோகித்தேன்) வைக்கவும்.பிஸ்ஸாவின் விளிம்பில், ஒருஇன்ச் இடம் விட்டு, பிஸ்ஸா சாஸை சீராக தடவி, டாப்பிங் பொருட்களை அடுக்கவும்.

இறுதியாக சீஸை பிஸ்ஸா முழுவதும் தூவி, ஓரங்களுக்கு ஆலிவ் ஆயில் தடவிவிடவும்..350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

ஹோம்மேட் பிஸ்ஸா ரெடி!

பிஸ்ஸா சூடாக இருக்கும்போதே கட்செய்துவைக்கவும்.ஆறிவிட்டால் கட்செய்வது கஷ்டம்.

யீஸ்ட் சேர்த்து சமைப்பதுக்கு தைரியம் வராமலே இருந்தது.. இது என் முதல் முயற்சி! :)

23 comments:

  1. wow mahi!!! pizza luks fantastic,very very tempting...I love the presentation.

    ReplyDelete
  2. சூப்பர்ப்,இதே பான் என்னிடமும் இருக்கு,ட்ரை ப்ண்ணிவிட வேண்டியது தான்,செய்முறை நல்ல விள்க்கமாக இருக்கு.

    ReplyDelete
  3. ம்ம்.. யம்மி மஹி.. கொஞ்சம் கஷ்டமான வேலையா இருக்கே :))

    //பிஸ்ஸா சூடாக இருக்கும்போதே கட்செய்துவைக்கவும்.ஆறிவிட்டால் கட்செய்வது கஷ்டம்.//

    அண்ணாத்த சூடா சாப்பிட்டாரா இல்ல ஆறிப் போயி சாப்பிட்டாரா? ஐ மீன், மென்னு சாப்பிட்டாரா இல்ல கடிச்சு சாப்பிட்டாரா :)

    ReplyDelete
  4. ////பிஸ்ஸா சூடாக இருக்கும்போதே கட்செய்துவைக்கவும்.ஆறிவிட்டால் கட்செய்வது கஷ்டம்.//

    நான் கேக்கலாமுன்னு கீழே வந்தா ‘சந்து’கேட்டுட்டாங்களே..!! ஜஸ்ட் மிஸ்ட்..

    ReplyDelete
  5. உங்களுக்கு இதுக்கு முந்தைய பதிவுல ஒரு சின்ன அட்வைஸ் சொல்லியிருக்கேன் ஜெய்லானி. :)

    ReplyDelete
  6. என்னங்க மஹி முதல்லயே கட் பன்னி ஓவன் உள்ள வச்சா பிக்க வேண்டிய கஷ்டம் இருக்காதுதானுங்களே..!!ஹி..ஹி..

    பிஸ்ஸா அப்புறம் பீஸ் பீஸா வருமே..


    நல்லா இருக்கு...

    ReplyDelete
  7. //உங்களுக்கு இதுக்கு முந்தைய பதிவுல ஒரு சின்ன அட்வைஸ் சொல்லியிருக்கேன் ஜெய்லானி. :)//

    அடடா பாக்கலையே .:-( இப்ப பாக்குரேன் :-)

    ReplyDelete
  8. வாவ்!! கலக்கல் பீட்ஸா மகி. சுப்பர். ;)

    //மஹி முதல்லயே கட் பன்னி ஓவன் உள்ள வச்சா பிக்க வேண்டிய கஷ்டம் இருக்காதுதானுங்களே..!!// நல்ல அட்வைஸ் சொல்றாங்க, கேளுங்கோ மகி. ;))

    ReplyDelete
  9. சூப்பர் மஹி முதல் முயற்சியே அருமை சீக்கிரம் கோயமுத்தூர் வாங்க .... நாங்க எப்ப வீட்டுக்கு வரது விருந்து சாப்பிட.

    ReplyDelete
  10. wow...very nice try...excellent pizza...my daughter loves to eat pineapple pieces in tropical chicken pizza. anyway i'm going to try. thanks Mahi. Awesome picture

    ReplyDelete
  11. மகி சூப்பர் இதே மாதிரிதான் நானும் செய்வேன்.

    ReplyDelete
  12. வீட்டுக்கு வரலாமா...படங்கள் அருமை....

    ReplyDelete
  13. முதல் முயற்சி மாதிரி தெரியவில்லை மகி! பிஸ்ஸா அருமையாக இருக்கிறது!!

    ReplyDelete
  14. @நன்றிங்க ப்ரேமா!
    @ஆசியாக்கா,இந்த பேன்லயே நல்லா வருது,செய்துபாருங்க. நன்றி!
    @சந்தனா,கொஞ்சம் டைம்எடுக்கற வேலைதான்.கரெக்ட்டா 35மினிட்ஸ் முடிஞ்சு பிஸ்ஸாவை எடுத்தேன்.அவரும் வந்துட்டார்..சுடசுட சாப்ட்டோம்.
    @ஜெய் அண்ணா,நல்ல ஐடியா..கொஞ்சம் லேட்டா சொல்லிட்டீங்க..அடுத்தமுறை இம்ப்ளிமெண்ட் பண்ணிடறேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றீ:)
    @இமா,நன்றி!னெக்ஸ்ட் டைம் அட்வைஸ்படிதான் செய்யப்போறேன்.ஹிஹி!
    @சாரு,ஊர்ல ஏதுங்க கன்வென்ஷனல் அவன்? நம்ம ஊர் விருந்து சாப்புடலாம்..வரும்போது கட்டாயம் சொல்லறேன் உங்களுக்கு!
    @வேணி,பைனாப்பிள் எங்களுக்கும் பேவரிட்..வெஜ் பிஸ்ஸா-ல பைனாப்பிள் டாப்பிங் சேர்க்காம ஆர்டர் பண்ணவே மாட்டோம்.கவனித்து பார்த்ததுக்கு நன்றி!
    @சௌம்யா,நன்றிங்க!
    @மேனகா,நன்றி!
    @சுகந்திக்கா,வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி!
    @கீதா,தாராளமா வாங்க.நன்றி!
    @நன்றிங்க மனோமேடம்,,முதல் முறைதான் செய்தேன்..அதிர்ஷ்டவசமா சுமாரா:) வந்திடுச்சு.

    ReplyDelete
  15. mahi சூப்பரோ சூப்பர். நானும் இதே போல் தான் மாதத்தில் ஒரு முறை கண்டிப்பா பசங்களுக்காக செய்துடுவேன்.
    நம்ம ஜெய் சொல்வது போல் அடுத்த முறை செய்துட வேண்டியது தான். ஹி ஹி.. சூப்பர் டிப்ஸ்.

    ReplyDelete
  16. பிஸ்ஸா பாக்கவே அழகா இருக்கு. சாப்பிடணும் போல இருக்கு

    ReplyDelete
  17. மகி, பீட்ஸா சூப்பர். அழகான படங்கள்.

    ReplyDelete
  18. ஆஹா... ரெம்ப சிம்பிள்ஆ சொல்லி இருக்கீங்க... அதுக்கே ஒரு ஓ போடணும்... சூப்பர் அம்மணி...

    ReplyDelete
  19. // இது என் முதல் முயற்சி! :) //
    அடேங்கப்பா.... முதல் முயற்சியே இப்படியா..... சூப்பர்....

    ReplyDelete
  20. விஜி,நீங்களும் ஜெய்அண்ணா டிப்ஸ்-ஐ பாலோ பண்ணப்போறீங்களா?? எ.கொ.வி.இ? சரி,அப்ப நீங்களே முதல்ல ட்ரை பண்ணி சொல்லுங்க.அப்புறமா நான் செய்யறேன்.ஹிஹி!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிது!

    சின்ன அம்மிணி,வாங்க! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    வானதி,மிக்க நன்றி!

    புவனா..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails