இன்று காலை பத்தரை மணி சுமாருக்கு வாக் போகலாம் என்று கிளம்பினேன். ரொம்ப குளிரும் இல்லாமல் சுள்ளென்ற வெயிலும் இல்லாமல் குளுகுளு தென்றல் அவ்வப்போது முகத்தில் செல்லமாக மோத இதமாக இருந்த நடையை ரசித்தவண்ணம் போய்க்கொண்டே இருந்தேனா....
..................
...........
......
...திடீரென மேலே படத்திலுள்ளவர் சாலையோரமாக நின்றிருந்தார். அருகில் ஆட்கள் யாரையும் காணோம். அருகிலுள்ள வீடுகளைச் சேர்ந்தவரா, இல்லை வெறெங்காவதிருந்து இங்கே வந்தவரா எதுவும் தெரியவில்லை. "பக்கத்தில் வா!" என்று கூப்பிட்டதும், கொஞ்சம் பயப்பட்டாலும் சிறிது நேரங்கழித்து அருகில் வந்தார். கழுத்தில் ஒரு காலர் இருந்தது, எங்கிருந்தோ தொலைந்துதான் போயிருக்கிறார் என அவர் முகம் மற்றும் நடை-பாவனைகளில் இருந்து தெரிந்தது.
நானோ நடந்து போயிருக்கிறேன். இவரை என்ன செய்வது..காரில் போயிருந்தால் கூட அப்படியே அமுக்கி:) காரில் அடைத்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று பார்த்திருக்கலாம். அப்படியே அம்போவென விட்டுப் போக மனம் வரவில்லை..என்ன செய்வதென விளங்கவும் இல்லை. உடனே என்னவருக்கு ஒரு தொலைபேசினேன், அதிசயமாக அவரும் போனை எடுத்தார். என்ன செய்வதுன்னு மறுபடியும் குழம்பி..சரி அருகில் இருக்கும் அனிமல் ஷெல்டருக்குத் தகவல் கொடுப்போம் என முடிவானது.
அதற்குள்ளாக இவர்(ரிக்கி) எனக்கு முன்னால் கொஞ்சம் நடப்பதும், பின்னால் போய் மறுபடி என்னிடம் நடந்து வருவதுமாக இருந்தார். பின்னங்காலில் ஒன்று ஏதோ வலி இருக்கும் போலும், அவ்வப்போது 3 காலிலும் நடந்தார். இப்படியாக இருவரும் நடந்து நடந்து வால்மார்ட் அருகில் வந்துவிட்டோம். அதற்குள் அருகில் இருந்த அனிமல் ஷெல்டருக்கு போன் அடித்து பேசினால், லொகேஷன் கேட்டதும் அவர்கள் " நீங்க ஆரஞ்ச் கவுன்டி அனிமல் ஷெல்டருக்கு போன் பண்ணுங்க, இது எங்க ஏரியா இல்லை" என்று சொல்லி தொலைபேசி எண்ணை கொடுத்தார்கள்.இத்தனைக்கிடையிலும் எங்க நடை நிற்கவில்லை..சாலைகளைத் தாண்டுகையில் ரிக்கி அகஸ்மாத்தாக சிக்னல் எல்லாம் கண்டுக்காம அவர் இஷ்டத்துக்கு ஓடினார். நான் பக்-பக்னு துடிக்கும் இதயத்தை வாய்வழியே வெளியே கொண்டுவந்திரக்கூடாதேன்னு கஷ்டப்பட்டு சாலையைக் கடந்தேன். பிறகொருமுறை சமர்த்தாக என் பக்கத்தில் வந்து, சிக்னல் விழுந்ததும் பவ்யமாக என்னுடனே நடந்தார். அப்படியே வால்மார்ட் பார்க்கிங் லாட் பக்கம் வந்ததும், ஒரு காரில் இருந்த பெண்மணி அவசரமாக "இஸ் இட் யுவர் டாக்" என கேட்டவாறே ஓடிவந்தார். தான் சிலமைல்கள் தள்ளி குடியிருப்பதாகவும், அவர் வீட்டருகில் ஒரு நாய்க்குட்டி காணமல் போனதாகவும் சொன்னார். தொலைந்து போன ஆள்தான் இந்த ரிக்கி!
இருவருமாகச் சேர்ந்து ரிக்கியை கேட்ச் பண்ணி;) அந்தப் பெண்ணின் காரில் உட்காரவைத்தோம். அவன் கழுத்தில் இருந்த காலரை செக் செய்து அதிலிருந்த எண்ணுக்கு தொலை பேசினால் அது fax number! grrrrrrrr! பிறகு தானே கூட்டிச் சென்று ரிக்கியை வீட்டில் சேர்த்து விடுவதாக கூறி சென்றுவிட்டார். ரிக்கி வீட்டுக்குப் போயிட்டார். சுபம்! :)
~~
சரி, ரிக்கிதான் வீட்டுக்குப் போயிட்டானே, வாங்க நம்ம பக்கத்தில் இருக்கும் டாலர் ஷாப்-கு போவோம். :) வாக்கிங் வருகையில் இந்தக் கடைக்குள் நுழைஞ்சு கொஞ்சம் டைம் பாஸ் பண்ணிட்டுப் போறது வழக்கம். ஹிஹி!
வண்ண வண்ணமாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த பூஜாடிகள் கண்ணைக் கவர்ந்தன. க்ளிக்கிட்டேன். :)
அப்படியே அந்தப் பக்கம் வந்தா...என்னடா இது, வெள்ளை வெள்ளையா இருக்கேன்னு உத்துப் பாத்தேன். கரும்பு...ஆஹா! :)
என் கண்களையே நம்ப முடியாம கண்ணைக் கசக்கிப் பார்த்தேன்..ஆமாங்க, கரும்பேதான்! PEELED SUGAR CANE என்று எழுதி சிறு பாக்கட்களாக போட்டு வைச்சிருந்தாங்க. ஒருமுறை ஆசையா கரும்புன்னு வாங்கி, அது தோசியாப் போனதால் ரிஸ்க் எடுக்கலை நானு. போட்டோ மட்டும் எடுத்துகிட்டு நடையக் கட்டினேன். ;) :)
வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும்..முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்!! :)))
ஆனால் எங்க ஊரில்,
வரும் வழியில் இளவெயிலில் புதுமலர்கள் தினம் நனையும்..முகிலெடுத்து முகம் துடைத்து மாலை வரை நகை புரியும்!! :)))
வைரமுத்துவின் வைரவரிகளோடு, SPB-யின் இனிய குரல்..இதயம் வரை நனையும் பாடல்..பயணங்கள் முடிவதில்லை-படத்திலிருந்து! கீழே படத்தில் எங்க வீட்டுப் பால்கனியில் "விழாக் காணும் வானம்"! :)
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே..
விழாக் காணுமே வானமே!
வான வீதியில் மேக ஊர்வலம்..
காணும் போதிலே ஆறுதல் தரும்!