Thursday, January 21, 2010

இடியப்பம்













தேவையான
பொருட்கள்
அரிசிமாவு - 1 1/2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் / நெய்- 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை
தண்ணீருடன் உப்பு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதி வந்தவுடன் எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு, அரிசி மாவில் ஊற்றி, ஒரு ஸ்பூனால் கலக்கி பாத்திரத்தை, (குறைந்தது) அரை மணி நேரம் இறுக்கமாக மூடி வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து பாத்திரத்தைத் திறந்து மாவை நன்றாகப் பிசையவும். மாவு முறுக்கு மாவு பதத்திற்கு வரும். இடியப்ப அச்சில் மாவைப் போட்டு பிழிந்து இட்லித்தட்டுகளில் வேகவைத்து எடுக்கவும்.






























சுவையான இடியப்பம் ரெடி!
குறிப்பு
எங்க வீட்டில் [எங்க வீடு என்பது என் அம்மா வீடு, மாமியார் வீடு இரண்டுமே :) ], இடியப்பமெல்லாம் செய்ததே இல்லை..யு.எஸ்.வந்தபின்னரும் பலநாள் ப்ரோசன் இடியப்பம்தான் வாங்கிக்கொண்டிருந்தேன்.சமீப காலமாக ப்ரோசன் உணவு வகைகள் வாங்குவது கிட்டத்தட்ட நின்று போய், நானே வீட்டில் எக்ஸ்பெரிமென்ட் செய்து கொண்டிருக்கிறேன். இடியப்பமும் ஒரு வெற்றிகரமான சோதனை முயற்சியாகி, எங்க வீட்டு டிபனில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. :)

11 comments:

  1. எல்லாம் சோதனை எலி கொடுத்திருக்க எடம்.. பண்ணுங்க பண்ணுங்க..

    ReplyDelete
  2. மகி என்னவர்க்கு மிகவும் பிடித்த டிபன் நல்லா இருக்கு

    ReplyDelete
  3. சாரு,மறக்காம டெய்லி என் கிச்சனுக்கு வந்து கருத்து சொல்லிட்டு போறீங்க..ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!:D நன்றி!

    சந்தனா..எலிக்கு இடியப்பம் ரொம்ப புடிச்சுப் போனதாலதானே அடிக்கடி செய்யறேன்!! :)

    ReplyDelete
  4. சர்க்கரை சேர்க்கிறது புதுசா இருக்கு.

    ReplyDelete
  5. சேர்த்துப் பாருங்க இமா..லேசான இனிப்புச் சுவையோட இடியப்பம் ரொம்ப நல்லா இருக்கும்.
    வருகைக்கு நன்றி! :)

    ReplyDelete
  6. மகி இடியாப்பம் நல்லா வந்திருக்கு போல...ம்ம்ம்....இடியாப்பத்திர்கு நல்ல சைட் டிஷ் கொடுங்க.....விரைவில் எதிர்பார்க்கிரோம்....

    ReplyDelete
  7. நன்றி கொய்னி! இடியப்பம் சைட் டிஷ்தானே?? இங்கே குடுத்திருக்கேன் பாருங்க.

    http://mahikitchen.blogspot.com/2010/01/blog-post_28.html

    ReplyDelete
  8. மஹி இங்கு இடியாப்பத்திர்கு பயன்படுத்தியிருக்கும் அரிசி மாவு நீங்களே வீட்டில் தயாரித்ததா...(வீட்டில் தயாரிக்கும் முறையை விளக்கமாக கொடுங்கள்)இல்லை கடையில் வாங்கியதா?அப்படி கடையில் வாங்கினால் இடியாப்ப மாவு என தனியாக வாங்க வேண்டுமா?இல்லை அரிசி மாவு என வாங்க வேண்டுமா?எந்த பிராண்ட் மாவு வாங்கினால் நன்றாக இருக்கும்?
    என சொல்லுங்க மஹி.

    ReplyDelete
  9. கொய்னி,நான் யூஸ் பண்ணறது இங்க இண்டியன் ஸ்டோர்ல வாங்கிய ப்ளெய்ன் அரிசிமாவு..பிராண்ட் நேம் 'தீப்'[DEEP]. அது பச்சரிசி மாவுன்னுதான் நினைக்கிறேன்.இடியப்ப மாவு தனியா இருக்கும்னு சொல்லறாங்க..நான் பாத்தப்போ என் கண்ணுக்கு சிக்கல..இதுவே ஓகே-வா தான் இருக்கு.

    இது வரை நான் வீட்டில மாவு அரைச்சு செய்யலை..பட், கூடிய சீக்கிரம் அதையும் எக்ஸ்பெரிமென்ட் பண்ணிடுவேன். :) பண்ணிட்டு சொல்லறேன்.

    ReplyDelete
  10. ஓ அப்படியா மஹி மிகவும் நன்றி :)

    ReplyDelete
  11. very yummy idiyappam..idhu ennoda favourite mahi akka..but enkitta idly cooker illa.. please give some ideas..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails