நேற்றுதான் எங்க வீட்டு குட்டி தேவதையின் வரவை உங்களுடன் பகிர்ந்த மாதிரி இருக்கிறது, ஆனால் அதற்குள் முழுதாக ஐந்து ஆண்டுகள் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்துவிட்டன!!
இப்ப்பொபொழுது அந்த குட்டி தேவதை அக்கா தேவதையாகவும் மாறிவிட்டாள்..தன் பிறந்தநாளுக்கு என்னென்ன வேண்டும் என தெளிவாக அறிவிக்கவும் ஆரம்பித்துவிட்டாள்.
:) :) :)
15ஆம் தேதி வியாழக்கிழமையானதால், சிம்பிளாக ஒரு குக்கீ கேக் வாங்கி நாங்க 5 பேர் மட்டும் 5வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு பள்ளி சென்றாயிற்று.
வாரக்கடைசியில் ஒரு ப்ரின்ஸஸ் கேஸல் வாடகைக்கு எடுத்து,
"ஸ்கை" நாய்க்குட்டி படம் போட்ட கேக் வாங்கி, அவளின் நண்பர்களை எல்லாம் அழைத்து விளையாடி, உண்டு மகிழ்ந்து கொண்டாடியாயிற்று.
சின்னக் குட்டி தேவதை கேக் வெட்ட ஆர்வமாக இருந்தார்..ஆனால் நித்திராதேவி கேக் வெட்டும் நேரத்தில் அவரை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள..பின்மாலையில் எழுந்து கேக்கை சுவைத்தார். ;) :)
அப்புறம், முதல் படத்தில் இருக்கும் அந்த டெடி இதோ இந்தப்படத்தில் இருப்பதேதான்..லயா பிறந்தபொழுது இதே படத்துடன் தான் பதிவிட்டிருந்தேன்..அதனால் இப்பவும் அதே டெடி..பலூன் வேற!! B-) :-)