இந்த வருஷம் வசந்தம்(மார்ச் 20) வருவதற்கு ஒரு நாள் முன்பாகவே ஹோம் டிப்போ-விலிருந்து மலர்ச்செடிகளை வீடு சேர்த்துவிட்டேன். :) கடைக்குள் நுழைந்ததும் கண்ணைக் கவர்ந்து மனதைக் கட்டிப்போடும் வண்ணம் வண்ண வண்ணப் பூக்கள்!! எதை வாங்க எதை விட என ஒரே குழப்பம்..எல்லாவற்றையும் வாங்கிப்போய்விடலாமா என அலைபாயும் மனம்..வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் தொட்டில்ப்பூவை நினைத்து அவசரஅவசரமாக வாங்கிவந்த மலர்ச்செடிகள்தான் நீங்கள் பார்ப்பவை! Viola, Marigold, Snapdragon, Poppy, Matthiola என்று 5 வகை மலர்கள் வீடு வந்தன.
இந்தப் பதிவில் வயோலா மலர்களின் படங்களைப் பகிர்கிறேன். பல பூக்கள் இருந்தாலும், இந்த வயோலா பூக்களின் மீது ஏதோ ஒரு தனிப்பாசம்! ;) அவற்றைப் பார்க்கையில் "pug" வகை பைரவர்களின் முகச்சாயல் தெரியும் எனக்கு. மனித முகம் போல இருப்பதாகவும் தோன்றும் சில நேரங்களில்..
மஞ்சள், வெள்ளை, ஆரஞ்ச்+வயலட் என பல நிறங்களில் வயோலாக்கள் இருந்தன. வழக்கம் போல குழம்பித் தெளிந்து வெள்ளைப் பூக்களும், இரு வண்ணப் பூக்களும் வாங்கிவந்தேன்.
பூத்தொட்டியில் சில கேரட் செடிகள் வளர்வதைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன், புதுச் செடிகள் நடுகையில் அவற்றைப் பறித்தபோது...
3 கேரட்டுகள் கிடைத்தன! :)
இந்தப் பதிவில் வயோலா மலர்களின் படங்களைப் பகிர்கிறேன். பல பூக்கள் இருந்தாலும், இந்த வயோலா பூக்களின் மீது ஏதோ ஒரு தனிப்பாசம்! ;) அவற்றைப் பார்க்கையில் "pug" வகை பைரவர்களின் முகச்சாயல் தெரியும் எனக்கு. மனித முகம் போல இருப்பதாகவும் தோன்றும் சில நேரங்களில்..
மஞ்சள், வெள்ளை, ஆரஞ்ச்+வயலட் என பல நிறங்களில் வயோலாக்கள் இருந்தன. வழக்கம் போல குழம்பித் தெளிந்து வெள்ளைப் பூக்களும், இரு வண்ணப் பூக்களும் வாங்கிவந்தேன்.
படங்களில் மற்ற பூக்கள் தெரிந்தாலும், வயோலாக்கள் மட்டுமே என் கண்ணுக்குத் தெரிகின்றன! ;) அடுத்து வரும் படத்தில் கூடவே வெங்காயத்தாள் நாற்றுகள் தெரிகின்றன..அது கண்ணில் பட்டதும் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்ற ஆரம்பிக்கிறது மனது!
கடையிலிருந்து வாங்கி வந்த வெங்காயத்தாள்களின் வேரை மட்டிலும் நட்டு வைத்து தளிர்த்தவை அறுவடை செய்யப்பட்டு ஒரு ஃப்ரைட் ரைஸில் உபயோகமும் படுத்தப்பட்டன.
இப்போது மீண்டும் துளிர்த்த நாற்றுகளில் மொட்டுகள் கட்டியிருக்கின்றன. வெங்காயத்தாளை இப்போதே பறித்துக்கொள்ளலாம் அல்லது இனி பூக்கள் மலர்ந்தபின் விதைகள் எடுக்கலாம், அத்தோடு சில காலம் கழித்த பின்னரே மீண்டும் வெ.தாள்கள் கிடைக்கும் என்று தகவல் கிடைத்தது. அனேகமாக வெங்காயப்பூக்கள் மலரும் என்றே நினைக்கிறேன், இன்னும் செடிகளைப் பறிக்கவில்லை.
இறுதியாக மீண்டும் ஒரு வயோலா க்ளோஸ்-அப் உடன் பதிவை நிறைவுசெய்கிறேன். நன்றி! :)