தேவையான பொருட்கள் பஃப் பேஸ்ட்ரி ஷீட் -2
கேரட் - 2
பீன்ஸ் -10
உருளைகிழங்கு - 1
ப்ரோஸன் பச்சைப் பட்டாணி -1/4கப்
மிளகாய்த்தூள் -1 1/2ஸ்பூன்
மல்லித்தூள் -1ஸ்பூன்
சீரகத்தூள் -1/2ஸ்பூன்
சோம்புத்தூள் -1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது -2ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
கொத்துமல்லி இலை -சிறிது
சீரகம் - 3/4ஸ்பூன்
எண்ணெய் -1ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
உப்பு
முட்டை -1
செய்முறை
கேரட்,பீன்ஸ்,உருளைக் கிழங்கு,பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
பேஸ்ட்ரி ஷீட்டை முக்கால் மணி நேரம் முன்பாக பிரீசரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
குக்கரில் நறுக்கிய காய்கறிகள்,பட்டாணி,பச்சைமிளகா
எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து மசித்த கலவையை சேர்த்து தண்ணீர் வற்றும்வரை கிளறவும்.இறுதியாக கொத்துமல்லி இலை தூவி இறக்கி ஆறவைக்கவும்.

மாவு தூவி பேஸ்ட்ரி ஷீட்-ஐ சதுரமாகத் தேய்த்துக் கொள்ளவும்.காய்கறி கலவையை பேஸ்ட்ரி ஷீட்டில் வைத்து (நான்கு ஓரங்களிலும் ஒரு இன்ச் இடம் விட்டு) சமமாகப் பரப்பவும்.

பேஸ்ட்ரி ஷீட்டை ஒரு முனையிலிருந்து இறுக்கமாகச் சுற்றவும். ஷீட்டின் இறுதியில் சிறிது தண்ணீர் தடவி ஒட்டவும்.

ரோல் செய்த பேஸ்ட்ரி ஷீட்டை கிளியர் ராப் பேப்பரில் வைத்து சுற்றி பதினைந்து நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்.
முட்டையை உடைத்து ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிவைக்கவும்.பேஸ்ட்ரி ரோல்-ஐ பிரீசரில் இருந்து எடுத்து முட்டையை ரோல் முழுவதும் தடவவும்.
பின்னர் கத்தியால் வேண்டிய வடிவத்தில் நறுக்கி
பேக்கிங் ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும்.
350F ப்ரீ ஹீட் செய்த அவன்-ல் வைத்து பேக் செய்யவும்.
பத்து நிமிடம் கழித்து ட்ரேயை எடுத்து பேஸ்ட்ரி வீல்களை திருப்பி அடுக்கி மீண்டும் பத்து நிமிடம் பேக் செய்யவும்.டேஸ்ட்டி வெஜ் பேஸ்ட்ரி வீல் ரெடி!
குறிப்பு
முட்டை விரும்பாதவர்கள் எக்வாஷ்-க்கு பதிலாக சிறிது வெண்ணையை உருக்கி ரோல் மீது தடவி பேக் செய்யலாம்.
பேஸ்ட்ரி ரோலை எக் வாஷ் கொடுத்து நறுக்குவதை விட, நறுக்கிய பின்னர் எக் வாஷ் செய்தால் ஈசியாக இருக்கும்.
ஸ் டஃபிங் அவரவர் விருப்பபடி, வெஜ் அல்லது நான்வெஜ் கலவை வைத்துக்கொள்ளலாம். சீஸ் விரும்புவோர் சீஸ் வைத்தும் பேக் செய்யலாம்.

























