Wednesday, March 10, 2010

மைசூர் போண்டா


தேவையான பொருட்கள்
மைதா மாவு /ஆல்பர்ப்பஸ் ப்ளோர் -1கப்
பேக்கிங் சோடா- 2சிட்டிகை
தயிர் -1கப்
வெங்காயம் (மீடியம் சைஸ்) -1
பச்சைமிளகாய் - 4(காரத்துக்கேற்ப)
தேங்காய்ப்பல் - 1/4கப்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை -சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை
மாவுடன் பேக்கிங் சோடாவை நன்றாக கலந்துகொள்ளவும்.

வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும்.உப்பு,தேங்காயையும் சேர்க்கவும்.

அத்துடன் சிறிது சிறிதாக தயிரைச் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.


மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.



விரைவில் செய்யக்கூடிய மாலை நேர சிற்றுண்டி..தயிர் சேர்ப்பதால் லேசான புளிப்பு சுவையுடன், தேங்காயும் சேர்ப்பதால் நன்றாக இருக்கும்.

நான் மாவை ஸ்பூனால் எடுத்து போட்டு பொரித்திருப்பதால் போண்டா ஷேப் கொஞ்சம் ஒரு மாதிரியா:) இருக்கு..பொறுமை இருப்பவர்கள் கையில் தண்ணீர் தொட்டுக்கொண்டு மாவை உருண்டையாக உருட்டிப் போடுங்க. ஹி,ஹி!!!

11 comments:

  1. மகி, காலையிலே போண்டா என்று இருந்ததும் வந்து பார்த்தேன். எரர் மெஸேஜ் வந்தது.
    நல்லாயிருக்கு. பப்பியின் வாயிலே போண்டாவா? (முதல் படம் அப்படி தான் தெரிகிறது). முறைக்க வேண்டாம்.

    ReplyDelete
  2. வழக்கமா டெக்கரேஷனுக்குன்னு யூஸ் பண்ணற பூவெல்லாம் மிஸ்ஸிங்..அதனால கைக்கு கிடைச்ச சாப்ட் டாய்-ஐ வைச்சு படம் புடிச்சிட்டேன் வானதி.வேற போட்டோ எடுக்கலாம்னு பாத்தா..அதுக்குள்ளே போண்டா காலி!

    எரர் மெசேஜ்-கு காரணம் நேத்து கை தவறி,பாதி டைப்பிங்க்லையே பப்ளிஷ் பண்ணி,உடனே அதை சேவ் பண்ணி, இப்ப மறுபடி பப்ளிஷ் பண்ணிருக்கேன்..ஹி,ஹி!
    நன்றி வானதி!

    ReplyDelete
  3. அப்பாடா! ஒரு மாதிரியா போண்டாவை கண்ணில காட்டிட்டீங்கள். நன்றி. ;)

    இப்படி குட்டிக் குட்டியாகத் தான் இருக்குமா மகி?

    ReplyDelete
  4. //குட்டிக் குட்டியாகத் தான் இருக்குமா மகி?// போண்டா சைஸ்ல இன்னும் கொஞ்சம் பெரிய உருண்டைகளா இருக்கும்.இப்படி பைட் சைஸ்ல இருந்தா சாப்பிட வசதியா இருக்குமேன்னு செய்திருக்கேன். ஸ்பூன்ல எடுத்து போடுவதால ஈஸியா இருக்கும்.
    வருகைக்கு நன்றி இமா!

    ReplyDelete
  5. ம்ம்ம் போண்டா ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  6. ஒரு வழியாக மைசூர் போண்டா வந்து சேர்ந்து விட்டது....போண்டா நல்லா இருக்கு மஹி...நன்றி.
    koini.

    ReplyDelete
  7. ம்ம்.. நீங்க பாட்டுக்கு போட்டுகிட்டே போறீங்களே மஹி.. நானெப்ப இதயெல்லாம் செய்ய?

    அப்பாடா.. அந்த யெல்லோ ரோஸ்க்கு கொஞ்சம் நாள் உங்க போட்டோ கொடுமையிலயிருந்து விடுதல.. :))

    ReplyDelete
  8. நன்றி சாரு,கொய்னி,சந்தனா!

    /நானெப்ப இதயெல்லாம் செய்ய?/ ஒரு வீக் எண்ட்ல செஞ்சு சாப்புட வேண்டியது..இல்லாட்டி ஒரு வீகென்ட் கிளம்பி எங்க வீட்டுக்கு வரவேண்டியது..ச்சூஸ் த பெஸ்ட் ஆப்ஷன்! :D

    / அந்த யெல்லோ ரோஸ்க்கு கொஞ்சம் நாள் உங்க போட்டோ கொடுமையிலயிருந்து விடுதல.. :))/ இல்லையே..கண்டுபுடிச்சிட்டேனே! அடுத்த ரெசிப்பில ரோஸ் வந்துடும். :)

    ReplyDelete
  9. Oh wow thats my fav one..looks great and tempting.

    Pavithra
    www.dishesfrommykitchen.com

    ReplyDelete
  10. மஹி இதுல தயிருக்கு பதிலா இட்லி மாவு 1 கரண்டி கலந்து பண்ணினாலும் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க பவித்ரா.

    அடுத்த முறை இட்லிமாவு சேர்த்து செய்து பார்க்கிறேன்.வருகைக்கு நன்றி சுகந்திக்கா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails