Showing posts with label டீ. Show all posts
Showing posts with label டீ. Show all posts

Thursday, October 25, 2012

சுலைமானி / மசாலா டீ

இது நாகர்கோயிலைச் சேர்ந்த என் தோழி ஒருவர் செய்து காட்டியது. கேரளாவின் வடக்குப் பகுதியில் இந்த "சுலைமானி also known as மசாலா டீ" மிகவும் பிரபலம். ஹெவியான உணவுக்குப் பிறகு இந்த சுலைமானியைக் குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று உபாதைகளுக்கும் இந்த சுலைமானி நல்லதொரு தீர்வாம். வெளிநாட்டில்/வெளியூரிலிருந்து ஊர் திரும்பும் ஆட்களை ரிசீவ்  பண்ண ஏர்போர்ட் போகையில் இந்த சுலைமானியை ஃப்ளாஸ்க்கில் ஊற்றி எடுத்துச் செல்வார்களாம் அவங்க ஊரில். களைப்பைப் போக்கி புத்துணர்வைத் தரும் இந்த சுலைமானி செய்முறையை பார்க்கலாமா? :)

தேவையான பொருட்கள்

தண்ணீர் - 3 கப்
ஏலக்காய்-6
இஞ்சி ~~4" துண்டு ( கட்டைவிரல் அளவுள்ள இஞ்சித்துண்டு)
டீத்தூள் - 11/2 டீஸ்பூன்
சர்க்கரை - 3டீஸ்பூன் (ருசிக்கேற்ப)

செய்முறை
பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும். நீர் நல்ல சூடானதும் ஏலக்காயைத் தட்டிப் போடவும். இஞ்சியையும் நன்றாக நசுக்கி  நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொஞ்சம் சுண்டி இஞ்சி சாறு  தண்ணீரில்  இறங்கியதும் டீத்தூள் சேர்க்கவும்.
டீத்தூள் சேர்த்த பிறகு நிறைய நேரம் கொதிக்கவிடக் கூடாது..ஓரிரு நிமிடங்கள் ஆனதும், இனிப்புக்கேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து, 

டீயை  அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டவும்.
சுலைமானி aka மசாலா டீ ரெடி!
இந்த டீ சட்டென்று சூடு ஆறிவிடும், அதனால் வடிகட்டியதும் சூடாகப் பருகவும்.  அதே போல டீத்தூளும் அதிகமாய் போடக்கூடாது. நம்ம ஊர் டீ என்றால் மூணு கப்புக்கு அரை டீஸ்பூன்- ஒரு டீஸ்பூன் போட்டாலே போதுமாம். நான் உபயோகிப்பது Tetley டீ என்பதால் கிட்டத்தட்ட ஒண்ணரை டீஸ்பூன் போடவேண்டி இருந்தது. இந்த டீயை நல்லா சுருக்குன்னு குடிச்சா தொண்டைக்கு இதம்மா இருக்கும்! :)
(சுருக்குன்னு - சூடாக... இது எங்கூரு பாஷைங்கோ! :)))


LinkWithin

Related Posts with Thumbnails