
இந்த ஆவி-பூதம்-பேய்-பிசாசு இதிலெல்லாம் எனக்கு அவ்வளவா நம்பிக்கையில்லைன்னு சொல்லிகிட்டாலும் கொஞ்சம் பயம் உண்டு. (நம்பிக்கை வேற, பயம் வேற...என்னங் நாஞ்சொல்லறது? கரெக்ட்டுதானுங்க?!!) என்னதான் தைரியமா இருக்கற மாதிரி காட்டிகிட்டாலும் ஒரு உதறல் இருக்கத்தானே செய்யும்? டிவி-ல வர பேய்ப்படமெல்லாம் கூட நான் பார்க்கமாட்டேன். சாந்தமான படங்கள் மட்டுமே பார்க்கும் ஒரு சாந்தசொரூபி (ஹிஹி,மீ ஒன்லி,நோ டவுட்,ஓக்கை?!) முதல்முறையாக ஒரு நேரடியாக ஆவி ஆடிய டான்ஸைப் பார்த்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிகிட்டு படிக்க ஆரம்பிங்க! :)
இந்த
(நீர்)ஆவியின் டான்ஸை முதல்முறை பார்த்ததும் வெலவெலத்துப் போயிட்டேன். என்ன ஒரு ஆட்டம்ங்கறீங்க?? அப்படி ஒரு வேகம், சத்தம் வேற பலமா வந்துது!!! அப்ப வீட்டுல நான் மட்டுந்தான் இருந்தேனா.. என்ன பண்ணறதுன்னும் தெரில! இவருக்கு போன் பண்ணி சொன்னாலும் வீடு வந்து சேர அரை மணி நேரமாவது ஆகும். அதுவரைக்கும் இந்த டான்ஸைப் பார்த்து என்ன செய்யறதுன்னு நினைச்சதுல ப்ளட்ப்ரஷரே எகிறிடுச்சுன்னா பாருங்களேன்!!!
நாளாக ஆக, டான்ஸ் பழகிப்போச்சு..இப்பல்லாம்
(நீர்)ஆவி என்ன சத்தம் போட்டு டான்ஸ் ஆடினாலும் நான் பயப்படறதில்லை..பழகப்பழக பாலும் புளிக்கும்ணு ஒரு பழமொழி சொல்லுவாங்களே,அது மாதிரிதான் ஆகிப்போச்சு நிலைம!! பாருங்க, அந்த
(நீர்)ஆவியின் நடனத்தை உங்க எல்லாருக்கும் காட்டோணும்னு வீடியோ எடுத்து இங்கே போஸ்ட் பண்ணற அளவுக்கு தைரியசாலி ஆகிட்டேன்!!
சரி, சரி..ஓக்கே!!கூல் டவுன்!!! இதுக்கே இம்புட்டு டென்ஷன் ஆனீங்கன்னா எப்புடி? வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா! டேக் இட் ஈஸி...எதோ டெரர் ஸ்டோரின்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சு ஏமாந்து போயிட்டீங்க??! ;) ஹிஹிஹி..நான் எழுதின இடத்தில எல்லாம் (நீர்)ஆவின்னுதான் எழுதிருக்கேன். ஹைலைட் பண்ணிப் படிக்கற டெக்னிக் எல்லாம் தெரிஞ்சுக்காம நீங்களும் அப்பாவியா இருந்தா ரெம்ப கஷ்டம்! என்னை மாதிரி ஒரு சிலர் உங்க தலைல நல்லா மொளகா அரைச்சிருவோம்;) ;) ... ஜாக்ரதை!!! :)
மொளகான்னதும்தான் ஞாபகம் வருது, இந்தாங்க,சுடச்சுட
மொளகா பஜ்ஜி..சாப்புட்டு வாங்க!! கொஞ்சம் ஸீரியஸா பேசலாம்.

ஸீரியஸாப் பேசலாம்னு சொன்னதுக்காக அட்டென்ஷன்ல எல்லாம் நின்னுட்டு படிக்கவேணாம், உட்கார்ந்தே படிங்க! :)
குக்கர் இட்லி சாப்பிட்டு போரடிச்சுப் போனதால ஊர்ல இருந்து இட்லிச்சட்டி வாங்கிட்டு வரலாம்ணு நினைச்சிருந்தேன். இதுவரை போட்ட போட்டோஸ்ல என்னோட கிச்சனை உத்துப் பார்த்திருந்தீங்கன்னா, நான் யூஸ் பண்ணறது செராமிக் குக் டாப்-னு கண்டுபிடிச்சிருப்பீங்க. எங்களுக்கெல்லாம் வேலைவெட்டி அதிகம், அதெல்லாம் பார்க்க நேரமில்லைன்னாலும் இப்ப சொல்லிட்டேன்! ;))))))))
பாத்திரக்கடைல கேட்டப்ப, "அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க..இன்டக்ஷன் அடுப்பிலயே வைக்கலாம், நம்பி வாங்குங்க"ன்னாங்களா.. வாங்கிட்டு வந்தாச்சு! பொழப்புக்கெட்டு வால்மார்ட்டுக்கு ஒரு நடை போயி 100% காட்டன் துணியாப் பார்த்து ஒரு அடி ( அடிதடியில்லீங்க..one yard) வாங்கிட்டு வந்து தட்டுக்கு அளவெடுத்து துணியக் கட் பண்ணி, ஒரு சுபயோக சுபதினத்தில இட்லிச் சட்டிய அடுப்பில வச்சேன்,அம்புட்டுதான்! டான்ஸிங் ஆரம்பிச்சிருச்சு. வெறும் தண்ணி இருக்கறதாலதான் பேலன்ஸ் இல்லாம ஆடுது, இட்லிமாவை ஊத்தி தட்டை வைச்சா சரியாகிரும்ணு பார்த்தேன்..ம்ஹும், அப்பவும் டான்ஸ் நிக்கவே இல்ல!
இருந்தாலும் இந்த ஆவிக்கெல்லாம் பயப்பட்டா ஆகுமா? எடுத்த முயற்சியெல்லாம் வீணாகக் கூடாதுன்னு தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மாதிரி அப்பப்ப இட்லிச்சட்டிலதான் இட்லி சுடறேன்..என்னதான் டான்ஸ் ஆடினாலும், இட்லி ஓரளவு சுமாரா வருது.

சரி, மொக்கைய போட்டுத் தாக்கியாச்சு, உபயோகமா ஒரு தகவலாவது சொல்லலைன்னா ப்ளாகர்(ஸ்) ஆவி வந்து அடிச்சிருமோன்னு பயம்மா இருக்கறதால அடுத்து ஒரு டிப்ஸ்!! புதுசா எவர்சில்வர் பாத்திரம் வாங்கும்போது அதிலே ஒட்டியிருக்க ஸ்டிக்கரை எடுக்கறது ஒரு நச்சுப்பிடிச்ச வேலை..அத ஈஸியா எடுக்கறதுக்கு ஒரு டெக்னிக் எங்க அக்கா சொல்லிக்குடுத்தாங்க.

அது என்னன்னா, புதுப் பாத்திரங்களை கொஞ்சம் சூடுபண்ணினா, (ரொம்ப சூடு பண்ணிராதீங்க, அதே மாதிரி காலிப் பாத்திரத்தை சூடு பண்ணனும்..தண்ணி கிண்ணி ஊத்தி கழுவறதுக்கெல்லாம் முன்னாலயே சூடு பண்ணுங்க) அந்த ஸ்டிக்கர்ல இருக்க கம் இளகி வரும், அப்ப ஸ்டிக்கரை உரிச்சா வம்பு பண்ணாம முழுசா வந்துரும். சூடா இருக்கும்போதே ஒரு துணி வைச்சு துடைச்சா கம் இருந்த இடத்திலிருக்கும் பசையும் கூட க்ளீனா வந்துரும்.

இந்த டெக்னிக் வேலை செய்யும்ங்கறதுக்கு நானே கேரண்டி..இந்தப் பாத்திரங்களைப் பாருங்களேன்,எவ்வளவு க்ளீனா வந்திருச்சு ஸ்டிக்கர் எல்லாம்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,நன்றி,வணக்கம்! :))))))))