Saturday, February 20, 2010

பாட்லக் பார்ட்டி


பாட்லக் --- பொதுவாக வெளிநாடுகளில் இருபவர்களுக்கு இது பரிச்சயமான பெயராய்த்தான் இருக்கும். இருந்தாலும் அது என்னன்னு சொல்லிட்டே அப்புறம் ப்ளேடை தொடர்கிறேன்.

இரண்டு மூன்று பேமிலி சேர்ந்து அவரவர் வீட்டில் செய்த உணவுகளை எல்லாம் ஒரு நண்பர் வீட்டுக்கு கொண்டு சென்று, எல்லாரும் சேர்ந்தது ஜாலியாகப் பேசி சிரித்து, கேம்ஸ் விளையாடி, சாப்பிட்டு சில பல மணி நேரங்களை செலவுசெய்துவிட்டு வருவது தாங்க பாட்லக்.

இங்கே என் கணவர் அலுவலக நண்பர்கள் குடும்பம் எல்லாம் சேர்ந்தது பத்து-பதினைந்து பேர் தேறுவோம்..ஆண்கள் எல்லோரும் ஆபீசில் டிஸ்கஸ் செய்து எப்பொழுது யார் வீட்டில் பாட்லக் என்று முடிவு செய்துடுவாங்க..நாங்களெல்லாம் வானேஜ்/காம்காஸ்ட் புண்ணியத்துல மணிக்கணக்கா அரட்டை அடிச்சு யாரார் என்னென்ன டிஷ் செய்து கொண்டுவரதுன்னு டிசைட் பண்ணிக்குவோம்.

இது கடந்த பாட்லக்-குக்கு நான் செய்தது (சப்பாத்தி,கத்தரிக்காய் கிரேவி,தால்)


குறிப்பிட்ட தினத்தன்று (பொதுவாக வீக் எண்ட்தான்) எல்லாரும் ஒரு வீட்டில் கூடி அரட்டைக் கச்சேரி ஆரம்பிச்சா டைம் போறதே தெரியாது..டம்ஷரர்ஸ், சீட்டுக்கட்டு, மாஃபியா (இது ஒரு க்ரூப் கேம்..இது என்னன்னு இங்க இருக்குங்க)ன்னு விளையாடிட்டு இருப்போம்.

குட்டீஸ் எல்லாம் ஒரு ரூமுக்கு போயி அவங்க விளையாட்டைத் தொடர்வாங்க. யாரவது ஒருத்தருக்கு வயித்துக்குள்ள அலாரம் அடிக்கும்.. அம்மாக்களெல்லாம் பொறுப்பா குழந்தைங்களுக்கு சாப்பாடு குடுத்து முடிச்சுடுவாங்க..அப்புறம் சாப்பாட்டுக் கடைய விரிச்சு எல்லாரும் சாப்பிட்டு முடிப்போம்.

இந்த வாரம் எங்க வீட்டு கான்ட்ரிப்யூஷன்...





ஸ்டஃப்ட் கேப்சிகம்










ஆலு பராத்தா


















ஆரஞ்ச் கப்கேக்












அப்புறம்
தான் வருங்க, ட்ரெஷர் பாக்ஸ்!! வேற ஒண்ணுமில்லை,போக்கர் பாக்ஸ் தான்.போக்கர்னா என்னன்னு தெரியாத (என்னை மாதிரி) அப்பாவிங்கள்லாம் சிரமம் பாக்காம இங்கே ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திடுங்க.

எப்படியும் யாராவது ஒருத்தர் கொண்டு வந்திடுவாங்க..எங்க கேங்-ல சும்மா வெறுமனே போக்கர் சிப்ஸ் வைத்து விளையாடரதில்ல..தலைக்கு அஞ்சு டாலர்/பத்து டாலர் வைச்சுதான் வெளையாடறது..பதினோரு மணி வாக்குல போக்கர் ஆரம்பிச்சா டைம் போறதே தெரியாது..குறைந்தது காலை மூணு மணி இல்லாம யாரும் எந்திரிக்க மாட்டாங்க..இடையிடைல சூடா காபி -டீ, இல்ல பாட்லக்-ல வந்திருக்க ஸ்வீட்னு எதாவது அப்பப்ப உள்ளே தள்ளிட்டு தெம்பா(!!) விளையாடுவாங்க.



எங்க வீட்டுல எப்பவும் இவர்தான் விளையாடுவார்.(பேலன்ஸ் ஆன மாதிரி ஒரு முறை ஜெயிச்சா அடுத்த முறை தோத்துடுவார்) இந்த வாரம் வெள்ளிக்கிழமை பக்கத்துல ஒரு பிரென்ட் வீட்டுல பாட்லக்..எல்லாரும் வந்து சேரும்வரை மோனோபாலி விளையாடிட்டு, அப்புறம் சாப்பிட்டு முடிச்சுட்டு பதினொன்னரை மணிக்கு போக்கர் பாக்ஸ்-ஐத் திறந்தாங்க..வழக்கம் போல பத்து டாலர் பெட்.

நான்
ஓரமா, எங்காளு பின்னால இருந்த சோபா-ல உக்காந்துகிட்டேன்..நேரம் ஆக ஆக அப்படியே கண்ணசந்துட்டேன்..விருக்குனு முழிச்சுப் பாத்தா மணி ஒண்ணேகால்..அப்புறம் சுறுசுறுப்பா எழுந்து உக்காந்து கேம்-ஐ கவனிக்க ஆரம்பிச்சேன்..இவர் கிட்ட இருந்த சிப்ஸ் எல்லாம் கிட்டத்தட்ட காலி..வர கார்டும் ஒண்ணும் உருப்படியா வர மாதிரி தெரில..ரெண்டு மணி வரை முழிச்சிருந்துட்டு நான் மறுபடி தூங்கிட்டேன்..திருப்பி எழுந்தப்போ மணி நாலேகால்..எல்லாரும் காபி, கோக்-னு குடிச்சிட்டு, இடத்தை மாதி உட்கார்ந்துட்டு தெம்பா விளையாடிட்டு இருக்காங்க.

எங்க வீட்டு ஐயாவுக்கு இடம் மாறினதும் அதிர்ஷ்ட தேவதை கடைக்கண் பார்வை பட்டுடுச்சு போல..சுமாரா ரெக்கவர் ஆயிருந்தாரு.யாரும் எந்திரிக்கற மாதிரி தெரில..தூங்கி வழிஞ்சிட்டு உக்காந்திருந்த என்னை கன்சிடர் பண்ணி அஞ்சரை மணியோட கேம்-ஐ முடிச்சுக்கலாம்னு ஏகமனதா முடிவெடுத்தாங்க..அப்புறம் கேம்-ஐ க்ளோஸ் பண்ணி எல்லாரும் அவங்கவங்க பங்கு லாபம்/நஷ்டத்தை செட்டில் பண்ணி எழுந்தப்போ கிட்டத்தட்ட ஆறுமணி.

மிச்சம்
மீதி இருந்த பூரி, ஆலூ பராத்தாவை எல்லாம் காலி பண்ணிட்டு, "தூக்கமா..அப்புடின்னா என்ன?"ங்கற ரேஞ்சுல எல்லாரும் செம பிரஷ்ஷா டாட்டா சொல்லிட்டு கார் ஏறும்போது மணி சரியா ஆறு. இங்கே ஒருத்தர், இன்னும் சன்லைட் வரல..இருட்டாத்தான் இருக்கு'ன்னு சொல்லிக்கிறாரு.. என்ன கொடுமை?!!!

என்னதான் சொல்லுங்க..பெற்றோர்,சொந்த பந்தம், நண்பர்கள் இப்படி எல்லாரையும் பிரிந்து இவ்வளவு தூரம் வந்து தனியாய் இருக்கிறோம்..அங்கங்கே கிடைக்கும் நண்பர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இருப்பதும் ஒரு சுகம்தானே?

11 comments:

  1. நிச்சயமா இந்த மாதிரி சுகங்களை எல்லாம் மிஸ் பண்ணக் கூடாது மகி.

    'அங்க' 'இங்க' எல்லாம் இன்னும் போய்ப் பார்க்கல. ஆலு பராத்தா ஆவலைத் தூண்டுது. பட், இனிமேல் எதுவும் சமைத்துப் பார்க்கிறதாக இல்லை. டயட்ல இருக்கேன். ஸோ, இலை குழை மட்டுமே. ;)

    ReplyDelete
  2. மிகவும் ஜாலியாத் தான் பொழுது போகிறது. நானும் பிள்ளைகளும் விளையாடுவோம். என் பிள்ளைகளுக்கு விவரம், வயது பத்தாது. மகன் இடையில் காணாமல் போய் மீண்டும் வருவார். மகள் இருந்த இடத்தை விட்டு நகர மாட்டா. நான் எனக்காகவும் மகளுக்காகவும் என்று இரட்டை ஆட்டம் ஆடுவேன். ஆனால் சுவாரஸ்யமாக இருக்கும்.

    ReplyDelete
  3. ஜாலியாதான் இருந்திருக்கிங்க..உணவு வகைகள் அருமையாக இருக்கே...

    ReplyDelete
  4. வாவ்.. மஹி ஸ்டஃப்ட் கேப்சிகம் சூப்பரா இருக்கு.. ஆலூ பராத்தாவும்.. ஹி ஹி.. அப்புரம் கத்திரிக்கா க்ரேவியும் :)

    மாஃபியாவோட சிம்பிளான வெர்ஷனா காலேஜ்ல ஒரு கேம் விளையாடுவோம்.. கில்லர்ன்னு.. :))

    போக்கர் நல்லா இருக்கும்ல.. நாங்க காசு கட்டாம காயின்ஸ் மட்டும் வச்சு விளையாடியிருக்கோம்..

    ஆமா.. இங்க நண்பர்கள் தான் எல்லாமேயில்லயா..

    ReplyDelete
  5. காணாம போன இமாக்கு இங்கயே ஒரு ஹாய் சொல்லிக்கறேன்.. ஹாய் இமா..

    ReplyDelete
  6. மஹி போட்டோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு கேக் ரொம்ப சூப்பர் .ம்ம்ம் கலக்குங்க

    ReplyDelete
  7. இதென்னடா!! கண்ட பின்னாலும் 'காணாமல் போன' என்று சீரியஸா அடைமொழியுறாங்க!!!!

    நானும் சீரியஸா ஒரு ஹாய் சொல்லிக்கறேன். 'ஹாய் சந்து, இனிமேலாவது பீ சீரியஸ்' ;)

    ReplyDelete
  8. நான் தூங்கி எழுந்த போது எங்க வீட்டு ஐயா எல்லாவற்றையும் கோட்டை விட்டு விட்டு பரிதாபமாக நின்றார். நீங்கள் தூங்காமல் அவரை கண்காணித்து இருக்க வேண்டும்.

    ReplyDelete
  9. இல்ல வானதி..இந்த முறை 110% லாபம் இவருக்கு! :) உங்க பசங்க என்ன கேம் விளையாடறாங்க? போக்கரா?

    இமா..நன்றி! இது சுகம் என்பதுடன் survival என்றும் கூட சொல்லலாம்.

    பாயிஸா, நன்றி..ஆமாங்க, நல்லா ஜாலியாதான் இருக்கும்..இங்கே எங்களுக்கு இந்த மாதிரி கெட் டு கெதர் தான் ரிலாக்ஸ் பண்ணிக்க கிடைக்கும் சான்ஸ்.

    சந்தனா,நன்றி! இங்க நண்பர்கள் தான் எல்லாமேயில்லயா..கண்டிப்பா! அதுவும் நம்ம கூட ஒத்துப்போகும் நண்பர்கள் கிடைத்துட்டா ஜாலிதான்.

    சாரு, நன்றி! நீங்க தான் oven சீக்கிரமா வாங்கப் போறீங்களே..கேக் செய்து அசத்திடுங்க. :D

    ReplyDelete
  10. monopoly என்று எழுத வந்தேன் அதற்குள் பராக்கு பார்த்ததில் டைப் பண்ண மறந்து விட்டேன்.

    ReplyDelete
  11. அதானே பாத்தேன்! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails