பனீர்...ஹோம் மேட் ஆர் ரெடிமேட்? எதற்கு உங்க வோட்டு? :)) இந்த கேள்வியை என்னை நானே கேட்டுக்கிட்டு, கிடைச்ச பதில்/பதில்கள் மற்றும் சுவையான பனீர் மக்கன்வாலா ரெசிப்பி எல்லாமே இந்தப் பதிவில் வருகின்றன. [என்ன செய்யறது..பனீர் மக்கன்வாலா ரெசிப்பி வேணும்னா, இலவச இணைப்பான மொக்கையையும் நீங்க படிச்சேதான் ஆகணும், எவ்ரிதிங் இன்க்ளூடட் இன் தி பேக்கேஜ், யு ஸீ?! ;) ]
சரி, வாங்க..மொக்கைய ஸ்டார்ட் பண்ணுவோம். :)))
பதில் 1:
என்னது...ரெடிமேட் பனீரா? ச்சே,ச்சே...அது நல்லாவே இருக்காதுங்க. சமைச்சம்னா ரப்பர் மாதிரி ஆகிரும். எந்தக்காலம் செய்து இன்டியன் ஸ்டோர் ப்ரீஸருக்கு வந்துச்சோ? வீட்டிலயே ஈஸியா சுவையான பனீர் செய்ய வழி இருக்கும்போது யாராவது கைக்காசைக் குடுத்து அந்த ரப்பனீரை;) வாங்குவாங்களா? வீட்டிலேயே பனீர் செய்தா காசும் மிச்சம், சப்பாத்தி மிருதுவா வரத் தேவையான whey water கிடைக்கும். தரமான பனீரும் கிடைக்கும், நம்ம கையாலயே செய்து, ஆரோக்கியமான உணவை நம்ம குடும்பத்துக்குக் குடுக்கிறோம் அப்படீன்ற ஆத்மதிருப்தியும் கிடைக்கும். கரெக்ட்டா? :)
பதில் 2:
என்னது...வீட்டிலயே பனீர் செய்யறதா??! அவ்வ்வ்வ்வ்வ்..பாலை பக்கத்திலயே நின்னு காய்ச்சி, லெமன் ஜூஸைப் புழிஞ்சு, அதை வடிகட்டி..[அதுக்கு வேற சீஸ் க்ளாத் வாங்கிவைக்கணும், இல்லன்னா காட்டன் துணி தேடணும்..கர்ர்ர்ர்ர்], அந்த whey water-ஐ வேற பத்திரமாப் புடிச்சு வைச்சு, பனீரைச் சுத்தமாப் புழிஞ்சு, ஒரு மணி நேரம் தண்ணி வடியவிட்டு, அப்புறம் அதுமேல கனமான பொருளை[அதுக்கு ஒரு பாட்டம் மண்டையப் பிச்சுக்கணும், குக்கரில தண்ணி புடிச்சு வைக்கலாமா இல்ல க்ரைண்டர் குழவிய வைக்கலாமான்னு! ;)] ஒரு மணி நேரம் வைச்சு, இருங்கோ, இன்னும் ப்ராசஸ் முடீல! உஸ்....அப்பாடா-ன்னு 3 மணி நேரம் பாடுபட்டு பனீர் கிடைக்கும். இதுக்கிடைல, நீங்க பால் காய்ச்சின பாத்திரத்த கழுவோணும்னு நினைச்சாலே, கிச்சன விட்டு ஓடீரலாம்னு தோணும்!! சீஸ் க்ளாத்னா தூக்கிப் போட்டுரலாம், காட்டன் துணினா, மனசு கேக்காம, அந்தத் துணியையும் அலசணும்! இத்தனை வேலை செய்யறதுக்கு, இன்டியன் ஸ்டோருக்கு போனமா, $3-க்கு ஒரு பனீர் பேக்கட்டை வாங்கிட்டு வந்தமான்னு வேலைய முடிக்கலாம்ல? ;)))))))
~~~
ஸோ..உங்க பதில் 1 ஆர் 2??!! ஆவலோடு எதிர்பார்க்கிறேன். :))))
~~~
இது ரெண்டு பதிலுமே முழுக்க முழுக்க என்னோடதுதாங்க. :) இன்டியன் ஸ்டோர்ல பனீர் வாங்கலாம்னு டெம்ப்ட் ஆகும்போது, 500கிராம் பனீர் கட்டி பயமுறுத்தும். அவ்ளோ பனீரை வாங்கி நான் என்ன்ன்ன்ன்ன்ன செய்வேன்? அதனால ஹோம் மேட் பனீருக்கான பதில்1 -ஐச் சொல்லி, மனசைத் தேத்திகிட்டு களமிறங்குவேன். :)))) அதுவும் மோஸ்ட்லி ஏதாச்சும் பார்ட்டி-கெட் டு கெதர் இப்படியான நேரங்களில், சின்ஸியர் சிகாமணியா பதில்1-ஐச் சொல்லிப்புட்டு, ஸ்பெஷலா 2%மில்க்(திக்கான பால்) வாங்கிவந்து பனீர் செய்வேன்.
கொஞ்ச நாட்கள் முந்தி வழக்கமாகப் போகும் கடைய விட்டு, வேறு ஒரு கடைக்குப் போனோம், அங்கே கோபி-என்ற ப்ராண்ட் நேமில் 250கிராம் பனீர் கிடைச்சது, வாங்கிப் பார்க்கலாமேன்னு வாங்கிவந்தேன். க்வாலிட்டி, ருசி, விலை எல்லாமே நல்லா இருந்துச்சு. வாங்கிவந்து ஒரு முறை
பனீர்-கேப்ஸிகம் கறி செய்தேன், மீதி பனீரை காலிபண்ண ஒரு இன்ட்ரஸ்டிங் ரெசிப்பி
தேடினேன், மாட்டினான் மக்கன்வாலா! :))) ஏதோ மனுஷன் பேர் மாதிரி இருக்கே என்று ஆர்வத்தில ரெசிப்பியை படிச்சேன், செய்தும் பார்த்தேன்..சூப்பரா இருந்துச்சுங்க. மக்கன் - makhan என்பது ஹிந்தியில் வெண்ணையைக் குறிப்பது. வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் பனீர்- என்பதுதான் பனீர் மக்கன்வாலா என்பதன் தமிழாக்கம் என்பதறிக! :))))
ஓகே..மொக்கை ஓவர்..நவ் ஓவர் டு ரெசிப்பி - "பனீர் மக்கன்வாலா"
________________________________________________________________________________
தேவையான பொருட்கள்
பனீர்-125கிராம்
வெங்காயம்-1
முந்திரி-5
தயிர்-1டேபிள்ஸ்பூன்
தக்காளி-2
பச்சைமிளகாய்-2
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
கரம் மசாலா பொடி-1/2டீஸ்பூன்
கசூரி மேத்தி-1/2டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது-1டேபிள்ஸ்பூன்
Half & half milk (or) ஃப்ரெஷ் க்ரீம் -1/4கப்
வெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதை தயாராக வைக்கவும்.
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், கொஞ்சம் வெண்ணெய் காயவைத்து வெங்காயம், முந்திரி இவற்றை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ஆறவிடவும்.
ஆறிய வெங்காயம்-முந்திரி கலவையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தயிரும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளிகளையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து வைக்கவும்.
கடாயில் மீதமுள்ள வெண்ணெய், எண்ணெய் காயவைத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு தட்டிய பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
இஞ்சி-பூண்டு-பச்சைமிளகாய் வதங்கியதும் அரைத்த தக்காளியைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
தக்காளி பச்சைவாசம் போய், எண்ணெய் பிரிந்து வந்ததும் வெங்காயம்-முந்திரி விழுதைச் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், கசூரி மேத்தி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி,
தேவையான உப்பு சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
மசாலா நன்கு கொதித்ததும் தீயைக் குறைத்துக் கொண்டு ஹாஃப் & ஹாஃப் (அ) பாலைச் சேர்க்கவும்.
சில நிமிடங்கள் கொதித்ததும், பனீர் துண்டுகளைச் சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களில் கொத்துமல்லி இலை, சர்க்கரை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
சூப்பர்-டூப்பர் பனீர் மக்கன்வாலா தயார்! சப்பாத்தி-புலாவ்-ஜீரா ரைஸ் இவற்றுடன் சரியான ஜோடிங்க இந்த மக்கன்வாலா! பார்டிகளுக்கேற்ற பர்ஃபெக்ட் டிஷ்! ட்ரை பண்ணிப் பார்த்துச் சொல்லுங்க. நன்றி!