Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

Sunday, June 29, 2014

பத்து கேள்விக்குப் பதில்! ;) :)

முக்கியமான முன்குறிப்பு
இந்த பத்து பதில்களில் பெரும்பாலானவை நகைச்சுவையை மனதில் கொண்டு எழுதப்பட்டவை. யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை! எல்லாருமே சீரியஸாவே பதில் சொல்லிட்டு இருக்காங்க, அதான் நாம கொஞ்சம் காமெடியா எழுதலாமேன்னு...ஹிஹி!

1. உங்களுடைய 100வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
பிறந்தநாள் பரிசாக ஒரு தங்கப் பல் செட் வாங்கி, "கருக்-மொருக்" னு கடிச்சுச் சாப்பிடற ஸ்னாக்ஸ் எல்லாம் வயிராற, மனசார சாப்ட்டு சந்தோஷமா கொண்டாட விரும்புகிறேன்.

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?
கண்ணைத் திறந்து கொண்டே தூங்கக் கற்க விரும்புகிறேன்.

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
..தோ...இப்பத்தான்! :) மொதக் கேள்விக்கு பதில் எழுதும்போது சிரித்தேன், இப்பவும் சிரிக்கிறேன்! :)

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
கரண்ட் கம்பியப் புடிச்சு தொங்கி(!) பார்க்க ஆசை..
கனெக்ட் பண்ணிய ஒயரை எல்லாம் கையால் இழுத்துப்பார்க்க ஆசை!
இங்கே அது முடியாது என்பதால், திங்க் பண்ணி அப்பறமா சொல்லறேனே, ப்ளீஸ்! ;)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
உங்க அப்பா-அம்மாவை இவ்வளவு நாள் பார்த்த பிறகும் இப்படி ஒரு துணிகரமான முடிவை எடுத்த உன் மன தகிரியத்தை;)ப் பாராட்டுகிறேன். பல்லாண்டு, பல்லாண்டு, பலகோடி நூறாண்டு வாழ்க! :)

6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
பூமிப் பந்தின் ஒரு பக்கம் பகல், ஒரு பக்கம் இரவு எல்லாம் இருக்கப்படாது. எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் இரவு, ஒரே நேரத்தில் பகல். அப்புறம், உலகத்தில 24 மணி நேரம், 35 மணி நேரம் விமானப் பயணங்களெல்லாம் கிடையாது. கண்ணை மூடி கண்ணைத் திறந்தா, யு.எஸ். டு கோயமுத்தூர்(சும்மா உதாரணமுங்க..எந்த ஊர் வேணா வைச்சுக்கலாம்! ) போயிரணும்.

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
நல்லவங்க, நண்பர்ங்க, பெரியவங்ககிட்ட கேக்கிறதுதான். ஆனா கடைசி முடிவு ஆண்டவன் கைல. கண்ணை மூடி சாமி கும்புட்டு எந்த வழியில் போகும்படி என் மனதிற்கு தோன்றுமாறு ஆண்டவன் என்ன சொல்றாங்களோ அதில போயிருவங்க.

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
இன்னா பண்றது! நம்மளும் பிரபலம் ஆகிட்டோம்னு கண்டுக்காம போயிக்கினே இருக்கறது தான்! ஐ டோண்ட் கேர்! ;) நான் எனக்கு உண்மையா இருப்பது மிக முக்கியம்னு நினைக்கிறேங்க.

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
நான் "சொல்ற" நிலைமையில் இருப்பனான்னு தெரில. அழுதுகிட்டு இல்ல இருப்பேன்? அவரையும் மனம் கரையும்வரை அழுது முடிக்கச் சொல்லி அதன் பின்னர் தேற்ற முயல்வேன்.

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
இந்தக் கேள்விய மெய்யாலுமே பாராட்டுறேன்ங்க.."உங்க வீட்டில்" என்று ஒரு வார்த்தையச் சேர்த்தீங்களே..அதுக்காக! :) நம்ம வீட்டில என்ன வேணா பண்ணலாமே! ம்...என்ன பண்ணலாம்?? வீட்டை க்ளீன் பண்ணுவோம் முதல்ல..அப்புறம் இருக்கவே இருக்கு டிவி-கம்ப்யூட்டர்-ஐ பேட் எக்ஸறா..பிறகு சமையல், சாப்பிடறது..எனக்கு தனியா இருந்தா தூக்கம் மட்டும் வராது, சோ நோ தூக்கம். தட்ஸ் ஆல்!
~~~
சரி, ஒரு வழியா மொக்கைய முடிச்சாச்சு..ஒடஞ்சு சுக்கு நூறாப் போன உங்க இதயத்தை சிரமப்பட்டு, பெவிகால், க்விக்-ஃபிக்ஸ், எம்-ஸீல் எல்லாம் போட்டு ஒட்டிகிட்டு சாப்பிடவாங்க!!
ஒரே தட்டை சுத்திச் சுத்தி வந்து படமெடுத்திருக்கேனேன்னு யோசிக்கப்படாது..நாமல்லாம் ஆரு? விக்கிரமாதித்தன் வம்சமில்லையா..நினைச்சது கிடைக்கும்வரை விடாம சுடுவோம்ல? ;) 
 இந்தப் படத்தில சோறு ஃபோகஸ் ஆகிருக்குங்க..
 இந்தப் படத்தில பச்சைப்பயறும், நெய்யும் ஃபோகஸ் ஆகிடுச்சு..
 இதிலே கேரட் பொரியல்...
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், குட்டி உருளை வருவல்!! இவரை போட்டோ எடுக்கத்தான் இம்புட்டு பில்ட்-அப்பூ! ரொம்ப ரொம்ப சிம்பிள் அண்ட் டேஸ்ட்டி வருவல். சின்ன உருளைக் கிழங்கை வேகவைச்சு தோலுரிச்சு, ஓரொரு கிழங்கையும்  உள்ளங்கைல வைச்சு லேசா அழுத்தி வைச்சுக்குங்க. கடாயில கொஞ்சம் எண்ணெயை தாராளமா ஊத்தி, கடுகு தாளிச்சு வெந்த கிழங்கு, மஞ்சப்பொடி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிட்டு, உப்பு மிளகாத்தூள் போட்டு புரட்டி இறக்கிருங்க. தட்ஸ் ஆல்! மொறு மொறுன்னு காரசாரமான வறுவல் ரெடி!
ஓக்கே...நன்றி வணக்கம், அடுத்த பதிவில் சந்திப்போம். 

Monday, March 18, 2013

தொடர்பதிவு, என் பொருட்கள்...

ஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்! இளங்கலை படிக்கையில் சைட் ட்ராக்ல தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரச்சார் சபா-வில் ஹிந்தியும் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கான பரீட்சைகள் R.S.புரம் நேரு மகாவித்யாலயா பள்ளிக்குப் போனோம். பரீட்சை முடிந்து திரும்பி க்ராஸ்கட் பஸ் ஸ்டாப் வரும் வழியில் தள்ளுவண்டியில் வந்துகொண்டிருந்த பப்பியார் என் கவனத்தைக் கவர, வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டேன். :) 

அடுத்து அந்தப் குண்டுப் பெண்மணி..எப்படி வீட்டுக்கு வந்தார் என நினைவில்லை..ஆனால், பலகாலமாக எங்களுடனே இருக்கிறார். உரிக்க உரிக்க வரும் வெங்காயம் போல, ஒரு பொம்மைக்குள் இன்னும் 5 பொம்மைகள்! :) 
 ஐந்து பேரிலும் மூத்த ஆள்தான் அழகாக, திருத்தமாக முகம், கண்கள், புல்லாக்கு, நகைகள் என க்யூட்டாக இருப்பார். அளவு குறையக் குறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் குறைந்து இருக்கும், ஆனாலும் இந்தப் பொம்மை செட் எனக்கு மிகப் பிடித்தமானது. இவை இரண்டுமே அம்மா வீட்டில் பத்திரமாக இருக்கு. ஊருக்குப் போனபோது இந்தப் பதிவு எழுதுவேன் என்ற க்ளூவே இல்லாமல், எடுத்து வந்த படங்கள் இப்படி உபயோகமாகியிருக்கின்றன. :)
எனக்கு கூந்தல் கொஞ்சம்;) நீளம்! ஈரிழைத் துண்டுகள் மற்றும் இப்படியான துண்டுகள் ஈரத்தை சீக்கிரம் உறிந்துகொள்ளும் என்ற காரணத்திற்காக,  காலகாலமாக இப்படி காட்டன் துண்டுகள் வீட்டில் இருக்கும். மேலே படத்தில் இருக்கும் துண்டு என் கல்யாணத்தின் போது கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்-ல் வாங்கியது. இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்.
 
ரோஜாப்பூ போட்ட இந்தப் பர்ஸ் என்னவர் எனக்காய் வாங்கித் தந்தது. ஒருமுறை என்னிடம் இருந்த லாங் பர்ஸ் பஸ்ஸில் பிக்பாக்கெட்-ஆக பறிபோய்விட்டது. அப்போது இவரிடம் போனில் சொல்லியிருக்கிறேன், பிக்பாக்கெட்டுக்குப் பலியாவது முதல் முறை என்பதால் கொஞ்சம் ஓவராகவே(!) சொல்லியிருப்பேன் போலும்! ;) அடுத்தமுறை இந்தப் பர்ஸுடன் வந்தார். 
அழகான ப்ரவுன் கலரில் குட்டி ரோஜாப்பூவுடன் இருக்கும் இந்த பர்ஸ்..இதன் கைப்பிடிகள் எனக்கு மிகவும் பிடித்த மாடல். நேரம் கிடைக்கையிலெல்லாம் கைப்பிடிகளைப் பூட்டி, திறந்து, பூட்டி திறந்து பார்ப்பது ஒரு பிடித்தமான பொழுதுபோக்கு. :)
குட்டிப் பர்ஸில் 2 அறைகள் உண்டு. அதிகமாகப் பணம் வைத்தெல்லாம் புழங்கமுடியாது. அளவாக செலவு செய்யட்டும்னு சின்ன பர்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கர்ர்ர்ர்ர்ர்! இப்போது அதில் ஒரு காலணா(Quarter cent) போட்டு பத்திரமாக எடுத்து வைச்சிருக்கேன். என் உபயோகத்திற்கு கொஞ்சம் பெரியதாக இன்னொரு பொம்மை(கள்) போட்ட பர்ஸை நானே வாங்கிட்டேன். :)))
பர்ஸ் கதை முடிஞ்சிருச்சுன்னு நினைச்சா மறுபடியும் பர்ஸ் போட்டோ??- என நினைக்கிறீங்க, கரெக்ட்? :) இது பர்ஸுக்கு இல்லைங்க, பர்ஸ் மேலே, என் கை  விரலில் இருக்கும் 3 கல் மோதிரத்துக்காக. இந்த மோதிரம் ஒரு பிறந்தநாள் பரிசாக என்னவர் வாங்கித்தந்தது. மூணு குட்டி வைரங்கள் வெள்ளைத் தங்கத்தில் பதிக்கப்பட்டு, வளையம் மஞ்சள் தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரம். மெல்லிசாய், அழகாய் இருக்கும். சர்ப்ரைஸாக எனக்கே தெரியாம என் கை அளவெடுத்துப் போய் கரெக்டாக வாங்கிவந்திருந்தார். :) 

சால்ட் லேக் சிட்டியில் இருக்கையில் ட்ரைவிங் லைசென்ஸ் வாங்க DMV அலுவலகம் போனபோது, அங்கே வேலைபார்க்கும் ஓர் ஆள் இந்த மோதிரத்தைக் கவனித்து ஆஹா-ஓஹோ என அஞ்சு நிமிஷம் புகழ்ந்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என்பதை இங்கே மீண்டும் ஒருமூறை நினைவு படுத்தலைன்னா எனக்குத் தூக்கம் வராதுங்க..ஹிஹிஹி!

இன்னும் பலப்பல பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் இங்கே வெளியிட அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ;) அது என்னன்னா, என்னவர் கொஞ்சம் நல்லாவே படம் வரைவார். பேப்பர் பேனா கிடைத்துவிட்டால், ஏதாவது வரைந்துவிடுவார், நானும் பத்திரமா அதை எடுத்து வைச்சுப்பேன், அவற்றையெல்லாம் இங்கே போடலாம் என ரெடி பண்ணினேன், இருந்தாலும் வரைந்தவரிடம் ஒரு வார்த்தை கேட்போமே என கேட்க, கிடைச்சது ஆப்பூஊஊஊ! :)))) "நோ" என்று தடா போட்டுட்டாருங்க. எதிர்காலத்தில் வாய்ப்புக் கிடைச்சா படங்களை ரிலீஸ் பண்ணுகிறேன். 

இனி, இந்தத் தொடர்பதிவைத் தொடர "உலகம்" சுற்றிக்கொண்டிருக்கும் இமா & "ரசித்து ருசித்து"-கொண்டிருக்கும் ப்ரியா ராம், "பொழுது போக்குப் பக்கங்களை" பதித்துக் கொண்டிருக்கும் சித்ராசுந்தர், ஆகியோரை அழைக்கிறேன். தொடருங்க என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! 

குறிப்பு: இந்தப் பதிவு இந்தியநேரம் மாலை 5.53க்கு வெளியாகும்படி ஷெட்யூல் செய்திருக்கேன், அதனால வாசகர்களுக்கு ஈவினிங் டிஃபனாக பஜ்ஜி-சட்னி வழங்கப்படுகிறது. :)) 
யு.எஸ்.ல கிழக்கு கடற்கரையில் இருக்கும் மக்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் டைமா இருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு சாப்ட்டுருங்க. எங்கூர்ப் பக்கமிருந்து வரும் ஆட்களும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ..அகில உலகமெங்கிலுமிருந்து வரும் அனைவரும் அவரவர் ஸ்னாக் டைமுக்கு இங்ஙன வந்து பஜ்ஜி சாப்பிடுங்க என அன்போடு சொல்லிக்கிறேன். 
இங்க இன்னொரு விஷயம்..ப்ளெய்ன் வாழக்கா பஜ்ஜிய விட, பஜ்ஜிக்கு கரைச்ச மீதமாகும் மாவில, சொச்சமான வாழக்காத் துண்டுகள், வெங்காய மொளகா எல்லாம் அரிஞ்சு  போட்டு இப்படி பக்கோடா-வா போடுவமே, அதுதான் என்னோட ஃபேவரிட்! ;) வாட் அபவுட் யூஊஊ?!! :)

Thursday, December 22, 2011

மழை..இசை..கதை!!

ஹலோ..ஹலோ..ஹலோ!!!!
................
மைக் டெஸ்டிங்...ஒன்..டூ..த்ரீஈஈஈஈ!!!!
................
எங்கே..எங்கே..எங்கே..எங்ங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ தேடறீங்க?? இங்கே..இங்கே..இங்கே..இங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ பாருங்க!
..............
நாந்தான் மழை,மழை,மழேஏஏஏஏஏஏஏஏஏஏ வந்திருக்கேன்!
:))))))))))))))))))))))))))))))))

எல்லாரும் சுகமா..எனது காதலி..மனைவி, என் முதலும் முடிவுமான பூமிப்பெண் சுகமா இருக்காளா? ஒரே ஆள், பலமுகம் கொண்டவள் என் காதலி!!! காதல்வெறியில் அவ்வப்பொழுது சிலசமயம் பெய்தும் கெடுப்பேன்,பலசமயம் காய்ந்தும் கெடுப்பேன். love drives people crazy, not only people,but including me!!... :P:P:P

ஹிஹீஹீ..என்ன பார்க்கறேள்? மழை இங்கிலீஷ் பேசுதேன்னா...நான் எல்லா பாஷையும் பேசுவேன். அதை விடுங்கோ..இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன்!!! இதோ இந்தப் பொண்ணைப் பாருங்களேன். இவ பேரு வர்ஷா(வர்ஷா = மழை) ..காலேஜில படிச்சுட்டு இருக்கா..லீவில் ஊருக்கு போறப்ப எப்பூடி என்னை ரசிக்கிறா எண்டு பாருங்க! இதைப் பார்க்கறப்ப எனக்கே டான்ஸ் ஆடலாம் போல வருது! :)



இந்தியப்பெண்ணாய் என் காதலியைப் பார்க்க நினைத்தால் இந்தியத் தீபகற்பம் பக்கம் வந்து பார்ப்பேன்..நவீன யுவதியாகப் பார்க்க நினைச்சால் அமெரிக்க ஐரோப்பியக் கண்டங்களிலே பார்ப்பேன்.வெள்ளைப் பனித் தேவதையாய் அவளைக் காண நினைத்தால் அண்டார்ட்டிக்காவில் பார்ப்பேன்..பச்சைப்பட்டுடுத்திய தேவதையாய்ப் பார்க்க நினைத்தான் அமேஸான் காடுகளிலே ஓடிப்போய்ப் பார்ப்பேன்..மொத்தத்தில் அவள்மீது பைத்தியமாய்ப் பால்வெளியெங்கும் திரிகிறேன்!!!!!! இப்பொழுது கூடப் பாருங்க..மழை வந்திருக்கேன்,கதை சொல்லப்போறேனு சொல்லிட்டு பூமிப்பெண்ணைப் பற்றி பிதற்றிட்டு இருக்கிறேன்! அவ்வளவு காஆஆஆஆஆதலுங்க! ;))))

அட,நம்ம வர்ஷாப் பொண்ணை எங்க விட்டோம்?? ஆங்...அவிங்க ஊர்ல!! வர்ஷா கற்பனையில் மூழ்கி, கவிதையில் முத்தெடுத்து, எழுத்திலே கோர்த்து வைத்திருக்கா..அதை இந்தப்பையன் களவாடிட்டான்..ஆனாலும் பரவாயில்லை,நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாவே பாடறான். :)



சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன்துளியாய் வருவாய்..
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே வருவாய்..
பயிர் வேரினிலே விழுந்து நவதானியமாய் விளைவாய்..
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்!! ...ம்ம்ம்ம்ம்...அனுபவிச்சு எழுதிருக்காங்கள்ல? இதைக்கேக்கறப்ப எனக்கே என்மேல கொஞ்சம் பெருமையா இருக்கு..என்ன, காலர்தான் இல்ல...இருந்தா காலரைத் தூக்கி விட்டுப்பேன்.

இப்புடியே நாள் ஓடிட்டு இருக்கப்ப பாவம்,காலேஜில படிச்சிகிட்டு இருக்கற வர்ஷாவுக்கு கலியாணம் முடிவு பண்ணறாங்க... கரீக்ட்டா நான் போய், அந்தப்புள்ளை வீட்டுக்கு போவதை தாமதப்படுத்திட்டேன்..வர்ஷா ஒரே சந்தோஷமாயிருச்சு..என்னையக் காரணம் காட்டி வீட்டுக்கு லேட்டாப்போலாம்ல?? என்ன ஒரு சந்தோஷம் பாருங்களேன்..



எப்படியோ ஒரு வழியா பெண்பார்க்கும் படலத்தைத் தாமதப்படுத்தியாச்சு..நாட்கள் ஓடிட்டே இருக்கு. ஒருநாள் நான் என் காதலியைப் பார்க்க சென்னை மாநகருக்கு வந்தப்ப, மார்க்கெட்ல இருந்த ஒரு பையன் என்னைப் பார்த்து, நான் ஏற்படுத்தும் ஒலிகளையும் ரசிச்சு பாடறான்..அதே நேரம் அந்தப்பக்கம் நம்ம வர்ஷாப்புள்ளையும் பாடுது.

பாட்டு நல்லாருக்கும்..பையனையும்,புள்ளையையும் பார்க்கப்புடிக்கலைன்னா கண்ணை மூடிகிட்டு பாட்டைக் கேளுங்கோ, விசய்-திரிசா :):)வைப் புடிக்கும்னா கண்ணையும் காதையும் ஓபனா வைச்சிகிட்டே என்சொய் பண்ணுங்ஓஓஓ!;) ;)



ஒத்த ரசனையோட இருக்க ரெண்டு பேரும் எதிர்பாராத விதமாச் சந்திச்சு, தடக்-தடக்குன்னு கலியாணம் பண்ணி, ஆசைக்கு ஒண்ணு, ஆஸ்திக்கு ஒண்ணுன்னு குட்டீஸும் வந்து மும்பைல செட்டில் ஆகிட்டாங்க. ஒரு ஹோலி நாளில் எல்லாரும் வண்ணங்கள் பூசி மகிழ்வதைப் பார்க்க நானும் பூமிக்கு வந்தேன்..பாட்டுப்பாடி நடனம் ஆடி, கலர்ப்பொடி பூசின்னு ஒரு நாள் சந்தோஷமாக் கழிஞ்சது.



கதையும் முடிஞ்சது,கத்தரிக்காய் காய்ச்சது! :))))))))))))) போயிட்டு வரேன்..முடிந்தால் மீண்டும் சந்திப்போம்!

பி.கு. அதிரா ஆரம்பித்து வைத்து, ஆசியாக்கா என்னைக் கோர்த்துவிட்ட "இசையும் கதையும்" தொடர்பதிவு இது. இதைக் கோர்க்கும்படி இமா,வானதி, சிவா ஆகியோரை நானும் கோர்த்து:)விடுகிறேன்.

Thursday, July 21, 2011

அமுதென்பதா,விஷமென்பதா?

அமுதென்பதா,விஷமென்பதா...அமுதவிஷமென்பதா?

காதலைப் பற்றி தொடர்பதிவு எழுதச்சொல்லி அதிரா அன்பாக அழைத்திருந்தார். என்ன எழுதுவது, எங்கே ஆரம்பிப்பது, எங்கே முடிப்பது எதுவும் தெரியவில்லை! :)

ஒருநாள் காலை டூயட்-படத்தில் இருந்து பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தேன்..அஞ்சலி செய்து, மெட்டுப்போட்டு, குண்டுக்கத்தரிக்காயாகி, கடைசியாக "என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப்போகிறாய்?" என்று எஸ்.பி.பி. கேட்க ஆரம்பித்தார்.

எனக்குத் தெரிந்த வட்டத்தில் சிலுவைகள் தந்த காதலை அதிர்ஷ்டவசமாக நான் இதுவரை பார்க்கவில்லை. எங்கள் குடும்பம்/நண்பர்கள் பலருக்கு சிறகுகளைதான் காதல் தந்திருக்கிறது. எல்லாரும் சந்தோஷமாகப் பறந்துகொண்டிருக்கிறோம். :)

சிலவிஷயங்களை "இது நல்லது, இது கெட்டது" என்று அறுதியிட்டு கூற முடியாது..காதலும் அவற்றில் ஒன்று. காதல் தவறான விஷயம் என்றால் சங்ககாலம் தொட்டு இன்றைய ஹைடெக் யுகம் வரை சிரஞ்சீவியாக எப்படி அது வாழ்ந்துகொண்டிருக்கிறது? இல்லை, காதல் மட்டுமே சரியானது என்றால், மொட்டிலேயே கருகும் இளைஞர்களின் வாழ்வுக்குப் பொருள் என்ன?

ஒவ்வொருவர் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள், அனுபவங்கள், இன்பதுன்பங்கள் இவையே காதல் பற்றிய அவர்களின் அளவுகோலாக இருக்கிறது. இதனால் காதல் ஏமாற்றம் தருமா-தராதா,சரியா-தவறா, செய்யலாமா-கூடாதா என்று ஆராய்ச்சி செய்யாமல் அது பாட்டுக்கு இருக்கட்டும் என்று விட்டுவிடுவோமே! ;)

என்னைப் பொறுத்தவரை காதல் அமுதாகத்தான் இருந்திருக்கிறது,இருந்துகொண்டிருக்கிறது, இருக்கும்! (அதற்காக விஷமில்லை என்று நான் சொல்லவில்லை.;)) பெற்றோர் பார்த்து இணைத்தாலும் சரி, பிள்ளைகள் பார்த்து முடிவு செய்தாலும் சரி, இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று! அதுதான் நடக்கும். அமைந்த வாழ்க்கையை வளமாக வைத்துக்கொள்வது அவரவர் கையில்!



உங்களுக்குக் காதல் பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் இந்தப் பாட்டைப் பாருங்க..ஸோனு நிகம், அனுராதா ஸ்ரீராம் குரல்கள் -ஏ.ஆர்.ரஹ்மான் இசை-ஐஸ்வர்யா ராய் நடனம் எல்லாமே அழகா இருக்கும்! :)

இதுவரை என்னை அழைத்த தொடர்பதிவுகள் எல்லாவற்றையும் முடிந்தவரை எழுதியிருக்கிறேன், இதையும் ஒரு மாதிரியா எழுதிப் பூசி மெழுகிவிடலாம்னு எழுதிட்டேன். என் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கேன், படித்துப் பிடித்தால் சந்தோஷம், பிடிக்கலைன்னா அது உங்க உரிமை! ஒவ்வொருவருக்கும் values வித்யாசப்படும் இல்லையா? ;)

நன்றி!

Friday, June 17, 2011

ஊருன்னா ஊருதான்,கோயமுத்தூருதான்!

ஸாதிகா அக்கா ஆரம்பித்து வைத்திருக்கும் தொடர்பதிவு.. எங்க ஊரைப்பத்தி எழுதச்சொல்லியிருக்காங்க. எங்கூரு கோயமுத்தூருன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். காந்திபுரம் பஸ்ஸ்டாண்டுல இருந்து ஒரு ஏழெட்டுக் கிலோமீட்டர் தூரத்துல எங்க வீடு இருக்குதுங்க. அதுனால பர்ட்டிகுலரா எங்க கிராமத்தைப் பத்திச் சொல்லாம பொதுவா கோயமுத்தூரைப் பத்தி ஏதோ எனக்குத் தெரிஞ்சளவுக்கு சொல்லிடறேனுங்க.

பொறந்து,வளந்து,படிச்சு,வேலைக்குப் போறவரைக்கும் அங்கயே இருந்தாலும் எனக்குத் தெரிஞ்ச,நான் போய்வந்த இடங்கள்னு பாத்தம்னா ஒரு முப்பது நாப்பது கிலோமீட்டர்தானுங்க. அதுக்கு மேலே எங்கியும் போனதில்ல. எனக்குத்தெரிஞ்ச கோயமுத்தூரை (என் பார்வைல) சொல்லறேன்.
~~~~~~~~~~~~~~~

தமிழகத்தில் வெகுவேகமாக வளர்ந்துவரும் மாவட்டங்களில் முக்கியமானது கோவை. மரியாதையான கொங்குத்தமிழ், சிறுவாணித்தண்ணி, குளு குளு தட்பவெப்பத்துடன் அதிநவீன மருத்துவம், தரமான பள்ளி-கல்லூரிகள், பஞ்சாலைகள், பல்வேறு சாஃப்ட்வேர் கம்பெனிகள், டைடல்பார்க் இப்படி எல்லாத்துறைகளிலும் கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்ற ஒரு நகரம்னே கோவையைச் சொல்லலாம்.

எங்க வீடுகளில் வீட்டுக்கு வந்தவங்களுக்கு "தண்ணி குடிக்கிறீங்களா?"ன்னு கேட்பதெல்லாம் கிடையாது, வந்தவர்களை வாங்கன்னு சொல்லும்போதே ஒரு சொம்பு தண்ணியுடன்தான் இருக்கும் எங்கள் வரவேற்பு & விருந்தோம்பல்! எதுவும் சாப்பிடுவீங்களான்னு விசாரணையெல்லாம் கிடையாது. பலமான கவனிப்புதான். :)

பஞ்சாலைகள்
ஊருன்னா ஊருதான் கோயமுத்தூருதான்,உழைப்பாளி வாழும் ஊருதான்னு எதோ ஒரு சினிமாவுல பாட்டே படிப்பாங்க. கோயமுத்தூருன்னா மொதல்ல நினைப்பு வரது பஞ்சாலைகள்தான். இந்தியாவின் மான்செஸ்டர் பம்பாய்(மும்பை),தமிழகத்தின் மான்செஸ்டர்னு கோயமுத்தூர்னு பள்ளிக்கூடத்துல புவியியல் பாடம் படிக்கையிலே நீங்கல்லாருமே படிச்சிருப்பீங்க. ஆமாங்க,பஞ்சாலைகள் எங்கூர்ல அதிகம் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் வேஸ்ட்காட்டன் மில்கள்,பஞ்சாலைகள் இருக்கும். இப்ப ஒரு சில வருஷங்களுக்கு முன்பு நிறைய ஆலைகளை இழுத்து மூடி, எல்லாத்தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இருந்தாலும் டெக்ஸ்டைல் துறையில் சக்கைப்போடு போடும் திருப்பூரை அடிச்சுக்க ஆள் கிடையாது.

கல்வி
மிகவும் புகழ்பெற்ற பள்ளி-கல்லூரிகள் எங்கூர்ல உண்டு. ஸ்டேன்ஸ்-அவிலா கான்வென்ட்-பாரத் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்,சர்வஜனா பள்ளி, மணி மேல்நிலைப்பள்ளி என்று லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். கல்லூரிகளிலும் அரசு பொறியியல் கல்லூரி,வேளாண்பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. -சி.ஐ.டி. -அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்,கிருஷ்ணம்மாள் கல்லூரி-நிர்மலா கல்லூரி -மருத்துவக்கல்லூரிகள் என்று முடியாத பட்டியல் இருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகம்,சட்டக்கல்லூரி,கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் என்று புகழ்பெற்ற கல்விநிறுவனங்கள் இருக்கு. கோவையிலிருந்து பல்வேறு அரசுப்பணிகள் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றுவோர் பலர்.

மருத்துவம்

பல்வேறு அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் கொண்ட மருத்துவமனைகள் நிறைய இருக்கிறது. ராமகிருஷ்ணா மருத்துவமனை,குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கே.ஜி.ஹாஸ்பிடல்-கே.எம்.சி.ஹெச்.-அரவிந்த் கண் மருத்துவமனை-தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனை இப்படி புகழ்பெற்ற மருத்துவமனைகளும், கைராசிக்கார மருத்துவர்களும் நிறைந்த ஊர் எங்கள் ஊர்.

பேரூர் கனகசபை
கோயில்கள்
சிற்பக்கலையில் பிரசித்தி பெற்ற 'மேலைச் சிதம்பரம்' என்றழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், பூண்டி (எ) வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், மருதமலை இவை கோவையிலிருந்து சற்றே தள்ளி இருக்கும் கோயில்கள். பேரூர்க்கோயில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. கோயில் முழுவதும் சிற்பங்கள் நிறைந்திருக்கும். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் நடராஜர் நர்த்தனம் புரியும் கனகசபை. அங்கே பிரம்மாண்டமான சிற்பங்கள் தத்ரூபமாக இருக்கும். கோயில் முழுவதுமுள்ள சிற்பங்களை ரசித்துப் பார்க்க ஒரு நாள் போதாது.

ஈஷா தியானலிங்கம்

பூண்டியில் சித்திரா பவுர்ணமி மிகவும் விஷேஷம். ஏழு மலை ஏறி வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க மக்கள் வெள்ளம் அலைமோதும். ஈஷா யோகமையம் வெள்ளிங்கிரி அருகிலேயே இருக்கிறது. அங்கிருக்கும் தியானலிங்கம் மிகவும் நன்றாக இருக்கும். பெரிய ரவுண்டு பவுலை கவிழ்த்து வைத்த மாதிரி ஒரு கட்டிடம்,நடுவில் பிரம்மாண்டமான தியானலிங்கம், சுற்றிலும் அமர்ந்து தியானம் செய்ய குட்டிக் குட்டியா அறைகள் என்று அழகாக இருக்கும். (பவுல் வர்ணனையைப் படித்து திட்டிராதீங்க, ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய உவமானம் அது!!ஹிஹி).

கோனியம்மன், தண்டுமாரியம்மன் ,காமாட்சியம்மன்,ஈச்சனாரி வினாயகர்,சாரதாம்பாள் இவர்களெல்லாம் டவுனுக்குள்ளேயே இருப்பவர்கள். கொஞ்சம் தள்ளிப்போனீங்கன்னா, அவினாசியில் இருக்கும் அவினாசிலிங்கீஸ்வரர்-கருணாம்பிகை அம்மன் கோவில். பரந்து விரிந்து கிடக்கும் இந்தக்கோயிலிலும் மிகவும் அழகான சிற்பங்கள் இருக்கு. தென்திருப்பதி, காரமடை, மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோயில் என்று பல்வேறு திருத்தலங்கள் இங்கே உண்டு. (மற்ற மதம் சார்ந்த வழிபாட்டுத்தலங்களும் உண்டு, எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லாததால் தெரியவில்லை)

பொழுதுபோக்கு- சுற்றுலா

பொழுதுபோக்கு என்று பார்த்தால் திரையரங்குகள், சிதம்பரம் பூங்கா, வேளாண் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பொட்டானிகல் கார்டன் இதெல்லாம் ஊருக்குள்ளேயே இருப்பவை.கோவையில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் ப்ளாக்தண்டர் என்ற வாட்டர் தீம்பார்க்,சிறுவாணி மெய்ன் ரோடில் ஒரு வாட்டர் தீம்பார்க்கும் இருக்கிறது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் வந்ததால் வைதேகி சுனை என்றே பெயர்பெற்ற சுனை, கோவை குற்றாலம் அருவி, பொன்னூத்து (இது எங்கவீட்டுப்பக்கதில் இருக்கும் பிக்னிக் ஸ்பாட்..அதிகம் பேருக்கு தெரியுமா என்று சந்தேகம்தான்) என்ற சுனை இதெல்லாம் இயற்கை அமைத்துத்திருக்கும் தீம்பார்க்குக்கள்! :) வருடமொருமுறை கோடை விடுமுறை சமயத்தில் சிறைச்சாலை மைதானத்தில் பொருட்காட்சி போடுவார்கள். சூப்பராக இருக்கும்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தொடக்கத்தில் இருக்கும் ஆனைகட்டி என்ற இடம்..அங்கே இருக்கும் வேதாத்ரி மகரிஷி அவர்களின் வாழும் கலைப்பயிற்சி மையம், பறவைகள் சரணாலயம் என்று இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும். கோவையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டரில் ஊட்டி..ஊட்டியின் புகழ் உங்களனைவருக்குமே தெரியும்,நான் சொல்லவேண்டியதில்லை.

கோவையிலிருந்து சிலமணி நேரப்பயணத்தில் வரும் திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயிலும், அற்புதமான நீர்வீழ்ச்சியும் அசத்தலான பிக்னிக் ஸ்பாட்ஸ்! அப்படியே கொஞ்சம் மேலே(!) போனம்னா வால்பாறை-பாலாஜி கோயில் என்று கூலான இடங்கள் நிறைய! பொள்ளாச்சி பக்கம் நான் அதிகம் போனதில்லை. கோபி-சத்தியமங்கலமெல்லாம் நிறைய சினிமா படம் எடுத்திருக்காங்க. கண்ணுக்கு விருந்தளிக்கும் வயல்வெளிகள்-தோப்புகள் நிறைய இருக்கும்.

ஷாப்பிங்
எல்லாத்தையும் சொல்லியாச்சு, நம்ம ஷாப்பிங் பற்றி சொல்லைன்னா எப்படி?ராஜேஸ்வரி ஹால், நல்லி சில்க்ஸ், மஹாவீர்ஸ், ஸ்ரீதேவி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், பி.எஸ்.ஆர்.சில்க்ஸ், எஸ்.கே.ஸி., போத்தீஸ் என்று பிரபலமான துணிக்கடைகள்..ஆண்டுக்கொருமுறை ஆடித்தள்ளுபடி என்ற பேரில் சிறப்பு விற்பனை!! டவுன்ஹால்-உக்கடம்-பெரியகடை வீதி -உப்புக் கிணறு சந்து -க்ராஸ்கட் ரோடு-ஆர்.எஸ்.புரம் D.B.ரோடு என்று ஷாப்பிங் செய்ய ப்ளாட்ஃபார்ம் கடை முதல் ப்ராண்டட் ஷோரூம் வரை கோவையில் கொட்டிக்கிடக்கும். டவுன்ஹாலில் நகைக்கடைகள் -பாத்திரக்கடைகள்-தினசரி மார்க்கெட் -உணவகங்கள் என்று எல்லாமே உண்டு.

பேருந்துகள்

எங்கூர்ல ப்ரைவேட் பஸ்கள் நிறைய இருக்கும். ஒவ்வொரு பஸ்சுக்கும் பேர் இருக்கும்..தங்கராஜா, சங்கீதா, S.T., அமுதசுரபி, தங்கமயில் இப்படிப் பலபெயர்கள்!! ப்ரைவேட் பஸ்னு இல்ல, கவர்மென்ட் பஸ் உட்பட எல்லா பஸ்ஸுமே பளபளன்னு புத்தம்புதுசா இருக்கும்.(சென்னைவாசிகள் மன்னிக்க, ஒரே ஒருமுறை சென்னைப் பேருந்தில் பயணம் செய்த அனுபவம் இந்த வரிகளை எழுதவைத்தது.:)) கிட்டத்தட்ட எல்லா பஸ்ஸிலும் ரேடியோ-டேப் ரெக்கார்டர் இருக்கும். எஃப்.எம். ரேடியோக்கள் வந்ததிலிருந்து என்னேரமும் பஸ்ஸில் ரேடியோப் பாடல்கள்தான். இவைதவிர அங்கங்கே கிராமங்களுக்குள் செல்ல மினிபஸ் உண்டு. மினி பஸ் கண்டக்டர்-ட்ரைவர்கள் எல்லாம் பயணிகளுடன் சொந்தபந்த ரேஞ்சுக்கு நட்பாக இருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட பஸ்ஸிலேயே செல்லும் கல்லூரி இளசுகள் பஸ் டே
என்ற பெயரில் கேக்வெட்டி, எல்லாருக்கும் ஸ்வீட்-காரம்-கேக் எல்லாம் கொடுத்து கலக்குவாங்க.

உணவு

கோவை என்றாலே நினைவுக்கு வருவது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா!! அப்புறம் அன்னபூர்ணா-கௌரிஷங்கர் ஹோட்டல். சுவையான உணவகங்களுக்கு இங்கே குறைவில்லை. அன்னலக்ஷ்மி என்ற உணவகம் உண்டு, இங்கே விரும்பிய உணவைச் சாப்பிட்டுவிட்டு நம் விரும்பிய தொகையை வைத்துவிட்டு வரலாம்.அந்தப்பணம் ஒரு சேவை நிறுவனத்துக்கு செல்வதாக சொல்வார்கள். அங்கே சேவைநோக்கில் பணிபுரிபவர்கள் எல்லாரும் வசதியான பெண்மணிகள் என்று சொல்வார்கள். எங்க வீட்டருகிலேயே அன்னலக்ஷ்மியின் ஒரு ப்ரான்ச் உண்டு, ஆனால் நான் அதிகம் சென்றதில்லை. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இருக்கும் லாலா கடையில் இனிப்பு காரம் சூப்பரா இருக்கும். பஸ் ஸ்டாப் தவறாமல் மஹாலக்ஷ்மி பேக்கரி (அ) அரோமா பேக்கரி இருக்கும். எந்நேரம் போனாலும் சுடச்சுட டீயும் தேங்காபன்னும் சாப்பிடலாம். :) அதுமட்டும் இல்லை, பல பேருந்து நிறுத்தங்களில் தள்ளுவண்டிகளில் சில்லி காலிஃப்ளவர்-சில்லி மஷ்ரூம்-பானிபூரி-பேல்பூரி விற்பாங்க பாருங்க, ஆஹாஆஆஆ!! அந்தசுவையை வார்த்தைகளில் சொல்ல முடியாது,சாப்பிட்டுத்தான் உணரணும்.

எழுத எழுத தீர மாட்டீங்குது எங்க ஊர்க்கதை!! நினைவுக்கு வந்தவற்றை எழுதியிருக்கிறேன். இந்தத் தொடர் பதிவைத் தொடரும்படி சிலரைக் கூப்பிட்டுடறேன்.

1.பாலாஜி சரவணா (கொஞ்சநாளா ஆளையே காணோம்..ஊருக்குப் போயிட்டீங்களா?? )
2.சித்ரா (நீங்க விடுமுறை சொல்லியிருப்பது தெரியும்,சீக்கிரம் லீவை முடித்துவிட்டு வந்து எழுதுங்க ஆச்சி!;) )
3. காம்ப்ளான் பாய் சிவா (ஏற்கனவே சொல்லிருக்கீங்க, ஸ்டில் தொடரலாம்..சிங்கப்பூரைப் பத்தி சொன்னாலும் சரி.)
4.அப்பாவி தங்கமணி( அம்மணி, என்ர பதிவுல விடுபட்டுப்போன பாயின்ட்டுகளை நீங்க கரெக்க்ட்டா புடிச்சிருவீங்கள்ல? அதுக்குத்தேன்!!!;) )
5.சாருஸ்ரீராஜ் (சாரு,எங்கே போனீங்க? பசங்களுக்கு லீவு விட்டப்புறம் பார்க்கவே முடியலை,வந்து தொடருங்க.)

இப்போதைக்கு இந்த 5 பேருடன் நிறுத்திக்கறேன், இன்னும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நினைவு வந்தால் கண்டிப்பாக இந்தப்பதிவைத் தொடருவேன்.ஜாக்கிரதை!!! ;)

சூடா டீயும் மஷ்ரூம் பஃப்ஸும் சாப்பிடுங்க. பஃப்ஸ் ரெசிப்பி அடுத்தபதிவில்! :)
நன்றி!

Tuesday, March 29, 2011

தொடர்பதிவு


பெண்எழுத்து-தொடர்பதிவுக்கு வானதி அழைத்திருந்தார்கள். அழைப்புக்கு நன்றி வானதி!

இதுவரை இந்தப்பதிவை எழுதியவர்கள் அனைவரும் நிறையக் கருத்துக்களை சொல்லிவிட்ட காரணத்தாலும், அடிக்கடி காலியாகிவிடும் என் மேல்மாடி இப்பவும் காலியாக இருப்பதாலும்..ஏதோ எனக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை எழுதுகிறேன். முதலாவதாக, நான் எழுத்துக்களை/பதிவர்களை பாலினவேறுபாட்டில் பார்ப்பதில்லை..எனக்குப் பிடித்த எழுத்துக்கள் எங்கிருந்தாலும் தேடிச்சென்று படிப்பேன். அதுபோலவே எனக்கு மனதில் தோன்றியதை இங்கே எழுதுவேன்.நான் எழுதுவது யார் மனத்தையும் புண்படுத்தாமல்,வருத்தப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்று இந்த வலைப்பூவைத் தொடங்கிய முதல் நாளில் முடிவெடுத்தேன்,அதை இன்று வரை கடைப்பிடிக்க முயன்றும் வருகிறேன்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல கருத்துக்களை எழுதவேண்டும்..நமது பதிவுகள் படிப்பவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்,அறிவுரை கூறவேண்டும்,வழிநடத்தவேண்டும். இவைதான் என் எழுத்துக்களின் நோக்கம் என்று இல்லாவிட்டாலும், படிப்பவர்களை வருத்தப்படவோ,கவலைப்படவோ வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. படிப்பவர்கள் வாய்விட்டு சிரிக்கவேண்டும், அட்லீஸ்ட் ஒரு சின்னப்புன்னகையுடனாவது என் பதிவைக் கடந்து சென்றால் மகிழ்ச்சி..(மற்ற பதிவர்கள் பற்றி இங்கே நான் கூறவில்லை,இது என் சொந்தக்கருத்து.)

இதையே தான் எல்லார் எழுத்துக்களிலும் எதிர்பார்க்கிறேன்,அது ஆணாகஇருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி. பெண்கள் ஒரு எல்லைக்கோட்டுக்குள் எழுதவேண்டும்,ஆண்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது எனக்கு உடன்பாடில்லை..யாராக இருந்தாலும் நாகரீகமாக எழுதவேண்டும்,அவ்வளவுதான்! இது என் எதிர்பார்ப்பு.எதிர்பார்ப்புக்கு அளவுகள் இருக்கின்றதா என்ன?!

புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்!

சொந்த ஆகாயம் வேண்டும்..
ஜோடி நிலவொன்று வேண்டும்..
நெற்றி வேர்க்கின்ற போது- அந்த
நிலவில் மழை பெய்ய வேண்டும்!

வண்ண விண்மீன்கள் வேண்டும்..
மலர்கள் வாய் பேச வேண்டும்..
வண்டு உட்காரும் பூ மேலே – நான்
வந்து உட்காரும் வரம் வேண்டும்!

கடவுளே, கொஞ்சம் வழிவிடு..- உன்
அருகிலே ஒரு இடம் கொடு..
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு..
பூமியில் சில மாறுதல் தனை வர விடு!

யுத்தம் காணாத பூமி – ஒரு
சத்தம் இல்லாமல் வேண்டும்.
மரணம் காணாத மனித இனம் – இந்த
மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்!

பஞ்சம் பசி போக்க வேண்டும்..
பாலைவனம் பூக்க வேண்டும்..
சாந்தி,சாந்தி என்ற சங்கீதம் – சுகம்
ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்!

போனவை அட,போகட்டும்..
வந்தவை இனி வாழட்டும்..
தேசத்தின் எல்லைக் கோடுகள்..அவை தீரட்டும்..
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்!

வைரமுத்து அவர்களின் இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அது போலத்தான் என் எதிர்பார்ப்பும்! இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் என் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று நம்புகிறேன். கடைசியாக ஒன்றே ஒன்று..நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்,
"You are responsible for What You Are!!!!!!"
~~~~

வழக்கம்போல பொறுமையாக இதைப்படித்தமைக்கு என் நன்றிகள்!

மேத்தி புலாவ்-சப்பாத்தி-ஸ்பினாச்,பாசிப்பருப்பு பொரியல்-சோயாபீன்ஸ் குருமா-ஆரஞ்சுப் பழம்....சாப்பிட்டுட்டு போங்க! :))))))))))))))

Wednesday, March 9, 2011

கோன் தோசை & கொள்ளு இட்லிப்பொடி

-----------டைட்டிலையும்,போட்டோவையும் பார்த்தவுடனே இது சமையல்குறிப்பு ஒன்லி என்று ஓடாமல், ப்ளாகுக்கு வந்து முழுப்பதிவையும் படியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். :)
பாலாஜி சரவண கணேஷ் சீதாராமன்...(அப்பாடி,பேரை சொல்லி முடிச்சுட்டேன் பாலாஜி,ஒரு கப் ஜில் வாட்டர் ப்ளீஸ்! :) ) ஒரு தொடர் பதிவுக்கு என்னை கூப்பிட்டிருக்கிறார். பெயரின் பின்னால் ஒரு குட்டிக்கதை வைத்திருக்கும் ஆட்களுக்கான ஸ்பெஷல் சுவாரசியமான தொடர்பதிவு,கோன் தோசை & கொள்ளுப்பொடிக்கப்புறம் தொடர்கிறது.-------------

எனக்கும் பொடிவகைகளுக்கும் அவ்வளவா ஒத்துவராது,அப்படி இருந்தும் இட்லிப்பொடி மட்டும் நான் வீட்டிலேயே அரைத்துக்கொள்வதும் உங்க எல்லாருக்குமே ஏற்கனவே தெரிந்தவிஷயம்தான். :) இந்த முறை பொடிக்கு வறுக்கும்போது கொள்ளு இட்லிப்பொடி அரைக்கலாம்னு ஒரு ஐடியா வந்ததால், வழக்கமாக வறுக்கும் பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் கொள்ளையும் சேர்த்து வறுத்து அரைத்தேன். (அதென்ன வழக்கமா சேர்க்கறது..அளவு சொல்லக்கூடாதா என்பவர்கள் இங்கே க்ளிக்குங்க.)

கொள்ளு இட்லிப்பொடியில் எள்ளு போடுவாங்களான்னு டெக்னிகல் கேள்வி எல்லாம் கமெண்ட்டிலே கேட்டுடாதீங்கன்னு இப்பவே கேட்டுக்கொள்கிறேன். ஹிஹி!!

குறிஞ்சி கதம்பத்தில் கோன் தோசை பார்த்ததும் முயற்சித்துப்பார்த்த கோன் தோசையுடன் கொள்ளு இட்லிப்பொடி...(தோசை ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்குங்க)

~~~~~
இப்ப அந்த ஸ்வாரஸ்யமான தொடர் பதிவுக்கு வருவோம். வித்யாசமான புனைப்பெயர்கள் (உ.ம். சந்தனா,அதிரா,தக்குடு,என்றென்றும் 16)உள்ளவங்க அந்தப்பெயரைத் தேர்ந்தெடுத்ததுக்கான காரணத்தை விவரிக்க ஒரு வாய்ப்பாக இந்தத் தொடர் பதிவு இருக்கும். பாலாஜி மாதிரி 3 இன் 1 பேருள்ளவர்களுக்கும் இது நல்லதொரு வாய்ப்பு. என்னைப் பொறுத்தவரை இது தொடர்பாகச் சொல்வதற்கு ஒரே ஒரு விஷயம்தான் இருக்கு.என்னதுன்னா, மகேஸ்வரி என்ற இந்தப்பெயர் நானே செலக்ட் பண்ணிகிட்டதாக்கும்! :)

இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக :- பெயர்க்காரணம்

இடம்: எங்க வீடுதேன்.

பொருள்: மகேஸ்வரி - சிவனின் துணைவியார் பார்வதியின் பெயர்களில் ஒன்று என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த விளக்கம். பெயர்க்காரணம்னு கூகுளாண்டவர்கிட்ட கேட்டேன்,அவர் கொட்டிய தகவல் குவியல் இதோ.

விளக்கம்: வீட்டிலே கடைக்குட்டியான எனக்கு பேர் வைக்க ஒரு வித்யாசமான முறையை கையாண்டிருக்காங்க. என் அண்ணன்(பெரியம்மா பையன்,அவர் இப்பொழுது இல்லை.:( ) சொன்ன ஐடியாவின்படி, நிறையப் பெயர்களை சீட்டுகளில் எழுத்தி சுருட்டிப்போட்டு, என்னை எடுக்கவைத்தார்களாம். 3 மாசக்குழந்தைக்கு எப்படி பேரெல்லாம் செலக்ட் பண்ணத்தெரியும்,நீங்களே சொல்லுங்க??!! கையைக் காலை உதைக்கும்போது எந்த சீட்டில் என் கை பட்டதோ அதான் நான் தேர்ந்தெடுத்த பெயர்னு வைச்சிட்டாங்க. இப்படியாக எனக்கு நானே வைத்துக்கொண்டதுதான் இந்தப்பெயர்.

வீட்டில் எல்லாரும் மகி-ன்னு கூப்பிடுவாங்க. கல்யாணத்துக்குப் பத்திரிக்கை அடிக்கும்போது என்னவர் அதே போல அடித்துவிட்டார்.அப்ப இருந்தே கிட்டத்தட்ட மகி என்பதே என் அஃபிஷியல் நேம்(!!?) ஆகிவிட்டது. யு.எஸ். வந்து இந்த ஊர்மக்கள் என் பேரைக் கடித்துக்குதறுவது பொறுக்க மாட்டாம, பேரை சொன்னதுமே, நானே "கால் மீ மகி"ன்னு சொல்லிடுவேன்.

ஸ்கூல்ல படிக்கும்போதெல்லாம் நம்ம பெயர் மாடர்னா இல்லையேன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கும்,இப்பல்லாம் நினைத்தா சிரிப்பா இருக்கு. விவரம் தெரியாமல் செய்ததுதான்னாலும், நானே செலக்ட் பண்ணிகிட்ட பேர் இதுன்னு கொஞ்சம் பெருமையாத்தான் இருக்கு.:)

பெயர்களைப்பத்தி யோசிக்கும்போது ஞாபகம் வந்த சில நிகழ்வுகள்... கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு நண்பனின் பெயர் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடில..அவர் பெயர் 'இளங்கிளி'!!! முதலில் கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் போகப்போக பழகிட்டது. கிளி-ன்னுதான் கூப்பிடுவோம். :) பணிபுரிகையில் சக ஊழியர் ஒருவர் பெயர் 'செஞ்சுடர் வண்ணன்'.அவங்க தம்பி பெயர் 'கார்முகில் வண்ணன்'. சுத்தமான தமிழ்ப்பெயர்களைக் கேக்கும்போதே காதுக்கு இனிமையாத்தான் இருக்கு,இல்லையா? :)

இந்தத் தொடர் பதிவுக்கு யாரையெல்லாம் சிக்கவைக்கப்போறேன்னா....முன்னாலயே ஒரு நாலு பேர் பேரை சொல்லியிருக்கேன்.இன்னொருவரையும் சேர்த்து,
1.சந்தனா
2.அதிரா
3.தக்குடு
4.என்றென்றும் 16
5.குறிஞ்சி ------ ஐந்து பேராக இந்தத் பதிவைத் தொடருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்க புனைப்பெயருக்கான காரணத்தை சொல்லுங்க,அப்படியே உங்க சொந்தப்பேரையும் சொல்லிடுங்க.;)
நன்றி!

Wednesday, December 22, 2010

டாய் ஸ்டோரி

ஹாய்,ஹாய்,ஹாய்!! புதிய பதிவைப் பார்த்ததும் ஆவலாய் ஓடிவந்து படிக்கும் வாசக நேயர்களுக்கு எங்களின் அன்பான வணக்கம்!

அப்புச்சி(grandpa),குட்டி(kutti),மோக்லி(mougli), அப்பு(appu),டெட்(ted),ட்வீட்டி(tweetty),
க்ரி
ஸ்லி(grizzly), நாங்க எல்லாரும் மகிஅக்கா வீட்டுல இருக்கோம். (போட்டோல லெஃப்ட் டு ரைட் பாருங்க).

2 வருஷத்துக்கும் மேல அக்காகூடவே இருக்கறதால எங்களுக்கும் ப்ளாகில் எழுதும் பைத்தியம் தொத்திகிச்சு. அக்கா எங்கே போயிட்டாங்கன்னு கேக்கறீங்களா? ஷீ இஸ் பிஸி இன் கிச்சன்..அவிங்க வரதுக்குள்ள நைஸா ஓடியாந்திருக்கோம். :)


விஷயம் என்னான்னா காயத்ரி அக்காவும்,அகிலா அக்காவும் மகி அக்காவ ஒரு தொடர்பதிவு எழுதச்சொல்லிருக்காங்க. உங்களுக்கே தெரியும்,அக்கா கொஞ்சம் கூச்ச சுபாவின்னு.அதனால அக்காவைப் பத்தி சொல்ல நாங்க வந்திருக்கோம். காயத்ரி அக்கா என்ன சொல்லிருக்காங்கன்னா,மகி அக்காவைப் பத்தி 7 விஷயம் சொல்லணுமாம்.காதை கொஞ்சம் தீட்டிகிட்டு கேளுங்க! :)

Ted:மகி அக்கா ரெம்ப நல்லவங்க,வல்லவிங்க! (வல்லவி=வல்லவனுக்கு பெண்பால்)
அப்பு:மகி அக்கா ரெம்ப அழகா(!!) இருப்பாங்க!
அப்புச்சி:மகி இயற்கைய ரொம்ப அழகா வர்ணிக்கும்!
குட்டி:மகி அக்கா சமையல்ல பலசமயம் புலி,சில சமயம் எலி! ஹிஹி!
க்ரிஸ்லி:மகி அக்கா போட்டோ எடுக்கறதுல எப்பவுமே புலி!
மோக்லி:மகி அக்கா ஒரு மல்ட்டிபிள் பர்சனாலிட்டி..அவிங்க எழுதறதைப் பாத்து,நேர்லயும் இப்படிதான் பேசுவாங்கன்னு கற்பனை பண்ணிருந்தீங்கன்னா,நீங்க ரெம்ப பாவம்! எழுதும்போது மட்டும்,அவங்க மனதில் ஒரு ஓரமா தூங்கிட்டு இருக்க ஸ்ப்ளிட் பர்ஸனாலிட்டி சுறுசுறுப்பா எழுதும். மத்த டைமெல்லாம் அக்கா ரெம்ப அமைதி!
ட்வீட்டி:மகி அக்காக்கு மஞ்சக்கலர் புடிக்கும்,நத்தை,பறக்கிற குருவி இதெல்லாம் ரசிக்கற அழகான ரசனை இருக்குது.

அடுத்து அகிலாக்கா கொஸ்டீன்ஸ் குடுத்து ஆன்ஸர்ஸ் கேக்கிறாங்கோ.அதெல்லாம் பார்த்தா எக்ஸாம் எழுதற எபெக்ட் வருதா,ஸோ யாரையாச்சும் பாத்து காப்பி அடிச்சுடலாம்ணு நாங்கள்லாம் ப்ளான் பண்ணம். இங்கே அக்காவே கொஞ்சம் கொஸ்டின்ஸுக்கு ஆன்ஸர் பண்ணிருந்தாங்கோ..அதையும் காப்பி அடிச்சி,அவிங்க மெய்ல் பாக்ஸ்ல ட்ராப்ட்-ல வச்சிருந்த மீதி ஆன்ஸர்ஸும் காப்பி அடிச்சி இங்கே பேஸ்ட் பண்ணிட்டம்.:)

1. Are you a vegetarian or have you thought of being one?
In-spite of Born, brought-up and married in a non-vegetarian family, I am an egg eating Vegetarian.

2. Who inspired you to cook?
I started to cook all 3 meals by myself only after the marriage. Hunger was the inspiration to cook! haahaa!!! Okay,don't get tensed! My mom,m-in-law and my beloved hubby are my initial inspirations,and then the inspiration list expanded with my friends and Internet.

3. How do you celebrate Christmas or a favourite festival of your choice?
We don't do much on Christmas day..Once we forgot to buy milk, and somehow managed to get it in a gas station. Its an unforgettable experience about Christmas!:)
My favourite festival is Diwali..I would love to celebrate it with everybody in my family. Of course with lot of fireworks and sweets.

4.Do you prefer to celebrate New Year's Eve with friends and/or family to ring in the New Year quietly and privately at home?
Back home,New Years were quite and private..I always get a new dress for the new year. Since it comes in between the month of Markazhi, I used to go to the temple early in the morning...those are good old days!! Now we are going to see fireworks and having get-to-gathers with the friends around.

5.If someone were to ask you to bring a dessert to a party,what would you bring? Store-bought or home made?If you were to make at home,what would you make?
I never liked the store bought (Indian) desserts here,so will make it at home only..the choices will be gulab-jamoon,kesari,ras malai,or some cakes.

6.How will you celebrate your next birthday?
Haven't thought about it yet! Like last year it will be quite and private.:) We will go to the temple and have dinner outside.

7.Do you have a New Year resolution and will you be sticking to it?
Nope..I haven't had any resolutions so far.Its better not to take it than brake it.

இவ்ளோதாங்க டைப் பண்ணி வச்சிருந்தாங்கோ.ஆன்ஸர்ஸ் எல்லாம் எப்பூடி இருக்கு? சூப்பரா இருக்குல்ல? மகி அக்கா ஆல்வேஸ் ராக்ஸ்,யூ நோ??

இவ்ளோ நேரமா போராடி(!!) அக்கா பண்ணிய குக்கீ!! எல்லாரும்*** சுத்தி,கடப்பாரை,வெடிமருந்து இதெல்லாம் ரெடியா எடுத்துட்டு பிஸ்கட் சாப்புட வாங்கோஓஓஓஓ! :) :) :)))))

மகி அக்கா கொடுமை போதாதுன்னு இப்ப எங்க கொடுமையையும் பொறுமையா படிச்சதுக்கு டாங்க்ஸ்!

ஜெய்லானி
அண்ணா

அப்பாவி தங்கமணியக்கா
என்றென்றும் 16-பானுஅக்கா
பாலாஜி சரவணன் அண்ணா
வானதியக்கா
சிவா அண்ணா
ஜலீலா ஆன்டி
ஸாதிகா ஆன்டி
(ஆன்டீஸ்,கோபப்படாதீங்க,நீங்க மகியக்காவுக்குதான் அக்கா,எங்களுக்கு ஆன்ட்டி!ஹிஹி)
இவங்களை எல்லாம் இந்தப் பதிவைத் தொடருமாறு அன்போடு கேட்டுக்கொண்டு,அட்வான்ஸா இந்த அவார்டையும் வழங்கிவிட்டு விடைபெறுகிறோம்.
இப்ப நம்மள்லாம் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டமல்ல?உங்கள விட்டுட்டு எங்களால இருக்க முடியாது,இனிமேல் நாங்க அடிக்கடி வருவோம்,(ஜாக்கிரதை!) நன்றி!
_()_ _()_ _()_

**** அந்த இடத்தில கொஞ்சம் ஸ்பேஸ் வெள்ளையா இருக்கும்,அதை ஹைலைட் பண்ணிப் படியுங்கோ. ஜெய் அண்ணாவோட கழுக்குக்கண்ணுக்கே இது தெரிலன்னா,வேற யாருக்குமே தெரியாது,அதனாலே சஸ்பென்ஸை உடைச்சாச்ச்ச்ச்ச்ச்ச்! :)

Saturday, December 4, 2010

எனக்குப் பிடித்த பாடல்கள்..


ஆசியா அக்கா அழைத்த தொடர் பதிவுக்காக எனக்குப் பிடித்த பத்துப் பாடல்களைத் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பாடல் நெஞ்சமெல்லாம் நீயே படத்திலிருந்து..படம் பார்த்ததில்லை,ஆனால் அடிக்கடி யூட்யூப்-ல இருந்து பாட்டை கேட்பேன்.வாணி ஜெயராமின் குரலில்,இதோ..நீங்களும் கேட்டுப் பாருங்க!



அடுத்த பாடல் அக்னிநட்சத்திரம் படத்தில்இருந்து எஸ்.ஜானகி-யின் குரலில்.
இந்தப் பாடல் என் அக்காவிற்கு மிகவும் பிடித்த பாடல். அஃகோர்ஸ்,எனக்கும் பிடிக்கும்,கேளுங்க,உங்களுக்கும் பிடிக்கும்.

"நான் வானவில்லை வேண்டினால் ஓர் விலை கொடுத்து வாங்குவேன்,
வெண் மேகக் கூட்டம் யாவையும் என் மெத்தையாக்கித் தூங்குவேன்!"...ஹ்ம்ம்..நினைக்கவே சுகமா இருக்குல்ல?:)

http://www.youtube.com/watch?v=h4-KtACquDM


மெல்லத் திறந்தது கதவு-இந்தப் படத்தில் இருந்து சித்ராவின் குரலில் அடுத்த பாடல்..இது எங்க ஊரில எடுத்த படம்..அதனால கொஞ்சம் ஸ்பெஷல் பாட்டு.:) இளையராஜாவின் இசையும்,சித்ராவின் குரலும்,ராதாவின் அழகுமா அமர்க்களமா இருக்கும்.



மே மாதம் படத்திலிருந்து மார்கழிப் பூவே!
பி.சி.ஸ்ரீராமின் கேமராவும்,ரஹ்மானின் இசையும், கதாநாயகியின் டான்ஸும் அருமையாக இருக்கும். நாங்க ட்ரிப் போகும்போது தவறாமல் கேட்கும் பாடல் இது.



அனுராதா ஸ்ரீராமின் அசத்தலான குரலில் அடுத்த பாட்டு.தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் சக்கைப்போடு போட்ட பாடல்..மாளவிகாவின் டான்ஸும்,தேவா-வின் இசையுமா ஒரு சூப்பர் குத்துப்பாட்டு!:)



ஸ்வர்ணலாதாவின் குரல்-புல்லாங்குழலின் இசை இவையிரண்டும் அழகாகக் கலந்து வரும் ஒரு பாடல்,அலைபாயுதே-விலிருந்து.



கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலிருந்து,கண்ணாமூச்சி ஏனடா...சித்ராவின் குரலும்,ஐஸ்வர்யா ராயின் நடனமும்,அழகு அஜீத்தும்(!!), மம்மூட்டியும்...எதை சொல்ல,எதை விட? நீங்களே பாருங்க.



பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில்,மின்னலே-விலிருந்து வசீகரா..வீடியோ அவ்வளவா பிடிக்கலை எனக்கு,ஆனா தாமரையின் வரிகளும்,ஜெயஸ்ரீ அவர்களின் வசீகரமான குரலும் மிகவும் பிடிக்கும்.
http://www.youtube.com/watch?v=1NhKaWr3Mx4&feature=fvst

'நானும் ஒரு பெண்' படத்திலிருந்து 'கண்ணா,கருமை நிறக் கண்ணா'.. உருக்கமான ஒரு பாடல்..புறக்கணிப்பும்,அவமானமும் அடையும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அழகாகப் படம்பிடித்திருப்பார்கள்..
http://www.youtube.com/watch?v=bopSea-7uqg

இதுவரை சொன்ன பாடல்கள் எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள்தான்,ஆனால், இந்தப்பாடல் என்னை மிகவும் பாதித்த,கவர்ந்த,மிகவும் பிடித்த...என்ன சொல்வதுன்னு தெரில,வார்த்தைகள் கிடைக்க மாட்டேன்னுது!

கண்ணதாசனின் வரிகள்,சித்தி படத்திலிருந்து, பி.சுசீலாவின் குரலில் தாலாட்டாய் வரும் அற்புதமான பாடல்.

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே!
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே!

லிங்க் தேடினேன்,கிடைக்கலை..ஒலி வடிவம் கிடைத்தது..இந்த லிங்கில் போய் கேட்டுப்பாருங்க.மனதைத் தொடும் ஒரு பாடல்...கேட்டுப் பாருங்க.

http://www.raaga.com/player4/?id=231938&mode=100&rand=0.10857778466527834

இந்த பத்துப் பாடல்கள் இப்போது நினைவு வந்தவை..இன்னும் பல பாடல்கள் இருக்கு..அப்பப்ப சொல்லறேன்.:)

இந்தத் தொடர் பதிவைத் தொடர சந்தனாவை அழைக்கிறேன்.சந்தனா மட்டும்தான்னு இல்ல,விருப்பம் இருக்கும் அனைவரும் தொடருங்கள். படிக்கும் அனைவருக்கும் நல்ல பாடல்களை ரீப்ரெஷ் பண்ண ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.ஆங்கிலத்தில் எழுதும் பதிவர்களும் தொடரலாம். தொடர்வீங்களா?? :)

Monday, September 20, 2010

தொடர் பதிவு: திரும்பிப் பார்க்கிறேன்...

பல நாட்களாக வலைப்பூக்களில் உலவிக்கொண்டிருக்கும் தொடர்பதிவுகளில் ஒன்று பதிவுலகில் இதுவரை கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் இந்தத் தொடர்பதிவு.இந்தச் சங்கிலியில் விஜிசத்யா அவர்கள் என்னையும் இணைத்ததை அடுத்து...தொடர்கிறேன்!:)

1.வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்



மகி










Mahi







2.அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
ஆமாங்க..அது என் உண்மைப்பெயரின் சுருக்கம்..என் முழுப்பெயர் ஜஸ்ட் ஐந்தெழுத்துதாங்க.அது நீளமா இருக்குன்னோ என்னவோ,சிறுவயது முதலே வீட்டில் இப்படிதான் கூப்பிடுவாங்க.அதனால் இங்கும் இதே பெயரிலேயே தொடர்கிறேன்.

3
.நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...
இதைப்பற்றி சொல்வதுன்னா,ஒரு குறுநாவலே எழுதலாம்.:) என்னால் முடிந்த அளவு சுருக்கிஎழுதுகிறேன்.

கையில் ஒரு டிஜிட்டல் கேமராவும், சமையல்ல ஆர்வமும்,ஏராளமான நேரமும் கிடைத்த காலங்கள்.நானும் சமைக்கிறேன்னு எனக்கே நம்பமுடியாம(!) ப்ரூஃபுக்காக (இது கொஞ்சம் ஓவராவே இருக்கோ?;) ) போட்டோ எடுத்து வைக்க ஆரம்பிச்சேன்.அப்பொழுது என் கணவரின் ஆபீஸும் வீட்டுப்பக்கத்திலேயே இருந்ததால்,ஒரு சிலநாட்கள் லன்ச்சுக்கு வீட்டுக்கு வருவார். ஒவ்வொரு நாள் வரேன்னு சொல்லிட்டு வரவே மாட்டாருங்க.சமைச்சு வச்சு, மண்டை காஞ்சு போய் உக்காந்திருப்பேன்.இவர் லன்ச்சுக்கு வராம இருக்க நாட்கள்ல சமைத்த உணவை அழகா டேபிள்ல அடுக்கி, போட்டோ எடுத்து அவருக்கு மெய்ல் பண்ணுவேன்.இதோ இதுதான் அப்படி முதன்முதலா அவருக்கு அனுப்பிய மெனு.

அதே வேகத்தில எடுத்த மற்றொரு நாளின் லன்ச்..


இந்த ஐடியா நல்லாவே வொர்க் அவுட் ஆச்சு. போட்டோவைப் பார்த்த உடனே வேலை இருந்தாலும் முடிச்சிட்டு உடனே சாப்பிட வருவாரு. அப்படி எடுத்த போட்டோஸ் எல்லாம்,மஹி'ஸ் கிச்சன் என்ற பேர்ல பிக்காசால அப்லோட் பண்ணி,என் நண்பர்களுக்கு,குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளவும் ஆரம்பிச்சேன்.

இணையத்தில உலவும்போது பல குக்கிங் ப்ளாக்ஸ்-ஐ பார்ப்பேன். இந்தத் தளங்களைப் பார்த்துப் பார்த்து நாமும் ஒரு ப்ளாக் ஓப்பன் செய்தால் என்னன்னு தோணியது.என் கம்ப்யூட்டர் அறிவு
ப்ரிலிமினரி லெவல்தான்.இருந்தாலும் முயற்சித்துப்பார்க்கலாம்னு wordpress-ல ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணேன்.அதைப்பார்க்க விரும்பினால் இங்கே க்ளிக்குங்க. வேணாம்னா அப்படியே தொடருங்க.

அந்நேரம்தான் யூட்யூப்ல ஏதோ தேடுகையில் தமிழ்குடும்பம்.காம் கண்ணில பட்டுது. ஒரு ரெசிப்பி அனுப்பி சில மணி நேரங்கள்லயே பப்ளிஷ் பண்ணாங்க,அதுக்கு கமெண்ட்ஸ் வேற வேகமா வந்தது. எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு.இவ்வளவு சிம்பிளா இருக்கே..மெய்ல்-ல டைப் பண்ணி,போட்டோஸ் அட்டாச் பண்ணி அனுப்பினாலே போதுமே,அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு(!!) ப்ளாக்ல போடணும்? இங்கேயே அனுப்புவோம்னு அனுப்ப ஆரம்பித்தேன்.மெல்ல மெல்ல அறுசுவை.காம் அறிமுகமானது. அதிலும் உறுப்பினராகி, செல்லங்கள் என்ற த்ரெட்ல என் வீட்டுச் செல்லங்கள் பற்றி சொல்ல ஆரம்பிச்சேன். நட்பு வட்டமும் விரிவடைந்தது.

இதுக்கிடையிலே கூகுள் ப்ளாகர்-லயும் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு,அதுவும் தூங்கிட்டு இருந்தது.இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிறைய ஆட்கள் தனித்தனியே வலைப்பூக்கள் ஆரம்பிச்சாங்க. எனக்கும் தைரியம் வந்து பழைய அக்கவுண்ட்டை தூசு தட்டி எடுத்தேன். அதிலே ஒரு பதிவும் போட்டபின்னர் பார்த்தா,போட்டோஸ் சேர்க்க முடில.ஸ்பேஸ் இல்ல. (என்ன ஒரு நேரம் பாருங்க!) இந்த முறை விடாது கருப்பு-ரேஞ்சுல இன்னொரு அக்கவுண்ட்ல இருந்து இந்த ப்ளாகை போன பொங்கலன்று பொங்க வச்சுட்டேன்.:) [அப்ப ஸ்பேஸ் இல்லாத ப்ளாக் என்னாச்சுன்னு கேக்கறீங்களா? அதுவும் இருக்கு,Mahi's kitchen என்ற பெயரிலே,இந்த ப்ளாகின் டாப் ரைட் கார்னர்ல பாருங்க.]

4.
உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
எதுவுமே செய்யலைங்க.ப்ளாகிங் என் பொழுதுபோக்கு.எனக்குப் பிடித்த,நான்ரசித்த விஷயங்களை, ரசித்துச் செய்த சமையலை,சென்று வந்த பயணங்களின் இனிமையான நினைவுகளை சேமித்து வைக்க இது ஒரு இடம்,அவ்வளவே.என் வலைப்பதிவு பிரபலமாகவேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இன்னமும் வரமாட்டேனென்கிறது.இந்த வலைப்பூவில் உலவுபவர்கள்,முகம் சுளிக்காமல் வாய் விட்டு சிரித்துட்டு,இங்கே செலவிட்ட நிமிடங்கள் வீணாகவில்லை என்ற திருப்தியுடன் சென்றால் அதுவே போதும்.

5.
வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆம்..பகிர்ந்திருக்கிறேன்.பெரும்பாலும் அவை காமெடிப் பதிவுகளே..என் எழுத்துத் திறமையைப் பரிசோதிக்கன்னு வச்சுக்கோங்களேன்.:) கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் எழுத முடியுமா என்று முயன்று பார்த்திருக்கிறேன்/பார்த்துக்கொண்டிருக்கிறேன்/பார்ப்பேன்.:) டெஸ்ட்ல பாஸ் பண்ணேனா,இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லணும்.சாம்பிளுக்கு ஒரு சில பதிவுகள்..
பண்டோரா முறுக்கு
பூப்போல இட்லி-புதினா சட்னி: பகுதி-1,பகுதி-2,பகுதி-3
வீட் ப்ரெட் ஹல்வா
விளைவுகள்னு பாத்தா, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விளைவுகள் எதுவுமில்லை.சிறு-சிறு நிகழ்வுகளை அவ்வப்பொழுது மறந்துடுவேன்.நினைவு வைத்துக்கொள்வதில்லை.

6.நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
101 சதவீதம் பொழுதுபோக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன்.

7.
நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஏற்கனவே சொன்னமாதிரி,ஆரம்பித்து அம்போ-ன்னு விட்ட ப்ளாகுகளை கணக்கிலெடுத்தால் என்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகள் இருக்கு. அவற்றில் ஆரோக்கியமா,ஆக்டிவா பூத்துக் குலுங்குவது இந்த தமிழ் வலைப்பூ ஒன்றுதான்.

8.
மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
மற்ற பதிவர்கள் மீது கோபம்-பொறாமையெல்லாம் இல்லைங்க.ஒரொருவரின் தளங்கள்,ஆர்வம்,ரசனைகள் ஒவ்வொரு மாதிரி. என் விருப்பங்கள்,எண்ணங்கள் வேறுபடலாம். அதனால் நீங்க கேட்ட உணர்வுகளுக்கு இடமில்ல.

9.
உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
இணையத்தில் எனக்குக் கிடைத்த தோழமைகள்தான் முதலில் கருத்து சொல்லியிருக்காங்க.அவரைப்பற்றி நானே சொல்வதைவிட,கொஞ்சம் வெயிட் பண்ணினீங்கன்னா அவங்களே சொல்லுவாங்க.. :):):)ஏன்னா..இந்தத் தொடர்பதிவைத் தொடரப்போவது அவங்களேதான்.


10.
கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.
அதிகமா சொல்வதற்கு ஒன்றும் இல்லை..யார் மனதையும் என் வார்த்தைகள் புண்படுத்தக்கூடாது என்று நினைத்து அதே போல இருக்க முயற்சிக்கிறேன்.
~~~~~~~~~~~~~~

வழக்கம்போல,
பொறுமையா இதுவரை படித்த அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லிட்டு, படிச்ச களைப்பைப் போக்க,சூடா..மொறு-மொறு வடை!

இந்தத்தொடரை தொடர இருப்பது அன்புத்தோழி




வானதி





வானதி,சீக்கிரமா வடையை ருசித்துட்டு,சட்டுப்புட்டுனு தொடருங்க..நன்றி!

Tuesday, August 17, 2010

கடவுளும் நானும்..


இது அப்பாவி தங்கமணி அழைத்த தொடர்பதிவுக்காக...

அனேகமா புவனா கூப்பிட்ட லிஸ்ட்ல கடைசியா எழுதுவது நானாகத்தான் இருக்கணும்..மற்றவங்க எல்லாரும் எழுதிட்டாங்க.:)
~~~
கடவுளும் நானும்...
எனக்கு கடவுள் நம்பிக்கை நிறையவே உண்டு.பெண்தெய்வங்கள் அனைவரும் எனக்கு மிகப்பிடித்தமானவர்கள்.காமாட்சி,மீனாட்சி,சமயபுரத்தம்மன்,கோனியம்மன்,எல்லைமாகாளி,பத்ரகாளி,தண்டுமாரி,கருணாம்பிகை,விஸ்வநாயகி,பகவதி,அங்காளபரமேஸ்வரி இப்படி நீண்டுகொண்டே போகும் லிஸ்ட் உண்டு என்னிடம்.கோவையில் இருந்தவரை வெள்ளிக்கிழமை தவறாமல் கோனியம்மனைப் பார்க்கச்செல்வது வழக்கம்.

பள்ளிப்படிப்பு முடியும்வரை எனக்கு மற்ற மதத்தோழிகள் யாருமே இல்லை.அதன்பின்னர் கிறிஸ்தவக்கல்லூரியில் படித்ததால் ஜீஸஸ் கொஞ்சம் பரிச்சயமானார். முஸ்லிம் தோழிகள் கடந்த ஒருவருடமாகத்தான் தெரியும்,அதனால் அல்லா-வை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.என்ன பெயர் சொன்னால் என்ன? நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது..அதற்கு அவரவர் விருப்பப்படி உருவங்களும் பெயர்களும் கொடுத்து, வசதிப்படி வணங்குகிறோம்.அவ்வளவுதான்.

எனக்கு இது வேண்டும்,அது வேண்டும் என்று கடவுளைக் கேட்டது ஒரு காலம்..இப்பொழுதெல்லாம், "என்னை சரியான வழியில் வழிநடத்து..வரும் பிரச்சனைகளைத் தாங்கும் சக்தியை,அவற்றை கடந்து செல்லும் வலிமையைக் கொடு" என்று கேட்பதோடு என் ப்ரார்த்தனைகள் முடிவடைந்துவிடுகிறது.

இந்தப்பதிவில் என் மனதில் உறைந்த சில நினைவுகளை பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.(மொக்கை ஆரம்பம். விரும்புவோர் தொடரலாம்.:))
~~~
நான் இளங்கலை படித்தது ஒரு கிறிஸ்தவக்கல்லூரி..அதன்பின்னர் அந்த மூன்று வருஷங்களும் கல்லூரியிரிலிருக்கும் chaple-க்கு போவது, அருகிலிருக்கும் புலியகுளம் அந்தோணியார் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் செல்வது என்று ஆனது.நீளமான க்யூவில் நின்று கடவுளர்களைத் தொட்டு ப்ரேயர் செய்தது..அந்தோணியார் பாதத்திலிருந்த உப்பு-மிளகு பிரசாதத்தை ருசித்தது, அங்கே தரும் தேங்காயெண்ணெய் பிரசாதம் வாங்கியது என்று பழைய நினைவுகள் அலைமோதுகிறது. கோவிலிலிருக்கும் ஜீஸஸை இன்றும் என் மனக்கண்ணில் காணமுடிகிறது.நான் செல்லும் மற்ற கோயில்களுக்கும் அந்தோணியார் கோயிலுக்கும் பெரிய வித்யாசம் தோன்றவில்லை.

அப்பொழுது புலியகுளத்தில் ஒரு பெரீய்ய பிள்ளையார் சிலை வைத்து ஒரு கோயில் கட்டினார்கள்.ஈச்சனாரி விநாயகர்தான் அதுவரை கோவையிலேயே பெரிய ஆளாய் இருந்தார். ஆனால் புலியகுளம் விநாயகர் அவரை விடப் பெரியவர். பிரம்மாண்டமான உருவம்..மிகவும் லட்சணமாக இருப்பார். விவரிப்பதற்கு வார்த்தைகள் வரவில்லை..அது ஒரு அனுபவம். கோவை செல்கையில் வாய்ப்பு கிடைத்தால் அவரை நேரில் பார்த்துவாருங்கள்.

கூகுள் இமேஜஸில்ல் தேடினேன்..ஒரு படம் கிடைத்தது.

(பிள்ளையாருடன் படத்திலிருக்கும் பெரியவர் யார்னு தெரியாதுங்கோ.)
~~~
பிரதோஷம் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்தது முதுநிலை படிக்கையில்தான். அப்பொழுதிருந்து, ஒரு பீரியட் ஆஃப் டைம்..ஒரு சில வருஷங்கள் ரொம்பவுமே பக்திமானாய்:) இருந்திருக்கிறேன்.ஒரு தோழி மூலம் சஷ்டி விரதம்-பிரதோஷ விரதம் இதெல்லாம் தெரியவந்தது.அதுவரை அமாவாசை-கிருத்திகை மட்டும்தான் தெரியுமெனக்கு. பிரதோஷ விரதம் இருந்து, அருகிலிருக்கும் விருந்தீஸ்வரர் கோவிலுக்குப் போய்வருவோம். உடன் பணிபுரிந்த மேடம், 'இவங்க துள்ளி-துள்ளிதான் வருவாங்க,ஏன் தெரியுமா? அவங்க ஒரு பக்திமான்" என்று கிண்டல் செய்தது நினைவு வருகிறது!:)).

ம்ம்..அது ஒரு அழகிய கனாக்காலம். பிரதோஷம் விடுமுறை நாட்களில் வந்தால் பூமார்க்கட்டில் இருந்து அரளிப்பூக்கள் வாங்கிவந்து மாலையாகக் கோர்த்து கொண்டுசெல்வோம்..ஒரு சிலநாட்களில் அருகம்புல் பறித்து மாலைகட்டி கொண்டுசெல்வோம். நந்தி தேவருக்கு அபிஷேகம் நடப்பதைப் பார்ப்பதற்கே அவ்வளவு நன்றாய் இருக்கும். கரும்பு சர்க்கரையில் ஆரம்பிக்கும் அபிஷேகம், பால்-தயிர்-இளநீர்-பழங்கள்-தேன்-மஞ்சள்-விபூதி இப்படி ஒவ்வொன்றாய் அபிஷேகம் செய்வார்கள்..கருங்கற் சிலைக்கு மஞ்சளில் அபிஷேகம் செய்கையில் அருமையாக இருக்கும்.பூஜை முடிந்ததும், விருந்தீஸ்வரரை பூரண அலங்காரத்தில் பார்க்கையில் எனக்கு அவரிடம் கேட்க நினைத்ததெல்லாம் மறந்து போய்விடும்.கேட்பதற்கு ஒன்றுமே இல்லை என்பது போல இருக்கும். அமைதியா அவரை கண்கொள்ளும் மட்டும் பார்த்துவிட்டு வந்துடுவேன்.

பிரதோஷ பிரசாதம்..யம்ம்ம்ம்!! அபிஷேகமான பால் தீர்த்தம்,வெண்பொங்கல்,காப்பரிசி,பஞ்சாமிர்தம்,சுண்டல்,தயிர்சாதம்..ஆஹா,அப்படி ஒரு ருசியா இருக்கும்.
~~~
மார்கழி மாதத்தில் எல்லா நாட்களும் எங்க அக்காக்கள்,பக்கத்துவீட்டு அக்காக்கள் எல்லாம் தினமும் காலையில் பிள்ளையார் கோயிலுக்குப் போயிட்டுவருவாங்க..வீட்டில் பெரிய கோலங்கள் போட்டு, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து, எல்லாப் பிள்ளையார்களுக்கும் திருநீறு-குங்குமம்-பூ வைத்து கோலத்தில் அடுக்கி வைப்பாங்க. மார்கழி முதல்நாள் ஒரு பிள்ளையார்-(அருகம்புல் மட்டுமே வைக்கவேண்டும்,மற்ற பூக்கள் அன்று வைக்கக்கூடாது.) என்று ஆரம்பிக்கும் எண்ணிக்கை 3,5 என்று ஒற்றைப்படையில் அதிகரித்துக்கொண்டே போகும். கிட்டத்தட்ட போட்டி போட்டுக்கொண்டு பிள்ளையார்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போவார்கள். அதிகபட்சம் 101-க்கும் மேலே போயிருக்கும்.

திருமணத்துக்கு முன்பு வரை நானும் ஒரு மார்கழி விடாமல் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றியிருக்கிறேன்.(அந்தப் புண்ணியம்தான்,உனக்கு நான் கிடைத்திருக்கேன்என்று என்னவர் காலரைத் தூக்கி விட்டுக்கிறார்:)..100% உண்மைதாங்க அது!) காலை நாலரை மணிக்கு எழுந்து குளித்துவிட்டு,தண்ணீர் குடத்துடன் கோயிலுக்குப் போய், கோயிலை கூட்டி,வாசல் தெளித்து,கோலம் போட்டு, பிள்ளையாருக்கு 3 குடம்,5 குடம்,7 குடம்னு தண்ணீராய் சுமந்து அபிஷேகம் செய்திருக்கிறோம்.அப்புறம் வீட்டுக்கு வந்து கோலம் போட்டு, பிள்ளையாரை வைத்து,பூஜையும் முடித்து எல்லைமாகாளியம்மன் கோயிலுக்கு போவோம்.அங்கே அம்மனுக்கு முப்பது நாளும் அருமையாக அலங்காரம் செய்வார்கள். இட்லி-சாம்பார்,எள்ளுசாதம்,சர்க்கரைப்பொங்கல்,கேசரி இப்படி தினமும் ஒரு பிரசாதம்.(சாப்பிடுவது மட்டும்தான் வழக்கமான்னு கேக்காதீங்க. நாங்களும் சமைத்து கொண்டுபோவோம்.)
~~~
தை மாதம்..தைப்பூசம். என் அண்ணா ஒவ்வொரு வருஷமும் பழனி-க்கு காவடி எடுத்துக்கொண்டு நடந்து போவார்.இன்னமும் போய்க்கொண்டு இருக்கிறார்.வீட்டிலிருந்து ஒரு மூன்று மைல் இருக்கும் ஒரு தோட்டத்தில்தான் காவடிகள் கட்டுவார்கள்.அங்கிருந்து நடைப்பயணம் ஆரம்பிக்கும். கூட்டமாக சேர்ந்து போவாங்க.மூன்று நாட்களாகும் பழனி போய்ச்சேர.மலையேறி, காவடியை செலுத்திவிட்டு, ஒரு கலயம் சர்க்கரையை எடுத்துக்கொண்டு வருவாங்க. அடிவாரத்தில் ஒவ்வொரு கூட்டத்தாரும் ஒரொரு மடம் வாடகைக்கு எடுத்திருப்பாங்க.. எல்லாரும் கொண்டுவந்த கலயங்களிலிருந்து சர்க்கரைய,மற்ற பொருட்கள் சேர்த்து பஞ்சாமிர்தமா செய்து, காவடி எண்ணிக்கைக்கு ஏற்ப பஞ்சாமிர்தத்தை பிரித்து தருவாங்க. அங்கேயே எல்லாருக்கும் உணவு..ஓய்வெடுத்துவிட்டு, பழனியில் தங்கத்தேரோட்டம் பார்த்துவிட்டு,கடைவீதில விற்கும் பொம்மைகள்,கம்மல்,வளையல் இப்படி ஒரு ஷாப்பிங்கும் செய்துட்டு வீட்டுக்கு வருவாங்க.

பாதயாத்திரையில், மடத்துக்குளத்தில் இரண்டாவது இரவு தங்கி, அடுத்த நாள் சண்முகநதியில் குளித்து பழனி போய்ச் சேருவாங்க.எட்டாவது படிக்கையில் ஒருமுறை நானும் என் கஸின் ஒருவரும், பக்கத்துவீட்டு அண்ணாவுடன் மடத்துக்குளம் வரை பஸ்ல போயி காவடி கூட்டத்துடன் இணைந்து கொண்டோம்.அந்ததூரத்தை நடந்ததே ஒருபெரிய விஷயமா இருந்தது. அந்தமுறை கோயிலில் படிபூஜை(ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றுவது) செய்தோம்.
~~~
இன்னும் இதுபோல நினைவுகள் நிறைய இருக்கு. ஆனா,இதுக்கும் மேல மொக்கை போட்டா படிப்பவர்கள் நொந்து போயிடுவீங்க.
(இனி யாரும் என்ன தொடர்பதிவுக்கு கூப்புடுவீங்க?? மகி-யா?அவங்க ஆரம்பிச்சா நிறுத்தாம டைப் பண்ணுவாங்களே?-ன்னு தெறிச்சு ஓடிருவீங்கள்ல?? ஹிஹிஹி)
~~~
ஜோக்ஸ் அபார்ட், நாக்கடியில் கற்கண்டாக(நன்றி:வைரமுத்து) இனிக்கும் இந்த நினைவுகளை தட்டி எழுப்ப உதவிய புவனாவுக்கு நன்றி!!!விருப்பமிருக்கும் தோழமைகள் தொடருங்களேன்!!

Sunday, March 21, 2010

என்னைக் கவர்ந்த பத்து பெண்கள்

என்னைக் கவர்ந்த பத்து பெண்கள்..மகளிர் தினத்தின் ஸ்பெஷல் தொடர்பதிவாக துவங்கி சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டிருக்கிறது..ஒவ்வொருவருக்கும் தன்னைப் பெற்று வளர்த்த தாயிலிருந்துதான் உலகமே தொடங்குகிறது.என் தாயும், என் மூத்த சகோதரியும் எனக்குப் பிடித்த பெண்கள் பட்டியலில் முதலிடம் பெறுவார்கள். ஆனால் உறவினர்கள் இந்த லிஸ்ட்ல வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தத் தொடர் பதிவு வந்திருக்கு..எனவே அவர்களை எண்ணிக்கையில் சேர்க்காமல் என்னைக் கவர்ந்த பத்து பெண்கள் பட்டியல்..இப்போதைக்கு நினைவிற்கு வரும் பெண்மணிகள் இவர்கள்..நிறையப் பேர் இந்தப் பதிவை எழுதிட்டாங்க, அவர்கள் பதிவில் வந்தவர்கள் என் பதிவிலும் ரிபீட் ஆகக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எழுதிருக்கேன்..ஹேப்பி ரீடிங்! :)



கோனியம்மன்
இவங்க எங்க ஊர்ல பிரசித்தமான பெண் தெய்வம்..கோவை மாநகரின் காவல் தெய்வம் என்பது மருவி கோனியம்மன்னு பெயர் வந்திருக்குன்னு சொல்லுவாங்க.இந்த அன்னையின் முகத்தைப் பாத்தாலே மெய் மறந்துபோகும்.கோனியம்மன் மட்டுமில்லாமல், எங்கள் கல்லூரியில் இருக்கும் நிர்மலமாதா, அருகிலேயே புலியகுளம் புனித அந்தோணியார் கோயில் மேரி மாதா உட்பட எல்லாப் பெண் தெய்வங்களையும் எனக்குப் பிடிக்கும்.

டெய்சி டீச்சர், சிஸ்டர் லிண்டா
டெய்சி டீச்சர்..நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கையில் என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை.. என் வயதிலேயே அவர்களுக்கும் ஒரு மகன்.என்னையும் தன் மகள் போலவே ஸ்பெஷல் அன்புடன் நடத்தியவர்..வருடங்களாகியும் இன்னும் நினைவில் நிற்கும் ஆசிரியை.
சிஸ்டர் லிண்டா..நான் பி.எஸ்.சி. படிக்கையில் தமிழ் போதித்த சகோதரி..மிகவும் பொறுமையான குணம்..அவர் விளக்கம் தரத்தர அத்தனையையும் கட- கடவென குறிப்பெடுத்துக் கொண்டது நினைவு வருகிறது.

சிவகாமியின் சபதம் சிவகாமி

கல்கியின் இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்து முடித்தவுடன் எனக்குள் எழுந்த கேள்வி சிவகாமி எடுத்த முடிவு சரியா இல்லையா என்பதுதான்..புலிகேசி சிவகாமியை சிறை வைத்திருக்கும் மாளிகைக்கு வரும் மாமல்லர் சிவகாமியைத் தன்னுடன் வந்துவிடுமாறு கேட்கையில், 'இப்படி ஒளிந்து வரமாட்டேன்..உலகறிய படை திரட்டி வந்து என்னைச் சிறை எடுத்தவனை அழித்து என்னை சிறை மீட்டுப் போ' என்று கூறிய சிவகாமியின் சுய மரியாதை என்னைக் கவர்ந்த ஒன்று. ஆனால் ஒருத்திக்காக இரு நாடுகள் போரிட்டு பலர் உயிரிழந்து, சிவகாமி விடுதலையாகி இறைவனுக்கு தொண்டு புரியப் போகையில், அவளது சுயமரியாதையின் விலை மிக அதிகமோ என்றும் தோன்றுகிறது!!


ரமணி
சந்திரன்

இவரது நாவல்கள்ள நான் முதல் முதலில் படித்த நாவல் 'மயங்குகிறாள் ஒரு மாது' ..விவரம் தெரியாத வயதிலேயே ரொம்ப பிடித்த எழுத்தாளரா மாறிட்டாங்க..இப்பல்லாம் இவரது கதைகளைப் படிக்கும்பொழுது கொஞ்சம் காமெடியா இருந்தாலும், இன்னும் இவங்க எழுத்துகள்ள எனக்கு இருக்கும் மயக்கம் முழுவதும் தெளியவில்லை. எல்லாக் கதைகளையும் சுபமாகவே முடிப்பாங்க.

டாக்டர்.ஜெயா ஸ்ரீதர்
எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி பரவ ஆரம்பித்த புதிதில் ஜூனியர் விகடன்ல "எய்ட்ஸ் எரிமலை" என்ற தொடரை எழுதியவர்..இப்பொழுதும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சேவை செய்துவருகிறார். நடிகர் ஜெமினி கணேசனின் மகள். நினைவெல்லாம் நித்யா என்ற படத்தில் ஹீரோயினா நடிச்சிருக்காங்க.

எல்லன் டி ஜெனரஸ்
இவர் ஒரு காமெடியன்,நடிகை, டிவில டாக் ஷோ நடத்துபவர். பைண்டிங் நீமோ படத்துல டோரி என்ற பெண் மீன் கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்திருக்காங்க...2007 -ஆம் வருட ஆஸ்கர் அவார்ட் விழாவைத் தொகுத்து வழங்கியிருக்காங்க..இந்த வருடம் அமெரிக்கன் ஐடல்- நடுவர்கள்ள ஒருத்தர்.எனக்கு இவரது காமெடி டாக் ஷோ மிகவும் பிடிக்கும்.


பின்னணிப்
பாடகி சித்ரா

கேரளாவிலிருந்து தமிழ்த் திரையுலகிற்கு பறந்து வந்த சின்னக்குயில்..இவரது சிரித்த முகமும்,இனிமையான குரலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சிம்ரன்
தமிழ்த் திரையுலகில் பிடித்த நடிகைகள் பலர் இருந்தாலும், இப்ப,இந்த நிமிஷம் நினைவுக்கு வரது இவர்தான். :)

தன்னம்பிக்கை பெண்கள்
வாழ்க்கையில் வரும் சிறு சிறு பிரச்சனைகள் முதல் எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ,உடைந்து போகாமல், இன்னொருவரை எதிர்பார்க்காமல்,பிறருக்கு கஷ்டங்கள் தராமல், நலிந்தோருக்கு உதவி புரிந்து, ஒரு முறை வாழக் கிடைத்த வாழ்வை அர்த்தமுள்ளதாய் வாழ்ந்து முடித்த,வாழ்ந்து கொண்டிருக்கின்ற,வாழப்போகும் அனைத்து தன்னம்பிக்கைப் பெண்களையும் எனக்குப் பிடிக்கும். இவர்களை பத்து பெண்கள் என்று சிறிய எண்ணிக்கையில் அடக்க முடியாது..ஏனென்றால் உலகெங்கும் கோடிக்கணக்கில் இவர்கள் இருக்கிறார்கள்..சிலர் பிரபலங்களாக,பலர் குடத்திலிட்ட விளக்குகளாக...

இந்தத் தொடர் பதிவு எழுதும்படி என்னை அன்புடன் அழைத்த தோழி விஜிக்கு என் நன்றிகள். தொடர் பதிவைத் தொடருங்கள் என்று நான் அழைப்பது..
திருமதி.ஆசியா உமர்

LinkWithin

Related Posts with Thumbnails