Showing posts with label பானங்கள். Show all posts
Showing posts with label பானங்கள். Show all posts

Friday, May 3, 2013

கேரஞ்ச் ஜூஸ்

தேவையான பொருட்கள்
கேரட் -1
ஆரஞ்சுப் பழம்(சிறியது)-2
சர்க்கரை-11/2டீஸ்பூன்
தண்ணீர்-1/2கப் அல்லது 3/4கப் 

செய்முறை
கேரட்டை கழுவி துண்டுகளாக்கவும். 
ஆரஞ்சுப் பழத்தைத் தோலுரித்து சுளைகளைப் பிரித்து வைக்கவும். [நான் உபயோகித்த பழங்களில் விதைகள் இருக்கவில்லை. எங்கேயோ ஒன்றிரண்டுதான் இருந்தது. :)]
கேரட் -ஆரஞ்சை மிக்ஸியில் இட்டு அரைக்கவும். 
நன்கு அரைபட்டதும் தேவையான [குளிர்ந்த] தண்ணீர், சர்க்கரை சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் அரைத்து வடிகட்டவும். கண்ணாடி டம்ளர்களில் தேவையான அளவு ஜூஸை ஊற்றி பரிமாறவும். 
குளிர்ந்த தண்ணீர் சேர்த்து செய்திருப்பதால் அப்படியே பருகலாம், அல்லது  ஐஸ்கட்டிகள் சேர்த்தும் பருகலாம். 
பி.கு. : பெயர்க்காரணம்
கேரஞ்ச் = கேரட் + ஆரஞ்ச் 
:) :)  

Friday, April 12, 2013

ஸ்ட்ராபெரி பெண்ணே!..

நீங்க மார்கெட் போகாமல் உங்கள் வாழ்க்கைத் துணைவரை தனியாக அனுப்பினால் என்ன ஆகும்?  நீங்க அனுப்பிய தேவையான பொருட்கள் லிஸ்ட்டை சுத்தமாக மறந்துபோயி, அவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு, பச்சைமிளகாய்-இஞ்சி-கொத்துமல்லித் தழை போன்ற கொசுறுகளை ஒரு கணமும் நினைக்காமல், ஒரு மினி ஃப்ரூட்-வெஜிடபிள் மார்க்கட்டையே காரில் நிறைத்துக்கொண்டு வருவார்கள். :) அதையெல்லாம் விட முக்கியமான ஒன்று, ப்ளாகில் போட நமக்கு ஒரு பதிவு தேறும், ஹிஹி! :)

மினி மார்க்கெட்டைப் பார்த்து மயக்கம் போட்டுவிடாமல், எல்லாத்தையும் பத்திரமாக குளிர்சாதனப் பெட்டியில் வைச்சு உபயோகிப்பது உங்க பொறுப்பு! எங்க வீட்டில் நடந்த இப்படியாகப்பட்ட  நிகழ்வொன்றில் ஒய்யாரமாக கண்ணாடிப் பெட்டியில் செக்கச்செவேர் என்று வந்த ஸ்ட்ராபெரி பழங்கள் புளிப்புன்னா புளிப்பு, வாயில் வைக்க முடியாத அளவு புளிப்பு!! அதற்காக தூக்கி குப்பையில் போட  மனசு வருமா? இப்படி ஒரு ஸ்மூத்தியை மிக்ஸியில் அடிச்சு, ஒரு டால் க்ளாஸ் நிறைய ஊற்றி, ஸ்டைலா ஒரு பழத்தையும் கட் பண்ணி வைச்சு போட்டோ புடிச்சுட்டு, அக்கடான்னு உக்கார்ந்து குடிச்சும் முடிச்சுட்டேன்!
தேவையான பொருட்கள் 
ஸ்ட்ராபெரி பழங்கள் -5 (பெரிய பழங்கள்)
தயிர்-கால்கப்
தண்ணீர்-1/2கப்
சர்க்கரை(விரும்பினல்)-2டீஸ்பூன்

செய்முறை
ஸ்ட்ராபெரி பழங்களை நன்றாக கழுவி, அவற்றின் தலையில் இருக்கும் இலை மற்றும் தண்டுப் பகுதியை நீக்கவும்.
பழங்களை துண்டாக்கி மிக்ஸியில் போட்டு சிலநிமிடங்கள் அரைக்கவும்.
பிறகு அத்துடன் தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மேலும் சிலநிமிடங்கள் அரைக்கவும்.
ஜில் ஜில் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி தயார். கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி சில்லென்று பருகவும்.
பி.கு. புளிப்பான பழம் என்பதால் போட்டோவில் இருக்கும் ஒரு ஒய்யாரக் கொண்டை ஸ்ட்ராபெரி அக்கா :) போட்டோ செஷன் முடிந்ததும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்கே குடியேறிவிட்டார். புளிப்பில்லாத பழம் என்றால், ஸ்மூத்தி பருகும்போது இடையிடையே அந்தப் பழத்தையும் ஒவ்வொரு கடி கடிச்சு சாப்பிடலாம். :)

இது டயட்(!) வர்ஷன்..இதிலேயே கொஞ்சம் வேரியேஷன் வேணும்னா...ஸ்ட்ராபெரி பழங்கள், குளிர்ந்த பால், சர்க்கரை, ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்த்து அரைத்தா..
ரிச் அண்ட் டேஸ்ட்டி ஸ்ட்ராபெரி மில்க்‌ஷேக் ப்ரேக்ஃபாஸ்ட்-டுக்கு ரெடி!  

இலவச இணைப்பு : மின்சாரக் கனவிலிருந்து ஒரு பாட்டு.. :) :)))



~~~
அனைவருக்கும் இனிய தெலுங்கு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
~~~

Thursday, January 10, 2013

புதுசு கண்ணா, புதுசு! :)

பொறுமை...பொ...று...மை....ஐஐஐஐஐ! :)))
ஏற்கனவே பார்த்த புதினாதானே? இதிலென்ன புதுசு-ன்னு உங்க ஏழாம் அறிவு(!) :) யோசிக்கலாம்! வெயிட்டீஸ்... and scroll down patiently please! ;)))

வாடைக்  காற்றில் மற்ற எல்லாச் செடிகளும் வாடிக் கிடக்க, புதினா மட்டும் தளதளப்பாய் வளர்கிறது. அப்பப்ப தேவைப்பட்ட அளவு தண்டுகளைக் கிள்ளி உபயோகப் படுத்திகிட்டு வாரோம். :) 

இங்க நீங்க ஒரு பாயின்ட் நோட் பண்ணனும், பென்சில்-நோட் பேட் எல்லாம் எடுத்துக்குங்க. பென்சில்ல மூக்கு இல்லன்னா, கத்தி-கப்படா எல்லாம் யூஸ் பண்ணி நல்லா கூரா சீவிக்குங்க!
" இந்தப் பதிவில் அங்கங்க நான் பார்த்தவற்றை (மட்டுமே) பகிர்கிறேன், நானா எதையுமே சொல்லலே,சொல்லலே,சொல்லல்லே! ;)))))" 
...என்ன, எழுதிகிட்டீங்களா? சரி, மேல படிங்க! ;)

நீங்கள் கவனித்திருக்கக் கூடும், பல உணவகங்களில் குடிக்க தண்ணீர் தரும்போது சிறு துண்டு எலுமிச்சையை தண்ணீரில் சேர்த்து தருவார்கள். நீரில் புதினா, மற்றும் சில பழ வகைகள் சேர்த்து flavoured water ஆகவும் குடிக்கிறார்கள்.

கடந்த விடுமுறையில் ஒரு முறை நாள் முழுக்க புக் படிச்சுகிட்டு, ஓய்வெடுத்துகிட்டு,  பிஸ்ஸா ஆர்டர் பண்ணி சாப்பிட்டுகிட்டு பொழுது போக்கிய ஒரு நாளில்...நடந்த நிகழ்வு இது! என்னவருக்கு ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தண்ணீர் தேவைப்பட்டதால ஒரு டெமோ- கொடுத்தார். உங்க வீடுகளில் யாருக்கேனும் உதவுமே என்ற நல்லெண்ணத்தில் இங்கே பகிர்கிறேன்.

ஹலுமிச்ச புதினாத் தண்ணி (அல்லது) தேமிச்ச புதினாத் தண்ணி
[இந்த டைட்டிலை ஆராய்ச்சி பண்ணி யாரும் பி.ஹெச்.டி. வாங்கினீங்க, அட்லீஸ்ட் $100,000 ராயல்டி நேரா என் பேங்க் அக்கவுன்ட்டுக்கு வந்துடணும், இப்பவே சொல்லிட்டேன்! ஹாஹ்ஹாஹ் ஹா! :))) ]

தேவையான பொருட்கள்
எலுமிச்சம் பழம்/ லெமன் -1
தேன் / ஹனி - 1டீஸ்பூன்
புதினா இலைகள் -2
தண்ணீர் - 1 கப்
ஐஸ் க்யூப்ஸ்- 2

செய்முறை 

படத்தைப் பார்த்தே புரிஞ்சுகிட்டிருப்பீங்க! இருந்தாலும் என் வாயாற :) ஒரு முறை சொல்லிக்கிறேனே! :)))
  • ஓடிப்போய்(!) தொட்டியில இருக்க புதினாச் செடில இருந்து ரெண்டு ஆரோக்கியமான புதினா இலையப் பறிச்சுட்டு வந்து கழுவிவைங்க. 
  • ஒரு முழு எலுமிச்சம் பழத்தை ஒரு அழகான வட்டம் வரமாதிரி ஸ்லைஸ் பண்ணிக்குங்க. [மீதி பழம் முழுசா வேஸ்ட் ஆனாலும், டோன்ட் கேர்! ;) ]
  • புதினா இலைய உள்ளங்கைல வைச்சு, லேசா கசக்கி டம்ளரில் போடுங்க, அது மேல லெமன் ஸ்லைஸையும் போட்டுருங்க.
  • கப்-ல முக்கால் பாகம்  தண்ணீர் ஊத்துங்க. 
  • கொஞ்சம் (ஆர்கானிக்) ஹனிய தண்ணில ஊத்தி, கலக்கிருங்க.
  •  மேலாப்பல ரெண்டு ஐஸ் க்யூபையும் தூக்கி(!) போடுங்க!
அம்புட்டுதானுங்...ஹலுமிச்ச புதினா தண்ணி அல்லது தேமிச்ச புதினாத் தண்ணி ரெடி! சுடச்சுட பிஸ்ஸா சாப்பிடும்போது சைடுல கோக்-பெப்ஸி இதெல்லாம் குடிச்சு வயித்த கெடுத்துக்காம, இப்படி ஆரோக்கியமான பானத்தைப் பருகி, சந்தோஷமா இருங்க! ஓக்கே!?
"பி.கு. எனக்கு தண்ணின்னா, ஐஸ் க்யூப் கூட போடாம, ரொம்ப சில்லுன்னும் இல்லாம,   நார்மல் டெம்பரேச்சரை விட கொஞ்சம் சில்லுன்னு இருந்தாப் போதும்,  இப்படி ஒப்பனை வேலைகள், லெமன்-மின்ட் போன்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எல்லாம் பிடிக்காது, பிடிக்காது, பிடிக்காது!"
ஹலோ..படிச்சுகிட்டே போனீங்கன்னா எப்புடி? இந்த பாயின்ட்டையும் நோட் பண்ணிக்குங்க, அக்காங்! ;))

 ~~~~~
அடுத்ததா இன்னும் 2  விஷயங்கள்..புதுசு கண்ணா புதுசு.. 

டிசம்பரில் ஒரு சனிக்கிழமை.. ஷாப்பிங் போயிருந்தோம், அருகில் இருந்த பெட்கோ வாசலில் அடாப்ஷன் சென்டரில் இருந்து பல வடிவில், உருவில், வயதில் செல்லங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு காத்திருந்தனர். நான் ஒரு பக்கம் பார்த்துக்கொண்டிருக்க, என்னவரை  இந்தப் பெரியமனுஷன் மிகவும் கவர்ந்துவிட்டான். சட்டென்று ஒரு சின்ன வாக் கூட்டிப் போய்ப் பார்த்துவிட்டு, ஃபார்மாலிட்டீஸ் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். :)

அதே டிசம்பரில் இன்னுமொரு வெள்ளிக்கிழமை..கடைக்குப் போனோம். நான் மட்டும் கடைக்குள் போக, என்னவரும் இந்தப் பெரிய மனிதரும் காரிலேயே தங்கிட்டாங்க. சாமான் வாங்கிட்டு காருக்கு வந்தா உள்ளே இவர் மட்டும் இருக்கிறார். குளிரில் வெளியே நிற்க முடியாமல் மீண்டும் கடைக்குள்ளே போய்விட்டேன், அரை மணி கழித்து அவசர அவசரமாய் திரும்பிவந்தவரின் கையில் ஒரு சிவப்பு கலர் கிஃப்ட் பேக், நம்ம அதையெல்லாம் பார்க்கவே மாட்டமில்ல? கர்ர்ர்ர்-னு காருக்குள்ள வந்து உட்கார்ந்தா...உனக்காக சர்ப்ரைஸா வாங்கிவந்தேன்-னு எடுத்துக் கொடுத்தார் இந்த வெண்ணிற ஆடை நிர்மலா;)வை!! ஹவ் இஸ் இட்?! ;)
~~~~~
எங்க வீட்டுப் புது ஆளுக்குப் பெயர் சூட்டுவதற்காக ஒரு நாள் முழுக்க யோசிச்சோம், சில மணி நேர யோசனைகள், மோக்லி, ஜிண்டு, டிங்கு, பூச்சி, வேட்டை, மணி--இப்படி விபரீதமான பெயர்கள் எல்லாம் ஆலோசிக்கப் பட்டு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர், "ஜீனோ"! :)))

சுஜாதாவின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். விகடனில் "என் இனிய இயந்திரா" வந்த காலத்திலிருந்தே "ஜீனோ" மேல் ஒரு கண்ணு! மறந்து போயிருந்த ஜீனோவை நினைவூட்டும் விதத்தில் சிலகாலம் முன் வலைப்பூ உலகிலும் அறுசுவையிலும் ஜீனோ- என்ற பெயரில் ஒருவர் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார், thanks to him! 

ஜீனோவை இங்கே வரவைக்க வேண்டும் என்று ப்ரெஷ்ஷர் போட்டு, ட்ரிக்ஸி மூலம் தூது விட்ட இமாவின் உலகிற்கு மகியின் உலகில் இருந்து ஒரு சின்ன கொலாஜ் பரிசு!  :)))


நாங்க வாக் போயிட்டு வரோம், நன்றி, வணக்கம்!

LinkWithin

Related Posts with Thumbnails