Showing posts with label டைம் பாஸ். Show all posts
Showing posts with label டைம் பாஸ். Show all posts

Wednesday, July 26, 2017

Lemonade


போஸ்ட்டின் டைட்டிலை பார்த்து லெமனேட் செய்வது எப்படி என்ற பதிவு என்று நினைத்தால்....
........
....
...
..
.
அதனை தண்ணி தொட்டு அழிச்சுட்டு, தொடர்ந்து படியுங்க! :)

இப்போது இங்கே வெயில் காலம்...கொளுத்தும் வெயில் என்று சொல்ல முடியலைன்னாலும் கொஞ்சம் வெயில்தான். பள்ளிகளுக்கெல்லாம் கோடை விடுமுறை. எங்க குட்டிப்பெண் ப்ளே ஸ்கூல் போவதால் லீவில்லை..கடந்த வாரத்தில் ஒரு நாள் அவங்களை அழைத்துவர நடந்து சென்றோம் (நானும் சின்னக் குட்டியம்மாவும்..) ..நல்ல வெயிலாக இருக்கே என்று நினைத்தவாறே சாலைமுனையொன்றில் திரும்பியபோது 2 சிறுமிகள் சாலையோரம் லெமனேட் விற்றுக்கொண்டிருந்தார்கள். அடிக்கிற வெயிலுக்கு சில்லென்று லெமனேட்!! 2 கப்புகள் வாங்கினேன்..ஒன்று 50சென்ட்  என்றார்கள், கரெக்ட்டாக ஒரு டாலர் சில்லறையும் இருந்தது. சமர்த்தாக சாலையைக் கடந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் ஒரு சிறுமி. நாங்கள் மூவரும் எதிர்த்திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்ததும், " Yay...we made a dollar!!!" என்ற அவர்களின் சந்தோஷக் கூச்சல் காதைத் தொட்டது. சில்லென்ற லெமனேட் தொண்டையில் இதமாக இறங்க, அதை விடவும் அவர்களின் மகிழ்ச்சிக் கூக்குரலில் என் இதயமே நிறைந்துவிட்டது!! :)))))


அப்போதுதான் விற்பனையை ஆரம்பித்திருப்பார்கள் போலும், நான்தான் முதல் போணியாக இருந்திருக்கக்கூடும்!! நல்லபடியாக லெமனேடை விற்று முடிக்கட்டும் என்று மனதுக்குள் வாழ்த்தியவாறே நாங்கள் நடையைக் கட்டினோம்.
பின்குறிப்பு 
கோடை விடுமுறை காலங்களில் பள்ளிக் குழந்தைகள் இது போல வீட்டில் லெமனேட் (எலுமிச்சை ஜூஸே தான்!! ;) ) செய்து எடுத்துக்கொண்டு வந்து சாலைமுனைகளில் "லெமனேட் ஸ்டேண்ட்" என்ற பெயரில்  சிறு டேபிள்கள் போட்டு வைத்து விற்பனை செய்வார்கள். குக்கீ, கேக் போன்றவையும் வீட்டில் செய்து விற்பனை செய்வதும் உண்டு..நாற்சந்திகளில், சிக்னல் அருகில் டேபிள்கள் போட்டு  விற்பனை செய்வார்கள். நம்மால் முடிந்தது, வாய்ப்புக் கிடைக்கும்போது இவற்றை வாங்குவது, குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும், நமக்கும் வெயிலுக்கு இதமான குளிர்பானம் கிடைக்கும்! ஒரே கல்லில ரெண்டு மாங்கா!! 

என்னவர் இன்னும்கொஞ்சம் மேலே!! கடைகளுக்குப் போகும்போது வாசலில் பள்ளிச்சிறுமிகள் நின்று "Girl scout cookies" விற்பார்கள். அந்த குக்கீ-களை சாப்பிட வீட்டில் ஆளில்லா விட்டாலும் அதை வாங்காமல் வரமாட்டார்!! "நாளைக்கு நம்ம பொண்ணு கர்ள் ஸ்கவுட்டில் சேர்ந்து இதே மாதிரி குக்கீ விற்க போனா...வாங்காம வந்தா பொக்குன்னு போயிருவாள்ல?" என்ற ஜஸ்டிஃபிகேஷனோடு குக்கீ பாக்ஸ்கள் வரும்..சில நேரங்களில் வீட்டிற்கே கொண்டுவந்து விற்பனை செய்வார்கள், அப்போதும் அந்தக் குழந்தைகளுடன் உரையாடி ஒன்றிரண்டு பேக்கட் குக்கீகள் வாங்காமல் விடுவதில்லை!! :) 

பின்குறிப்புக்கு பின்குறிப்பு 
லயாக்குட்டிக்கு ஹேர்கட் பண்ணியாச்சு!! ;)  11 மாதத்தில் மொட்டை போட்டதிலிருந்து இதுவரை ஹேர்கட் செய்யவே இல்லை..சமீபத்தில்  அப்பாவுடன் சலூனுக்கு சென்ற அம்மணி, தானும் ஹேர்கட் செய்துகொண்டு வந்து எனக்கு அதிர்ச்சி (இன்ப அதிர்ச்சினு சொல்ல முடியாதுனு வைங்களேன்!! ) கொடுத்துவிட்டார்!! ஹூம்...தட் "நான் வளர்கிறேனே மம்மி!! " மொமெண்ட் யு சி!!
லாஸ்ட் பின்குறிப்பு
லெமனேட் எக்ஸ்பீரியன்ஸ் நெம்ப மொக்கையா இருந்தா கோவிச்சுக்காம ஒரு கப்பு லெமனேட் போட்டு குடிங்கப்பூ!!! ;) :) காட் ப்ராமிஸ், நோ மோர் பின்குறிப்பு!! 

Saturday, December 21, 2013

நன்றி..

கண்மூடிக் கண் திறப்பதற்குள்...
நான்கு லட்சம் என்ற எண்ணிக்கையைக் 
கடந்திருந்த பார்வையாளர் வருகை
ஐந்து லட்சங்களைக் கடந்துவிட்டது! :) 
அடிக்கடி வலைப்பக்கம் வராத காரணத்தால்
5,00,000 என்ற எண்ணை கேமராவில்
பிடிக்க முடியவில்லை!  அதனாலென்ன..
எண்கள் கண்ணாமூச்சி விளையாடினாலும் 
மகிழ்ச்சி மாறாதது!! 
வடை-பாயசத்துடன் நன்றி! :)
~~~
சமீபத்தில் வீடு மாறியிருக்கிறோம். ஜீனோவுக்குப் புதுவீடு மிகப்பிடித்துவிட்டது. அவர் ஓடி விளையாட நிறைய இடமிருப்பதால் தலை தெறிக்க ஓடிப்பிடித்து விளையாடினார்கள்..
பால் காயுது..
பால் பொங்கியாச்சு! 
அன்பேக்கிங் வேலைகள் நடக்கின்றன. நாளும் பொழுதும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடுகின்றன. வலைப்பூவை உயிரோட்டத்துடன் வைக்க வேண்டி கையில் கிடைத்த படங்களுடன் ஒரு பதிவைத் தேத்தியிருக்கிறேன். ஹிஹி...
~~~
பாப்புவின் சைல்ட்-ஸீட் வீடு வந்தபோது ஜீனோவின் வரவேற்பு...
குட்டித் தங்கையின் சின்னச் சத்தங்கள் க்யூரியஸ் ஜீனோவின் க்யூரியாஸிட்டியை இன்னும் உச்சத்துக்குக் கொண்டுபோகின்றன! :) 
வீடு மாற்றம், புதுவரவு என்று நாங்கள் எல்லாரும் கொஞ்சம் பிஸியாக இருக்கவே ஜீனோ தன் இடத்தை தானே தெரிவு செய்து கொண்டார். அவ்வ்வ்வ்!
க்ரிஸ்லி: பாவம் குட்டிப் பையன், என்ர மடில வந்து படுத்துகிட்டான், அவனும் இன்னும் பேபிதானே? 
அப்புச்சி:ஆமாமாம், சின்னப்புள்ள, ஏங்கிப் போயிருமல்ல? 
டெடி:சரி, சரி....ரொம்ப சென்டிமெண்ட் போடாம எல்லாரும் அமைதியா இருங்கப்பா! ஜீனோ கொஞ்சம் தூங்கட்டும்! 
இந்தாட்களின் கலாட்டாக்களை இன்னும் படிக்க விரும்பினால்,  டாய் ஸ்டோரி, டாய் ஸ்டோரி- 2, டாய் ஸ்டோரி-3 இவற்றை படித்து பாருங்க. நன்றி! 

Friday, June 14, 2013

My name is..

Hello Ladies and Gentlemen, My name is GENO!  Hope you all know who I am..but lately I came to
know that many of you have a misunderstanding about me and my size. So today I came here to give you guys a short and sweet introduction about me! 
You are seeing my back pose in the above picture[..this is what Mommy always does..she clicks pictures 24/7....errrr!] I guess you can estimate my height and weight. Am a small dog, weighing around 12Lb. By the way, I am fully grown chug dog, and this is my maximum height and weight...So, please guys, don't put comments that I have grown up! I am blushing..you know?! ;) :)

So...this is Mommy transferring my pictures from her phone to Laptop. When ever she sits on the couch, I love to sit on her lap. [I hate these laptops and iPads..they don't let me enjoy the comfort. Grrr!]  Sometimes, I do send messages to Mommy's friends when she is chatting with her buddies! typing is fun! :) 

...hmmm! okay, lets continue...Now Mommy did a google search about my breed and she landed here. You can see lots of details about my breed in that page. But I didn't like that guy in that picture. Why is he starring me like this??! Grrrrrr!...I am sitting real on her Lap, and why does she wanna know from internet than knowing from me??! oh...that link is for you guys, who doesn't know about me and my character.
Its so boring..donno how these human beings are sitting with their laptops all day! As I am on Mommy's lap, I love to have a nap! ;) :) 
 
You wanna know something more about me? ...well, I hate to disclose these details in public, but..its okay! I love to chase rabbits, reptiles [அது ஒண்ணுமில்லீங்க, ஓணான்!!]..love to bark at big dogs[they kinda annoy me..]. I am scared of  room fresheners, nail polish, Dad's perfume, and most importantly, taking bathe! avvvvvv!! Its too cruel to put me in water you know!! 

When I get treats (more than enough), I would hide them in some secret places and eat them latter. I am a veggie lover, I like to eat boiled veggies like broccoli, potato and beans. Dad is my Super Hero, I lovvvvvvve to munch baby carrots when he is having his salad! :P  I play nosy-ball with grapes, I can play and chew my toys all day! ;) :) I like to run in the dog walk, love to go n receive Daddy from parking lot!

...and the video below is one more humiliation to me by Mommy! I thought there is another dog outside the mirror..I don't like any other dog in this house and thats why I bark at him.  But Mommy burst out laughing and started taking video. I love her and am her personal guard dog, I support whatever she does always! So I let her share this video in public. 
While typing this post's title, this song strike Mommy's brain. I too love this song. How about you?

Since I am also a Super Star, I would love to share some good news with all of you. Yeah...our apartment is getting new trees where ever the old trees  were! Mommy is so happy about it and she took lot of pictures. Now over to her..
என்னங்க..ஓவர் பீட்டரா இருக்குதா? ஹி...ஹிஹ்..ஹி! என்ன செய்ய? ஜீனோவுக்கு தமிழ விட இங்கிலிபீஸ் தான் ஃப்ளூயன்ட்டா வருதுன்னு சொல்லிட்டான். அதான், அவனையே பேச வைச்சிட்டேன். ;) :) 

அப்புறம் மரங்கள் வெட்டப்படுவது பற்றி வருத்தப்பட்டிருந்தேன் இல்லையா? அந்த இடங்களில் எல்லாம் புது மரக்கன்றுகள் நட்டிருக்காங்க. பழைய மரங்கள் இருந்ததற்கான சுவடுகளே இல்லை. மண்ணில் இருக்கும் பெரிய மரங்களின் அடித்தண்டை மேலே படத்திலிருக்கும் ஒரு மிஷின் மூலம் பொடிப்பொடியா சிதைச்சுடறாங்க. சில நிமிடங்களில் மரத்தின் வேர் மற்றும் தண்டு இருந்த இடத்தில் மரத்தூள் தான் இருக்கு, அதை அப்படியே அள்ளிப் போட்டுட்டு, அருகில் பள்ளம் தோண்டி புது மரம் நட்டுவிடுகிறார்கள். எவ்வளவு சிம்பிளா வேலைய முடிச்சுடறாங்க என ஆச்சரியமாக இருந்தது! சிறு கன்றுகள் என்பதால் சுற்றுவட்டாரம் கொஞ்சம் வெறிச்-என்றுதான் இருக்கிறது. ஆனால், "சம்திங் இஸ் பெட்டர் தன் நத்திங்"..இல்லைங்களா? :) 
பொறுமையாக ஜீனோ-புராணத்தையும் மரங்களைப் பற்றியும் படிச்சுட்டீங்க..இதோ எங்க ஜீனோவின் ஃபேவரின் ப்ரேக்ஃபாஸ்ட்..சின்னமன் ப்ரெட் டோஸ்ட்! நீங்களும் சாப்பிடுங்க![..தைரியமாச் சாப்பிடலாம், இது எனக்காக செய்ததுதான், அவனுக்கும் பிடிக்கும் என்று ஒரு ஸ்லைஸ் அவனுக்குக் குடுப்பேன். :)]
அனைவருக்கும் இனிய வார இறுதி! 

Wednesday, May 22, 2013

டிட்பிட்ஸ்..

சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் கோர்த்து ஒரு பதிவு. மேலே படத்தில் உள்ளதுதான் இங்கே "கசகசா- poppy seed"என்ற பெயரில் கிடைக்கிறது. என் நினைவுப்பதிவுகளைப் புரட்டினால், கசகசா வெள்ளை நிறத்தில் இருந்த மாதிரி ஞாபகம். இண்டியன் ஸ்டோரில் வெள்ளை கசகசா கிடைக்கிறது என்கிறார்கள், ஆனா எனக்கு கரெக்ட்டா அங்கே போகும்போதெல்லாம் மறந்து போகிறது. ஸோ...இந்தப் படத்தில் உள்ள கசகசா-வை வாங்கலாமா...சமையலுக்கு உபயோகிக்கலாமா? என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்? 
~~
ஒரு நாள் கையில் கிடைத்த காய்களை எல்லாம் வெட்டி, ஒரு ஸ்டிர்ஃபிரை செய்து சப்பாத்தியும் போட்டு, தட்டிலும் வைச்சு, சாப்பிடவும் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டதும் எதோ வித்யாசம் தெரிந்தது..என்னவென்று கண்டுபிடிக்க இன்னுமொரு வாய் சாப்பிட்டதும்தான் தெரிந்தது, காயில் நான் உப்பே போடவில்லை என்பது!!! :)))))  இதுக்கப்புறம் என்ன செய்யறது?!! காய்களில் இயற்கையாவே உப்பு இருக்குமாமே..அதை சுவைத்துப் பார்ப்போமே..காயின் ஒரிஜினல் ருசியும் தெரிந்த மாதிரி இருக்கும் என்றெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டு சாப்பிட்டு முடிச்சுட்டேன். ஹிஹிஹி...
ஸோ...இந்த மாதிரி டிரை காய்கள்ல உப்பு போட மறந்துட்டா என்ன செய்து அட்ஜஸ்ட் பண்ணுவது? சஜஸன் ப்ளீஸ்!!
~~
மார்ச் கடைசியில் நட்ட டேலியாக்கள்..மஞ்சள் பூ முதலில் மலர்ந்திருக்கிறது. மற்ற நிறங்கள் ஆன் த வே!
இந்தம்மா அடுத்த கலர்..இலைகளுக்குள் ஒளிஞ்சிகிட்டிருக்காங்க. :)
 என்னவர் எல்லாப் பூக்களுக்கும் பேர் வைச்சு கூப்பிட்டுகிட்டு இருக்கார். இவங்க இலைக்குள்ள மறைந்திருந்ததால் இன்னும் பேரு வைக்கலை! ;) மஞ்சளும் இந்த நிறமும் நாங்க வாங்கி வந்த டேலியாக்கள். தோழி தந்தவை வேறு நிறங்கள். இப்பத்தான் மொட்டுக்கள் அரும்பியிருக்கின்றன. பூத்ததும் இங்கேயும் வரும். 
~~
அப்பார்ட்மெண்டில் சிலபல மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். டாகி வாக் - புனரமைக்கப்பட்டு, விரிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. புதுசாக 2 க்ரில் வைத்திருக்கிறார்கள். டாகி வாக்-ல புற்கள் சதுரம் சதுரமாகக் கொண்டுவந்து பதிக்கப்பட்டது பார்க்க சுவாரசியமாக இருந்தது. :) 
~~
முழுவட்டமாக பஸிஃபிக் கடலில் இறங்கிக்கொண்டிருக்கும் கதிரவன். நேரில் பார்த்தபொழுது இன்னும் மிக அற்புதமாக இருந்தது.  தினம்தோறும் வானம் நிகழ்த்தும் இந்த வண்ணக் கலவரம் நாங்கள் இதே இடத்தில் இருப்பதற்கு இன்னுமொரு காரணம். :) 
~~

உருளைக் கிழங்கு பொடிமாஸ் - கேரட் பொரியல்- சோறு- கீரை மசியல்.  தட்டு கலர்ஃபுல்லா இருக்கவே படமெடுத்து வைச்சேன்,  திவ்யமாச் சாப்பிடுங்க.
நன்றி!
:)  

Thursday, March 28, 2013

கட்டிங், ட்ரிம்மிங்! :)

 
ப்ளாக்ல பதிவைப் போட்டு ஏழு நாளுக்கும் மேலாச்சு..அடுத்து எதாச்சும் எழுதணுமே..என்ன எழுத? எப்புடி எழுத? சமைக்கச் சமைக்க எடுத்துத் தள்ளின படம்லாம் இன்னும் கேமராலயே பத்திரமாத் தூங்கிட்டு இருக்குது. அதயெல்லாம் முதல்ல ட்ரான்ஸ்ஃபர் பண்ணனும்..அதில நல்ல படங்கள செலக்ட் பண்ணனும், அப்புறமா அதிலயெல்லாம் பேரடிக்கணும்! :) பொறவு ரெசிப்பிய டைப் பண்ணனும், அதைய புது போஸ்ட்ல காப்பி பேஸ்ட் பண்ணி, போட்டோஸை அப்லோட் பண்ணி.......அவ்வ்வ்வ்வ்வ்வ்! இம்புட்டு வேலையச் செய்யணுமா??!-ன்னு மலைப்பா இருந்ததுல ஒரு வாரம் சோம்பேறியா பொழுதைப் போக்கியாச்சு. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஸப்பா!!

இதுக்கு மேலயும் எதுவும் செய்யாம இருந்தா சனமெல்லாம் மகிய மறந்துட்டாங்கன்னா என்ன ஆகறது?  அதனால இன்னிக்கு ஒரு வழியா கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்தாச்சு. கேமரா பக்கதிலதான் இருக்கு..அந்த USB கார்டுதான் எங்ஙன கெடக்கோ தெரியலையே...இருங்க, தேடிப்பார்க்கறேன்.அதுக்குள்ளாற நம்ம ஆப்புள்:) கை கொடுத்ததில ஒரு பதிவு தேறிடும் போல இருக்குது. போன் வந்ததில் இருந்து கண்ணில் படும் காட்சிகளை சட்டுசட்டுன்னு க்ளிக் பண்ணி, லேப்டாப்புக்கும் அனுப்பிரமுடியுது! ஸோ, ப்ரெய்ஸ் த லார்ட்(!!??!..எ.கொ.ச.இ.?) ஆப்பிள், அன்ட் ஸ்டார்ட் ரீடிங்! :)))))))
மனிதர்கள் அப்பப்ப பியூட்டிபார்லருக்குப் போயி, கட்டிங், டிரிம்மிங் இதெல்லாம் பண்ணிட்டு வருவது உங்க எல்லாருக்கும் தெரிந்ததே! அதே போல இங்கே ஒவ்வொரு சீஸனுக்கும் மரம் மட்டைங்களுக்கும் கட்டிங்-ஷேவிங்-ட்ரிம்மிங் எல்லாம் பண்ணி வுடுவாங்க. என்ன ஒண்ணு, நம்ம நடந்து சலூனுக்குப் போகோணும், மரங்களுக்கு இருக்கற இடத்திலயே ஃப்ரீ சர்வீஸு! குடுத்துவச்சதுங்க...ஹூம்! ;)

யு.எஸ்.ல அதிகாரபூர்வமா மார்ச் 20-ஆம் தேதி வசந்தகாலம் தொடங்கிவிட்டதால், ஸீஸனல் ட்ரிம்மிங்கிற்கு புதன் கிழமை காலை ஆட்கள் வந்திருந்தார்கள். சாலை ஓரங்களில் வளர்ந்திருக்கும் மரங்கள் சிலநேரம் குறும்பாக, கிளைகளை சாலையை நோக்கி, விளக்குக் கம்பங்களை நோக்கி நீட்டியிருக்கும். :) ;) சிலபல மரங்கள் காய்ந்த கிளைகள், இலைகளோடு நிற்கும். இப்படியான அழுக்குப் பசங்களை எல்லாம் வெட்டி, நறுக்கி, ட்ரிம் செய்து அழகான பசங்களா, ச்சே..ச்சே, மரங்களா மாத்திவிடுவாங்க.

மரங்களை கவனிக்க 2 வண்டிகள் வரும். முதல் வண்டி மரம் வெட்ட! மடங்கி விரியும் நீண்ட rod-இன் நுனியில் ஒரு ஆள் நிற்குமளவு கூடை இருக்கும். கூடைக்குள் ஒருவர் ஏற, ட்ரைவர் ஸீட்டில் இருப்பவர் இயக்க, அந்த rod தேவையான உயரத்துக்கு போகும், இறங்கும். அவர் கையில் இருக்கும் இயந்திர ரம்பத்தால் கிளைகளை வெட்டித் தள்ளுவார்.
கீழே விழுந்த கிளைகள், இலைகளை சேகரித்து ஒரு இடமாகப் போடுவாங்க. அடுத்த வண்டி வரும். இந்த வண்டிதான் இன்ட்ரஸ்டிங் வண்டி! பலகாலமாக இதைப் படமெடுத்து ப்ளாகில் போடவேண்டுமென்ற என் ஆசை இன்றுதான் நிறைவேறியது. :) வண்டியின் பின்னால் இருக்கும் ஒரு மெஷினில், ஒரு புறம் வெட்டிய மரக்கிளைகளை போட்டால், உள்ளே போய், அரைபட்டு, மெஷினின் இன்னொரு புறமாக மரத்துகள்கள் வரும். அவை முழுக்க வண்டியின் உள்ளே போய் விழும்படியான அமைப்பில்தான் இந்த வண்டி இருக்கும்.
  
பெரிய பெரிய கிளைகளை சர்வசாதாரணமாக மென்று துப்பும் இந்த வண்டி எங்கே என் கண்ணில் பட்டாலும் அஞ்சு  நிமிஷமாவது நின்னு, நிதானமா ரசிச்சுட்டுத்தான் போவேன். :) ஒரு லாங் ஷாட்டில் வண்டியின் மொத்த உருவம்..
நீ போடற ரம்பமே ரொம்ப கஷ்டம், இதில இந்த ரம்பம் வேறயா என்று தலையைச் சொறியும் அன்புள்ளங்களுக்கு ஒரு நற்செய்தி! USB கேபிள் கிடைச்சுருச்சு, இருங்க, பஜ்ஜி தரேன், சாப்ட்டுப் போங்க. போன முறை வாழைக்காய் பஜ்ஜி-தேங்காச் சட்னி தந்தபோது, பில்டர் காபி மிஸ்ஸிங் என்று மீரா சொல்லிருந்தாங்க. அதனால் இந்த முறை மறக்காம மசாலா டீ - கத்தரிக்காய் பஜ்ஜி- காரசட்னி! என்ஸொய்! :)

Thursday, January 31, 2013

சித்திரம் பேசுதடி...

 2011-ல் ஊருக்குச் சென்றிருந்த பொழுது உறவினர் வீட்டுத் திருமணம் (தஞ்சையில்) இருந்தது. எங்கள் பயணத்தேதி நெருங்கிவிட்டதால் திருமணத்திற்குச் செல்ல இயலாதென்று முதல்நாளே கோவையில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டிற்குப் போய் வாழ்த்திவிட்டு வந்தோம். கல்யாண வீட்டில் இருந்த கோலங்கள், காமெராவில் புகுந்து இங்கே  பிரசன்னமாகின்றன. :)
மாப்பிள்ளையின் அம்மா அழகாகக் கோலங்கள் போடுவார். மகன் கல்யாணத்துக்கு கோலம் என்றால் சொல்லவும் வேண்டுமா? :)
மாக்கோலம், வெளியே வாசலில் போட்டிருக்கும் கோலம் எல்லாமே வெகு அழகாய் இருந்தன.
~~
இந்தக்கோலம்  என் அக்கா போட்டது..7புள்ளி, இடைப்புள்ளி 4 வரை. ரொம்ப சிம்பிளான கோலம்தான் என்றாலும், சுற்றிலும்   வரும்  பூவின் இதழ்கள் சரியாக வரவில்லை என்றால் கோலத்தின் அழகே கெட்டுப் போய்விடும், வடிவமும் வராது. கோலம் போடப் பழகிய  காலங்களில்  இந்தக்  கோலத்தைத் தப்பாகாமல், இதேபோல  அழகாய்ப் போடுவதே எனக்கொரு சவாலாய் இருந்தது. அதனால்தானோ என்னமோ, இக்கோலத்தின் மீது  எனக்கேற்பட்ட ஈர்ப்பு  குறையவே இல்லை! :) இப்பொழுது நானும் சுமாராய்ப்   போட்டுவிடுவேன்  என்றாலும், அக்காவைப் போல  பர்ஃபெக்ட்டாக வராது!  ;)
~~
சித்திரம் பேசுதடி..- என்று தலைப்பு வைக்க முக்கிய காரணம் இந்த வண்ணக் கிளிதான். :) அம்மா வீட்டில் முக்கியமான போன் நம்பர்களை பெரிய எழுத்தில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருப்போம். அந்தக் காகிதம் பழசாகிப் போக, திடீரென்று ஒருநாள் புதிதாக ஒரு காகித்ததில் போன்நம்பருடன், பக்கத்தில் இந்த வண்ணக்கிளியும் உட்கார்ந்திருந்தது. :)) 
என் (அக்கா) பையனின் கைவண்ணம்! :))) எங்க இருந்து தம்பி இந்தக் கிளியப் புடிச்சே? - என்று கேட்டதற்கு, ஒரு பழைய நோட் அட்டையில் இருந்து பார்த்து வரைந்ததாக நோட்டை எடுத்துக் காட்டினார். அசலும், நகலும் எப்படியிருக்கு?! ;)
என் கை சும்மா இருக்குமா? துறுதுறு..ன்னுச்சா..நானும் பென்சில் பேப்பர் எடுத்து கிளிய அழகாக் கீறிட்டேன். :))) [கவனிக்க, ரப்பர் உபயோகமே படுத்தலையாக்கும்! :)]
கிளிக்கு உடல் கொஞ்சம் நீளமாப் போயிருச்சோ? ;) ஆனா அதைக் கூட யாரும்  கவனிக்கலை, கிளி ஏன் இப்படி "சிரிச்சிட்டு" இருக்கு என்றுதான் கிண்டல் பண்ணினாங்க!! நீங்களே சொல்லுங்க, என் கிளி சிரிக்குதா..சிரிக்குதா...சிரிக்குதா??! அவ்வ்வ்வ்வ்......
அடுத்த சில நாட்களில் கிடைச்ச கலர் பென்ஸில்களை வைச்சு கிளிக்கு கொஞ்சம் வண்ணமும் தீற்றி வைச்சிட்டு வந்தேன், பையன் கிளியை மட்டும் அழகா நறுக்கி, போன் நம்பர் பக்கத்தில் ஒட்டிவைச்சிட்டார்! :)
இவ்ளோதாங்க  இந்த சித்திரம் பேசியது! :) ஹ்ம்ம்ம்...கிளிப் பேச்சு கேட்க வா- அப்படின்னு தலைப்பு வைச்சிருக்கணுமோ? இருங்க, வரேன்...ஒரே நிமிஷம்! டைட்டிலை மாத்திட்டு வந்துடறேன்! ;)))

Friday, January 25, 2013

ஆனை ஆனையாம், அழகர் ஆனையாம்!

 

 

யானைக் குளியல்-வீடியோ



குளிச்சு முடிச்சு, ப்ரெஷ்ஷாகி, ஒரு கட்டு புல்லும் தானே எடுத்துட்டுப் போய் உறவினர் கூட்டத்துடன் சேர்ந்து சாப்பிட்டுட்டு..
பாகனுடன் வசூல் வேட்டை  & போட்டோ ஷூட்டுக்கு ரெடி! :)

நான் சூப்பரா போஸ் குடுப்பேன்! நீங்க அழகா நின்னுக்கணும், அது உங்க பாடு, போட்டோ க்ராபர் பாடு! ;))) 
இந்த மனுஷங்க தொந்தரவு ரெம்ப ஜாஸ்தியாப் போச்சு பா...யானைப்பசிக்கு சோளப்பொரி-னு சொல்லுவாகளே, அது இதுதான்பா! ;)))
இந்தப் படத்திலிருக்கும் ஆட்கள் யாரோ எவரோ தெரியாதுங்க..அந்தப் பாப்பா யானைக்கு பாப்கார்ன் கொடுக்கறதைப் பார்த்து டக்குன்னு க்ளிக் பண்ணினேன்! :)
~~~
 

அக்டோபரில் பெங்களூரு பன்னர்கட்டா மிருகக் காட்சி சாலைக்கு சென்றபோது பார்த்த யானைகள்..பெண்களும் குழந்தைகளும் ஒரு புறம் அணிவகுத்து நிற்கிறார்கள், தந்தத்துடன் கம்பீரமாக இருக்கும் ஆண்யானை தனியாக நின்று படங்களுக்கு போஸ் குடுக்கிறது. யானைக்குட்டிகள் ரொம்ப க்யூட்டாக இருந்தன. :)

இவ்வளவு பெரிய உருவம், மனிதனின் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்து பூனைக்குட்டிகள் போல சாதுவாக இருப்பது மனதின் மூலையில் கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்தாலும், நல்லவிதமாகப் பராமரிக்கப் படுகின்றன என்று மனதைத் தேற்றிக் கொள்ளவேண்டியிருக்கிறது.

 Its Okay, Remove your thinking cap..Come on! யானையப் பார்க்க யாருக்குதான் பிடிக்காது?  வருத்தங்களை மறந்துவிட்டு ஜாலியா யானை பாருங்க!!:))
~~~
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
 Happy Republic Day! Enjoy the feast! :)

LinkWithin

Related Posts with Thumbnails