Thursday, February 27, 2014

வர்க்கி-பொட்டு தொட்டி-வானம்

முன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு "வர்க்கி" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஊட்டி செல்பவர்கள் எல்லாரும் குறைந்தது ஒரு பேக்கட் வர்க்கி இல்லாமல் வரமாட்டார்கள்! :) அதனால் கோவையிலும் பெரும்பாலான பேக்கரிகளில் வர்க்கி செய்து விற்பனை செய்கிறார்கள்.  காசுக்கேத்த தோசை மாதிரி (முன்பெல்லாம்) நாலணாவிற்கு ஒன்று என்பதிலிருந்து பெட்டிக்கடைகளிலேயே கூட கிடைக்கும். ஆனால் அந்த வர்க்கிகள் எலும்பு மாதிரி:) கடிக்கச் சற்றே சிரமமாக இருக்கும். பொதுவாக வர்க்கி என்பது காபி அல்லது டீ-யில் நனைத்து உண்ணப்படுவதால் அந்த எலும்பும்;) நன்றாகவே இருக்கும்.

பேக்கரிகளில் விற்பனை செய்யப்படுவது "நெய் வர்க்கி" என்று செல்லமாக அழைக்கப்படும். அளவில் சிறியதாக, பொறுபொறுப்பாக, வாயில் போட்டாலே கரைந்துவிடும். காலை காபி அல்லது டீ-யுடன் வர்க்கி சாப்பிடத் தொடங்கினா ப்ரேக்ஃபாஸ்ட்டே முடிந்த மாதிரி வர்க்கிய சாப்பிடலாம்! (ஓகே,ஓகே.. நான் சாப்பிடுவேன்! ;))) ) கடந்த முறை ஊரிலிருந்து வர்க்கி வாங்க மறந்துவிட்டார்கள். அதனால இந்த முறை வாய்ப்புக் கிடைத்தபோது நான் அனுப்பிய லிஸ்ட்டில் முதலாக "வர்க்கி" என்றுதான்  இருந்தது! [என்னே ஒரு தி.ப. என்று நீங்க மெய் சிலிர்ப்பது தெரியுது! ஹிஹிஹி...என்ன பண்றதுங்க..அப்படியே பழகிப்போச்ச்ச்ச்ச்! ;)]
ஸோ, துடியலூர் ராகம் பேக்கரியில் இருந்து வந்த 'நெய் வர்க்கி' உங்க பார்வைக்கு! :)
இன்னொரு பேக்கரியில்தான் ரெகுலராக வாங்குவோம். அந்தக் கடை இப்போது இழுத்து மூடப்பட்டதால் ராகம் பேக்கரி வர்க்கி வந்தது. இதில் அந்த சுவை இல்லை என்றுதான் சொல்லணும். பழைய கடை வர்க்கியில் எந்த எஸன்ஸும் சேர்க்காமல் சும்மா நெய் மணக்க வாயில் போட்டால் கரையும்படி இருக்கும்.  ராகம் பேக்கரி வர்க்கியோ வெனிலா எஸன்ஸ் வாசத்துடன் சுமாராகத்தான் இருந்தது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல அதையே அஜீஸ்;) பண்ணி சுவைத்தேன், வேறுவழி?! நீங்களும் பார்த்து ரசியுங்க, வாய்ப்புக்கிடைத்தால் சுவையுங்க! 
~~
அடுத்தபடியாக கோவை ஸ்பெஷலில் இடம்பிடிப்பது "பொட்டுத் தொட்டி". பாப்புவுக்கு ஸ்பெஷலாக ஆர்டர் செய்யப்பட்டு பூண்டி மலைப்பகுதியிலிருந்து கலிஃபோர்னியா வந்தது இந்தப் பொட்டு. மலைவாழ் மக்களிடம் சொல்லிவைத்தால் "வேங்கை" மரத்தின் பாலை சுத்தம் செய்த தேங்காய்த் தொட்டியில் பிடித்துக் காயவைத்து தருவார்கள்.  பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பொட்டுத்தான் வைப்பது எங்க வீட்டுப்பக்கம் வழக்கம். 

என் சித்தி வீட்டில் சொல்லி, மலைவாழ் மக்களிடம் ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து:) கலிஃபோர்னியா வந்து சேர்ந்த பொட்டுத்தொட்டி...
தொட்டியில் சில சொட்டுக்கள் தாய்ப்பால் அல்லது தண்ணீர் விட்டு குழைத்து குழந்தையின் நெற்றி, வலக்கன்னம், இடதுகாலில் பொட்டுக்கள் வைப்பது வழக்கம்.
காத்து கருப்பு அண்டாது, திருஷ்டி படாது, எந்த பக்கவிளைவுகளும் இல்லாதது என பல்வேறு நல்ல குணங்கள் இந்த வேங்கைப்பால் பொட்டுக்கு உண்டு. வேங்கைப் பால் என கூகுள் செய்தபோது பல தகவல்கள் கொட்டின, உதாரணத்துக்கு இந்த ஒரு லிங்க்.
~~~
வீடு மாறியபின் ஒரு நாளில் என்னவர் க்ளிக்கிய ஃபிப்ரவரி மாதத்திய சூரியஸ்தமனம். இப்போது பால்கனி வழியாக அந்திவானம் பார்க்கும் வாய்ப்பில்லை, ஆனால் ஒரு சாளரம் வழியே வேறு ஒரு கோணத்தில் வானம் தெரிகிறது. அவ்வப்போது எடுக்கும் படங்களைப் பிறிதொரு பதிவில் பகிர்கிறேன்.
~~~
பி.கு. என்னான்னு டைட்டில் வைக்க என்று ரூம் போட்டு யோசிச்சாலும் எதும் க்ளிக் ஆகாத காரணத்தால் இப்படி ஒரு டைட்டில் இந்தப் பதிவுக்கு வழங்கப்பட்டுள்ளது என புரிந்து கொண்டமைக்கு நன்றி! ;) 

Thursday, February 20, 2014

சாதிமல்லிப் பூச்சரமே..

சாதிமல்லிப் பூச்சரமே..
சங்கத்தமிழ்ப் பாச்சரமே!
ஆசையென்ன ஆசையடி...
அவ்வளவு ஆசையடி! 
ஆசையாசையாய்ப் போன டிசம்பரில் வாங்கிவந்து வைத்த வின்டர் ஜாஸ்மின் இந்த வருடம் ஃபிப்ரவரியில் பூப்பூவாய்ப் பூத்துச் சொரிகிறது எங்க வீட்டில்! :)  

 2013 டிசம்பரில் செடி கொள்ளாமல் பூக்களுடன் காஸ்ட்கோ-வில் வாங்கிவந்த செடி/கொடி இந்த கோடை-இலையுதிர்காலங்கள் கடந்து குளிர்காலம் வந்தபின்னும் கம்மென்று வெறும் இலைகளுடனே நின்றிருந்தது. பூக்கள் வருவதற்கான எந்த முகாந்தரமும் காணோம்! கொடிகளை கட் செய்து விடுவோம், புதிதாகத் தழைகையில் பூக்கள் வரும் என என்னவரிடம் சொல்லிப்பார்த்தேன், அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
டிசம்பரில் வீடு மாற்றியதில், முதல் மாடியிலிருந்து இறக்கப்பட்டு காரில் சில நூறடிகள் பிரயாணித்து, மீண்டும் முதல் மாடியேற்றப்பட்டதில் செடி/கொடி கொஞ்சம் ஷீணப்பட்டுவிட்டது. கூடவே குளிர் காலத்தின் இடையே திடீரென எகிறிய வெயிலில் தண்ணீர் ஊற்றப்படாமல் விட்டதில் வாடவே துவங்கிவிட்டது! :-| அப்பொழுதுதான் என் தொட்டில்ப் பூவைக் கவனிப்பதில் ஆழ்ந்து,  தொட்டிப்பூக்களைக் கவனிக்காமல் விட்டிருக்கிறேன் என உரைத்து, செடிகளைக் கவனித்துத் தண்ணீர் விட்டு, சாதிமல்லிப் பெண்ணிடம் பேசிச் சமாதானம் செய்துவிட்டேன். அவளும் போனால் போகிறதென்று பெரிய மனசுடன் என்னை மன்னித்துப் பூத்துவிட்டாள்! :D
மொட்டுக்கள் வந்து பலநாட்களானபின் கடந்த வாரத்தில் முதன்முதலாகப் பறித்த மலர்கள்...
வாரக்கடைசியில் 3 நாட்கள் ஊர் சுற்றிவிட்டு வந்து பார்த்தபோது செடி பூராவும் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன.  படத்திலிருப்பவை ஒரு பாதிப் பூக்கள்! இதே போல இன்னொரு மடங்கு செடியிலேயே இருந்தது, பறிக்க நேரமில்லை!
பூக்களைச் சரமாக்கிவிட்டு, அடுத்தநாள் மீதமிருந்த மலர்களில் கொஞ்சத்தைப் பறித்து ஆசைதீரச் சரம்தொடுத்து ("இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மகேஸ்வரி!" என்று என் சாதிமல்லிச் செடி மனசுக்குள் சிரித்திருப்பாள்! :)) படமும் எடுத்துவிட்டேன்..
 எங்கள் வீட்டுச் சாதிமல்லிப் பூச்சரம்!..இது நேராகச்  சென்று அலங்கரித்தது..


மஞ்சளும் தந்த, மலர்களும் தந்த மங்கல மங்கை மீனாக்‌ஷியின் படத்தை! :) 
பொறுமையாகப் பார்த்து/படித்து ரசித்த அனைவரும் ஒரு கிள்ளு பூ எடுத்துக்குங்க..நன்றி!
:))))

Saturday, February 8, 2014

வானம் பார்க்க வாரீகளா? :)

வானம் பார்த்து பலநாளாச்சே, வாங்க பார்க்கலாம்! :)

தினமும் வீட்ட விட்டு வெளியே வரும்போதெல்லாம் பார்த்துட்டேதானே இருக்கோம், இப்ப என்ன புதுசாப் பார்க்கிறது?-ன்னு புருவத்தை உயர்த்துபவர்களுக்கு...

இது தென்-கலிஃபோர்னியா வானம்..மகி வீட்டுப் பக்கத்து வானம், மகியின் தொலைபேசியில் சிறைப்பட்டு வலைப்பூவில் விடுதலையாகி உங்களைக் காண வந்திருக்கும் வானம்! :)
படத்தில் மேலே தெரியும் வீடுதான் இப்போது நாங்கள் மாத்திக் குடி வந்திருக்கும் வீடு..ஒரு நாள் ஜீனோவுடன் மதியம் வாக் போய்விட்டு மலையேறி வருகையில், பச்சைப் பின்னணியில்  நீலவானமும் லேசாகத் தீற்றிய மேகங்களும், கூடவே ப்ரவுன் கலரில் வீடும் தெரிய க்ளிக்கியது! :)
இது கடந்த ஞாயிறு பின்மதியம்..சில்லென்று சூரியனும், குளிர்காற்றும் போட்டி போட்டுக்கொண்டு குளிரூட்டிய ஒரு பகற்பொழுது! வானத்தில் மேகங்கள் உல்லாசமாக ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன!  
எந்தப்புறம் திரும்பிப் பார்த்தாலும் எழில் சிந்தும் வானம்!
எல்லா மேகப் பசங்களும் சற்றே அழுக்காக:) நோஞ்சான் பிள்ளைகளாகத் திரிய, ஒரு மேகம் மட்டும் புஷ்டியாக, சர்ஃப் எக்ஸல் போட்டுக் குளிச்சுட்டு நைஸாக மலையில் பின்னாலிருந்து எட்டிப் பார்க்குது! ;)
எட்டிப் பார்த்த சுட்டி மேகத்தை என் தொட்டிச் செடிகளுடன் க்ளிக்கியது..

அதே நாளின் மாலையில் எல்லா மேகங்களும் கார்மேகங்களாகிப் பொதுக்கூட்டம் போட்டபொழுது   அபார்ட்மெண்ட் கட்டிடங்கள்...
~~~
பொறுமை இழக்காமல் படத்தைக் கண்டு களித்த;) அனைவருக்கும் அன்பான நன்றிகள்! 
தெம்பா சாப்ட்டுப் போங்க..
 வெங்காய பஜ்ஜி & பகோடா
 Italian Cheesecake..
Enjoy a Slice! 
:) 

LinkWithin

Related Posts with Thumbnails