சரியாக ஒரு வருடம் முன்பு இந்த வலைப்பூவில் பதிவிட்டது..ஓராண்டு காலம் ஓடியது தெரியாமல் ஓடிப்போய்விட்டது..இதற்கு மேலும் இங்கே வராமல் இருந்தால் அப்படியே விட்டுவிடுவேனோ என்ற பயம் உந்தித் தள்ளி, ஒருவழியாய் வந்துவிட்டேன்!! :)
நாட்களும் வாரங்களும் மாதங்களும் நிற்க நேரமில்லாமல் கடக்கின்றன..ஒரு நொடியும் யோசிக்க நேரமில்லாமல் என் நேரத்தை பங்குபோட்டுக்கொள்ள என் குட்டிப்பெண்களும் நாலுகால் பையனும் இருப்பதால் அவர்களோடு நானும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்..இன்னும் சில ஆண்டுகள் இந்த ஓட்டம் தொடரும்! அதனூடே இங்கேயும் அவ்வப்போது எதாவது செய்யலாம் (கவனிச்சு படிங்க..என்ன செய்வேன்னு நான் சொல்லவேயில்ல...அது சமையலா இருக்கலாம்..என் மனங்கவர்ந்த பூக்களா இருக்கலாம்..உங்களை கலங்கடிக்கும் மொக்கையா இருக்கலாம்...எதுவா வேணாலும் இருக்கலாம்...ஹிஹி...)
இந்த குருவிக்கூட்டம் இந்த மே மாதம் சுற்றுலா சென்ற இடத்தில் இருந்து வாங்கி வந்தது..குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கும் ஆளுக்கொரு குருவி. ;) பார்க்க நிஜ குருவிகள் போலவே தத்ரூபமாக இருக்கின்றன..அதனால அவங்களுக்கு தானியங்கள் வச்சுக் குடுத்து உட்கார வைச்சிருக்கோம்.
சம்பந்தமே இல்லாம மாம்பழம், ரோசாப்பூ, குருவி அப்புறம் ஒரு பொங்கல்-சட்னி-கொத்சு படம்ன்னு கலந்துகட்டி ஏதோ போட்டிருக்கேன்...அஜீஸ் ;) பண்ணிக்கோங்க. முதல் படம் இந்தக் கோடையின் மாம்பழம்..இரண்டாவது எங்க வீட்டு அழகு ராணி..மூணாவது குருவிக்கூட்டம், நாலாவது சாமை பொங்கல், சுரைக்காய் கொத்சு, தேங்காய்ச் சட்னி.
நன்றி, வணக்கம்!! விரைவில் மீண்டும் பார்க்கலாம்!! :) :)))