Friday, May 14, 2010

பரோட்டா குருமா

பரோட்டா செய்யும்போது வெஜிடபிள் குருமாதான் வழக்கமா செய்வேன். ஆசியா அக்காவின் எம்ட்டி சால்னா ரெசிப்பி பார்த்ததுல இருந்து பரோட்டாக்கு பர்பெக்ட் மேட்ச் அதான்னு முடிவு பண்ணி,பரோட்டா செய்யும் போதெல்லாம் இந்த குருமாதான்..சூப்பரான மணத்துடன் சூப்பரா இருக்கும்..சுவையான இந்த ரெசிப்பியைப் பகிர்ந்ததுக்கு நன்றி ஆசியா அக்கா! :)
தேவையான பொருட்கள்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
தக்காளி -2
புதினா - சிறிது
கறிவேப்பிலை,கொத்துமல்லி-சிறிது
தேங்காய்த் துருவல்- 5 ஸ்பூன்
முந்திரி -2
கிராம்பு -2
பட்டை- 2இன்ச் துண்டு
ஏலக்காய்-2
இஞ்சி-பூண்டு விழுது-ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1 1/2ஸ்பூன்
மல்லித்தூள்-1ஸ்பூன்
சீரகத்தூள்-1/2ஸ்பூன்
சோம்புத்தூள்-1/2ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
பட்டை,கிராம்பு,ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளி,புதினாவை பொடியாக நறுக்கவும்.
தேங்காயுடன் முந்திரி சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் காயவைத்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து சிவக்க வதக்கவும்.
பட்டை-கிராம்பு-ஏலப்பொடி,இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி,புதினா,தக்காளி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
மசாலா நன்கு வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் அரைத்த தேங்காய்-முந்திரி விழுது, தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து,

மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க விடவும்.கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

கம-கம குருமா ரெடி. பரோட்டாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை,ஆப்பம், வெறும் சாதம் இப்படி எல்லா மெயின் டிஷ் உடனும் மேட்ச் ஆகும்.

24 comments:

  1. ஓ! அப்போ இது நான்வெஜ் இல்லையா மகி? ;)

    குறிப்பினைப் பகிர்ந்துகொண்ட இருவருக்கும் நன்றி.

    ReplyDelete
  2. மகி நான் இப்போதானே பார்க்கிறேன்,அய்யோ எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா?அறுசுவையில் இந்த எம்.டி சால்னா நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு என்பதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி மகி.புது டெம்ப்லேட் அருமை.

    ReplyDelete
  3. Very interesting and tasty dish. Loved the clicks.

    ReplyDelete
  4. kuruma looks yummy...excellent for parotta.

    ReplyDelete
  5. kurma & new template super mahi!!

    ReplyDelete
  6. அருமையான விளக்கங்களுடன் டிய சிறந்த பதிவு பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  7. அட ஆசியாவின் எம்டி சால்னா மகி சமையலரையில் கம கமக்குது.

    ReplyDelete
  8. இன்னும் கொஞ்சம் நாட்கள் கழித்துப் பண்ணிப் பாக்கறேன்.. நன்றி மஹி.. நன்றி ஆசியா..

    ReplyDelete
  9. டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது!! :)மேல இருக்கற போட்டோ நீங்க பிடிச்சதா? :))

    ReplyDelete
  10. Mahi, looking yummy. I will try this very soon.

    ReplyDelete
  11. நன்றி இமா! எனக்கு தெரிந்த வரை இது வெஜிடேரியன் ரெசிப்பிதான்.:)
    ~~
    ஆசியாக்கா,உங்க ரெசிப்பீஸ்ல இது எங்க பேவரிட்..வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி.
    ~~
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சிட்சாட்.
    ~~
    வேணி,நன்றிங்க!
    ~~
    மேனகா,நன்றி! டெம்ப்ளேட் வேலைகள் இன்னும் நெறைய பாக்கி இருக்கு. :)
    ~~
    பனித்துளி சங்கர்,நல்வரவு. தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி & நன்றி!
    ~~
    ஜலீலாக்கா, நன்றி!
    ~~
    //மேல இருக்கற போட்டோ நீங்க பிடிச்சதா? :)) // இல்லை..அது டெம்ப்ளேட்டுடனே இருந்த போட்டோ சந்தனா.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    நன்றி வானதி!
    ~~

    ReplyDelete
  12. ஆசியாவின் எம்டி சால்னா அட ..பார்க்கவே நன்றாக உள்ளது மகி.ஸ்லைட்ஷோவில் காட்டப்படும் படங்களும் புதுமை.பாராட்டுக்கள்

    ReplyDelete
  13. adada orae parotta kurma vaaramaa irukkae ..

    Ungoladuthu romba superaa irukku..

    Pictures romba different aa irukku

    ReplyDelete
  14. ஸாதிகா அக்கா,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    பவித்ரா,நல்வரவு!வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  15. This sounds totally new to me...looks very tasty apt for parotas

    ReplyDelete
  16. hai really its super dish.i vl try

    Banu Arasu

    ReplyDelete
  17. காய்கள் எதுவும் போடாம செய்வதுங்க இந்த குருமா.அதான் இதுக்கு பேரே "empty" சால்னான்னு ஆசியாக்கா சொல்லிருக்காங்க.சூப்பரா இருக்கும்,செய்துபாருங்க. நன்றி!

    ReplyDelete
  18. simply superb kuruma

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails