அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு "Raised Bed" Garden -ஐ உருவாக்கி, காய்கறிகள் வளர்க்கலாம் என ஆர்வத்தோடு செடிகள் வாங்கபோனால்...இந்தியக்காய்கறிகள் எல்லாம் கோடை விரும்பிகள், குளிர்காலத்தில் வரும் காய்கறிகள்தான் இப்போது வளர்க்கவேண்டும் என உரைத்தது. ;) :) சரி பரவாயில்லை என்று வாங்கி வந்து அப்படி இப்படி என்று அவையும் வளர்ந்து அறுவடையும் செய்த பின்னர் ஒரு பகிர்வு.
மேலே படத்தில் நர்ஸரியிலிருந்து வந்து மண்ணில் நட்ட உடன், நாற்றுகள்..வலப்புற ஓரத்தில் இருப்பதுதான் ப்ரோக்கலி நாற்றுகள். சுமார் ஒரு மாதம் ஆனபின் செடிகள் உயிர் பிடித்து வளர ஆரம்பித்த போது..
அடுத்த ஒரு மாதமும் கடந்தது..செடிகள் செழித்து வளர்ந்தன. காய் பிடிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவரவில்லை...
திடீரென்று ஒரு நாள் காலை பார்க்கையில்..
நட்டிருந்த அரை டஜன் ப்ரோக்கலி நாற்றுகளிலும் குட்டிக்குட்டியாய்ப் ப்ரோக்கலி மொட்டுக்கள் வந்திருந்தன..!! :) :D :)
நாட்கள் நகர நகர ப்ரோக்கலி மொட்டுக்கள் அழகான :) ப்ரோக்கலி-யாக வளர ஆரம்பித்தன..
இன்னுங்கொஞ்சம் ப்ரோக்கலி மொட்டுக்கள் பெரிதானதும், கட்டுக்கள் போட்டு, காய் முற்றும் வரை பத்திரப்படுத்துவோம் என நினைத்திருந்த நேரம் ..
மழை வந்தது..வெளியே கால் வைக்க முடியாத அளவு சேறு, குளிர்..எல்லாம் காய்ந்து எட்டிப்பார்க்கையில்...
அணில்பிள்ளைகள் வந்து தம் கைவரிசையைக் காட்டிப்போயிருந்தார்கள்!! :( :) :(
மீதமிருந்த காய்களை செடியின் இலைகளால் மூடி ரப்பர் பாண்ட் போட்டு கட்டி வைத்தோம்..அடுத்த நாள் பார்க்கையில்,
அழகாக ரப்பர் பாண்டை- பிரித்து உள்ளே இருந்த ப்ரோக்கலிப் பிஞ்சு சுவைக்கப்பட்டிருந்தது!!! :) :) :( :) இலைகளும் விட்டு வைக்கப்படவில்லை!! அவ்வ்வ்வ்வ்......!!
ஆக மொத்தம் அணில்களும் நாங்களுமாக 50-50அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு, ஆளுக்கு மூன்று என்ற வகையில் ப்ரோக்கலிகளைப் பிரித்துக்கொண்டோம். மூன்றில் ஒரு ப்ரோக்கலி, முழுவதுமாக முற்றுமுன் பொங்கலுக்கு அறுவடை செய்யப்பட்டது. மீதமிருந்த இரண்டு காய்கள்..
நேற்று ஒன்றை பறித்து ...
வளைச்சுக்கட்டி ஃபோட்டோ எடுத்துட்டு...
சமைச்சுச் சாப்பிட்டாச்சு!! :))))
கடைகளில் வாங்கும் ப்ரோக்கலியை விட அருமையான சுவையில் சூப்பராக இருந்தது. நம்ம வீட்டில வளர்த்து, அணிலுக்கும் கொடுத்து நாமும் சாப்பிடும் சுவையே தனிதான்!!
அக்டோபர் முதல் வாரம் நட்டு, ஜனவரி 26ஆம் தேதி அறுவடை செய்திருக்கிறோம், இன்னுங்கொஞ்சம் முன்னதாகவே பறித்திருக்கலாம்! ரீசண்ட்டாக (எங்களுக்கு) அறிமுகமான ஒரு காயை வீட்டிலேயே வளர்த்து சமைச்சு சாப்பிடுவது ரொம்ப சந்தோஷமான அனுபவம்!! :) உங்களுக்கு முடியுமெனில் முயற்சித்துப் பாருங்களேன்!!