Wednesday, March 3, 2010

தொடரும் மொக்கை...

இட்லி,தோசை பற்றிய காமெடி பதிவுல நான் போட்டிருந்த மூன்று (தோசை) போட்டோக்களும் ஒன்றேவா என்று ஒருவர்:) கேள்வி எழுப்பியிருந்தார்.இருங்க,இருங்க..உடனே ஓடிப் போயி அங்க பின்னூட்டம் இருக்கான்னு தேடாதீங்க..அவங்க கேட்டது மெயில். ஆக்சுவலி அந்த போட்டோஸ்ல இருந்த தோசைகள் அதேதான்..கேமரா ஏங்கிள் மட்டும் வேற,வேற. :)

இருந்தாலும் இப்படி ஒரு கேள்வி வந்தப்புறம் எப்படி அமைதியா இருக்கறது? என் மொக்கையத் தொடர இன்னும் ஒரு பொன்னான வாய்ப்பா இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.ஹி,ஹி!!

இது இன்னிக்கு காலைல சுட்ட தோசைங்க..சுடச் சுட அப்லோட் பண்ணிருக்கேன்.எல்லாரும் சாப்பிட வாங்க!

தோசை & கார சட்னி
இவ்வளவும் ஆனப்புறம் அந்த வம்பு புடிச்ச தோசைக்கல்லை உங்களுக்கு காட்டலைன்னா அதுக்கு கோபம் வந்துடாது?? இதோ..எங்க வீட்டு தவா..தோசைக்கல்..க்ரிடில்!!!


மகி'ஸ் கிச்சன்-னு ப்ளாக் நேம் இருக்கறதால டெய்லி சுடற இட்லி-தோசையைப் பத்தி ஒண்ணில்ல,ரெண்டில்ல, கூச்சப்படாம மூணு(!!??) பதிவு எழுதிருக்கேன்..நீங்களும் கூச்சப்படாம வந்து சாப்ட்டுட்டுப் போங்க.
நன்றி!

11 comments:

  1. "கொடும தாங்க முடியலயே!"
    - இப்படிக்கு ஒரு எலி ;)

    ReplyDelete
  2. எனக்கு முன்னாடியே இமா அம்மா எல்லா தோசையும் சாப்பிட்டு போய்டாங்க அதனால் இன்னும் ஒரு பதிவு போடுங்க . நான் உங்களுட்ட சொல்லனும்னு இருந்தேன் அந்த விசுவாசமான தோசை கல்லை கண்ணுல காமிச்சு இருக்கலாம்னு , காமித்து விட்டீர்கள்

    ReplyDelete
  3. ithudhaan antha ooravanjanai dhosaikkallaa...tamil fontu sothappudhu.....sorry.

    ReplyDelete
  4. மகி, உங்கள் தோசைக்கல் அழகாக இருக்கு(அப்பாடி ஒரு வழியா ஐஸ் வச்சாச்சு. இனிமேல் மகிக்கு நல்ல தோசையாக குடுக்கும்)!!!!!ஆனால் என்ன கொஞ்சம் முறைத்து பார்ப்பது போல ஒரு பீலிங்.

    ReplyDelete
  5. எப்புடி எப்புடியேல்லாம் யோசிச்சு கேள்வி கேக்குறாங்க மஹி.. கவனமாயிருங்கோ :)

    ReplyDelete
  6. மஹி.. கவனமாயிருங்கோ :)

    ReplyDelete
  7. நன்றிங்க இமா,சாரு,கொய்னி,வானதி,அம்மு & சந்தனா!

    இனிமேல் தோசைக்கல் வம்பு பண்ணாம இருக்கும்னு நானும் நம்பறேன். :)

    /மஹி.. கவனமாயிருங்கோ :)/ கண்டிப்பா..கண்டிப்பா கவனமா இருக்கேன்..எச்சரிக்கைக்கு நன்றி!:))))

    ReplyDelete
  8. super mokkaikku mahi.thodara vaazththukkal.
    sorry font problem

    ReplyDelete
  9. மகி, உங்கள் முறைப்படி இட்லி செய்தேன். மிகவும் நன்றாக சாஃப்டாக வந்தது. வீக்கென்ட் செய்தேன். பின்னூட்டம் கொடுக்க தான் நேரம் வரவில்லை.

    ReplyDelete
  10. சாஃப்ட்டா வந்ததா வானதி? மறக்காமல் வந்து சொன்னதுக்கு நன்றி! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails