ஓட்ஸ் எலுமிச்சை உப்மா/ லெமன் ஓட்ஸ்
தேவையான பொருட்கள்
ரோல்ட் ஓட்ஸ்-1கப்
தண்ணீர்-11/2கப்
எலுமிச்சை-1
வெங்காயம்-பாதி
பச்சைமிளகாய்-2
வரமிளகாய்-1
கறிவேப்பிலை- கொஞ்சம்
கடுகு-1/2டீஸ்பூன்
வேர்க்கடலை-1டேபிள்ஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
உப்பு
நல்லெண்ணெய்
செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கவும். வரமிளகாயை கிள்ளி வைக்கவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் வாசனை வர வறுத்து ஆறவைக்கவும்.
ஒண்ணரைகப் தண்ணீரை கொதிக்க வைத்து வறுத்த ஓட்ஸை சேர்த்து வேகவிடவும். ஓட்ஸ் சில நிமிடங்களில் வெந்துவிடும். [தண்ணீர் அதிகம் இருப்பதுபோல தோன்றினால் ஓட்ஸை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும், அடுத்த முறை செய்கையில் கவனமாக, குறைவாக தண்ணீர் கொதிக்கவைத்து ஓட்ஸை வேகவைக்கவும். :) ]
கடாயில் நல்லெண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு தாளித்து, பருப்புகள் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், வெங்காயம், பச்சைமிளகாய், வரமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு, வெந்த ஓட்ஸையும் சேர்க்கவும்.
தீயைக் குறைத்துக்கொண்டு ஓட்ஸ் நன்கு சூடானதும் எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான ஓட்ஸ் எலுமிச்சை உப்புமா, லெமண்ட் ஓட்ஸ் ரெடி. அவல் உப்புமா போலவே ருசி பிரமாதமாக இருக்கும். ஃபைனல் டச்- ஆக chia seeds-தூவி சாப்பிடலாம்.
~~~
தேவையான பொருட்கள்
ரோல்ட் ஓட்ஸ்-1கப்
தண்ணீர்-11/2கப்
தக்காளி-2
வெங்காயம்-பாதி
பச்சைமிளகாய்-2
வரமிளகாய்-1
கறிவேப்பிலை- கொஞ்சம்
இஞ்சி-சிறுதுண்டு
பூண்டு -ஒரு சிறிய பல்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கவும். வரமிளகாயை கிள்ளி வைக்கவும். இஞ்சி-பூண்டைத் தட்டி வைக்கவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் வாசனை வர வறுத்து ஆறவைக்கவும்.
ஒண்ணரைகப் தண்ணீரை கொதிக்க வைத்து வறுத்த ஓட்ஸை சேர்த்து வேகவிடவும். ஓட்ஸ் சில நிமிடங்களில் வெந்துவிடும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு தாளித்து, பருப்புகள் பொன்னிறமானதும் நசுக்கிய இஞ்சி-பூண்டைச் சேர்த்து கிளறவும்.
கறிவேப்பிலை, மஞ்சள்தூள், வெங்காயம், பச்சைமிளகாய், வரமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு, வெந்த ஓட்ஸையும் சேர்க்கவும். தீயைக் குறைத்துக்கொண்டு ஓட்ஸ் நன்கு சூடானதும் உப்மாவை அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான தக்காளி ஓட்ஸ் உப்புமா ரெடி.
~~~
தேவையான பொருட்கள்
ரோல்ட் ஓட்ஸ்-1கப்
தண்ணீர்-11/2கப்
வெங்காயம்-பாதி
பச்சைமிளகாய்-2
தேங்காய்த் துருவல்-2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை- கொஞ்சம்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் (விரும்பினால் தேங்காயெண்ணெய் உபயோகிக்கலாம்)
செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கவும். வரமிளகாயை கிள்ளி வைக்கவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் வாசனை வர வறுத்து ஆறவைக்கவும்.
ஒண்ணரைகப் தண்ணீரை கொதிக்க வைத்து வறுத்த ஓட்ஸை சேர்த்து வேகவிடவும். ஓட்ஸ் சில நிமிடங்களில் வெந்துவிடும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு தாளித்து, பருப்புகள் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு, வெந்த ஓட்ஸையும் சேர்க்கவும். தீயைக் குறைத்துக்கொண்டு ஓட்ஸ் நன்கு சூடானதும் தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்து, உப்மாவை அடுப்பிலிருந்து இறக்கவும்.
எனது இரண்டு ச்ச்ச்ச்ச்வீட் செல்லக் கரடிக் குட்டிகள்!
:)














