Tuesday, October 21, 2014
Friday, October 17, 2014
மலர்களே..மலர்களே!
ஆரஞ்சு நிறத்தில் பூத்திருக்கும் இந்த
அழகுப்பூக்களை "இட்லிப் பூ" எனச் சொல்வோம் எங்களூரில்! :)
இது அரளிப்பூ..பட்டிப்பூ என்று பண்ருட்டிப் பக்கம் சொல்வதாக அறிந்தேன்! :)
இங்கே வீட்டில் ஜாதிமல்லி பூக்கையில் வீடியோ எடுத்து இணைக்க முயல்கிறேன். இப்போதைக்கு இப்படங்கள் மட்டுமே!
வீட்டில் தோட்டம் போடுகையிலேயே பவளமல்லி வைக்கவேண்டும் எனச் சொல்லி, அவர்களும் வைத்து பவளமல்லி சிறு மரமாக வளர்ந்திருக்கிறது. பூக்களும் நிறையப் பூக்கின்றன.
கிண்ணம் நிறையப் பூவைப் பறித்து..
ஒரு பூக்குட்டியின் கையில் கொடுத்தால் என்னாகும்??...
~~~
கோவையின் வண்ண மலர்களை ரசித்தமைக்கு நன்றிகள்! முதலிரு படங்களும் திருப்பூர்ப் பூக்கள், படமெடுத்ததும் நானில்லை..லயாவின் அப்பா! :) மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம், நன்றி!
அழகுப்பூக்களை "இட்லிப் பூ" எனச் சொல்வோம் எங்களூரில்! :)
இது அரளிப்பூ..பட்டிப்பூ என்று பண்ருட்டிப் பக்கம் சொல்வதாக அறிந்தேன்! :)
மல்லி, முல்லை, ஜாதிமுல்லை...
இவையெல்லாமே என் அம்மா வீட்டிலிருந்து..
மல்லியும் ஜாதிமல்லியும் ஏற்கனவே வைத்திருந்தார்கள்..முல்லைக்கொடி மட்டும் இல்லாதிருந்தது. இந்த முறை வாங்கி வைத்துவிட்டு வந்திருக்கிறோம், அடுத்த முறை ஊருக்குப் போகையில் முல்லைச்சரம் தொடுத்துவிடலாம்!
பூச்சரத்தைக் கையில் கட்டுவது வழக்கமாய்ச் செய்வது..மாற்றாக, நீளமான காம்புள்ள பூக்களை காலிலும் கட்டலாம். கையால் தொடுப்பதை விடச் சுலபமானது இம்முறை..வண்ணமயமான எம்ப்ராய்டரி நூல்களிலோ, பட்டு நூல்களிலோ கட்டும்போது பூச்சரத்தின் அழகு கூடும். இந்த முறை கொஞ்சம் நேரப்பற்றாக்குறை இருந்ததால் சும்மா 2 படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலேயுள்ள படம் பூச்சரத்தின் முன்பகுதி..அடுத்துள்ள படம் சரத்தின் மறுபக்கம்.இங்கே வீட்டில் ஜாதிமல்லி பூக்கையில் வீடியோ எடுத்து இணைக்க முயல்கிறேன். இப்போதைக்கு இப்படங்கள் மட்டுமே!
வீட்டில் தோட்டம் போடுகையிலேயே பவளமல்லி வைக்கவேண்டும் எனச் சொல்லி, அவர்களும் வைத்து பவளமல்லி சிறு மரமாக வளர்ந்திருக்கிறது. பூக்களும் நிறையப் பூக்கின்றன.
கிண்ணம் நிறையப் பூவைப் பறித்து..
ஒரு பூக்குட்டியின் கையில் கொடுத்தால் என்னாகும்??...
இதுதான் ஆகும்! :) ;)
லயாவிற்கு பவளமல்லிப் பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்பதும், நசுக்கிப் பார்ப்பதும், பிய்த்து எறிவதும் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது!~~~
கோவையின் வண்ண மலர்களை ரசித்தமைக்கு நன்றிகள்! முதலிரு படங்களும் திருப்பூர்ப் பூக்கள், படமெடுத்ததும் நானில்லை..லயாவின் அப்பா! :) மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம், நன்றி!
Friday, October 10, 2014
நலம்..நலமறிய ஆவல்!
அவ்வப்பொழுது இந்த வலைப்பூ பக்கம் வந்து போகும் அனைவரின் நலமும் அறிய ஆவல். [ நாங்க நலம். நன்றி! :)]
ஊருக்கு போயிட்டு வந்தாச்சுங்க, ஆனா ப்ளாக் பக்கம் வரலை..வர முடியலை..முடியலை..முடியலை! ;)
சற்றே நீண்ட விடுமுறையாக கோவை போனாலும் நாட்கள் படுவேகமாக, படு பிஸியாக ஓடிவிட்டன.
கோவை ரோட்டோரக் கடையிலிருந்து சுடச்சுட வடை & சட்னிகள்! சாப்பிடுங்க..
முதல் படத்திலும், மேலே உள்ள படத்திலும் உள்ள பூக்கள் அம்மா வீட்டிலிருந்து..
~~~
அவ்வப்போது வலைப்பூக்களை எட்டிப் பார்த்தாலும் கருத்துக்கள் தரும் அளவு நிதானமாகப் பார்க்க முடிவதில்லை. பகிர்வதற்கு நிறைய இருந்தாலும், அதற்கு நேரம் அனுமதிக்கவில்லை! ஆனாலும் அவ்வப்பொழுது இங்கே வர முயல்வேன். இது அதற்கு ஒரு உதாரணப்பதிவு. :)
இந்தப் படத்தில், கோவையில் வீட்டருகே உலாவிய அம்மாவும் குட்டியும்..
நான் பிஸியாக இருப்பதற்கும் இந்தப் படத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை..இல்லை.. இல்லை என ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்ம்ம்ம்ம்!!!!
Subscribe to:
Posts (Atom)