Sunday, December 11, 2011

ரவா இட்லி

தேவையான பொருட்கள்
வெள்ளை ரவை-11/2கப்
மோர்-11/2கப்
பொடித்த சீரகம்-மிளகு -11/2டீஸ்பூன்
பச்சைமிளகாய்-1
கடுகு-1டீஸ்பூன்
கடலைப்பருப்பு-1டீஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1டீஸ்பூன்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
ஈனோ ஃப்ரூட் சால்ட்-3/4டீஸ்பூன்
உப்பு-1/4டீஸ்பூன்
கேரட் துருவல்-2டேபிள்ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு


செய்முறை
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து,பொடித்த மிளகு சீரகம் போட்டு பொரியவிடவும். பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதனுடன் ரவையைச் சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் வறுக்கவும். ரவை வறுபட்டு நல்ல வாசம் வந்ததும் இறக்கி ஆறவிடவும்.

ரவை ஆறியதும் உப்பு, மோர் சேர்த்து கரைத்து (குறைந்தது 10நிமிடங்கள்) வைக்கவும்.
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிவரும்போது ரவைக்கலவையுடன் ஃப்ரூட் சால்ட் சேர்த்து கலக்கி, தேவையானால் கொஞ்சம் நீரும் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

எண்ணெய் தடவிய இட்லித்தட்டில் ஒவ்வொரு குழியிலும் கொஞ்சம் கேரட் துருவல்,ஒரு முந்திரிப்பருப்பு வைத்து இட்லிப்பாத்திரம்/குக்கரில் வைக்கவும். சில வினாடிகளுக்குப் பிறகு மாவை இட்லித்தட்டுகளில் ஊற்றி 10நிமிடங்கள் வேகவிடவும்.

இட்லி வெந்ததும் ஸ்பூனால் இட்லிகளை எடுத்து வைக்கவும். சூடாக சட்னி/சாம்பாருடன் ருசிக்க ரவா இட்லிகள் ரெடி! :)

~ரவா இட்லி-பீட்ரூட் சட்னி-காரசட்னி~

24 comments:

  1. மீ தா பிசட்டு
    but எனக்குதான் ரவா இட்லி பிடிக்காதே
    அதனால பேபி அதிராவுக்கு பார்சல் வித் அ.. கோ.. மு...

    ReplyDelete
  2. சிவாதம்பி, /மீ தா பிசட்டு /ஏன்...ஏன்...ஏன்??!!! இங்கிலீஷையும் தமிழையும் கலந்து கட்டி டிசெக்ஷன் பண்ணி கொல்லறீங்க??! இனிமேல் கமென்ட்டும் ப்ரூஃப் பார்த்துத்தான் போடோணும் போல! :))))))

    /அதனால பேபி அதிராவுக்கு பார்சல் வித் அ.. கோ.. மு.../பேபி அதிரா வீட்டில இன்னேரம் மல்லியப்பூ பூத்திருக்கும்,அவிங்களுக்கு எதுக்கு உப்புமாஇட்லி?;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா!

    ReplyDelete
  3. Mahi, Kaalai naeram en computer screenla unga rava idli.. pasikkuthu ponga..:)) Super super super.:))
    Reva

    ReplyDelete
  4. ஓஹோ இதுவும் ஒருமுறை. இட்லி
    மிருதுவாக இருக்கும். நன்றாக இருக்கு.

    ReplyDelete
  5. பார்க்கவே எடுத்து சாப்பிடவேண்டும் போலுள்ளது.மோர் சேர்க்க வேண்டுமா?தயிர் சேர்க்க வேண்டுமா?

    ReplyDelete
  6. அடடா எத்தனை விதம் விதமான இட்டலிகள்.... சூப்பர்... மகி ஒரு இட்லிக்கடை ஓபின் பண்ணுங்கோ..

    நாங்கள் ரவ்வையை நன்கு அவித்து, நன்கு ஆறவிட்டு பின் சேர்ப்போம்.

    மல்லிகே இட்டலி செய்திட்டேன் மகி சூப்பராக வந்துது, நல்ல வட்ட வடிவமாகவும் வந்திட்டே அவ்வ்வ்வ்:))).. படமெடுத்திருக்கிறேன்... விரைவில் போடுறேன் பாருங்கோவன்...:))

    ReplyDelete
  7. //siva said...
    மீ தா பிசட்டு
    but எனக்குதான் ரவா இட்லி பிடிக்காதே
    அதனால பேபி அதிராவுக்கு பார்சல் வித் அ.. கோ.. மு..//

    சிவா வர வர ரொம்ப நல்ல பிள்ளையாகிட்டார்... இனிப் பொம்பிளை பார்க்கலாம் போல இருக்கே:)).

    எனக்கு தோசையைவிட இட்டலிதான் அதிகம் புய்க்கும்:))..

    ReplyDelete
  8. //ஸாதிகா said...
    பார்க்கவே எடுத்து சாப்பிடவேண்டும் போலுள்ளது.மோர் சேர்க்க வேண்டுமா?தயிர் சேர்க்க வேண்டுமா?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பாருங்கோவன் கேட்கிற கேள்வியை:)))) ஸாதிகா அக்கா நீங்க பாபகியூ நேஷனுக்குப் போக ரெடி பண்ணுங்கோ:).

    ReplyDelete
  9. இட்லி கலர்புல்லா சூப்பரா இருக்கு..

    ReplyDelete
  10. ரவா இட்லியும் சட்னியும் கலர்ஃபுல்.இப்படியெல்லாம் படம் காட்டக்கூடாது...

    ReplyDelete
  11. இட்லி இட்லியா போட்டு கலக்கறீங்க மகி
    சூப்பரா வந்திருக்கு .ரெசிப்பிக்கு நன்றி .நான் இது வரை ENO சேர்த்ததில்லை
    ட்ரை செய்து பார்க்கிறேன்

    ReplyDelete
  12. அதிரா இட்லி செய்துடிகளா !!!! very good :))

    ReplyDelete
  13. நானும் ட்ரை பண்றேன்.. ஈனோ வாங்கிட்டு.

    //இனிமேல் கமென்ட்டும் ப்ரூஃப் பார்த்துத்தான் போடோணும் போல!// ;)) சிவா கையெழுத்து போடுறதுன்னாலே ப்ரூஃப் பார்த்துத்தான் போடுவாங்களாம்.

    ReplyDelete
  14. //priya said...
    அதிரா இட்லி செய்துடிகளா !!!! very good :)//

    பார்த்தீங்களோ உங்களை மறந்திட்டேன் பிரியா... மன்னிச்சுக்கொள்ளுங்க.. மிக்க நன்றி.. மறக்கவில்லை எழுதும்போது சொல்ல மறந்திட்டேன்:)).

    லோங் கிரைன் அரிசியில்தான் வைத்தேன், நல்லா வந்துது, இதுக்கு முன் பசுமதி அரிசியில் 3 தடவைகள் (3 வருடத்தில்:)) ட்ரை பண்ணி சரி வரவேயில்லை... இம்முறை சூப்பர்.

    ReplyDelete
  15. இமா said...
    நானும் ட்ரை பண்றேன்.. ஈனோ வாங்கிட்டு//

    என்னாது? எல்லோரும் ஜீனோ வாங்கப்போறீங்களோ எதுக்கூஊஊஊஊஊ?:)) என்ன கொடுமை இது மகி?:).

    ஊசிக்குறிப்பு:
    சிவாவின் புர்ருவ் ரீடருக்கு, நான் தான் புரூவ் ரீடர்:)))))) ஹையோ ஹையோ:)))... எனக்கு ஆரெனக் கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ReplyDelete
  16. இமாவின் சந்தேகமெல்லாம் சுண்டெலிமேல:)).. ஆனா எனக்கு டக்கென கிட்னியில் ஒரு தட்டு தட்டிச்சே... இந்தப் பிரியா யார்?:)))).

    ReplyDelete
  17. /இந்தப் பிரியா யார்?:)))).///இந்தப்பிரியா யு.எஸ்.பிரியாதான்..ஆனா I don't think she is the one you gals are looking for! May be I am wrong! ;)

    /என்னாது? எல்லோரும் ஜீனோ வாங்கப்போறீங்களோ எதுக்கூஊஊஊஊஊ?:))/ What happened to your sharp eyes myaav?!! that is ENO not Jeeno! :))))))))

    ReplyDelete
  18. /priya said...
    அதிரா இட்லி செய்துடிகளா !!!! very good :))/ ஹும்..இங்க ஒருத்தி மெனக்கெட்டு ரவா இட்லி செஞ்சு போட்ட்டொ புடிச்சு எழுதி பப்ளிஷ் பண்ணறேன்,இந்தப் பிரியாவைப் பாருங்களேன், அதைக் கண்டுக்காம.....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    PS:ப்ரியா,சும்மா டமாஸுக்கு! கோச்சுகாதீங்க.:D

    ReplyDelete
  19. மகி, இட்லி, சட்னி எல்லாமே சூப்பரா இருக்கு. ஆனா என் ஆ.காரருக்கு ரவை என்றாலே ஒரு காண்டு. உப்புமா சாப்பிடுறதே பெரிய அதிசயம். இதில் இட்லி ட்ரை பண்ண சான்ஸே இல்லை.

    ReplyDelete
  20. //லோங் கிரைன் அரிசியில்தான் வைத்தேன், நல்லா வந்துது, இதுக்கு முன் பசுமதி அரிசியில் 3 தடவைகள் (3 வருடத்தில்:)) ட்ரை பண்ணி சரி வரவேயில்லை... இம்முறை சூப்பர்.//

    ரொம்ப சந்தோஷம் அதிரா:))

    //இமாவின் சந்தேகமெல்லாம் சுண்டெலிமேல:)).. ஆனா எனக்கு டக்கென கிட்னியில் ஒரு தட்டு தட்டிச்சே... இந்தப் பிரியா யார்?:)))).
    //..ஆனா I don't think she is the one you gals are looking for! May be I am wrong! ;)//

    ஆ .....சுண்டலியாஆ என்ன சொல்றிகோ ஒன்னுமே புரியலையே...............

    //ஹும்..இங்க ஒருத்தி மெனக்கெட்டு ரவா இட்லி செஞ்சு போட்ட்டொ புடிச்சு எழுதி பப்ளிஷ் பண்ணறேன்,இந்தப் பிரியாவைப் பாருங்களேன், அதைக் கண்டுக்காம.....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! PS:ப்ரியா,சும்மா டமாஸுக்கு! கோச்சுகாதீங்க.:த//

    மகி ரவா இட்லி ரொம்ப அழகா இருக்கு .நான் இன்னும் ரவா இட்லிய பத்தி நிறைய எழுதனுமுன்னு நினைக்கிறன் ஆனால் பாருங்க மதியத்திற்கு சமைக்கணும் அதன் நின்னுகிட்டே கமெண்ட் எழுதிட்டு ஓடறேன் பா:) சமைத்து முடிச்சுட்டு வரேன்............

    ReplyDelete
  21. ;))) ஏன் என்று சொல்லமாட்டேனே! ;)

    ReplyDelete
  22. யாரும் கேட்டீங்க??? இல்லையா?? ஓக்கே!:)

    ../ஏன் என்று சொல்லமாட்டேனே! ;)/ இமா,யாருமே கேக்கலியாம்,நீங்க சொல்லவேணாம்! ;0))))))))))))

    ~~

    /நான் இன்னும் ரவா இட்லிய பத்தி நிறைய எழுதனுமுன்னு நினைக்கிறன் ஆனால் பாருங்க மதியத்திற்கு சமைக்கணும் அதன் நின்னுகிட்டே கமெண்ட் எழுதிட்டு ஓடறேன் பா:)/ ஆஹா..குணா கமல் ரேஞ்சுக்கு உருகறீங்க ரவா இட்லியப் பாத்து!!பரவால்ல விடுங்க, நானே "இந்த மானே,தேனே,பொன்மானே.."எல்லாம் போட்டு உங்க இமேஜினரி(!) கமென்ட்டை ஃபில் பண்ணிக்கிறேன். :))))

    /ஆ .....சுண்டலியாஆ என்ன சொல்றிகோ ஒன்னுமே புரியலையே.............../அது சரி!:)
    நன்றி ப்ரியா!

    ~~
    நன்றி வானதி! ஆ.காரருக்கு புடிக்கலைன்னா போட்டோ பார்த்து பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான்..என்ன செய்ய? எங்க வீட்டிலும் இப்பூடி ஒரு லிஸ்ட்டே இருக்கு! :)

    ~~
    Priti,thanks for stopping by!

    ~~
    நன்றி இமா! ட்ரை பண்ணிப் பாருங்க.

    /கையெழுத்து போடுறதுன்னாலே ப்ரூஃப் பார்த்துத்தான் போடுவாங்களாம்./ ஹ்ம்ம்..சிவாவைச் சொல்லித் தப்பில்ல..சிவாவிண்ட ரீச்சர்தான் தமிழ் சரியா சொல்லித்தரல! :)

    /சிவாவின் புர்ருவ் ரீடருக்கு, நான் தான் புரூவ் ரீடர்:)))/அதிரா நல்லா புர்ருவ் ரீட் பண்ணுங்கோ.இனி கையெழுத்தெல்லாமே வரப்போகுதாம் புர்ருவ் ரீடிங்-க்கு! :)

    ~~
    ஏஞ்சல் அக்கா,ஈனோ போட்டு செய்துபாருங்க.சூப்பரா இருக்கும்!:P
    நன்றி!

    ~~
    நன்றி ஆசியாக்கா! படம் காட்டறத்துக்குதானே ப்ளாகே வச்சிருக்கோம்,அது இல்லாம எப்பூடி?!;)

    ~~
    நன்றி மேனகா!

    ~~
    அதிரா,இட்டலிக்கடை ஓபின்:) பண்ணலாம்,ஆனா ஒரு கண்டிஷன்..நீங்களும் 50-50 பார்ட்னரா வரதா இருந்தா!!டீல்?!

    ரவையை அவித்து செய்வது எனக்குத் தெரியாது அதிரா. இட்லி செய்து போட்டோவுடன் கமென்ட் தந்தது மிக்க மகிழ்ச்சி. :)))))

    ஸாதிகா அக்காவை வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்குத் தூக்கம் வராது போலருக்கே? ;)

    ~~
    ஸாதிகா அக்கா,/மோர் சேர்க்க வேண்டுமா?தயிர் சேர்க்க வேண்டுமா?/உங்க வசதிப்படி சேருங்கோ. மோர் சேர்த்தா தண்ணீரின் அளவைக் குறைச்சுடுங்க..ரொம்ப புளிப்பா இல்லாத மோரா யூஸ் பண்ணுங்க.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!

    ~~
    காமாட்சி அம்மா,நன்றிம்மா!

    ~~
    ரேவதி,எல்லாருக்கும் காலையில் விஷுவல் ப்ரேக்ஃபாஸ்ட் குடுக்கலாமேன்னுதான் அந்நேரம் போஸ்ட் பண்னேன்! ;)
    தேங்க்ஸ்ங்க!

    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails