Wednesday, February 10, 2010

கடலைப்பருப்பு போளி

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு -1கப்
வெல்லம் - 1கப்
ஏலக்காய் -3
மைதா - 1கப்
ரவை - 2 ஸ்பூன்
அரிசிமாவு - 1 ஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய்

செய்முறை
மைதாவுடன், ரவை, அரிசிமாவு, உப்பு சேர்த்து கலக்கவும்.

அத்துடன் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து, தேவையான நீர் தெளித்து மாவை நன்றாகப் பிசைந்து[பரோட்டா மாவு போல சற்று தளர இருக்கவேண்டும்] கால் மணிநேரம் மூடி வைக்கவும்.

கடலைப்பருப்பை குக்கரில் வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்..பருப்பு ஆறியதும், அத்துடன் ஏலக்காய் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். [அரைப்பதற்கு தண்ணீர் தேவைப்படாது.]

வெல்லத்தைப் பொடித்து சிறிது நீர் சேர்த்து அடுப்பில், மிதமான சூட்டில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும், அரைத்து வைத்த பருப்பு,ஏலக்காய் கலவை சேர்த்து கிளறவும்.

எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்ததும் இறக்கி ஆறவைக்கவும். நன்கு ஆறியதும், எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

மைதாவையும் அதே போல சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

ஒரு மைதா உருண்டையை எடுத்து, வட்டமாகத் தட்டி, பூரணத்தை அதனுள் வைத்து மூடவும். பின்னர் மீண்டும் வட்டமாகத் தட்டவும். [கையில் எண்ணெய் தொட்டுக்கொண்டு தட்டவும்.]

தோசைக்கல்லை காயவைத்து போளிகளை சுட்டெடுக்கவும். நெய் விரும்புவோர் நெய் ஊற்றி சுடலாம்..இல்லையெனில் எண்ணெய் ஊற்றியே சுட்டு எடுக்கலாம்.

கடலைப்பருப்பு போளி தயார். இதனை மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து உபயோக்கிக்கலாம்.



11 comments:

  1. very nice poli , slide show is nice , nanum intu mathiri seiven but ravai , rice flour serthathu illai next time i will add and try this (tamil font not working)

    ReplyDelete
  2. Thanks for the comment Saru..:)

    ReplyDelete
  3. கஷ்டமா இருக்கு மஹி.. ஏதாவது பண்டிகையப்ப செஞ்சு பாக்கறோம்.. இத கடன் லிஸ்ட் ல சேத்துக்காதீங்க :)

    ReplyDelete
  4. சந்தனா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ஓகே..லிஸ்ட்ல இனி எந்த ஐட்டமும் சேர்த்துக்கலை..டைம் இருக்கப்போ புடிச்ச ரெசிப்பிகளை செஞ்சு பார்த்து சொன்ன போதும்! :D

    ReplyDelete
  5. மகி கடலை பருப்பு போளி படத்துடன் அருமை, ரவை அரிசி மாவு சேர்த்து இருப்பதால் நல்ல கிரிஸ்பியாகவும் இருக்கும் இல்லையா?

    ReplyDelete
  6. ஆமாம் ஜலீலாக்கா..நல்லா க்ரிஸ்ப்பியாதான் இருக்கும்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)

    ReplyDelete
  7. ஒரு பொழுதும் போளி சாப்பிட்டது இல்லை மகி. சமைத்துப் பார்ப்பேன், இந்த அளவுக்கு எத்தனை போளி வரும் என்று முதலில் சொல்லுங்கள். இது காலை உணவா இல்லை ஸ்வீட்டா?

    ReplyDelete
  8. இது ஸ்வீட்டுங்க புனிதா..காலை உணவா எல்லாம் சாப்பிட முடியாது!:)
    இங்கு குடுத்திருக்கும் அளவுக்கு 15 முதல்20 போளிகள் வரும்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  9. உதவி உதவி உதவி.கடலை பருப்பை மிகவும் குழைவாக வேக வைத்து விட்டதால் அரைக்கும் போது கூழ் போல் ஆகிவிட்டது.பாகுடன் சேர்த்த பின்னும் கட்டியாகலை.என்ன பண்ணலாம்?முதல் முறை இனிப்பு செய்கிறேன்.இதுக்கு தான் எதையுமே செய்வதில்லை :-((

    ReplyDelete
  10. சாரிங்க அனானி,பதில் சொல்ல லேட்டாகிடுச்சு.தெரிந்தவங்களுக்குதான் பதில் சொல்லுவேன்னெல்லாம் இல்லைங்க.எப்படியோ மிஸ் ஆகிடுச்சு.:-|

    முதல்முறை எனக்கும் இந்தமாதிரி ப்ரச்சனைகள் எல்லாம் வந்தது.கடலைபப்ருப்பு பாயசமா பண்ணி,என்னவர்கிட்ட காமெடி க்வீன் பட்டம்லாம் வாங்கிருக்கேன்.:)

    கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவச்சீங்களோ? ஊறவைக்காம 2 விசில் மட்டும் விடுங்க.ப்ரெஷர் அடங்கினதும் குக்கரை திறந்து,பருப்பை தண்ணியில்லாம வடிச்சுடுங்க. அப்புறமும் ஈரம் இருக்கறமாதிரி இருந்தா பேப்பர்டவல்ல pat-dry பண்ணுங்க. எனக்குத் தெரிந்த டெக்னிக்(!) எல்லாம் சொல்லிட்டேன்.உங்களுக்கு வொர்க் அவுட் ஆகுதான்னு சொல்லுங்க. நன்றி!

    ReplyDelete
  11. அனானி,உங்க கமெண்ட் பாத்தேன்.
    போளி எப்படி வந்ததுன்னு சொல்லுங்க.நன்றிங்க!

    NB:உங்க கமெண்ட்ஸ் பப்ளிஷ் பண்ணவில்லைன்னு நினைக்கவேணாம்.தேங்க்ஸ் பார் அண்டர்ஸ்டேண்டிங்!:)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails