தேவையான பொருட்கள்சேமியா - 1 கப்
கேரட் - 1 (சிறியது)
பட்டாணி(ப்ரோசன்) - 1/4 கப்
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப
மிளகாய் வற்றல் -
2
இஞ்சி - சிறு
துண்டு
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப் பருப்பு, உளுந்துப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை ,
கொத்துமல்லி இலை - சிறிதளவு
சர்க்கரை - 1/2 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறைசேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
கேரட்டை பொடியாக நறுக்கி அரை கப் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் நான்கு நிமிடங்கள் வேக வைத்துக்கொள்ளவும்.
சேமியாவை ஒரு மைக்ரோவேவ் ஸேப் பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நான்கு நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இவற்றை வதக்கவும். தேவையான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
வேகவைத்த கேரட் மற்றும் ப்ரோசன் பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இறுதியாக வேக வைத்த சேமியாவை சேர்த்துக் கிளறி மூன்று நிமிடங்கள் குறைந்த தணலில் வைக்கவும். நறுக்கிய கொத்துமல்லி இலை தூவவும்.
சுவையான,உதிர்-உதிரான சேமியா உப்மா ரெடி! தேங்காய் சட்னி/ ஊறுகாய் இதற்கு பெஸ்ட் காம்பினேஷன்.
குறிப்புமைக்ரோவேவ்-ல் சமைக்கும் பொழுது ஸ்டேண்டிங் டைம் மிக முக்கியம்..உதாரணத்துக்கு நான்கு நிமிடங்கள் வேக வைத்தால், நான்கு நிமிடம் முடிந்து மைக்ரோவேவ் ஆப் ஆனவுடனே மைக்ரோவேவ்-ஐத் திறக்கக் கூடாது. இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே திறக்க வேண்டும்.
சேமியாவை தனியாக வேக வைத்து சேர்ப்பதால் குழைந்து போகாமல் பொல-பொலவென்று இருக்கும்.
இந்த உப்மாவில் உங்கள் கற்பனைத்திறனை உபயோகித்து:) பல்வேறு விதமாகச் செய்யலாம்.
- தாளிக்கும்போது சிறிது சீரகம், கொஞ்சம் தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.
- காய்கறிகள் சேர்க்காமல் ப்ளைன் சேமியா உப்மா செய்யலாம்.
- பச்சை மிளகாய் அளவைக் குறைத்துக்கொண்டு மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கலர்புல்லாக செய்யலாம்.
- காய்கறிகளில் பீன்ஸ், கார்ன்,குடை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
- இறுதியாக சிறிது லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
- பட்டை-கிராம்பு சேர்த்து சேமியா பிரியாணியாகவும் செய்யலாம்.
சேமியாவை மொத்தமாக வறுத்து வைத்துக்கொண்டால் உப்மா செய்கையில் வசதியாக இருக்கும்.
என் சமையலில் பெரும்பாலும் எல்லாவற்றிலும் இறுதியாக சர்க்கரை சேர்த்துவிடுவேன்..இது என் மாமியாரிடமிருந்து என்னைத் தொற்றிக்கொண்ட பழக்கம். சாம்பார் முதல், உப்மா வரை எல்லாவற்றிலும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.