Friday, July 5, 2013

புதினா, கத்தரி, கத்தரிக்காய் பொடிக்கறி

தோட்டம் பற்றிய முந்தைய பதிவில் நிறையப் பேர் புதினா அறுவடை:) பற்றி கேள்விகள் கேட்டிருந்தார்கள். அதனால் இந்த முறை சமையலுக்கு ரெண்டு கொத்து புதினா பறித்தபோது அப்படியே ஒரு போட்டோவும் எடுத்து  வைச்சேன். ஸோ, மேலே இருப்பதுதாங்க எங்க வீட்டு புதினாச் செடி. அதிலே உயரமாய் இருக்கே, அந்தத் தண்டைத்தான் பறிக்கப் போறேன். 
 
கிச்சன் கத்தரியால் புதினாவின் வேரில் இருந்து சில சென்டிமீட்டர் உயரத்தில் புதினாவை வெட்டி எடுக்கவும். 
அவ்வளவுதாங்க..இப்படித்தான் நான் எப்பவுமே புதினா பறிப்பது. வெட்டப்பட்ட இந்த தண்டில் இருந்து இனி இலைகள் வராது, மாறாக பக்கத்தில் புதிதாக இன்னொரு கிளை துளிர்க்கும், அதனால் புதினாவில் இலைகள் சிறியதாகாமல் தடுக்கலாம்! :) 
~~~
அடுத்த அறிமுகம், கத்தரி!!
வீட்டுப் பக்கத்த்தில் நடக்கும் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கி வந்த  Heirloom Japanese Millionaire Eggplant செடி இது. வாங்கி வந்த வேகத்திலேயே இரண்டு பூக்கள் வந்தது. அவற்றில் ஒன்றிலிருந்து பிஞ்சும் வந்ததும் எனக்கு ஒரே குஷிதான் போங்க! :)) 

செடி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தவேளை..பூக்களும் நிறைய வந்தன. என் கண்ணே பட்டிருக்கும் என நினைக்கிறேன். திடீரென ஒரு நாள் கவனிக்கையில் இலையின் பின்பகுதி முழுக்க பூச்சி அரிப்பு..வெள்ளை நிறத்தில் சிறு சிறு பூச்சிகள் நிறைந்திருந்தன! :-|

 நானும் பூச்சி அரித்த இலைகளை எல்லாம் கிள்ளி எறிந்துகொண்டே வந்தேன், ஆனாலும் பூச்சிகள் இன்னும் செடியை விட்டபாடில்லை! மேலே கொலாஜில் பார்த்தாலே தெரியும், எத்தனை இலைகள் செடியில் இல்லை என!! இப்போது செடி கிட்டத்தட்ட மொட்டை...அப்போதும் விடாமல் துளிர்க்கும் புதுத் துளிர்களை அட்டாக் பண்ணிக் கொண்டு இருக்கின்றன பூச்சிகள். பூக்கள் பெரும்பாலும் உதிர்ந்துவிட்டன. இருந்த ஒரு காய் வளர்ந்தது, இன்னும் விட்டால் அதையும் பூச்சிகள் விடாதோ என அஞ்சி பறித்துவிட்டேன்.
சின்னக்காய்தான்..மற்ற காய்களுடன் சேர்த்து சமைத்தால் இதன் ருசி தெரியாதே, என்ன செய்யலாம் என யோசித்தேன்.  அரைத்து வைத்த கறிப்பொடி இருந்தது, கத்தரிக்காய் பொடிக்கறி செய்தாச்சு! காய்தான் இன்னுங் கொஞ்சம் நாள் கழித்து பறித்திருக்கலாமோ என எண்ணும் வண்ணம் பிஞ்சாக இருந்தது. சுவை சொல்லவே வேண்டாம், சூப்பராய் இருந்தது. 
கத்தரிக்காயைக் கழுவி, பெரிய துண்டங்களாக நறுக்கி, தண்ணீரில் போட்டுவைக்கவும். நல்லெண்ணெய் காயவைத்து, கடுகு-உளுந்து தாளித்து கத்தரியைச் சேர்த்துச் சிலநிமிடங்கள் வதக்கவும். காய் நிறம் மாறி கொஞ்சம் சுருங்கியதும் தேவையான அளவு கறிப்பொடி மற்றும் உப்பைச் சேர்த்து காய் வேகும்வரை பிரட்டிவிட்டு எடுக்கவும். சுவையான கத்தரிக்காய் பொடிக்கறி ரெடி!
சாதம், ஸ்பினாச் கூட்டு+நெய், முட்டைக்கோஸ் பொரியல், கத்தரிக்காய் பொடிக்கறி 
~~~
இன்றைய இணைப்பு : 26வது மாடியறையில் இருந்து வெளியே தெரியும் சான்டியாகோ சிட்டியை ஆர்வமாகப் பார்த்து ரசிக்கும் மிஸ்டர் ஜீனோ! 
:)))) 

16 comments:

  1. //முந்தைய பதிவில் நிறையப் பேர் புதினா அறுவடை:) பற்றி கேள்விகள் கேட்டிருந்தார்கள்.// இந்தப் பதிவில் ஒருவர் காரட் அறுவடை:) பற்றி கேள்வி கேட்கிறார். ;))

    கவனமாக ஒரே ஒரு ஜன்னலைத் திறந்து வைச்சுட்டு தட்டுறேன் இந்தத் தடவை. ;)

    ReplyDelete
  2. ஆறு வடைன்னு சொல்லிருக்கீங்க ..ஒரு வடையை கூட காணுமே ????

    ஹா ஹா :))சாரி ஹே ஃபீவர் மருந்து எபக்ட் ..



    வாவ் !!!!! அறுவடை சூப்பார் ...வெந்தய கீரை அறுவடை செய்தோமே நாங்க ..இப்போ கொத்தமல்லி அறுவடை ரெடியா இருக்கு ..நெக்ஸ்ட் தக்காளி ..பீற்றூஊஊஊஊஊட் :))

    ஜீனோ ...என்னா வேடிக்கை :))

    ReplyDelete
  3. ஜீனோ ஃபயர் ஒர்க்ஸை எதிர் பார்த்திட்டிருக்காறோ!! கத்தரி செடி,பூ,காய் எல்லாம் ஒரே கலரில்,அழகா இருக்கு.தோட்டத்து கத்தரி சமையல் வாசனை இங்குவரை வருது.

    ReplyDelete
  4. நமது 'தோட்டத்து' சமையல் என்றால் மனதில் வரும் சந்தோசமே தனி... சுவை அப்புறம்...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. சின்னகாய்தான்னு சொல்றீங்க.. பார்த்தா உங்க கை நீளத்துக்கு காய் இருக்கு மகி.. ( ஹைபிரிட் வகையோ ) காயையும் அறுவடை பண்ணி பொடிகறி செய்யும் போது ஆனந்தமா சாப்பிடலாம். பூண்டையும், பச்சை மிளகாயையும் அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால் பூச்சியெல்லாம் ஓடியே போயிடும்.

    ReplyDelete
  6. Super veggie garden Mahi. I. am waiting to see my garden eggplant and zukkini.

    ReplyDelete
  7. அசத்திட்டீங்க போங்க...:). சூப்பரோ சூப்பர்! கத்தரிக்காயும் புதினாவும்.

    அப்புறம் அந்த தட்டை அப்படியே இங்கை தந்திடுங்க...:)
    பசி பிறாண்டுது...:))).
    ஹாஆ... பிறாண்டுதுன்னு சொன்னவுடனே மீரா பத்திச் சொல்லணும் . அநியாயத்துக்கு வளர்திட்டா.. சடைக்குட்டியாச்சா.. சிங்கம் மாதிரி இருக்கா.
    சம்மர்ன்னதால டெய்லி வெளியே கதவு திறந்து விடணும். போனா குறைஞ்சது 3 அல்லது 4 மணித்தியாலம் அங்கினயே சுத்திட்டு வருவ. வெளியில் போனாலும் அப்பப்ப அவசர அவசரமா வீட்டுக்குள்ளார வந்து நான் இருக்கேனான்னு பார்த்திட்டு தனது சாப்பாடு, டாய்லெட் தொட்டி எல்லாம் இருக்கான்னு பார்ப்பா. அப்படியே ஏற்றுமதி இறக்குமதி முடிச்சிட்டு மறுபடி வெளியே....

    வெளியே போவது குருவி, பறவைகளை ஒன்லி வேடிக்கை பார்க்கத்தான்...:).
    எதுவும் பிடிச்சு சாப்பிடமாட்டான்னா பாருங்களேன்...

    போதுமா மீரா புராணம்...;).
    ஜீனோவும் அசத்தலா இருக்கார்.
    அத்தனையும் சூப்பரோ சூப்பர். மிக்க நன்றி மகி!

    ReplyDelete
  8. உங்கள் கைவண்ணத்தில் உங்கள் தோட்டமும், சமையலும் மிகவும் அருமை, மகி!
    கூடவே தோட்டக் குறிப்புகளும்...!

    ReplyDelete
  9. beautiful garden mahi,homegrown vegetables are always tasty .

    ReplyDelete
  10. நம்ம தோட்டத்து கத்தரிக்காய். ருசி அபாரமாக இருக்கும். மஞ்சள் பொடியைக் கரைத்து கத்தரிச் செடியில் தெளித்துப் பார். சாம்பலுக்கு எங்கு போவது.
    அதையும் தெளிக்கலாம். மொத்தத்தில் கத்தரிக்காய் அறுவடை அன்புடன்

    ReplyDelete
  11. மனசுக்கு நிறைவான பகிர்வு.அந்த ஒற்றை கத்திரிக்கும் கைக்கும் சுற்றி போட்டுவிட்டேன்,இனி காய்க்கும்.லைட்டாக டிட்டர்ஜண்ட் சோப் அல்லது வாஷிங் பவுடரை கரைத்து தெளித்தாலும் புழு வராது.மருந்து மாத்திரை எல்லாம் நினைவிற்கு வரலை மகி..

    ReplyDelete
  12. mm pudhina nalla freshaa irukkunga.naankooda lastweekladan nattu vaithen ippo anga anga thulir vittu irukku. katharikkai superaa irukkunga...jeeno enna parkkuramaa? mahi unga veedappa adhu ?

    ReplyDelete
  13. வாவ் மகி. கத்தரிக்காய்.வீட்டில காய்த்த காய் சமைக்கிறதில சந்தோஷம்தான்.பார்க்க நன்றாக இருக்கு. புதினா என்னிடம் இருப்பதும் அடர்த்தியா வளர்ந்திருக்கு. சட்னி செய்யனும்.
    அட..ஜீனோ கூட ஆர்வமா பார்க்கிறாரா! சிட்டியை.
    நல்லதொரு பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  14. thani sandosham than, namma chediyale irunthu kai paricha samaikkarathu..

    ReplyDelete
  15. @இமா, கருத்துக்கு நன்றி!
    //இந்தப் பதிவில் ஒருவர் காரட் அறுவடை:) பற்றி கேள்வி கேட்கிறார். ;))// நீங்க வேற இமா! மண்ணுக்குள்ள வெள்ளைக் கலர்ல ஏதோ இருக்க மாதிரிதான் தெரியுது! ஆரஞ்ச்-சிவப்பு வண்ணம்லாம் இருக்க மாதிரியே தெரில! எதிர்பாத்த்து ஏமாந்துராதீங்க! :)

    //ஒரே ஒரு ஜன்னலைத் திறந்து வைச்சுட்டு தட்டுறேன் இந்தத் தடவை. ;)// கதவத் தட்டினாலாவது திறந்து வீட்டுக்குள்ள கூப்பிடலாம்! இப்படி ஜன்னலைத்:) திறந்துவைச்சு தட்டறீங்களே, என்ன செய்யறது!! ஹஹஹா!! என்ர கம்ப்யூட்டர்ல விண்டோஸ் இல்லை, நாங்கள்லாம் ஸஃபாரி-காரங்க! ;))))
    ~~
    @ஏஞ்சலக்கா,//ஆறு வடைன்னு சொல்லிருக்கீங்க ..ஒரு வடையை கூட காணுமே ????// வடை சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடும் ஏஞ்சல் அக்காவை என்னவென்று கேக்க பூஸாரைக் காணுமே?!? அவ்வ்வ்வ்வ்!

    //..வெந்தய கீரை அறுவடை செய்தோமே நாங்க ..இப்போ கொத்தமல்லி அறுவடை ரெடியா இருக்கு ..நெக்ஸ்ட் தக்காளி ..பீற்றூஊஊஊஊஊட் :))// வாவ்! பெரிய வெஜ்ஜி பாட்ச் போட்டிருக்கீங்க போலருக்கே? கலக்குங்கோ...போட்டோஸ்லாம் போடுங்க! :)

    //ஜீனோ ...என்னா வேடிக்கை :))//அவர் சைஸோ அரையடி..அவர் இருப்பதோ 26-வது மாடி, அப்ப உலகம் எப்படி தெரிந்திருக்கும் அவர் பார்வைல என ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க! :))))

    கருத்துக்கு நன்றி ஏஞ்சல் அக்கா! [ஏன் இப்படி புதுப் பேரில சுத்தறீங்க??!;)]
    ~~
    @சித்ராக்கா, //ஜீனோ ஃபயர் ஒர்க்ஸை எதிர் பார்த்திட்டிருக்காறோ!!// இது மே25ஆம் தேதி எடுத்த படம், லேட்டஸ்ட் இல்லை! ஹீஹி!! :)

    கத்தரியை ரசித்து கருத்துத் தந்ததுக்கு மிக்க நன்றிகள்!
    ~~
    @தனபாலன்,//நமது 'தோட்டத்து' சமையல் என்றால் மனதில் வரும் சந்தோசமே தனி...//கரெக்ட்டாச் சொன்னீங்க தனபாலன் சார்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
    ~~
    @ராதாராணி,//சின்னகாய்தான்னு சொல்றீங்க.. பார்த்தா உங்க கை நீளத்துக்கு காய் இருக்கு மகி.. ( ஹைபிரிட் வகையோ )// ஆவ்வ்வ்வ்வ்வ்! இந்த வகை காய் இங்கே கடைகள்ல பார்த்திருந்தா நீங்க இப்படிச் சொல்ல மாட்டீங்க! நீஈஈஈளமா இருக்கும். இது பொடிசுங்க! :)
    //பூண்டையும், பச்சை மிளகாயையும் அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால் பூச்சியெல்லாம் ஓடியே போயிடும்.//--பாயிண்ட் நோட்டட்! எதிர்காலத்தில் உபயோகப்படுத்திக்கறேன், நன்றிங்க! :)
    ~~
    @விஜியக்கா, நன்றி! கத்தரி-ஸுக்கினி பார்க்க ஆவலாக இருக்கிறேன்! :)
    ~~
    @இளமதி, //சடைக்குட்டியாச்சா.. சிங்கம் மாதிரி இருக்கா. // ஆஹா! நம்ம பூஸு வெகேஷன் எடுத்திருக்க டைமில இதைச் சொல்றீங்களே, அவங்களும் கேட்டிருந்தா இன்னேரம் இமயத்தின் உச்சில நின்னு சிங்கம் மாதிரி கர்ச்சித்திருப்பாங்க! :)))

    //போனா குறைஞ்சது 3 அல்லது 4 மணித்தியாலம் அங்கினயே சுத்திட்டு வருவ. வெளியில் போனாலும் அப்பப்ப அவசர அவசரமா வீட்டுக்குள்ளார வந்து நான் இருக்கேனான்னு பார்த்திட்டு தனது சாப்பாடு, டாய்லெட் தொட்டி எல்லாம் இருக்கான்னு பார்ப்பா. // ஆஹா! கேட்ஸுக்கு இது ஒரு வசதியில்ல!! ஜாலியா ரோமிங் பண்ணலாம்! நாங்க வளர்த்த பூனைகள் எல்லாம் ஞாபகம் வராங்க!! :)

    இங்க ஜீனோவுக்கு கிட்டத்தட்ட பூனை குணம்தான்! ;) புதரில இருக்கும் பல்லிகளைப் பிடிக்கப் போவதுன்னா அவ்வளவு குஷியா முயல் மாதிரி துள்ளித் துள்ளீப் போவார். ஊர் சுத்தினாலும் கரெக்ட்டா வீட்டுக்கு வந்துருவார், ஆனா ஆளில்லாம அவரைத் தனியே அனுப்பினா இங்கே நோட்டீஸ் வந்துரும்ங்க! அவ்வ்வ்வ்வ்!

    மீராவைக் கேட்டதாச் சொல்லிப்போடுங் இளமதி! :) கருத்துக்கு நன்றிகள்!
    ~~
    ரஞ்சனி மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
    ~~
    மீனா, ஆமாங்க நம்ம வீட்டுக் காய்னா தனி ருசியில்ல! :) நன்றி, கருத்துக்கு!
    ~~
    @காமாட்சிம்மா, //மஞ்சள் பொடியைக் கரைத்து கத்தரிச் செடியில் தெளித்துப் பார். சாம்பலுக்கு எங்கு போவது.// இப்ப பரவாயில்லம்மா, இனி பூச்சிகள் வந்தா உங்க யோசனையைப் பயன்படுத்துறேன். சொன்னமாதிரி சாம்பலுக்கு எங்கே போவது!!
    கருத்துக்கு நன்றிம்மா!!
    ~~
    @ஆசியாக்கா, //லைட்டாக டிட்டர்ஜண்ட் சோப் அல்லது வாஷிங் பவுடரை கரைத்து தெளித்தாலும் புழு வராது.//--ஒன் மோர் பாயின் நோட்டட்! தேங்க் யு! :)
    ~~
    @கொயினி, புதினா வளர்ந்தாச்சா? சூப்பர்! :)
    இது ஹோட்டல்ல எடுத்த ஃபோட்டோங்க, எங்க வீடில்லை!
    நன்றி கொயினி!
    ~~
    @அம்முலு, உங்க ப்ளாகை மறுபடி தூசி தட்டி தோட்டப் படங்களை பகிருங்க என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! :) நன்றி அம்முலு!
    ~~
    @ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்ரிங்க!
    ~~

    ReplyDelete
  16. வணக்கம்

    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_8.html?showComment=1399504745644#c2740972411937371345


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails