About Me

இந்த  வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களுக்கு நல்வரவு!  

நான் கோவையில் பிறந்து,வளர்ந்து,படித்து,வேலைபார்த்து,திருமணத்தின் பின்னர் கணவர் குழந்தைகளுடன் யு.எஸ்.(Orange County, California)ல் இருக்கிறேன். எங்கள் குட்டி தேவதை "லயா", லயாவின்  நாலுகால் அண்ணா "ஜீனோ", இருவரும் என்  பெரும்பாலான நேரத்தைத் தங்களுக்காய் எடுத்துக்கொண்டாலும் மிஞ்சும் நேரங்களை என் வலைப்பூக்களில் செலவழிக்கிறேன். :) 

இங்கிருக்கும் சமையல் குறிப்புகள் என் குடும்பம்,நண்பர்கள்,இணைய தளங்கள் இப்படி எல்லோரிடமுமிருந்து என்னை வந்து சேர்ந்தவை..இதுவரை நான் ரசித்து சமைத்த குறிப்புகளை சேமித்து வைக்கவும், (முடிந்தால்) இத்தளத்திற்கு வரும் நண்பர்களும் இந்த ரெசிப்பிகளை சமைக்கவும் உதவியாய் இருக்குமே என்ற எண்ணத்தில் தொடங்கிய இந்த வலைப்பூ  நாளாக ஆக என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் தளமாகவும்,நினைவுகளைச்  சேமித்துவைக்கும் இடமாகவும்,நான் ரசித்த இடங்கள்,பாடல்கள், இயற்கை இவற்றைப் பகிரும் களமாகவும் விரிந்துகொண்டே இருக்கின்றது. 

சமையல் குறிப்புகள் (மட்டிலும்) ஆங்கிலத்தில்  பார்க்க விரும்பினால் , "Mahi's Kitchen" சென்று பாருங்கள். :)



என் வலைப்பூக்களை வளப்படுத்தும் உங்கள் கருத்துக்களை இனிப்புடன் வரவேற்கிறேன்.



தங்கள் வருகைக்கு நன்றி!
அன்புடன்,
மகி

LinkWithin

Related Posts with Thumbnails