வெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே உண்டு. காலைநேரத்தில் கோயிலுக்குப் போகையில் மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் இந்த மலர்களை எடுத்துவந்து கோர்த்து சுவாமி படங்களுக்கு போடுவது வழக்கம்.
ஊரில் இருந்தபோது காலை வாக் போகும் நேரங்களில் ஒரு வீட்டு வாசலில் பூத்து உதிர்ந்திருந்த பூக்களை எடுத்துவந்தேன். (உடனே கண்ணை உருட்டாதீங்க, வீட்டம்மா கிட்ட கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சுட்டு, பர்மிஷனும் வாங்கிட்டு(தான்) எடுத்துவந்தேன்.) :)
பூவின் இதழ்கள் சற்றே க்ரீம் கலர் கலந்த வெள்ளை நிறம், காம்பு ஆரஞ்சு நிறம். அதனாலேயே இந்தப் பெயரைப் பெற்றிருக்குமோ இந்த மலர்?!..
இன்னொரு மரத்தின் மலர்கள் நல்ல பவழ நிறத்திலேயே (அடர்ந்த ஆரஞ்சு, கிட்டத்தட்ட சிவப்பு என்றே சொல்லலாம். :)) காம்புகளை கொண்டிருந்தன, ஆனால் அவற்றை எடுத்துவந்து படமெடுக்க நேரமில்லாது போயிற்று.
ஊசியில் நூல் கோர்த்தாயிற்று, இனி மலர்களை கோர்க்கவேண்டியதுதான் பாக்கி..
பாரிஜாதம் என்றும் அழைக்கப்படும் இந்த மலரைப் பற்றி புராணக்கதைகள் உண்டு. திருமாலுக்கு உகந்த மலர் என்று இதனைச் சொல்கிறார்கள். பவழமல்லியின் வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சொர்க்கத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா-ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவழமல்லி மரத்தை கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம், ஆனால் மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களைச் சொரிந்ததாம். இதுதானே கண்ணனின் லீலை? :)
அழகுப் பூக்களை ஆசைதீர படமெடுத்துவிட்டு, கோர்த்து பாரிஜாதப் பிரியரான திருமாலுக்கும் கொடுத்தாச்சு. :) கோயில் மரத்தில் நிறைய்ய்ய்ய பூக்கள் கிடைக்கையில், நீளமாகக் கோர்த்து பிள்ளையார் சிலை அளவுக்கு வருமளவு மாலையாக்கிக் கொண்டு போய் பிள்ளையாருக்கும் கொடுத்திருக்கிறேன்.
இன்னொரு கதை என்னவென்றால் பாரிஜாதம் - என்ற பெயர் கொண்ட ஒரு இளவரசி சூரிய பகவானை விரும்பினாளாம். ஆனால் சூரியபகவானோ அவளை விடுத்து இன்னொரு பெண்ணை மணம் புரிந்துகொண்டாராம். அந்த ஏமாற்றம் தாளாமல் பாரிஜாதம் தீக்குளித்ததாகவும், அவளது சாம்பலில் இருந்து உருவானதே இந்த பாரிஜாத மரம் என்றும் சொல்கிறார்கள். அதனால்தான் ஏமாற்றிய காதலன் உதயமாகையில் பவழமல்லி மரம் இரவெல்லாம் பூத்த மலர்களை கண்ணீர் சிந்துவது போல தரையில் உதிர்க்கிறது என்றும் ஒரு கதை இருக்கிறது.
பவழமல்லியை "coral jasmine" என்றும் சொல்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் Nyctanthes arbor-tristis - இதன் அர்த்தம் " a night flowering sad tree." - வருந்தும் மரம்! இந்தப் பெயர் இளவரசி பாரிஜாதத்தின் கதையால் வந்திருக்கலாமோ? மரத்தின் இலைகளும் பகலில் சுருங்கிக் கொள்ளும் என்றும் சொல்கிறார்கள், இதை நான் கவனித்ததில்லை..யாராவது பார்த்திருந்தால் சொல்லுங்கள். :)
பவழமல்லிக்கு மருத்துவகுணங்கள் பல இருக்கின்றன. முக்கியமாக சர்க்கரை வியாதிக்கு இந்த மலர் நல்லதொரு மருந்தாக இருக்கிறது, சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இதனை சமைத்து சாப்பிடலாமாம், லேசான கசப்புச் சுவையுடன் இருக்குமாம் பவழமல்லி. இதன் இலைகள் மரத்தை பாலீஷ் போடவும் பயன்படுகின்றன. மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். பவழமல்லியை மீனுடன் சேர்த்து சமைத்து, அதன் மருத்துவகுணங்களையும் பயன்களையும் அழகுற ஆங்கிலத்தில் தொகுத்து தரப்பட்டிருக்கிறது அந்த வலைப்பூவில்.
இவ்வளவு அழகான மென்மையான ஒரு பூவை அடுப்பில் போட்டு கொதிக்கவைப்பது என்று நினைக்கையிலேயே என் மனம் கொதிக்கிறது! இருப்பினும், மருத்துவ குணங்கள் உள்ள போது உபயோக்கிப்பதில் என்ன தவறிருக்கிறது என்றும் ஒரு பக்கம் கேள்வி எழுகிறது.
இணையத்தில் தேடும்வரை இந்தமலரின் மருத்துவ உபயோகங்கள் பற்றிய விஷயங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. படிப்பவர்களுக்குப் பயன் தருமே என்ற எண்ணத்தில் தகவல்களை இங்கு பகிர்கிறேன். யாராவது பவழமல்லியை சமைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆம் எனில், எப்படி என்று கருத்துப் பெட்டியில் சொன்னீர்களானால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி!
பி.கு. இது பவள மல்லியா அல்லது பவழ மல்லியா? கொஞ்சம் கு(ள/ழ)ப்பமா இருக்கு! :)))))))
பயன் தரும் பவளமல்லி பற்றி அருமையான அழகிய தகவல்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteதெய்வீக மணம் வீசும் . பவள மல்லி இருக்கும் வீட்டில் லஷ்மி கடாஷம் கிடைப்பதாக ஒரு நம்பிக்கை..அப்புறம் இந்த மலர் இருக்கும் இடங்களில் விஷ ஜந்துகள் வராது. இதனோட மருத்துவ குணம் பற்றி தெரிந்ததில்லை. மலர் மருத்துவத்தில் இதை பற்றி இனிமே தான் பார்க்கணும் மகி..
ReplyDeleteசூப்பரா இருக்கே பூக்கள். சரமாக தொடுத்திருப்பதை விட சும்மா தரையில் கிடப்பது அழகோ அழகு. நந்தியாவட்டை பூக்கள் பலவிதமாக இருக்கும் போல, ஊரில் எங்கள் வீட்டில் இருந்தது அடுக்கு நந்தியாவட்டை. உங்கள் கையில் இருக்கும் நந்தியாவட்டை வேறு விதமாக இருக்கு.
ReplyDelete//இராஜராஜேஸ்வரி said...// உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா!
ReplyDelete~~
//ராதா ராணி said... // எனக்கும் மருத்துவ குணம் பற்றி இப்பத்தாங்க தெரியும்.
//மலர் மருத்துவத்தில் இதை பற்றி இனிமே தான் பார்க்கணும் மகி.. //பார்த்தால் கட்டாயம் சொல்லுங்க, நன்றி!
~~
//உங்கள் கையில் இருக்கும் நந்தியாவட்டை வேறு விதமாக இருக்கு.//ஆமாம் வானதி, இந்த வகை நந்தியாவட்டையை நானும் முதன்முதலாகப் பார்த்தேன், அதனால்தான் படமும் எடுத்தேன்! :) அடுக்கு நந்தியாவட்டை, ஒற்றை இதழ் நந்தியாவட்டை இரண்டும்தான் எனக்குத் தெரிந்தவை.
பவளமல்லி, சும்மா பார்த்தாலே கொள்ளை அழகுதான்! நான் எடுத்த படங்களிலும் உதிரிப் பூக்கள்தான் பெரும்பான்மையா இருக்கு, கவனிச்சீங்களா? ;)
நன்றி வானதி!
~~
//மரத்தின் இலைகளும் பகலில் சுருங்கிக் கொள்ளும் என்றும் சொல்கிறார்கள்,// yup.
ReplyDelete//யாராவது பார்த்திருந்தால் சொல்லுங்கள். :)// me ;)
//பவள மல்லியா அல்லது பவழ மல்லியா?// both r correct Mahi.
பூவைப் புத்தகத்தில் வைத்து அடித்தால் அந்தச் சிவப்புப் படியும். :)
காய் வட்டமாக இருக்கும். இரண்டாகப் பிரித்து மீண்டும் மாற்றிச் சொருகினால் பாய் விரித்த வள்ளம் போல் தோன்றும்.
Hmm.... Lovely post... Recollecting my (G)olden homw town memories...
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
எவ்வளவு பொறுமையாக செய்து உள்ளீர்கள்...
ReplyDeleteஅழகு... அருமை... வாழ்த்துக்கள்...
pavalamalli patri marupadiyum gyabagapaduthiyamaiku nandri..pugai padangal miga arumai..nandiyavattai poovai parthirukuren..ipoluthu than peyarai therinthu konden..nandri..pavalamalli patri oru ayya thalathil naan paditha pathivu http://mooligaivazam-kuppusamy.blogspot.in/2012/09/blog-post.html
ReplyDeleteadhikaalaiyil iraivanai servathargaga thanagave uthirum pavalamalli endru vanaguvom..செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும் enbathu ithan mukiyathuvathai unarthukirathu..nandri.
Pookal romba super ra iruku.. Naan indru thaan intha flower rai parkeren
ReplyDeleteபவள மல்லி பார்க்கவும் அழகு வாசனையும் ரம்மியம் அதைப்பற்றிய படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு
ReplyDeleteஆஹா மகி.. இதுக்குப் பெயர்தான் பவளமல்லியோ?.. எனக்கு இந்தப் பூவையும் தெரியும், பவளமல்லி எனவும் தெரியும், ஆனா இதுதான் அது எனத் தெரியாதே...
ReplyDeleteஆஆஆ தெரியவைத்தமைக்கு மியாவும் நன்றி மகி.
இதில் வாசம் பெரிதா வராதாக்கும் என்ன?.
பவளமல்லி பார்க்க ரொம்ப அழகா இருக்கு... அதைப்பற்றிய படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு!
ReplyDeleteவெள்ளையும்,ஆரஞ்சு சிவப்பும் கலந்து கொள்ளை அழகா இருக்கு.நானும் பார்த்துள்ளதாக ஞாபகம். பூவைத்தொட்டால் மெத்தென்று,மென்மையா இருக்கும்னு நினைக்கிறேன்.இப்பூவைப்பற்றிய தகவல்களுக்கு நன்றி மகி.
ReplyDeleteபவள மல்லிகை..... அழகான மனதை அப்படியே அள்ளிப்போகின்ற நிறம், மணம், அதன் மென்மை என்று எல்லாமே ஒன்றாக ஓரிடத்தில் இருக்கின்ற மலரெல்லோ....
ReplyDeleteநீங்கள் படமும் பதிவுமாய் போட்டதை பார்த்ததுமே ஊரில் எங்கள் வீட்டு வாசலில் முற்றத்தில் சின்ன மரம்தான் ஆனால் பூத்து கொட்டோகொட்டுண்னு கொட்டுவது ஞாபகத்திற்கு வந்தது.
நல்ல பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி மகி..:)
விடிய அவசரமா ஓடிட்டேன்ன்..
ReplyDelete/ (உடனே கண்ணை உருட்டாதீங்க, வீட்டம்மா கிட்ட கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சுட்டு, பர்மிஷனும் வாங்கிட்டு(தான்) எடுத்துவந்தேன்.) :) //
அதானே பார்த்தேன்.. இல்லையெனில் பொயிங்கி இருப்பேன்:) எங்கிட்டயேவா?:)
பி.கு. இது பவள மல்லியா அல்லது பவழ மல்லியா? கொஞ்சம் கு(ள/ழ)ப்பமா இருக்கு! :)))))))///
ReplyDeleteஹா..ஹா..ஹா.. றீச்சர் ஓடியாங்கோஓஓஓஓஓ:)).. ஹையோ றீச்சருக்கும் இதே குழப்பம்தேன்:))).. மகி சூப்பர் மாட்டி இம்முறை.. அது ழ/ள தான்:)) வரும்...:) எங்கிட்டயேவா?:).
அதுசரி இதை தலைக்கு சூடுவதில்லையோ?
/பூவைப் புத்தகத்தில் வைத்து அடித்தால் அந்தச் சிவப்புப் படியும். :)/ றீச்சர், சரியான அதிரடி லேடி:)யா இருந்திருப்பீங்க போலிருக்கே! ;) :)
ReplyDeleteபவளமல்லியின் காய்கள் எல்லாம் பார்க்கும் அளவுக்கு அந்த மரம் வீட்டுப் பக்கத்தில் இல்லை! நன்றாகவே அவதானித்திருக்கீங்க பவளமல்லிகையை! :) விளக்கங்களுக்கு நன்றி!
~~
சங்கீதா, வருகைக்கும் கருத்துக்கும்நன்றீங்க!
~~
தனபாலன், ரொம்ப சந்தோஷம்ங்க! :) கருத்துக்கு நன்றி!
~~
அரைகுறை ஞானி, எல்லாருக்கும் பயனளிக்கும் நிறைய நல்ல தகவல்கள் பகிர்ந்திருக்கீங்க. நீங்க கொடுத்த லிங்க்-ஐயும் பார்க்கிறேன், மிக்க நன்றி! செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும் என்பதும் புதிய தகவல்..நன்றிங்க!
~~
மற்ற கருத்துக்களுக்கு பதில்கள் சிலமணி நேரங்களுக்குப் பிறகு தொடரும். நன்றி!
ReplyDeleteungal pathiluraikum nandri.
ReplyDeleteகண்ணை மூடிக் கொண்டு டீச்சரைக் கூப்பிட்ட பூஸாரே!! உங்களை அங்க... இது வே..ற அங்க, கண்டுகொண்டேன்ன்ன்ன் ;))))))))))
ReplyDeleteமியாவ்வ்வ்வ்வ் ;)
athira said...
ReplyDeleteஹா..ஹா..ஹா... றீச்சர் துணிஞ்சிட்டமில்ல:))... அது வேறொன்றுமில்லை.. 2012 டிஷம்பர் நெருங்குதா.. அதேன்ன்ன்ன்:)).
பவழமல்லி இளவரசி கதை இது வரை எனக்குத் தெரியாது.உங்கள் பதிவு அருமையாக இருக்கிறது.
ReplyDeleteராஜி
Very informative and pala swarisiyamana kadaigal, love kothufying these flowers..
ReplyDeleteபவள மல்லி ம்ம்ம் அழகா இருக்கு மகி. வீட்டம்மா கிட்டே மொக்கை:)) போட்டு பவள மல்லிய சுட்டுகிட்டு வந்திட்டேன்னு இல்லே நீங்க எழுதி இருக்கணும். உண்மைய மறைச்சாலும் நான் கண்டு:)) புடிச்சிடுவேன் இல்லே:))
ReplyDeleteதிருமால் இஸ் சோ சுவீட். பாரிஜாதம் சூரியன் கதை நான் கேள்வி பட்டதில்லை. அப்புறம் இந்த பூவுக்குள் இத்தனை மருத்துவ குணங்களா? ஆனா எனக்கும் உங்களை போல இந்த அழகான மலர்களை கொதிக்க வைப்பது சமைப்பது எல்லாம் முடியாது. அதுதான் நெறைய மருந்துகள் இருக்கே இதுல இந்த அழகான பூக்கள வேற கொடுமை படுத்தணுமா ??
ReplyDeleteHi, I am a silent reader of ur blog for a long time,this is the first time to comment.
ReplyDeleteYes Mahi,this flower can be used to treat cold and sore throat by boiling this flower( 8 or 10 )with milk / tea and strain it and drink for 2 or 3 days depending on the severity of the cold.
மகி நலம்தானே. சில நாட்களாக சுகமில்லாததால் உங்க பக்கம் வரமுடியவில்லை. மன்னிக்க.
ReplyDeleteபவளமல்லி நிறைய நினைவுகளை வரவைத்துவிட்டது. படங்கள் மிக அழகாக இருக்கு.இது பற்றி நிறைய தகவல்களும் தந்திருக்கிறீர்கள்.thanks mahi.
சிநேகிதி, இதுவரை பவளமல்லியைப் பார்த்ததே இல்லையா? ஆச்சரியமா இருக்கு! :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
லஷ்மிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
~~
//எனக்கு இந்தப் பூவையும் தெரியும், பவளமல்லி எனவும் தெரியும், ஆனா இதுதான் அது எனத் தெரியாதே...// :)))) அதேதாங்க இது! இப்ப தெரிஞ்சுகிட்டீங்கதானே? :)
இது வாசம் ரொம்ப நல்லா இருக்கும் அதிரா, நல்ல மென்மையான மணம். என் அம்மா சின்னவயதாய் இருக்கையில் இந்தப்பூவைக் கோர்த்து தலையில் வைச்சிருக்கிறோம் என்று சொல்வாங்க. ஆனால் இப்பொழுதெல்லாம் யாரும் தலையில் சூடுவது போல தெரியலை.
ழ/ளகரப் பிரச்சனை தீர்ந்துடுச்சு,//அது ழ/ள தான்:)) வரும்...:) எங்கிட்டயேவா?:).// நீங்க சொன்ன அதே தீர்வுதான்!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க அதிராவ்! [இவிங்க வீட்டில இருந்து பழுத்து உதிரும் இலையக் கூட பக்கத்துவீட்டுக்காரங்க தொட விடமாட்டாங்க போலிருக்கே..அவ்வ்வ்வ்! ;)]
~~
ப்ரியா, பல மாதங்களுக்குப் பிறகு உங்க கருத்தைப் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. நலம்தானே? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
//பூவைத்தொட்டால் மெத்தென்று,மென்மையா இருக்கும்னு நினைக்கிறேன்.// ஆமாம் சித்ராக்கா! ரொம்ப நல்லா இருக்கும் பார்ப்பதற்கும், எடுத்து வந்து கோர்ப்பதற்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
இளமதி, மரம் சிறியதா இருந்தாலும் நிறையப் பூ வந்ததா? வீட்டிலயே மரம் இருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும் இல்ல?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
றீச்சர்-அதிராவ் கண்ணாமூச்சி நல்லா இருக்கு. "அங்க"யும் தொடருங்க. அதிரா, பூங்கொத்து பத்திரம்! ;):)
~~
அரைகுறை ஞானி, நன்றிங்க!
~~
ராஜி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. அடிக்கடி வாங்க! :)
~~
ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! உங்களுக்கும் பவளமல்லி கோர்க்கப் பிடிக்குமா? சந்தோஷம்!
~~
//உண்மைய மறைச்சாலும் நான் கண்டு:)) புடிச்சிடுவேன் இல்லே:)) // அதானே? கிரிஜாவா இல்ல கொக்கா? ஹாஹாஹா!
பவளமல்லியின் மருத்துவகுணங்கள் பற்றி எனக்கும் இப்பதான் தெரிய வந்துது கிரிஜா! உடம்புக்கு நல்லதுன்னா பண்ணிப் பார்க்க வேண்டியதுதான், அஃப்கோர்ஸ் பவளமல்லிகிட்ட ஆத்மார்த்தமா ஒரு மன்னிப்பு கேட்டுட்டு! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
Vimas, முதல்ல உங்க மௌனத்தை உடைத்து வெளியே வந்து கருத்து தந்ததுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி! அடுத்து சளிக்கு மருந்தாகும் பவளமல்லி என்ற தகவலையும், அதை எப்படி உபயோகப்படுத்தணும் என்று சொன்னதற்காகவும் நன்றி! :)
~~
அம்முலு, நான் நலம்தாங்க. நீங்க உடம்பை பார்த்துக்கோங்க.
ம்ம்...யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!-னு எழுதறதுதான்! உங்கள் பழைய நினைவுகளையும் கிளறிவிட்டுட்டேனா? :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
~~
//பூங்கொத்து பத்திரம்! ;):) // ஹா! ;))))))))))))
ReplyDeleteஇமா said...//பூங்கொத்து பத்திரம்! ;):) // ஹா! ;))))))))))))
ReplyDelete~~~~~~
@இமா, ஹா! ஹா! ஹா! :))))))))
ஆசியாக்கா, நன்றி!
ReplyDeleteஎனக்கும் மிகவும் பிடித்த பவள மல்லி பற்றி
ReplyDeleteபல அறியாத தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.
மிக்க நன்றி.
பவளமல்லி படத்தை எடுத்து வந்த பிறகுதான் இணையத்தில் தேடி நானும் பலதகவல்களைத் தெரிந்துகொண்டேன். அது உங்களுக்கும் உபயோகமாக இருப்பது மகிழ்ச்சிங்க!
ReplyDeleteகருத்துக்கு நன்றி!
பவள மல்லி ! அருமை ! மணம் தூக்கும் ! மகாபாரதத்தில் ஒரு அத்தியாயமே இதுபற்றி உள்ளது ! எனது புராண ஆய்வுகளில் இது பற்றி எழுதியுள்ளேன் !
ReplyDelete@சுந்தரபாண்டியன், வருகைக்கும் தகவல் + கருத்திற்கும் மிக்க நன்றிங்க!
ReplyDeleteஆதி, பகிர்வுக்கு மிக்க நன்றிப்பா..உடனே வந்து கருத்து சொல்ல முடியலை..சீக்கிரமா வரேன். :)
ReplyDeletethanks for the information
ReplyDeleteமிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி
ReplyDeleteநிபா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் பவழமள்ளியின் இலை என்று ஒரு தகவல் வந்துள்ளது.
ReplyDelete