Tuesday, January 19, 2010

ப்ரூட் கேக்





தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் ப்ளோர் / மைதா மாவு - 1 1/2 கப்
வெண்ணெய் - 115 கிராம்
முட்டை - 3
சர்க்கரை - 1 கப்
ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் - 1 கப்
வெனிலா எஸ்ஸன்ஸ் - 2ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
ஆரஞ்சுப் பழம் - 1




செய்முறை
மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து மூன்று முறை சலித்து வைக்கவும்.

முட்டைகளை உடைத்து மஞ்சள் கரு, வெள்ளைக் கரு தனித்தனியாகப் பிரித்து வைக்கவும்.

பாத்திரத்தில் வெண்ணையைப் போட்டு எலெக்ட்ரிக் பீட்டரால் நிமிடங்கள் கலக்கவும்.

அத்துடன் சிறிது சிறிதாக சர்க்கரையைச் சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கவும்.
[இந்நிலையில் வெண்ணெய் +சர்க்கரைக் கலவை உளுந்து மாவு பதத்தில் இருக்கும்.]



மஞ்சள் கரு மற்றும் வெனிலா எஸ்ஸன்ஸ் இவற்றை வெண்ணெய்,சர்க்கரைக் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்..விஸ்க் இருந்தால் அதனைக் கொண்டு கலக்கவும். எலெக்ட்ரிக் பீட்டர் எனில் மிகவும் மெதுவான வேகத்தில் கலக்கவும்.




முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு நுரைக்கும் வரை கலந்து அதனை மாவுக் கலவையுடன் கலக்கவும்.



ஆரஞ்சுப் பழத்தின் தோலை, காய் துருவியில் துருவி மாவுக்கலவையுடன் சேர்த்து, பழத்தின் ஜூசையும் பிழிந்து சேர்க்கவும்.



உலர் பழங்கள், நட் வகைகளை ஒரு ஸ்பூன் மைதாவில் புரட்டி கேக் கலவையுடன் கலக்கவும்.




கேக் பானில் வெண்ணெய் தடவி கேக் கலவையை கொட்டி உலர் பழங்களால் அலங்கரிக்கவும்.




350F. ப்ரீஹீட் செய்த அவனில் 35 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும். கத்தியால் குத்திப் பார்த்தால் கத்தியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும். அதுவே கேக் வெந்ததற்கு அடையாளம்.



கேக்கை 2 மணி நேரம் ஆற வைத்து கேக் பானில் இருந்து எடுத்து வைக்கவும்.

குறிப்பு:
முட்டை மற்றும் வெண்ணெயை இரண்டு முதல் மூன்று மணி நேரம் முன்பே பிரிட்ஜ்-லிருந்து எடுத்து வெளியே வைக்கவும்.

6 comments:

  1. டீடெய்ல்ஸ் எல்லாம் கவனமா ஆட் பண்ணி இருக்கிறீங்க. பாராட்டுக்கள். :)

    ReplyDelete
  2. மகி கேக் ரெசிபி வித விதமா செய்து அசத்துவதில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது.... ரொம்ப அருமை

    ReplyDelete
  3. உங்கள் வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி இமா, ஜலீலாக்கா & சாரு !! :)

    ReplyDelete
  4. இது நாங்கொடுத்த ரெசிபி தான :))

    ReplyDelete
  5. அக்கானுங்கம்மிணி..நீங்க குடுத்த ரெசிப்பியேதானுங்!

    எங்கூர் வால்மார்ட் க்றிஸ்மஸ்-க்கு முன்னத்த நாள் மத்யானம் வரைக்கும் இருந்துதுங்கோ..நானும் நீங்க ரெசிப்பி அனுப்புன உடனே போயி எல்லா சாமானும் வாங்கிட்டு வந்து, நீங்க சொன்ன மாதிரியே:) கேக் சுட்டுப் போட்டனுங்கோ! :) :D

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails