
முழுசு முழுசா டர்க்கிய வாங்கி அதை அப்படியே டீப் ப்ரை பண்ணறாங்க, அல்லது ஸ்டஃப் பண்ணி bake பண்ணறாங்க. ரோஸ்டட் டர்க்கி, mashed பொட்டைட்டோ & க்ரேவி, க்ரான்பெரி ஸாஸ், பம்கின் பை, க்ரீன் பீன்ஸ் கேஸரோல் இதெல்லாம் ரெகுலரா தேங்க்ஸ்கிவிங் டே டின்னர்ல இருக்கும் போல. எங்கெங்கேயோ சிதறி கிடக்கும் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் ஒரு வீட்டில் கூடி சமைத்து, டைனிங் டேபிளில் அலங்கரித்து வைத்து, சந்தோஷமா சாப்பிட்டு வீகெண்டை கழிக்கிறாங்க. டேபிள் அலங்காரம் என்ற பேர்ல இதுபோன்ற வினோதங்களும் நடக்குது!:):)))))

~~
வியாழக்கிழமை நல்லா சமைச்சு சாப்பிட்டு முடிச்சு ப்ளாக் ப்ரைடே அன்று அஃபிஷியலா இந்த வருஷம் கிறிஸ்மஸுக்கு ஷாப்பிங்கை தொடங்குது..எல்லாக் கடைகளும் அன்னிக்கு தள்ளுபடி டீலாப் போட்டுத் தாக்கறாங்க! குறிப்பா சொல்லணும்னா எலக்ட்ரானிக் சாதனங்கள்,வீடியோ கேம்ஸ் இவைதான் விற்பனையில் முதலிடம் பிடிக்குது.இந்த கருப்பு வெள்ளிக்கு வரலாறுன்னு பார்த்தம்னா பலவருஷங்களுக்கு முன்பு தங்கம் விலை பாதாளத்துக்கு விழுந்து, பங்கு சந்தைகளும் படுத்து எல்லா வியாபாரமும் நஷ்டத்தில் ஓடிட்டு இருந்ததாம். அப்ப நஷ்டக்கணக்கை சிவப்பு இங்கில் எழுதிட்டு இருந்திருக்காங்க. நிலைமை சீராகி, ஒரு வெள்ளிக்கிழமையில் லாபம் வர ஆரம்பித்ததும் லாபக்கணக்கை கருப்பு இங்கில் எழுத ஆரம்பித்தாங்களாம். அதனால் அந்த வெள்ளிக்கிழமைய "Black Friday"ன்னு சொல்லி, வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த ஒரு நாள் எல்லாப் பொருட்களும் விலை குறைத்து தருவதாக சொல்கிறார்கள்.
ஒரு மாதம் முன்பிருந்தே எந்தெந்த கடையில் என்னென்ன பொருள் சிறப்பு விற்பனைக்கு வருதுன்னு ஆன்லைன்ல கணக்கெடுக்கும் மக்கள் வியாழன் நள்ளிரவிலேயே நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடைகளுக்கு முன்னால போய் வரிசையில நின்னுக்கிறாங்க. கடைகளும் நடுராத்திரி, அதிகாலை 4மணின்னு திறந்துடறாங்க. எந்த கடைகண்ணிக்கு போனாலும் ஒழுங்கா கியூவில் நின்று டீசன்ட்டாக ஷாப்பிங் செய்யும் இந்த ஊர்க்காரங்க ப்ளாக் ஃப்ரைடே அன்று தலைகீழா மாறிவிடுவது ஆச்சரியம்! அடிச்சுப்பிடிச்சு உள்ளே போய் தள்ளுவண்டிகளுக்கும் மனிதக்கூட்டத்துக்கும் இடையே நீந்தி பொருட்களை எடுப்பது ஒரு சாகசம் போல இருக்கும்!

இது மட்டும் இல்லை, இன்னொரு வால்மார்ட்டில் யாரோ ஒருவர் துப்பாக்கியில் சுட்டதிலும் பலபேர் காயம் அடைந்திருக்காங்க. அத்தனை கூட்டத்தில் யாரு சுட்டாங்க, எதுக்கு சுட்டாங்கன்னு கண்டுபுடிக்கவா முடியும்? தாக்குதல் நடத்தின ஆளுங்க எஸ்கேப்பாம்..போலீஸ் தேடிட்டு இருக்காங்க. என்ன சொல்றது போங்க!
Shooting at Walmart on Black Friday
இந்த வருஷம் ப்ளாக் ஃப்ரைடேவில் ஏறத்தாழ 226பில்லியன் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குப் போய் 52 பில்லியன் டாலர் பணத்தை செலவழித்து பொருட்கள் வாங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்லுதாம்!!!
~~
இந்த தள்ளு-முள்ளு ஷாப்பிங் ஆர்ப்பாட்டம் பிடிக்காத ஆட்களும் பலபேர் இருப்பதால், அவர்களை அட்ராக்ட் பண்ணுவதற்காக ப்ளாக் ப்ரைடேவிற்கு அடுத்து வரும் திங்கட்கிழமையை "Cyber Monday" என்று ஆன்லைனில் விற்பனை நடக்கிறது. வெள்ளிக்கிழமை விற்பனையை விடவும் 10% குறைவு, ப்ரீ ஷிப்பிங் என்று பல்வேறு கொக்கிகள் போட்டு வாடிக்கையாளர்களை திமிங்கிலமாகப் பிடிக்க திட்டம் போட்டிருக்காங்க. :) அதுவும் நல்லாவே வொர்க் அவுட் ஆகும் போலதான் தெரியுது. சைபர் மண்டேவைப் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் இங்கே க்ளிக்கிப் பாருங்க.
~~
அதெல்லாஞ்சரி..நீங்க என்ன பண்ணீங்கன்னு கேட்டீங்கன்னா...நாங்க இந்த வருஷம் கடைப்பக்கமே போகல.(ஒரு வேளை அதனாலதான் இந்த வன்முறையெல்லாம் நடந்திருக்குமோ?ஹிஹி)..வியாழக்கிழமை நாள் பக்கத்தில இருக்கும் நேஷனல் பார்க் போனோம்..வெள்ளிக்கிழமை நிதானமா பொழுதிறங்க பக்கத்தில இருந்த கடைக்குப் போய் வின்டர் கோட் வாங்கினோம்...சனிக்கிழமை பீச் போய் சன்ஸெட் பார்த்துகிட்டே சாவகாசமா சாப்பிட்டோம்.ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்த மற்ற வேலைகள் பார்க்க சரியா இருந்தது. திங்கட்கிழமை டிவியில் வந்த ப்ளாக்ஃப்ரைடே மேனியா செய்திகளைப் பார்த்ததின் தாக்கமே இந்தப் பதிவு!:)
Thanks for the information collected mahi :) Good one! Nice to know abt the US culture!
ReplyDeleteநானும் நியூஸ் பார்த்தேன். கடைப் பக்கம் கூட்ட நெரிசலில் போற பழக்கம் இல்லை. சிலர் கடை ஏரியாவில் டென்ட் அடிச்சு தங்கி இருப்பார்கள். இந்தக் குளிரில் இதெல்லாம் தேவையா???
ReplyDeleteஇந்த தேங்ஸ் கிவிங் பகிர்வு கூட உங்க ஸ்டைலில் சூப்பர் தான்..பகிர்ந்த விஷ்யங்கள் புதுசு.
ReplyDeleteநம்ம கீதா ஆச்சல் எங்க போனாங்க,ஒரு தடவை நீங்க சொல்லிருக்கிற ரெசிப்பி எல்லாம் சமைத்து டேபிளில் பரத்தி தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாடியிருந்தாங்க.அது இப்ப நினைவிற்கு வருது.
mmm..இவ்வளவு சொல்கின்ற மகி தன்னோட டைனிங் டேபிளையும் அலங்கரித்து பகிர்ந்திருக்கலாம்.:)
ReplyDeleteரொம்பவே நன்றாக இருக்கு. விஷயங்கள் தெளிவாக புரியும்படி இருந்தது. காரண காரியங்கள் வைத்து, கொண்டாட்டங்கள்.கூடவே சில திண்டட்டங்களும்.
ReplyDeleteம்ம்ம்ம்ம்.. தாங்ஸ் கிவிங் டே அமெரிக்காவிலும் கனடாவிலும் மட்டுமே கொண்டாடுகிறார்கள்.... என்னமோ போங்க.... நாங்களும் கும்பலில் கோவிந்தாதான்.... எந்தக் கொண்டாட்டமானாலும் அங்கிருந்தால் கொண்டாடி மகிழ்வது.... அப்படியே பழகிவிட்டது.
ReplyDeleteஅந்த சிக்கினுக்கு குழந்தைமுகம் வைத்தது பார்க்கவே கஸ்டமாக இருக்கு மகி. இப்படியெல்லாம் ஏன் அலங்கரிக்கிறார்களோ.
நல்லா எஞ் ஜோய் பண்ணி, சாப்பிட்ட களைப்பில இருக்கிறீங்க என்பது தெரியுது.... அதுதான் நீங்க ஒண்டும் சமைக்காமல்.... டேக் எவே போல கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))... இடைக்கிடை அதுவும் சுவைதான்:)).
நல்ல விளக்கம் நல்ல பதிவு மகி. சீயா மீயா.
We did online shopping only!!!!
ReplyDelete@வித்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! இங்கே வந்த புதுசில இது என்னன்னு க்யூரியாஸிட்டில தேடிய தகவல்கள் இதெல்லாம்! :)
ReplyDelete**
@வானதி,கரெக்ட்டா சொன்னீங்க! :) கூட்டத்தில போக இப்பல்லாம் வெறுப்பாதான் இருக்கு.ஆனால் கடந்த 2 வருஷம் நாங்களும் ஷாப்பிங் போனோமே! ;)
**
@ஆசியா அக்கா,/தேங்ஸ் கிவிங் பகிர்வு கூட உங்க ஸ்டைலில் சூப்பர் தான்./அவ்வ்வ்வ்வ்! இதில உள்குத்து எதுவும் இல்லையே? ;) ஆமாம்,கீதாவை ப்ளாக் பக்கம் பார்த்தே பலநாளாகுது!
கருத்துக்கு நன்றி ஆசியாக்கா!
**
@ஸாதிகாக்கா,நானே சைவப்பட்சிணி! எங்கிட்டப்போய் டைனிங் டேபிள் அலங்காரத்தைப் பத்தி சொல்றீங்களே! :) தேங்க்ஸ் கிவிங் டேல நாங்க ஒரு பஞ்சாபி ரெஸ்டாரண்ட்ல டின்னர ஒரு புடி புடிச்சிட்டு இருந்தோம்! ஹிஹிஹி!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகாக்கா!
**
@காமாட்சிம்மா,எதுகை மோனைல்லாம் சூப்பரா இருக்கு! நன்றிமா!
**
@அதிரா,/அந்த சிக்கினுக்கு/உது டர்க்கீ!சிக்கின் இல்லை! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! டிவியில் காட்டினாங்க,இப்படி ஒரு அம்மா தன் 4 மாத மகளுக்கு அலங்காரம் செய்திருப்பதா!
/பார்க்கவே கஸ்டமாக இருக்கு /அவ்வ்வ்.......எனக்கு அப்படி ஒன்றும் தெரில,க்யூட்டா இருக்க மாதிரிதான் தெரிந்தது! அதான் அதையும் சேர்த்தேன்,,அந்த டர்க்கி கால்ல பாருங்களேன்,அயகா லேஸ் போட்ட சாக்ஸ்எல்லாம் மாட்டிருக்கு! ;)
/அதுதான் நீங்க ஒண்டும் சமைக்காமல்.... டேக் எவே போல கிடக்கே /எப்புடி அதிரா...எப்புடி? எங்கூடவே இந்த வீகெண்ட் இருந்த மாதிரியே சொல்லறீங்க?:)))))))
நன்றீ அதிரா!
**
@சிவா,என்னது??!!கோவிச்சுகிட்டீங்களா என்ன? ஒரு வார்த்தைல கமென்ட்?!!!!!
தேங்ஸ் சிவா!
**
@சுகந்திக்கா, நீங்க ஆன்லைன் ஷாப்பரா? என்னொட ப்ரெண்ட்ஸும் ஆன்லைன்ல கேமரா,லேப்டாப்,Samsung டேப்லட்னு வாங்கிருக்காங்க!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுகந்திக்கா!
**
I too saw videos of the black friday sale,my god it was so crowded and the people run into the shop like crazy :)
ReplyDeleteவணக்கம், புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
ReplyDeleteமங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
Well written post...glad to know that you had wonderful holidays with your family...so for these 5 years we never went to shops on these days...we do online shopping :))
ReplyDeleteThis year bought DSLR camera n some toys for kids :))
@ராஜி,ஆமாங்க! ஸேல்-னதும் மக்களுக்கு ஒரு வேகம் வந்துடுது!:)
ReplyDeleteநன்றி ராஜி!
**
@சங்கீதா,DSLR வாங்கிட்டீங்களா..இந்த வருஷம் அதுவும் டேப்லட்டும்தான் ஹாட் டீல்ஸ் போல! ;)
கருத்துக்கு நன்றிங்க!
மங்கையர் உலகம்,உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDelete