Thursday, March 25, 2010

சுரைக்காய்-தட்டைப்பயறு குழம்பு


தேவையான பொருட்கள்
தட்டைப்பயறு -1/4கப்
சுரைக்காய் -100கிராம்
புளிக்கரைசல்-1/4கப்
தேங்காய் விழுது-3ஸ்பூன்
தக்காளி-1
வெங்காயம்-பாதி
பூண்டு-3பல்
பச்சைமிளகாய்-௧
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது
எம்.டி.ஆர்.மெட்ராஸ் சாம்பார் பவுடர்-1 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
சீரகம்-1/2ஸ்பூன்

செய்முறை
தட்டைப்பையறை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் மூன்று விசில் வைத்து(பயறு குழைந்து போகாமல்) வேக வைக்கவும்.

சுரைக்காயை தோல்நீக்கி சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்(காய் இளசாக இருந்தால் தோலுடனே போடலாம்).

வெங்காயம்,மிளகாய்,தக்காளியை நறுக்கிவைக்கவும். பூண்டை தோல் உரித்து (பெரிய பற்களாய் இருந்தால்)நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம் தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,பூண்டு,தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சுரைக்காய்,புளிக்கரைசல்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

காய் வெந்ததும் வேக வைத்த தட்டைப்பயறு, தேங்காய் விழுது,சாம்பார் பொடி சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.

லேசாக எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். இந்தக் குழம்பு சுடு சோற்றுடன் சாப்பிட சுவையாய் இருக்கும். தோசைக்கும் நன்றாக மேட்ச் ஆகும்.




குறிப்பு
தேங்காய் விரும்பாதவர்கள் தவிர்த்து விடலாம்.
தேங்காய் அரைத்து ஊற்றுவதற்கு பதில், பல்லுப்பல்லாக நறுக்கிப் போட்டாலும் நன்றாக இருக்கும்.

12 comments:

  1. (//படிக்கறவங்க நிலமைய கொஞ்சங்கூட கன்சிடர் பண்ணாம//உண்மையை புரிந்துகொண்டீர்களே மஹீ..) ;))

    சுரைக்காய் தட்டைபயறு குழம்பு..நல்லா இருக்கு.....நன்றி மஹி

    ReplyDelete
  2. குழம்பு சூப்பர் மகி.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு மஹி .

    ReplyDelete
  4. //(//படிக்கறவங்க நிலமைய கொஞ்சங்கூட கன்சிடர் பண்ணாம//உண்மையை புரிந்துகொண்டீர்களே மஹீ..) ;))
    // கொய்னி,டோன்ட் வொரி..சீக்கிரமா கன்சிடர் பண்ணிடறேன்.:)

    நன்றிங்க கொய்னி,சாரு ,ஆசியாக்கா&வானதி!

    ReplyDelete
  5. Very healthy recipe. Click is good too.

    ReplyDelete
  6. ம்ம்.. இத எங்க வாங்கினீங்க மஹி? ஆங்கிலத்துல இதுக்கு பேரென்ன?

    ReplyDelete
  7. தேங்க்ஸ் சிட்சாட்.

    தேங்க்ஸ் சந்தனா..இந்த கலர்:) தட்டைப்பயறுதான் ஊர்ல வாங்குவோம்.இங்கே பக்கத்துல ஒரு ஏஷியன் மார்க்கட்ல வாங்கினேன்.என்னமோ ஒரு பீன்-ன்னு நேம் இருந்தது.மறந்துபோச்!சாரி!:(

    இண்டியன் ஸ்டோர்ல இருக்கும்னு நினைக்கிறேன்..கிடைக்குதான்னு பாரேன்!

    ReplyDelete
  8. Roombha nalla irukku recipe..seikiram seidhu pakkaren..

    ReplyDelete
  9. செய்து பாருங்க நித்து..நல்லா இருக்கும். வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  10. amaam suganthi akkaa!! :)))))))))

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails