தோசையில் உளுந்துக்கு பதிலாக கொள்ளு சேர்த்து செய்த தோசை, இட்லி அரிசி/புழுங்கல் அரிசிக்கு பதிலாக "கைக்குத்தல் அரிசி"/ப்ரவுன் ரைஸ் சேர்த்து செய்தது இந்த தோசை. எப்படியும் இட்லி தோசைய நம்ம டயட்-ல இருந்து விலக்க முடியாது என்று இருப்பதால.. அட்லீஸ்ட் கில்ட் ஃப்ரீயாச் சாப்பிடலாமே!! எங்க வீட்டில வாரத்துக்கொருமுறை இந்த தோசையும், கீன்வா-ப்ரவுன் ரைஸ் தோசையும் மாற்றி மாற்றி இடம் பிடிக்கின்றன இப்போது. நீங்களும் செய்து பார்த்துச் சொல்லுங்களேன்!
தேவையான பொருட்கள்
ப்ரவுன் ரைஸ் - 2 கப்
வெந்தயம்-1டீஸ்பூன்
கொள்ளு-1/2கப்
உப்பு
செய்முறை
1. ப்ரவுன் ரைஸ், வெந்தயம் இரண்டையும் நன்றாக 2-3 முறை களைந்து சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. கொள்ளையும் நன்றாக களைந்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும்.
3. க்ரைண்டரில் கொள்ளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும். மாவு சும்மா பொங்கிப் பொங்கி வந்தது. க்ரீம் மாதிரி எப்படி நிற்குது பாருங்க கிண்ணத்தில்!! ;)
4. கொள்ளை சுமார் 20 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும்.5. அரிசி-வெந்தயத்தையும் தேவையான தண்ணீர் விட்டு நன்கு அரைத்தெடுத்து கொள்ளுடன் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து புளிக்க விடவும்.
6. மாவு புளித்ததும் கொஞ்சம் மாவை எடுத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலந்து தோசைகளாக வார்க்கவும்.
7. சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
8. சுவையான கொள்ளு தோசை தயார். நல்ல காரசாரமான சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு
ஊறிய கொள்ளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தும் அரைக்கலாம்..நன்றாக மாவு காணும்.
இந்த மாவில் இட்லி செய்ய முடியாதா எனக் கேட்பவர்களுக்கு...நான் செய்து பார்க்கலை, அதனால் தெரியவில்லை. ;) :)
இந்த தோசைக்கு தேங்காய்ச்சட்னியை விட, நல்ல புளிப்பான தக்காளிச் சட்னி, அல்லது காரசாரமான சட்னி, குழம்புவகைகள் நன்றாக இருக்கும்.