மதிய உணவுக்கு அவசரமாக ஏதாவது சுவையாகச் சமைத்து சாப்பிடலாமே என்று தோன்றுகையில், குக்கரில் ஒரே சாதமாக தாளிச்சு விட்டு 3 விசில் விட்டு இறக்கினால் போதும் என்ற உணவுவகைகள்தான் என் சாய்ஸ்..அஃப்கோர்ஸ், வீட்டில் ஒரு பிரியாணி பிரியர் இருப்பதால் வெஜிடபிள் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, கொண்டைகடலை பிரியாணி, தக்காளி பிரியாணி, மீல்மேக்கர் பிரியாணி என போட்டியாளர்கள் நிறைய இருந்தாலும், அதிக காரம்-மசாலா இல்லாத இந்த கிச்சடி இப்ப அடிக்கடி எங்க வீட்டில் இடம்பிடிக்கிறது. பிரியாணி பிரியரே விரும்பி சாப்பிடுகிறார்னா பாத்துக்கோங்க..!! ;) :)
அதுவும் இல்லாமல் பிரியாணி செய்தால் ரைத்தா இருக்கா என ஒரு கேள்வி வேற!! அவ்வப்பொழுது, எனக்கே கை அடங்காம, கத்தரிக்காய் க்ரேவி, மிர்ச்சி கா சாலன் இப்படி எதாவது சைட் டிஷ்-ஐ இழுத்து விட்டுக்கொள்வதும் நடக்கும். அவற்றிலிருந்து எஸ்கேப் ஆக இந்த கிச்சடி கை கொடுக்கிறது. இந்த கிச்சடிக்கு "பத்லா கடி" என்ற நார்த் இண்டியன் மோர் குழம்பு நல்லா இருக்கும் என்று ரெசிப்பில சொல்லிருந்தாலும் எங்களுக்கு அது கூட தேவையில்லை, அப்படியே சாப்பிட்டுடுவோம்! ;) :p
இந்த கிச்சடிக்கு விருப்பமான காய்கள் சேர்க்கலாம் என்றாலும் மிக முக்கியமான காய், குடைமிளகாய்..அதுவும் கலர் மிளகாய்கள் இருந்தால் ருசியும் வாசனையும் அருமையா இருக்கும். குடைமிளகாய் இல்லைன்னா கிச்சடி செய்யவே ஆரம்பிக்காதீங்க! ஹிஹி...!!...
அப்புறம் படத்தில் இருக்க குடைமிளகாய், தக்காளி மற்றும் பீன்ஸ் நம்ம வீட்டில காய்ச்சது..அதனால ருசி இன்னும் கொஞ்சம் அமோகமா இருந்துச்சு!! :))))
தேவையான பொருட்கள்
காய்கறிகள்
கேரட் - 1
பீன்ஸ் - ஏழெட்டு
குடைமிளகாய், சிறியதாக - 1 (அல்லது 2 வண்ணங்களில் பாதி பாதி)
பச்சை பட்டாணி - கால்கப்
உருளை கிழங்கு (சிறியதாக) - 1
தக்காளி (சிறியதாக) -1
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பற்கள்
உப்பு
பச்சரிசி/பாஸ்மதி அரிசி - 1கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு/லவங்கம் -2
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு- 8
வரமிளகாய் -1
பிரியாணி இலை
கறிவேப்பிலை - கொஞ்சம்
கடைசியில் சேர்க்க
நெய் -1 டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப சேத்துக்கலாம்!! ;))
செய்முறை
அரிசி-பருப்பை களைந்து ஊறவைக்கவும். 20 நிமிடங்களாவது ஊறினால் நல்லது.
காய்களை கழுவி ஒரே அளவாக நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி-பூண்டை தட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து சீரகம், மிளகு, பட்டை கிராம்பு தாளித்து, வர மிளகாயையும் கிள்ளி சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு தட்டியது சேர்த்து வதக்கவும்.
ஒரிஜினல் ரெசிப்பி இங்கே..அதென்னவோ காமாட்சி அம்மாவின் சமையல்கள் எனக்கு கடந்த சில வருஷங்களாக தொடர்ந்து செய்து சுவைக்கும்படியாகவே அமைந்து கொண்டிருக்கின்றன. நன்றிம்மா!! :)
குறிப்பு
டைட்டில்-ல "ஜெயின் கிச்சடி" என இருந்தாலும், இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி அல்ல, இஞ்சி-பூண்டு, வெங்காயம் இவையெல்லாம் சேர்க்காமல் செய்தால் அதுவே ஜெயின் கிச்சடி. விருப்பமுள்ளோர் அப்படியும் செய்து பார்க்கலாம். :) நேரமிருந்தா இங்கேயும் எட்டிப் பாருங்க. இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி - கடி ஜோடி!
அதுவும் இல்லாமல் பிரியாணி செய்தால் ரைத்தா இருக்கா என ஒரு கேள்வி வேற!! அவ்வப்பொழுது, எனக்கே கை அடங்காம, கத்தரிக்காய் க்ரேவி, மிர்ச்சி கா சாலன் இப்படி எதாவது சைட் டிஷ்-ஐ இழுத்து விட்டுக்கொள்வதும் நடக்கும். அவற்றிலிருந்து எஸ்கேப் ஆக இந்த கிச்சடி கை கொடுக்கிறது. இந்த கிச்சடிக்கு "பத்லா கடி" என்ற நார்த் இண்டியன் மோர் குழம்பு நல்லா இருக்கும் என்று ரெசிப்பில சொல்லிருந்தாலும் எங்களுக்கு அது கூட தேவையில்லை, அப்படியே சாப்பிட்டுடுவோம்! ;) :p
இந்த கிச்சடிக்கு விருப்பமான காய்கள் சேர்க்கலாம் என்றாலும் மிக முக்கியமான காய், குடைமிளகாய்..அதுவும் கலர் மிளகாய்கள் இருந்தால் ருசியும் வாசனையும் அருமையா இருக்கும். குடைமிளகாய் இல்லைன்னா கிச்சடி செய்யவே ஆரம்பிக்காதீங்க! ஹிஹி...!!...
அப்புறம் படத்தில் இருக்க குடைமிளகாய், தக்காளி மற்றும் பீன்ஸ் நம்ம வீட்டில காய்ச்சது..அதனால ருசி இன்னும் கொஞ்சம் அமோகமா இருந்துச்சு!! :))))
தேவையான பொருட்கள்
காய்கறிகள்
கேரட் - 1
பீன்ஸ் - ஏழெட்டு
குடைமிளகாய், சிறியதாக - 1 (அல்லது 2 வண்ணங்களில் பாதி பாதி)
பச்சை பட்டாணி - கால்கப்
உருளை கிழங்கு (சிறியதாக) - 1
தக்காளி (சிறியதாக) -1
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பற்கள்
உப்பு
பச்சரிசி/பாஸ்மதி அரிசி - 1கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு/லவங்கம் -2
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு- 8
வரமிளகாய் -1
பிரியாணி இலை
கறிவேப்பிலை - கொஞ்சம்
கடைசியில் சேர்க்க
நெய் -1 டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப சேத்துக்கலாம்!! ;))
செய்முறை
அரிசி-பருப்பை களைந்து ஊறவைக்கவும். 20 நிமிடங்களாவது ஊறினால் நல்லது.
காய்களை கழுவி ஒரே அளவாக நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி-பூண்டை தட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து சீரகம், மிளகு, பட்டை கிராம்பு தாளித்து, வர மிளகாயையும் கிள்ளி சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு தட்டியது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு காய்களை சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கிவிட்டு, ஊறிய அரிசி-பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ருசிக்கு உப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் விடவும். (ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர்..கொஞ்சம் குழைவாக இருக்கும் இந்த கிச்சடி)
குக்கரை மூடி , மிதமான தீயில் 3 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். ஆறிய பிறகு சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும்.
இதனுடன் ஜோடியாக பத்லா கடியும் செய்தேன், ஆனால் அது திரும்பி கூட பார்க்கப்படாமல் தங்கிவிட்டது. ;)ஒரிஜினல் ரெசிப்பி இங்கே..அதென்னவோ காமாட்சி அம்மாவின் சமையல்கள் எனக்கு கடந்த சில வருஷங்களாக தொடர்ந்து செய்து சுவைக்கும்படியாகவே அமைந்து கொண்டிருக்கின்றன. நன்றிம்மா!! :)