Thursday, February 18, 2010

தேங்காய்ப்பால் முறுக்கு


கோவையில் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒரு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செய்ன். அங்கேதான் நாங்கள் மளிகைசாமான் வாங்குவோம். அங்கிருக்கும் ஸ்னாக்ஸ் வகைகளில் ஆரஞ்ச் கப் கேக், எள்ளுருண்டை அப்புறம் தேங்காய்ப்பால் முறுக்கு இவை மாதம் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வரும் ஸ்னாக்ஸ் வகைகள். வெள்ளை வெளேரென்று, தேங்காய் எண்ணெய் மணத்துடன் தேங்காய்ப்பால் முறுக்கு சூப்பராக இருக்கும்.

திடீரென்று இந்த முறுக்கின் நினைவு வந்தது..வீட்டில் இருந்த சாமான்களை வைத்து செய்துவிட்டேன்.. தேங்காய் எண்ணெயிலெல்லாம்
பொரிக்கவில்லை,கனோலா ஆயிலில் தான் பொரித்தேன். அப்போது சாப்பிட்ட அளவு டேஸ்ட் இல்லாவிட்டாலும் ஏதோ சுமாராக வந்தது..எங்க வீட்டு எலி மிகவும் ரசித்து ருசித்தது.(நானும்தான்..:) ) நீங்களும் செய்து பாத்து சொல்லுங்க.

தேவையான
பொருட்கள்
அரிசி மாவு - 1கப்
உளுந்து மாவு - 1/4கப்
வெண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப்பால் பொடி - 4ஸ்பூன்
உப்பு
தண்ணீர்
எண்ணெய்

செய்முறை
அரிசிமாவு,உளுந்து மாவு, தேங்காய்ப்பால் பொடி, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். அத்துடன் வெண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கவும்.

சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

மிதமான சூட்டில் எண்ணெயைக் காயவைக்கவும். முறுக்கு அச்சில் மாவைப் போட்டு டைரக்ட்டாக எண்ணெயில் பிழிந்து விடவும்.

முறுக்குகளை திருப்பி விட்டு கலைத்து விடவும்.எண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் எடுத்துவிடவும்.


சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு ரெடி!



குறிப்பு

  • உளுந்து மாவிற்கு, 1/4 கப் உளுந்தை வெறும் வாணலியில், குறைந்த சூட்டில் வறுக்கவும். பருப்பு நிறம் மாறாமல் வறுக்கவேண்டும். இரண்டு மூன்று நிமிடங்களிலேயே நல்ல வாசனை வரும். அப்போது அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.
  • எண்ணெய் குறைந்த சூட்டில் காய வேண்டும்..இல்லையெனில் முறுக்குகள் நிறம் மாறிவிடும்.

9 comments:

  1. உங்க ஸ்லைட் ஷோல என்னமோ பறக்குது மஹி.. புதுசா ஈ கொசு இந்த மாதிரி ஏதாச்சும் விடுங்க..

    இதுவும் கஸ்டமான ஐட்டம்.. ஊருக்கு போனா ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு போயி அங்க செஞ்சு பாத்துக்க வேண்டியது தான்..

    ReplyDelete
  2. மஹி ரொம்ப நல்லா இருக்கு , slide show நல்லா இருக்கு , கலக்குங்க

    தேங்காய் பால் முறுக்கு செய்யும் போது உளுந்துக்கு பதில் பாசிபருப்பு போட்டு செய்ங்க ரொம்ப நல்லா இருக்கும் கொஞ்சம் எள் சேர்த்து இருக்கலாம் , நீங்கள் தான் சொல்லிட்டிங்களே வீட்ல இருந்ததை வச்சு செஞ்சியிருக்கேனு சோ நோ கமெண்ட்ஸ் ,

    ReplyDelete
  3. அம்மாவின் கைமணம் போல் இருக்கு... நானாக தனியாக முறுக்கு செய்ததில்லை செய்யனும். நல்லாயிருக்கு உங்கள் குறிப்பு

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்கு!!

    ReplyDelete
  5. எங்க வீட்டில் எப்பவும் ஹைஜீனிக் சமையல்தான் சந்தனா..ஈ,கொசு இதுக்கெல்லாம் இடமில்லை. :)

    சாரு..வீட்டில கருப்பு எள் இல்ல..வெள்ளை எள் போட்டு போர்!! அதான் போடல. பாசிப்பருப்பை எப்படி சேர்க்கணும்னு சொல்லுங்க சாரு..:D

    ஃபாயிஜா, நானும் இப்போதான் கொஞ்சநாளா செய்து பழகிட்டிருக்கேன்.

    உங்களனைவர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! சுஸ்ரீ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  6. //ஈ,கொசு இதுக்கெல்லாம் இடமில்லை. :)// 'எலி'க்கு மட்டும் தான் இடம். சரிதானே மகி!! ;)

    ReplyDelete
  7. சரிதான் இமா..ஆனா எங்க வீட்டுல இருப்பது ரெண்டு கால் எலி..அது என்னை விட ஹைஜீனிக்!:D

    ReplyDelete
  8. நான் இந்த மாதிரி ரெசிப்பியில் எல்லாம் ரொம்ப வீக். அட சந்தனாவின் ஐடியா நல்லா இருக்கே....நானும் பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவிடம் கொடுத்து விட்டு இருக்கலாம் போல....

    ReplyDelete
  9. ம்ம்.. அக்கம் பக்கத்துல அம்மா வீட்டை வெச்சுகிட்டு ஜாலியா இருக்கீங்க..என்ஜாய்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails