Friday, April 29, 2011

நன்றி!

சினேகிதி,ரேவா,காயத்ரி,அம்முமோகன் இவர்கள் என் வலைப்பூக்களுக்கு அன்பாக வழங்கிய விருதுகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, அவர்களுக்கு இந்த பச்சைப் பூவை வழங்குகிறேன்.

The meaning of flower colour in green is about renewal, growth, hope, health and youth.

இன்னும் இரண்டு படங்களையும் இணைத்திருக்கிறேன்..உங்களுக்குப் பிடித்த படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் சினேகிதி,ரேவா,காயத்ரி & அம்மு!


ரேவா -விருது வந்து பலநாள் கழித்து சொல்கிறேன்,தாமதத்தைப் பொறுத்தருள்க!:)
காயத்ரி(தாமதத்தைப் பொறுத்தருள்க!:) ) அம்முமோகன்-இவர்கள் என் இங்கிலீஷ் ப்ளாகுக்கு விருது கொடுத்திருக்கிறார்கள்,இங்கே நன்றி சொல்கிறேன்.:)
~~~~
குறிஞ்சி கதம்பம் ப்ளாக்ஸ்பாட்டில் இருந்து செய்த கேரட் சட்னி

மேனகாவின் ப்ளாகில் இருந்து இட்லிப்பொடி
கீதா ஆச்சலின் ப்ளாகிலிருந்து கைமா இட்லி
~~~
முதல் மூன்று படங்களுக்கான இணைப்புகள்
1.போனவாரம் ஒருநாள் இந்த ப்ரோக்கோஃப்ளவரை கடையில் பார்த்ததும், இதன் பச்சைவண்ணம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது,உடனே வாங்கிட்டு வந்துட்டேன்.:)
2.பிப்ரவரி 14 அன்று மும்முரமாக காரை க்ளீன் செய்துகொண்டிருந்தோம்,அப்பொழுது வானம் மிகவும் அழகாக இருந்தது. :)
3.இந்தப் பூக்கள் பெயர் தெரியவில்லை,நல்ல வாசனையாக இருக்கிறது. வாக் போகும்பொழுது சாலையோரத்தில் இந்தக்கொடிகள் படர்ந்துகிடக்கின்றன. ட்ராஃபிக் அதிகமா இருந்தாலும்,இந்தப் பூக்களின் வாசனையை நுகரவே அந்தச்சாலைக்கு அடிக்கடி செல்கிறேன். படமெடுக்க நினைக்கிறேன், கேமரா எடுத்துப்போக நினைவு இருப்பதில்லை. அதனால் கொடியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஒரு கொத்துப் பூவை பறித்துவந்து வீட்டில் வைத்திருக்கிறேன். :)


இரண்டாவது மூன்று படங்களுக்கான இணைப்புகள்
1.என்னவருக்கு கேரட் பிடிக்காது..இந்த சட்னியில் கேரட் இருப்பதே தெரியாமல் விரும்பி சாப்பிட்டார்! ;)
2.கொத்துமல்லி விதை இட்லிப்பொடி நல்ல வாசனையுடன் ருசியாக இருந்தது.
3.ஒருநாள் மாலை நேரம் சில்லி இட்லி(கைமா-ன்னா நான்வெஜ் பேர் மாதிரி இருக்கு,அதனால் சில்லி இட்லியாக்கிட்டேன்.:) ) செய்தேன்.சுடச்சுட சாப்பிட சூப்பரா இருந்தது.
~~~
என்வலைப்பூக்களுக்குக் கிடைத்த விருதுகளுக்கு..
தினமும் என் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும் இயற்கைக்கு..
ருசியான குறிப்புகளைப் பகிர்ந்த நட்புக்களுக்கு..
நான் எழுதுவதை எல்லாம் ஊக்குவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு..
இந்த நன்றிப்பதிவு உரித்தாகட்டும்!

Monday, April 25, 2011

கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி(Boiled Rice) - 2 கப்
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-2
கடுகு-1டீஸ்பூன்
கடலைப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
பல்லுப்பல்லாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள்-2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை -கொத்தமல்லி இலை-சிறிது
எண்ணெய்
உப்பு

செய்முறை
அரிசியைக் களைந்து 2-3 மணிநேரம் ஊறவைக்கவும்.
கொஞ்சமாக நீர் தெளித்து, தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரிசியை கொறகொறப்பாக அரைத்துக்கொள்ளவும். கடைசியாக தேவையான உப்பை மாவுடன் கலந்து 2 சுற்று மிக்ஸி/க்ரைண்டரை ஓடவிட்டு எடுத்துவைக்கவும்.

வெங்காயம்-பச்சைமிளகாய்-கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளிக்கவும். பருப்புகள் பொன்னிறமானதும் நறுக்கிய வெங்காயம்-மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தேங்காய்ப்பல்லுகளை சேர்த்து கிளறிவிட்டு, அடுப்பின் தணலை குறைத்துக்கொண்டு, அரைத்து வைத்த மாவை கொட்டவும்.
மாவை அடிபிடிக்காமல் சிலநிமிடம் கிளறவும். கடாயில் ஒட்டாமல் வந்ததும் கொத்துமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.

ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித்தட்டில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.

சுவையான கொழுக்கட்டை தயார். சுடச்சுட சாப்பிட சூப்பராக இருக்கும். தேங்காய் சட்னி-காரசட்னி-கொத்துமல்லி சட்னி-புதினா சட்னி, அட, டொமட்டோ கெட்ச்-அப் கூட சைட் டிஷா வைத்து சாப்பிடலாம். :)ரெடிமேட் அரிசிமாவு வைத்து செய்த கொழுக்கட்டையின் செய்முறைக்கு இங்கே க்ளிக் பண்ணிப் பாருங்க. என் சாய்ஸ் இந்த கொழுக்கட்டைதான்.:)
~~~~

கடந்த சனிக்கிழமை இண்டியன் ஸ்டோரில் வெகு நாள் கழித்து செங்காம்பு கறிவேப்பிலை ப்ரெஷ்-ஆக இருந்தது. இந்த 2 மாதங்களாகவே சரியாக கிடைக்கவில்லை..ஒரு நாள் தெரியாமல் கடையில் இருந்த மெக்ஸிகன் பணியாளரிடம் கறிவேப்பிலை இல்லையா என்று கேட்டுவிட்டேன். ஒரு அரைமணி நேரம் லெக்ச்சர் கொடுத்தார்!

"இப்போ மழை வருதில்லையா,அதனால் கறிவேப்பிலை வரலை. இலையெல்லாம் குட்டிக்குட்டியா இருக்குதாம்..கருப்பா ஆகிடுதாம்..இன்னும் 2-3 வாரங்களில் வெதர் நல்லா ஆனதும் கறிவேப்பிலை வந்துடும்னு தோட்டத்துக்காரம்மா சொன்னாங்க..காய்ந்த இலைகள் பேக்கட்லே இருக்கு,நீங்க அதுவேணா வாங்குங்க"..

இப்படியாக தொடர்ந்த அவர் பேச்சு முடிவுக்கு வரவே மாட்டேங்குது..ஒருவழியாத் தப்பிச்சு வந்தேன். :)

கறிவேப்பிலை கிடைக்காத ஆட்கள் காதிலே கொஞ்சம் புகை வரவைக்கலாமே என்ற ஒரு நல்லெண்ணத்தில்........... போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணியிருக்கேன். ஹிஹி!

Wednesday, April 20, 2011

டைம்பாஸ்..டைம்பாஸ்!!

போனவாரத்தில் ஒருநாள் மாலை லேப்டாப்பின் முன் உர்கார்ந்திருந்த என்னவர் திடீர்னு சிரிக்க ஆரம்பித்தார்..நான் கிச்சன்லே இருந்தேன். சிரிப்பு நிற்காமல் தொடர்ந்துகிட்டே இருக்கவும்,என்னதான் விஷயம்னு பார்த்த்தா...நீங்களும் பாருங்களேன்! :)இதிலே வரும் மிஷ்கா என்ற நாயின் பேச்சுக்கள்-பாடல்கள் எல்லாம் யூ-ட்யூபில் கிட்டத்தட்ட 300 இருக்கிறது. டிவி-யிலும் போய் "ஐ லவ் யூ" சொல்லிட்டு வந்திருக்காம் மிஷ்கா!!

இன்னும் காமெடி என்னதுன்னா,வீடியோவில் ஆண்குரல் சொல்லச்சொல்லும்போது கண்டுக்காம இருக்கும் மிஷ்கா பெண்குரல் வந்து சொல்லும்போதுதான் பேசஆரம்பிக்கும். நம்ம ஊர்ல நாய் ஊளையிட்டா கெட்டசகுனம்னு சொல்லுவாங்க, இவிங்க வீடியோ எடுத்து விளம்பரம் பண்றாங்கப்பா!!! :))))))))))))
~~~~~
ஏ குருவி!...நினைவிருக்கா உங்களுக்கு? அதே இடத்திலே வீட்டை(கூட்டை) ரிப்பேர் பண்ணும் வேலைகள் ஆரம்பித்திருக்கு. அதே குருவிகளா,இல்ல வேற குருவிகளான்னு தெரில..படுவேகமா கன்ஸ்ட்ரக்ஷன் நடந்துகொண்டிருக்கிறது.கீச்-கீசுன்னு குரல்கள் பகல் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கிறது.மாறி மாறி பறந்து போன குருவிகளில் இந்தக்குருவி வேற கொஞ்சம் முறைச்சுப் பார்க்கிற மாதிரி இருந்ததால் இத்தோடு நிறுத்திட்டேன். :)

~~~~
குருவி பார்த்து கழுத்துவலியே வந்திருச்சு! டயர்ட் போக ஒரு ஈஸி ஸ்னாக் சாப்பிடலாம் வாங்க. ஸ்வீட்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்,அதுக்காக எப்பவும் வீட்டிலே ஸ்டாக் வச்சுட்டே இருக்க முடியாதில்ல? அதனால் அப்பப்ப இப்படி ஒரு ஸ்வீட் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். :)

ஒரு கப் சூடான பால்ல 2 பரோட்டாவை பிச்சுப்போட்டு, தேவையான அளவு சர்க்கரையையும் போட்டு ஒரு 5 நிமிஷம் ஊறவைச்சா அம்புட்டுதான்..சுவையான ஸ்வீட்/ப்ரேக்ஃபாஸ்ட்/ஸ்னாக்(!?!!) ரெடி!!

பரோட்டா எப்பவாவது ஒருமுறைதான் செய்வேன், அதனால் அடிக்கடி கை கொடுப்பது சப்பாத்தி..அதே செய்முறை,பரோட்டாவுக்கு பதிலா சப்பாத்தி!! இதுவும் நல்லா இருக்கும்! :P

~~~~
மேனகா , அப்ஸரா ,ஜலீலாக்கா மூவரும் தந்த விருதுகளுக்கு நன்றி! நன்றியின் அடையாளமா எவ்வளவு நாளைக்கு பூக்களையே தருவது? For a change, இந்த அழகான பூக்கூடையை வழங்குகிறேன். :)
நன்றி ஜலீலாக்கா,அப்ஸரா & மேனகா

Thursday, April 14, 2011

எம்ப்ராய்டரி-3

முதலில் எளிமையான பூக்கள்,அடுத்து கொஞ்சம் பூக்களுடன் பட்டாம்பூச்சி, ம்ம்ம்..அப்படியே இந்தக் குருவிகளை ஆரம்பித்தேன்.(கொஞ்சங்கொஞ்சமா முன்னேறுவதா நினைப்பு!!ஹிஹி)

வழக்கம்போல, டிசைனை பேப்பரில் ட்ரேஸ் பண்ணி, ஃபெல்ட் க்ளாத்தில் ரன்னிங் ஸ்டிச்சில் தைத்து முடித்தாச்சு.

இந்த டிஸைனில் முதலில் என்னைக் கவர்ந்தது அந்தக் குட்டிக் குட்டிப் பூக்கள்தான்..ஒரிஜினல் படத்தைப் பார்க்கையிலேயே அந்தப்பூக்கள்-உதிர்ந்துகிடக்கும் இதழ்கள் இவை எல்லாம் லேஸி-டெய்ஸி தையலில் தைத்தால்..ஆஹா,எவ்வளவு அழகா இருக்கும்?! அந்தக் காட்சி அப்படியே மனசுக்குள் வந்துவிட்டது. :)

ஆனால், துணியில் ட்ரேஸ் பண்ணுகையில் இந்தப் பூக்களைத்தான் எப்படி ட்ரேஸ் பண்ணுவதுன்னு குழப்பம்..கொஞ்சமா மண்டையப் பிச்சுகிட்டு, கடைசியில் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு ஸ்ட்ரெய்ட் ஸ்டிச்சை தைத்தேன்.அந்த லைனை வைத்து பூக்களை கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்! அதனை முடித்து பேப்பரை முழுக்க கிழித்து எடுத்த பின்னர்..

ஒரொரு ஸ்ட்ரெய்ட் ஸ்டிச்சும் இதழ்களின் நடுவில் வருவது போல லேஸி-டெய்ஸி தையலில் பூக்கள் உருவானது.மிகவும் ஈஸியான இந்தத் தையல், பூவுக்கும் அழகாகப் பொருந்தியது. பூக்களின் நடுவில் ஃப்ரென்ச் நாட்,பறவைகளின் உடலுக்கு சங்கிலித்தையல்..இறகு மற்றும் வால்பகுதிகளில் ஸ்ப்ளிட் ஸ்டிச் என்று தைத்த நிலையில்..

ஒரு பறவைக்கு பச்சை உடல்,மஞ்சள் இறகுகள், இன்னொன்றுக்கு மஞ்சள் உடல்,பச்சை சிறகுகள் இப்படி கான்ட்ராஸ்ட்டாக கலர்களை செலக்ட் பண்ணியிருந்தேன். பச்சைப்பறவையின் வால்ப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஸாடின் ஸ்டிச்..முதலில் டைரக்ஷனுக்கு சிலதையல்கள் தைத்துக்கொண்டு முழுப்பகுதியையும் தைத்தால் சுலபமாக இருக்கும். மரக்கிளைக்கு மரக்கலரில் ஸ்டெம் ஸ்டிச்சிலேயே கிளை முழுக்க ஃபில் பண்ணினேன்.

நம்ம போட்டோகிராபி தெறம உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்,அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! ;) (நிழல் விழுகாம எடுக்க ட்ரை பண்ணினேன்,தையல்கள் தெளிவாத்தெரியாம போயிட்டது,அதனால் இதுவே பரவாயில்லைன்னு விட்டுட்டேன்.)

பறவைகள் இரண்டுக்கும் கால் மற்றும் அலகுப்பகுதியையும் ஸாடின் ஸ்டிச்சிலே தைத்து முடித்து, ஃப்ரென்ச் நாட்டில் கண்ணை திறந்துவைச்சிட்டேன். :)

ஒரிஜினல் படம் இதோ..நன்றி!!

Tuesday, April 5, 2011

ஸ்வீட் டயமண்ட் பிஸ்கட்

ஹாய் லேடீஸ் & ஜென்டில்மென்,ஹவ் ஆர் யூ?யாரிந்த பேசற யானை பொம்மைன்னு யோசிக்கறீங்களா? இந்த அப்புவை யாரும் மறந்திருக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.
டாய்ஸ்டோரி வந்து ரெம்ப நாளானதால மறந்திட்டீங்களா?!!

ஹூம்,நீங்க என்னை மறந்திருந்தாலும் நான் மறக்காம உங்களையெல்லாம் பார்க்க வந்திருக்கேன். அதுவும் வெறுங்கைய வீசிட்டு வராம, 'கறுக்-முறுக்'குன்னு கடிச்சி திங்க ஸ்னாக் கூட கொண்டுவந்திருக்கேன். :)


என்னதுன்னா காயத்ரி அக்கா டயமண்ட் பிஸ்கட்டு ரெசிப்பி போஸ்ட் பண்ணிருந்தாங்களாம்,மகி அக்கா அதை செய்து பார்க்க ட்ரை பண்ணாங்க,போன வாரம். அங்கங்க காமெடி நடந்தாலும், பைனல் ரிசல்ட் எடிபிளா வந்துருச்சி! ஹிஹி!

பிஸ்கட் செய்யப்போலாம் வாங்கோ!

1/4கப் சர்க்கரை-2 ஏலக்காய மிக்ஸில போட்டு, நைஸா பவடர் பண்ணிக்குங்க. (மெய்யாலுமே பவுடர் மாறியே இருக்கும்,ஆசப்பட்டு எடுத்து மூஞ்சிக்குப் பூசிக்காதீங்க,அப்பறம் எறும்பு வந்து கடிச்சிவச்சிரும்! :))

1கப் கோதுமை மாவு கூட சர்க்கரைப் பவுடர்,2 பின்ச் பேக்கிங் சோடா,2டேபிள்ஸ்பூன் பட்டர்* (காயத்ரி அக்கா ரெசிப்பிலே பட்டர்லாம் இல்ல..இந்த மகியக்கா ஃப்ரிட்ஜ்லே தீராம கிடக்கற I Can't Believe This Is Not Butter-ஐத் தீர்க்கோணும்னு போட்டிருக்கு..நீங்க உஷாரா இருங்க,சரியா?)போட்டு நல்லா கலக்கிட்டு, கொஞ்சங்கொஞ்சமா தண்ணி ஊத்தி சப்பாத்தி மாவு மாதிரி பிசைஞ்சு, அதை 3 உருண்டையா பிரிச்சு உருட்டி மூடி வையுங்கோ.

எண்ணெய காயவைச்சிட்டு, இந்த உருண்டைங்கள சப்பாத்தி மாறியே தேய்ச்சு, கத்தி வச்சு கன்னாபின்னான்னு கட் பண்ணிக்குங்க.(கத்தி-கபடாவெல்லாம் யூஸ் பண்ணைல பத்தரமா செய்யோணும்,இல்லைன்னா சப்பாத்திக்கு பதிலா கைய வெட்டிக்குவீங்க,சாக்கிரதை!)

ஒரு முள்ளு கரண்டி அதுதான் ஃபோர்க் எடுத்து கட்பண்ணி வச்ச மாவுத்துண்டுகளை எல்லாம் சொம்மா குத்துகுத்துன்னு குத்திவிடுங்க.
(எதுக்கு குத்தோணும்?அப்புடியே எடுத்து எண்ணெயில போடலாமேன்னு உங்களுக்கு ஒரு கேள்வி வரோணுமே? வந்துருச்சா? கரெக்ட்டு..அதுக்கு பதில் வந்துகிட்டே இருக்கு!)

கன்னாபின்னான்னு வெட்டி குத்தி குதறி,சாரி,டங் ரோல் ஆகிருச்சி..நறுக்கி வைச்சிருக்கற மாவுத்துண்டுகளை கவனமா எடுத்து ஒரு தட்டத்துல வைச்சுக்குங்கோ.

அதுக்குள்ள எண்ணெய் காஞ்சிருக்கும். அடுப்பை ரெம்ப லோ ஹீட்டுல வைச்சு எண்ணெய் காயவைச்சு பொரியுங்கோ,அப்பத்தேன் பிஸ்கட்டு மொறூமொறுன்னு வருமாம்!


டடா!! பிஸ்கேட் ரெடியாகிருச்சு!
இப்ப இந்தப் படத்தைப் பாத்தீங்கன்னா அக்கா எதுக்கு முள்ளு கரண்டில குத்தினாங்கன்னு உங்களுக்கே தெரிஞ்சிரும். ;) குத்தாம போட்டா பூரி கணக்கா புஸ்ஸுன்னு வந்திருச்சு பிஸ்கேட்டு. ஹஹ்ஹா!!

எங்களுக்கெல்லாம் ஆளுக்கு 2 குடுக்கலாம்னு இல்லாம,பிஸ்கட்டை டப்பாலே போட்டு மூடி வைச்சிருந்தாங்க.விடுவோமா நாம? நைஸா டப்பாவோட லவட்டிட்டு வந்துட்டம்,எப்புடி?!!! அவ்வ்வ்வ்...பிஸ்கட்லாம் சிந்துதுடா சட்டை போட்ட கரடி,என் முதுகுல இருந்து இறங்கு!

நீங்களும் வாங்களேன்,பிஸ்கட்டு தீர்ந்து போறதுக்குள்ள சாப்புட்டு முடிச்சிரலாம்!
:))))))))))))

Friday, April 1, 2011

கார பன்

இந்த குறிப்பு Sharmi's Passions தளத்திலிருந்து சிலமாற்றங்களுடன் செய்தது. தேங்க்ஸ் பார் தி ரெசிப்பி ஷர்மி!

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு(ஆட்டா மாவு) -11/2கப்
மைதா மாவு-1/2கப்
இன்ஸ்டன்ட் ஈஸ்ட்(Rapid Rise Yeast)-1டீஸ்பூன்
முட்டை-1
சர்க்கரை-1டீஸ்பூன்
உப்பு-1டீஸ்பூன்
பச்சைமிளகாய்-2
கொத்துமல்லி இலை-சிறிது
மிளகாய்த்தூள்-1/2டீஸ்பூன்
பூண்டு-6 பற்கள்
வெள்ளை எள்-1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
தண்ணீர்-1/2கப்

செய்முறை
1/4கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட்-சர்க்கரை-உப்பு சேர்த்து நன்றாக கரைத்து (ஈஸ்ட் கரைந்து நுரைக்கட்டும்வரை) 5நிமிடங்கள் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மாவுகள்,பொடியாக நறுக்கிய ப.மிளகாய்,மிளகாய்த்தூள்,நசுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக கலந்துகொண்டு,

ஈஸ்ட் கலவை மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மாவைப் பிசையவும். பின்னர் மீதியிருக்கும் தண்ணீரை தேவையான அளவு ஊற்றி நன்றாக பிசையவும்.

மாவு சப்பாத்திமாவைப் போல வந்ததும், ஆலிவ் ஆயிலையும் ஊற்றி நன்றாக பிசைந்து எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாவை வைக்கவும்.

மாவின் மேல்பகுதி முழுவதும் எண்ணெய் தடவி, க்ளியர் ராப் பேப்பரால் பாத்திரத்தைக் கவர் செய்து, மூடி வைக்கவும்.
மாவுப்பாத்திரத்தை சற்றே சூடான இடத்தில் வைக்கவும். 2 மணிநேரம் கழித்து மாவு நன்றாக உப்பியிருக்கும்.
அதனை மீண்டும் நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் வைத்து உருண்டைகளின் மீதும் சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, முட்டையின் மஞ்சள் கருவுடன் கொஞ்சம் நீர் சேர்த்து கலந்து பன்களின் மீது தடவிவிட்டு, எள்ளை தூவிவிடவும்.

375F ப்ரீஹீட் செய்யப்பட்ட அவன்-ல் சுமார் 30-35 நிமிடங்கள் பேக் செய்யவும்.
சுவையான காரபன்கள் ரெடி!
கதைகளில் "அன்ட் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்"னு சுபம் போடுவது மாதிரி "டீயுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்"-னு இந்தக்கதையை முடிப்பேன்னு பார்க்கறீங்களா? இல்லையே!!!
அடுத்த பகுதி விரைவில் தொடரும்.வெய்ட் அன்ட் ஸீ!!

:))))))))))


LinkWithin

Related Posts with Thumbnails