Wednesday, April 30, 2014

வசந்தகாலப் பூக்கள் - வயோலா(Viola)

 
இந்த வருஷம் வசந்தம்(மார்ச் 20) வருவதற்கு ஒரு நாள் முன்பாகவே ஹோம் டிப்போ-விலிருந்து மலர்ச்செடிகளை வீடு சேர்த்துவிட்டேன். :) கடைக்குள் நுழைந்ததும் கண்ணைக் கவர்ந்து மனதைக் கட்டிப்போடும் வண்ணம் வண்ண வண்ணப் பூக்கள்!! எதை வாங்க எதை விட என ஒரே குழப்பம்..எல்லாவற்றையும் வாங்கிப்போய்விடலாமா என அலைபாயும் மனம்..வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் தொட்டில்ப்பூவை நினைத்து அவசரஅவசரமாக வாங்கிவந்த மலர்ச்செடிகள்தான் நீங்கள் பார்ப்பவை! Viola, Marigold, Snapdragon, Poppy,  Matthiola என்று 5 வகை மலர்கள் வீடு வந்தன.
பூத்தொட்டியில் சில கேரட் செடிகள் வளர்வதைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன், புதுச் செடிகள் நடுகையில் அவற்றைப் பறித்தபோது...
3 கேரட்டுகள் கிடைத்தன! :) 

இந்தப் பதிவில் வயோலா மலர்களின் படங்களைப் பகிர்கிறேன். பல பூக்கள் இருந்தாலும், இந்த வயோலா பூக்களின் மீது ஏதோ ஒரு தனிப்பாசம்! ;) அவற்றைப் பார்க்கையில் "pug" வகை பைரவர்களின் முகச்சாயல் தெரியும் எனக்கு. மனித முகம் போல இருப்பதாகவும் தோன்றும் சில நேரங்களில்..
மஞ்சள், வெள்ளை, ஆரஞ்ச்+வயலட் என பல நிறங்களில் வயோலாக்கள் இருந்தன. வழக்கம் போல குழம்பித் தெளிந்து வெள்ளைப் பூக்களும், இரு வண்ணப் பூக்களும் வாங்கிவந்தேன்.

படங்களில் மற்ற பூக்கள் தெரிந்தாலும், வயோலாக்கள் மட்டுமே என் கண்ணுக்குத் தெரிகின்றன! ;) அடுத்து வரும் படத்தில் கூடவே வெங்காயத்தாள் நாற்றுகள் தெரிகின்றன..அது கண்ணில் பட்டதும் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்ற ஆரம்பிக்கிறது மனது! 
கடையிலிருந்து வாங்கி வந்த வெங்காயத்தாள்களின் வேரை மட்டிலும் நட்டு வைத்து தளிர்த்தவை அறுவடை செய்யப்பட்டு ஒரு ஃப்ரைட் ரைஸில் உபயோகமும் படுத்தப்பட்டன. 
இப்போது மீண்டும் துளிர்த்த நாற்றுகளில் மொட்டுகள் கட்டியிருக்கின்றன. வெங்காயத்தாளை இப்போதே பறித்துக்கொள்ளலாம் அல்லது இனி பூக்கள் மலர்ந்தபின் விதைகள் எடுக்கலாம், அத்தோடு சில காலம் கழித்த பின்னரே மீண்டும் வெ.தாள்கள் கிடைக்கும் என்று தகவல் கிடைத்தது. அனேகமாக வெங்காயப்பூக்கள் மலரும் என்றே நினைக்கிறேன், இன்னும் செடிகளைப் பறிக்கவில்லை. 
இறுதியாக மீண்டும் ஒரு வயோலா க்ளோஸ்-அப் உடன் பதிவை நிறைவுசெய்கிறேன். நன்றி! :) 

Wednesday, April 23, 2014

அட, அதுதானா இது? :)

முதலில் ஆர்வமாகத் துப்பறிந்த சாம்(பி)புகள், டிடெக்டிவ் விவேக்-ரூபலாக்கள், பரத்-சுசிலாக்கள், நரேன் -வைஜெயந்திகள் அனைவருக்கும் நன்றிகள்!!

குட்டிப்பெண்ணை வைத்துக்கொண்டு சமையலில் ஷார்ட்-கட் கண்டுபிடிக்க வேண்டிய தருணம் வந்ததெனக்கு. குக்கர் சத்தம்-மிக்ஸி சத்தம் இவையும் கேட்கக்கூடாது என கடும் வைராக்கியம் கொண்ட லயா விழித்திருக்கையில் முடிந்த அளவு சமையலைச் செய்துவைக்கலாம் என இறங்கியதன் விளைவுதான் நீங்கள் படத்தில் பார்ப்பது. சரி..சரி..பீடிகை போதும், படத்திலிருப்பது என்னன்னா.....

வெயிட்..பதிவைப் படித்த யாரும் கையில் கிடைத்ததை எடுத்து அவங்கவங்க கணிணியை அடித்து உடைச்சிராதீங்க...எங்கூருக்கு ஆட்டோ-வும் அனுப்பிராதீங்க, ஜஸ்ட் ஃபார் ஃபன், ஓக்கே??? ;)

படத்திலிருக்கும் வாத்துக்கள், அரைத்த தேங்காய் வாத்துக்கள்! :)))) மொத்தமாகத் தேங்காயை மிக்ஸியில் அரைத்து, ஐஸ் க்யூப் தட்டுகளில் ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்து உறையவைத்து எடுத்து வைத்திருக்கிறேன். உறைந்தவற்றை எடுத்து ஸிப்-லாக் கவரில் போடப் போகையில் சட்டென்று க்யூட்டான வாத்துக்கள் கவனத்தைக் கவர...படமெடுத்து இங்கே வந்து உங்களையும் படுத்தியாயிற்று!!தேங்காய் க்யூப்ஸ் ரெடி...குருமாவிற்கு, அரைத்து விட்ட குழம்பிற்கு..டக்கு-டக்குன்னு ஓரொரு டக்(இங்க duck-க்குங்க! :)) எடுத்துப் போட்டுக்கலாம்னு ஒரு நப்பாசையில் செய்திருக்கிறேன். ஹிஹிஹ்ஹி!

பி.கு. வாத்துவடிவ ஐஸ்கியூப் டிரேக்கள் டாலர் ஷாப்பில் வாங்கியது.  

Monday, April 14, 2014

Wholegrain Bread Pudding with Condensed Milk

பிறந்திருக்கும் "ஜய" வருடம் அனைவருக்கும் நன்மை பயக்க வாழ்த்துக்கள்! தமிழ்ப்புத்தாண்டின் முதல் பதிவாக ஒரு இனிப்புடன் துவங்கலாம். :) 
தேவையான பொருட்கள் 
ரொட்டித்துண்டுகள் -4 (நான் ஹோல்க்ரெய்ன் ரொட்டி உபயோகித்திருக்கிறேன்.)
வெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
கண்டென்ஸ்ட் மில்க்-1/4கப்
முட்டை-2
பால்-1/2கப் 
உலர் திராட்சை- ஒரு கைப்பிடி 
சின்னமன் பவுடர்-1/4டீஸ்பூன் 
சர்க்கரை-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
ரொட்டியை சிறுதுண்டுகளாக நறுக்கி வைக்கவும். 
மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க் + வெண்ணெய் சேர்த்து 30 விநாடிகள் சூடுபடுத்தவும். வெண்ணெய் உருகிவிடும், அதனை கண்டென்ஸ்ட் மில்க்குடன் சேர்த்து நன்றாக கலந்து ஆறவைக்கவும்.  
ஆறியதும் அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி கலக்கவும். 
அதனுடன் பால் சேர்த்து கலக்கவும். 
நறுக்கிய ரொட்டித்துண்டுகள், பட்டை பொடி(சின்னமன் பவுடர்), உலர் திராட்சை இவற்றை பால்-முட்டை கலவையுடன் சேர்த்து கிளறிவிடவும். 

Pudding செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி ப்ரெட் கலவையை ஊற்றவும். 
மேலாக இன்னும் சிறிது கண்டென்ஸ்ட் மில்க்கை ஊற்றி, சர்க்கரையைத் தூவிவிடவும். 
350F ப்ரீஹீட் செய்யப்பட்ட அவன் -ல் Pudding பாத்திரத்தை வைத்து 40-45 நிமிடங்கள் பேக் செய்யவும். 
சுவையான சாஃப்ட்டான Pudding ரெடி. ஆறீயதும் கத்தியால் துண்டுகள் போட்டு ஐஸ்க்ரீம் அல்லது விப்பிங் க்ரீம் இவற்றுடன் பரிமாறவும். 
தட்டில் இருப்பதில் 80% எனக்கு..20%
ஜீனோவுக்கு! 
நீங்களும் செய்து பாருங்க.. நன்றி! :) 

LinkWithin

Related Posts with Thumbnails