எல்லாரும் நல்லா இருக்கீங்களா? நாந்தான் தக்காளி பேசறேன்....நலம், நலமறிய ஆஆஆஆஆவல்!! :)))))
என் பேரு பேபி டொமாட்டோ (எ) தக்காளி! எனக்கு இம்பூட்டு அயகான பேரை வச்சது எங்க வீட்டு லயா பேபி! ;) ;)
பூச்செடி வாங்க நர்சரிக்கு வந்தவங்க கண்ணில தளதளன்னு இருந்த நானும் கண்ணில படவே என்னையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. தக்காளிச்செடியே வாங்கக்கூடாதுன்னு முடிவுல இருந்தவுகளையும் மயக்கி, வீட்டுக்கு வந்தவளாக்கும் நானு! B-)
வீட்டுக்கு வந்த சிலநாள் நானும் தொட்டியிலயே இருந்தேன்..அப்புறமா தரையை (ரொம்ப கஷ்டப்பட்டு) தோண்டி, எனக்கு ஒரு புது வீடு கட்டி கொடுத்தாங்க. பார்க்க துளசி மாடம் மாதிரியே அயகான வீடு! எனக்கும் வீடு நல்லா புடிச்சுப்போச்சு...பூ பூத்து ஒரு (ஒரே ஒரு) பிஞ்சும் வளர்த்தேன்.
செடியிலே ஒரே ஒரு காய்தான் இருக்குன்னதும், நிறைய காய் வர டெக்னிக்கு, அப்படீன்னு என்னோட இலைகளை எல்லாம் சரிபாதியா வெட்டி விட்டாங்க..அது மட்டுமா?? டெய்லி வந்து என்னை சுண்டி சுண்டி விட்டாங்க...அவ்வ்வ்வ்வ்!!! வலிக்க்க்க்க்கும்..ஹூம்!! எங்க வலியெல்லாம் ஆருக்கு புரியுது??! அம்மா வந்து சுண்டி விடறதும், என்னோட வலிக்கு மருந்து போடற மாதிரி பேபி லயம் வந்து "ஹாய் பேபி டொமாட்டோ!" அப்படின்னு சொல்லுறதுமா சில நாட்கள் போனது.
என்னதான் எண்ணையத் தடவிட்டு புரண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும்ன்றமாதிரி நான் ஒரே ஒரு தக்காளிதான் வளத்தேன். ஹிஹி..!! அந்த ஒரு தக்காளியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளர்ந்துச்சு. முகம் சிவந்துச்சு, பழுத்துச்சு..!! :)
தக்காளி பழுத்தாச்சு...பேபி வந்து பறிச்சாச்சு...அரிஞ்சு சமைச்சு சாப்ட்டும் ஆச்சு!! :D
இப்படியாக ஒரு முறைக்கு ஒரு தக்காளியாக எங்க வீட்டு தக்காளிச்செடி காய்ச்சுக்கொண்டு இருக்கிறாள். இரண்டாவது பழம் பழுத்தாச்சு! மூணாவது பிஞ்சும் வந்திருக்கு. யாருப்பா அங்க...கிலோ கணக்கில தக்காளி பறிக்கிறவங்க எல்லாம் எங்க தக்காளிப்பொண்ணைப் பாத்து கண்ணு போடாதீங்க!! அக்காங்க்க்க்க்க்க்க்க்க்க்!! ;) :)