குளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமையா உட்கார்ந்து எழுத நேரமில்லை/பொறுமையில்லை/ வசதிப்படவில்லை?? இப்படி பல்வேறு விதமா யோசிச்சுப் பார்த்தாலும் எந்த பதி(வு)லும் தோன்றாமல் வெறுமையாக இருந்தது..அதனால் "மணக்க மணக்க" ஒரு பதிவை இன்று எழுதிரணும்னு முடிவோட தட்டிகிட்டு:) இருக்கேன், கீ போர்டை! :)))
மல்லி,முல்லை, ஜாதிமல்லி இவை மூன்றும் மூணு விதமான மலர்கள். அது எங்களுக்குத் தெரியாதா என்று படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கேப்பீங்க! எனக்குத் தெரியும், ஆனாலும்...நான் ஊருக்குப் போனப்ப பொழப்புக் கெட்டு;) எடுத்த போட்டோஸ், வீடியோஸ், உதிரிப் பூ கிடைக்காம வாங்கிய மல்லிகைச் சரம் இதையெல்லாம் உங்கள்ட்ட காட்டலன்னா என்ன அர்த்தம் சொல்லுங்க?!! ;)))
எனவே, அன்பார்ந்த வாசகப் பெருங்குடி மக்களே, இந்தப் படத்தில் இருப்பது மல்லிகை! ஒவ்வொரு வீட்டின் மன்னர்களும் மயங்கும் பொன்னான மலர்! ;) :) கோவையில் க்ராஸ்கட் ரோடில் மாலை போல நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரம் கிடைக்கும்னு ஏற்கனவே சொல்லிருக்கேன். மற்றபடி பூக்காரர்களிடம் கிடைக்கும் சரம் அவ்வளவு நெருக்கமாக இராது. உதிரிப் பூ விற்கும் ஆட்களிடம் நான் தேடுகையில் மல்லிகை கிடைக்கவில்லை. கிளம்பும் நாள் வந்துவிடவும், ஒருநாள் பஸ்ஸ்டாப் பூக்காரரிடம் வாங்கிய மல்லிகைச் சரமே படத்தில் இருப்பது. நன்றாக நெருக்கமாகவே தொடுக்கப்பட்டிருந்த சரம். ஆசை தீர போட்டோவும் எடுத்துகிட்டு தலையிலும் வைச்சுகிட்டாச்சு!
~~~
ஜாதி முல்லை? ஜாதி மல்லி? இந்த மலர் ஏறத்தாழ முல்லைப் பூவின் வடிவில் இருக்கும், ஆனால் கொஞ்சம் அளவில் பெரியது, மணமும் வேறு! மல்லிகையின் சாயலை விட முல்லையை அதிகம் ஒத்திருப்பதால் என்னைப் பொறுத்தவரை இது ஜாதி முல்லைதான்! :)
ஊரில் எங்க வீடு இருக்கும் ஏரியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் தவறாமல் இந்தக் கொடி வளர்த்திருக்காங்க. ஜாதிப்பூ மணம் அபாரமாய் இருக்கும், சிலருக்கு ஒவ்வாமல் தலைவலி கூட வரும் என்பார்கள். மாலையில் மலரும், மல்லி-முல்லை போல மாலைநேரம் மொக்குகளைப் பறித்து தொடுத்து (அறை வெப்பநிலையில்) வைத்தால் காலையில் வெள்ளைவெளேரேன்று விரிந்திருக்காது, புளியம்பூ போல நிறம் மாறிவிடும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் மட்டுமே சமர்த்தாய் மேலே படத்தில் இருப்பது போல இருக்கும். :)
பலர் ஜாதி முல்லையையும், முல்லைப் பூவையும் குழப்பிக் கொள்கிறார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்! எங்க வீட்டுச் செடியில் இருந்த அரும்பு, மொக்கு, மலர் என படமெடுத்து தள்ளிவிட்டேன்! ஹிஹிஹி... செடி இன்னும் சிறு செடியாய் என்பதால் அதிகம் பூக்கள் இல்லை. ஆனாலும் தினமும் பூப்பறிப்பது எனக்கு மிகப் பிடித்த ஒரு வேலை. :)
ஜாதி முல்லையை சரமாகத் தொடுப்பது மிக எளிது. அதுவே மல்லி என்றால் நெருக்கமாகத் தொடுக்க கொஞ்சம் ப்ராக்டீஸ் இருக்கவேண்டும். படத்தில் இருப்பது போல ஒரே புறமாய்த் தொடுத்து, இரண்டு நுனியிலுள்ள நூல்களையும் இணைத்தால் ஊசியில் கோர்த்த பூப்பந்து போல அழகாய் இருக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க! :)
~~~
முல்லை..என் மனம் கவர்ந்த மலர்! :) ஏற்கனவே தொடுத்த முல்லைச்சரம் இங்கேயும் இருக்கிறது. இந்த முறை ஊருக்குப் போகையிலேயே ஒரு நட்பூ:) எனக்கு பூத்தொடுப்பது எப்படி என்று வீடியோ எடுத்து வரவேண்டும் என்று அன்புக் கட்டளை:) இட்டிருந்தார். அதனால் சந்தைக்குப் போனபோது காப்படி:) பூ வாங்கிவந்து கட்டி, வீடியோவும் எடுத்து யூ ட்யூபில் அப்லோட் செய்திருந்தேன். கோரிக்கை வைத்த நட்பூ:) அக்கம் பக்கம் வேலியில் இருந்த பூவைக் கொழுவி;) தொடுத்து சூட்டி, படமெடுத்து, பதிவும் போட்டு...ஓக்கே, ஓக்கே! அது யாருன்னு நீங்களே கண்டு புடிச்சிக்கோங்க. :)))
2-3 பகுதிகளாக எடுக்கப்பட்ட வீடியோ..வீடியோ கிராபருக்கு கேமரா கொஞ்சம் புதிது என்பதால் ஆங்காங்கே zoom-in & zoom-out செய்து பயமுறுத்துவார்! பத்திரம்! :) இருந்தாலும் சித்திக்காக வீடியோ எடுத்துக் கொடுத்த என் (அக்கா) பையனுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! :)
பகுதி-2
பகுதி-3
நறுமலர்க் கூட்டத்துடன் வெள்ளை செம்பருத்தி, ரோஜா வண்ண செம்பருத்தி. அடுக்கு மல்லி பற்றி கருத்துக்களில் ப்ரியாராம் சொல்லிருக்காங்க, பாருங்கோ! :)
unmaiyeleye manam kamazhum pathivu
ReplyDeleteMalligai poo parthu ethanai naalachu.Madhurai malli madras malli ellam maranthen pochu...Enjoyed your post
ReplyDeleteநல்ல பதிவு மகி.... எங்க ஊருல கூட ஜாதி முல்லை கொடி நிறைய பேர் வீட்டில் இருக்கும்... ஊருக்கு போனால் ஆசை தீர கட்டி வச்சுப்பேன்....
ReplyDeleteஅதே மாதிரி ஒரு மல்லி பூ செடி கூட இருக்கும்.... அடுக்கு மல்லி.... செடி ரொம்ப நிறைய வளர்ந்த பிறகு தான் பூக்கும்... அது கூட ஒன்னு ரெண்டு பூ தான் பூக்கும்.... ஆனால் பார்க்க அழகா வெள்ளை ரோஜா மாதிரியே இருக்கும்.... பார்த்து இருக்கீங்களா ??
எனக்கு மல்லி ரொம்ப புடிக்கும்..... எங்க ஆத்துக்காரரை மல்லி பூ வாங்கி வர சொன்னால், முல்லை பூ வாங்கி வருவார்... அவருக்கு மல்லிக்கும், முல்லைக்கும் வித்யாசம் தெரியலையாம்....
முல்லை பூ வச்சுக்க புடிக்கும்.... கட்டுவதற்கு பிடிப்பதில்லை.... அமுத சுரபி மாதிரி எடுக்க எடுக்க பூ வந்து கிட்டே இருக்கும்....
உங்க வீடியோ அருமை... அக்கா பையன் நல்லா எடுத்து இருக்கார்...
Adarthiyana poo parkarthu romba rare mahi... Thanks for recollecting... :)
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
"பூ தொடுப்பது எப்படி"யை பாத்து ஏதோ வர்ணனை விளக்கவுரை பதிவுரை எல்லாம் இருக்கும், நாமளும் நெருக்கமா பூ கட்டி பழகிடலாம்னு ஆவலோடு ஓடோடி வந்த என்னை வெறும் மீசிக் போட்டு ஏமாற்றிவிட்டாயே மகி...:)
ReplyDeleteரெம்ப வருசத்துக்கு அப்புறம் ஆசை தீர பூ வெச்சுட்டு இருக்கேன் இப்போ. ஆனா சில நாள் பூ விலை கேட்டா பூ வெக்கற ஆசை கூட போய்டும் போலத்தான் இருக்கு போ
எனக்கும் முல்லை தான் பேவரட். அது கிடைக்கலைனா வேற பாப்பேன்
மணமான பதிவு.. நல்லா நெருக்கமா பூ உதிராம அழகா கட்டுறாங்க .. மதுரை மல்லி கட்டு பார்த்திருக்கீங்களா மகி.. நெருக்கமா கனமா உருட்டா இருக்கும். அது எப்பிடி தொடுக்கரதுன்னு தெரிஞ்சா சொல்லுங்களேன்..
ReplyDelete//நல்லா நெருக்கமா பூ உதிராம அழகா கட்டுறாங்க .. // நன்றிங்க! அவிங்க மோஸ்ட்லி அப்படியேதான் அழகா கட்டுவாங்க! :)))))
ReplyDeleteமதுரை மல்லி கட்டு கேள்விப் பட்டிருக்கேன், ஓரொரு கண்ணிக்கும் பூவை தலைகீழா திருப்பி கட்டுவாங்கனு நினைக்கிறேங்க. எனக்கு உதிரி மல்லி கிடைக்கலையே! கிடைச்சிருந்தா கட்டாயம் அதையும் தொடுத்து வீடியோ எடுக்க சொல்லியிருப்பேன். ;) :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
//வர்ணனை விளக்கவுரை பதிவுரை எல்லாம் இருக்கும்,// ஹாஹ் ஹா..ஹ..ஹ! அம்முணி, வர்ணணை இல்ல, இடைல பேச்சு ஓடிகிட்டேதேன் இருந்துச்சு, அதைய அவாய்ட் பண்ணத்தேன் மீசிக் போட்டு பட்டையக் கிளப்பிட்டமில்ல! :))))
//ஆனா சில நாள் பூ விலை கேட்டா பூ வெக்கற ஆசை கூட போய்டும் போலத்தான் இருக்கு போ// முஹூர்த்த நாள்னா அப்படித்தானே! பேசாம வீட்டில செடி வளர்க்கலாம்ல புவனா? ஹவ் இஸ் மை ஐடியா?!
//எனக்கும் முல்லை தான் பேவரட்.// ஆஹா, சேம் பிஞ்ச்! அதிலும் பச்சை முல்லை இருக்குமே, அந்த நறுமணம் சூப்பரோ சூப்பர்! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனா!
~~
சங்கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! அடர்த்தியா தொடுத்த பூ கோவைல இப்ப அங்கங்க கிடைக்குதுங்க. சென்னைல எப்படி?
~~
//அடுக்கு மல்லி.... செடி ரொம்ப நிறைய வளர்ந்த பிறகு தான் பூக்கும்... அது கூட ஒன்னு ரெண்டு பூ தான் பூக்கும்.... ஆனால் பார்க்க அழகா வெள்ளை ரோஜா மாதிரியே இருக்கும்.... பார்த்து இருக்கீங்களா ??// ப்ரியா, அம்மா வீட்டுக்கு பக்கத்து வீட்டில இருக்குப்பா அந்தச் செடி! படம் கூட எடுத்திருக்கேன், இதோ இருங்க...சீக்கிரம் அட்டாச் பண்ணறேன்! :)
//எங்க ஆத்துக்காரரை மல்லி பூ வாங்கி வர சொன்னால், முல்லை பூ வாங்கி வருவார்...// அட, காலிஃப்ளவர், வாழப்பூ இதெல்லாம் வாங்கிட்டு வரலையேன்னு சந்தோஷப் படுவீங்களா? அதவிட்டுப்புட்டு?!.... ஹிஹி!
//அமுத சுரபி மாதிரி எடுக்க எடுக்க பூ வந்து கிட்டே இருக்கும்.... // :)) எனக்கு அப்படித் தோணலையே! :)
3 வீடியோஸ் இருக்கு, பாத்தீங்க? ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா!
~~
ஷைலஜா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. ஊருக்குப் போகையில இப்படி எல்லாப் பூவையும் என்ஜாய் பண்ணிக்கவேண்டியதுதாங்க! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்-னு இங்கயும் பகிர்கிறேன்! :)
~~
நித்து, ரசித்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க!:)
~~
இங்கும் நிறைய வீடுகளில் ஜாதிமல்லி வச்சிருக்காங்க.வேலியில்கூட நிறைய பூத்திருக்கும்.கை பறிக்கச்சொல்லும்,என்ன செய்வது!நம்ம ஊர் பூவெல்லாம் சும்மா.இங்கு புஸுபுஸுன்னு இருக்கு.ஸீஸன் சமயத்தில் காஸ்ட்கோவில் தொட்டிச்செடி வரும்.
ReplyDeleteபூ பறிக்கவும்,கட்டவும் ரொம்பவே பிடிக்கும்.நல்லா நெருக்கமாகக் கட்டுவேன். மனம் ஊருக்குப் போகுமளவு மணமுள்ள பதிவாகிவிட்டது.நன்றி மகி.
/.ஸீஸன் சமயத்தில் காஸ்ட்கோவில் தொட்டிச்செடி வரும்./ ம்ம்...நானும் பார்த்திருக்கேன் சித்ராக்கா! ஹோம் டிப்போ-ல எல்லா சீஸன்லயும் மல்லிகைச் செடி, முல்லை போன்ற ஒருவகைக் செடி, அமெரிக்கன் ஜாஸ்மின் எல்லாமே இருக்குது. இந்த ஸ்ப்ரிங்-க்கு ஒரு மல்லிகை வாங்கலாம்னு ப்ளான்! :)
ReplyDelete/பூ பறிக்கவும்,கட்டவும் ரொம்பவே பிடிக்கும்.நல்லா நெருக்கமாகக் கட்டுவேன்./ அதனாலதானே நம்ம எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருக்கோம் வலை உலகில?! :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
இங்கே சில பர்ஃப்யூம் கடைக்காரங்க அவங்கள்ட ஆட்வடைஸ்மென்ற் வீட்டுக்கு வீடு போடுவாங்க. சில வேலகளில அதை பார்க்கிறவங்களை தங்களின் கடைக்கே வந்து வாங்க வைக்குறதுக்காக சில சலுகைகளோடு சில கழிவுவிலைக் கூப்பன் இருக்கும் அதை வெட்டி எடுத்துக்கொண்டுபோய் அந்தக்கடையில வாங்கலாம். அதில என்ன விஷேசம்ன்னா அந்த துண்டு கூப்பன் பகுதில குறிக்கப்பட்ட இடத்தில் அழுத்திதேய்த்து உங்க விரலை மணந்தா ஆ...அப்பிடியே ஆளத்தூக்கி அங்கேயே கொண்டு போயிடுறமாதிரி அருமையான பர்ஃப்யூம் வாசனை சேர்த்திருப்பாங்க. அது பிஸ்னஸ் றிக்ஸ்..:) அது வேற.
ReplyDeleteஆனா அதுபோல எனக்கு இப்ப இந்தப் பதிவால, உங்க ப்ளாக்குலே மல்லிகை முல்லை நறுமணம் அப்படி கமகமன்னு வீசுறமாதிரி இருக்குன்னா பார்த்துக்கோங்க...:)))
பதிவில மல்லிகை பர்ஃப்யூம் அடிச்சுவிட்டிருக்கீங்களோ டவுட்டூஊஊ....:)))....
மனசுக்கு பிடிச்ச விஷயத்தை அப்படியே மனமொன்றி ஈடுபடும்போது வாசிப்பதோ, எழுதுவதொ, செய்வதோ எதுவாகிலும்... அதுவாகவே மாறீடுட மாதிரி உணர்வு எனக்கிருக்கு..:) அப்படித்தான் இந்த மல்லிகை அழகும் வாசனையும்...:)
ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க மகி. ஒலி, ஒளி, நிழல்பட பகிர்வும் அசத்தல்.
நறுமணமிக்க நல்ல பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி மகி...:)
Chennai-la "Adarthiya" appadina enna nu kepaanga Mahi... :(
ReplyDeleteரொம்ப மணமான பதிவு மகி.சுவாரஸ்யமாக இருந்தது.எனக்கு பூகட்ட சுட்டுப்போட்டாலும் வரவில்லை.அப்படி உதிரிப்பூ கிடைத்தாலும்,ஊசிநூலால் கோர்த்து தொடுப்பேன்.அது ரொம்ப நெருக்கமாக பார்க்க அழகாக இருக்கும்.
ReplyDeleteஅப்புறம் என் சிறிய வயதில் மல்லைகை குடும்பத்தில் பிறந்த முத்துமல்லி என்றொரு மல்லி வகை.மினியேச்சர் மல்லி போல வாசனை அதை விடதுக்கும்.விலையும் டபுள் மடங்கு.இப்போதெல்லாம் அந்த மல்லியையே காண முடியவில்லை.யாராவது அந்த மல்லியைப்பார்த்தாக்க சொல்லுங்களேன்.
romba arumai... can feel the smell of those flowers...
ReplyDeleteBowl Jam Brownie
VIRUNTHU UNNA VAANGA
மணக்க மணக்க ஒரு சூப்பர் போஸ்ட் ...வீடியோ யார் கேட்டாங்கன்னு தெரியுமே ;)
ReplyDeleteஜாதிமல்லி வீட்டிலும் இருந்தது //அந்த பூவில் ஓரத்தில் பிங்க் shade இருக்கும் அழகு
என் தன்கைக்குதான் பூ வைக்கிறது கட்டுறது எல்லாம் பிடிக்கும் .
செண்டு மல்லி குண்டு மல்லி இதெல்லாம் கூட அழகு ..
சின்னதா ரோஜா மாறி இருக்குமே அந்த மல்லி எங்க வீட்டில் இருக்கும்
இப்ப ஹோம் சிக் (
ஜாதி மல்லி பூச்சரமே லா லா லா பாட்டு
ஆஹா ! இதை இதைத்தான் எதிர்பார்த்தேன், அதுவும் கோவைக்காரங்க பூவை நெருக்கமாக தொடுத்து ஜடை உச்சியில் பந்து மாதிரி சூடும் அழகே தனி.எனக்கும் முல்லை,ஜாதி முல்லை பிடிக்கும்,ஆனால் இந்த ஜாதி முல்லையை எங்க ஊரில் பிச்சிப்பூ என்று சொல்வோம்.ஆனால் மல்லிக்கு நிகர் மல்லி தான்..
ReplyDeleteபூ தொடுத்தது மிக அழகு.
poo vagaikalai patri oru pathivu , nandraga irunthadu
ReplyDeleteஎன்னடா வலை உலகம் கமகமன்னு மணக்குதே என்று யோசித்தேன்.
ReplyDeleteஉங்கள் பூப்பூவான பூ பற்றிய பதிவின் மணம் எங்களூருக்கும் வந்துவிட்டது, மகி!
மலர்களின் புகைப்படங்களுடன் மணம் கமழும் பதிவு அருமை!
ம்ம்ம் இப்படி படத்தை போட்டு ஆசைகாட்றீங்க....மணம் கமழும் பதிவு!!
ReplyDeleteMaligai Poo vai paarthu evalavu naal aachu.. Padivu mihavum arumai.. Ennaku maligai poo mathum kaatha varathu soo oosi vaithu neruka koothu vaithu kolven..
ReplyDelete//எங்க ஆத்துக்காரரை மல்லி பூ வாங்கி வர சொன்னால், முல்லை பூ வாங்கி வருவார்...// அட, காலிஃப்ளவர், வாழப்பூ இதெல்லாம் வாங்கிட்டு வரலையேன்னு சந்தோஷப் படுவீங்களா? அதவிட்டுப்புட்டு?!.... ஹிஹி! //
ReplyDeleteஇதை படித்து விட்டு சிரிச்சு கிட்டே இருந்தேன்...
மகி, நான் சொல்லற அடுக்கு மல்லி இப்படி இருக்காது.... ரோஜா பூ மாதிரியே இருக்கும்... ஊருக்கு போனால் போட்டோ எடுத்து போடறேன்...
எல்லா பூவும் தட்டுல ஜோரா இருக்கு...
மல்லிகை,முல்லை,பவளமல்லி என்று நல்ல நறுமணப்பதிவு. எனக்கும் முல்லை ரெம்பப்பிடிக்கும். இம்மூன்றுமே உள்ளது எங்கவீட்டில்.மல்லிகை பந்தலாக போட்டிருக்கோம்.
ReplyDeleteபூகட்டுவது வீடியோவா இணைத்து நல்லதொரு பதிவு மகி நன்றி.
ஆஆஆஆவ்வ் பூ மாலையில் ஓர் மல்லிகை... என்னை வா வா என்றதூஊஊஊஊஊஊஊஊஉ.. கண்குத்தால நான் எட்டிப் பார்க்கேல்லை மகி...
ReplyDeleteஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகுமெல்லோ.. அதை இப்ப உணருறன்.. உண்மையில் இந்த புளொக்கை ஓபின் பண்ண அப்பூடியே... மல்லிகை வாசம் வருவதுபொல ஒரு பீலிங்:)
ReplyDeleteஅழகான மாலை சூப்பரா இருக்கு.. படத்தைப் பெரிசாக்கிப் பார்த்தேன்ன்.. நீங்க அடுக்கு மல்லி எனச் சொல்வதைத்தான் நாங்க நந்தியாவட்டை எனச் சொல்வோம் என்றுதான் நினைக்கிறேன்ன்..
ReplyDeletesuper Mahi. This post brings back so many good memories.
ReplyDeleteManam Manakarthu (mayakarathum kooda)..
ReplyDelete"முல்லை..என் மனம் கவர்ந்த மலர்!" - எனக்கும் Mahi. எனக்கு பூ கட்ட தெரியாது :( எத்தனையோ தடவ அம்மா சொல்லி கொடுத்ருக்காங்க . ஆனா மரமண்டைல ஏறவே இல்ல. Hey actually your nephew did not scare us, video had no zoom-in zoom-out effect :). If there is one thing I miss other than Home in the US, it's flowers. Mom ties them beautifully like how you showed in the video. Nalla iruku Mahi.
ReplyDeleteமணம் மிகுந்த பகிர்வுகள்..
ReplyDeleteமல்லி வாசனையோட கம கமக்குது ...மகி.. பதிவு .
ReplyDeleteமஹி,
ReplyDeleteஉங்களுடைய ப்ளாக் ஐ திறந்த உடனேயே கும் என்று வாசனை அடித்தது.பார்த்தால் ஜாதி முல்லை.
எங்கள் வீட்டிலும் ஜாதி முல்லை கொடி உண்டு.
பறித்து கட்டி வைத்துக் கொள்வேன்.
ஜாதி முல்லைப் பதிவு நல்ல மணம்.
தொடருங்கள்.
ராஜி
முதலில் தாமதமான பதிலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDelete~~
இளமதி, நீங்க சொன்ன சென்ட் பேப்பர் நானும் பார்த்திருக்கேன்.
//மனசுக்கு பிடிச்ச விஷயத்தை அப்படியே மனமொன்றி ஈடுபடும்போது வாசிப்பதோ, எழுதுவதொ, செய்வதோ எதுவாகிலும்... அதுவாகவே மாறீடுட மாதிரி உணர்வு எனக்கிருக்கு..:) அப்படித்தான் இந்த மல்லிகை அழகும் வாசனையும்...:)// ரொம்ப சந்தோஷம்! ரசித்துப் படித்து கருத்துச் சொன்னமைக்கு நன்றி! :)
~~
சங்கீதா, பூ வாங்கி நீங்களே அடர்த்தியா கட்டிருங்க! வேற வழி?! :)
~~
ஸாதிகாக்கா, முத்துமல்லி நான் இப்பதான் கேள்விப் படுகிறேன்! ஊசிநூலால் கோர்த்த மல்லிகைப் பந்து ரொம்ப அழகா இருக்குமே!
வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி அக்கா!
~~
விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
ஏஞ்சல் அக்கா, வீடியோ கேட்ட ஆளைக் கண்டுபுடிச்சுட்டீங்க, வெரி குட்! ;)
ஜாதிமல்லிப்பூச்சரமே பாட்டு சேர்க்கலாம்னு நினைச்சேன், ஆனா நீளம் ரொம்ப அதிகமாகிருமேன்னு விட்டுட்டேன்.
ரோஜா மாதிரி மல்லியா? அவ்வ்வ்வ்வ்! :)
வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி அக்கா!
~~
ஆசியாக்கா, பிச்சிப்பூ என்றால் முல்லையா? இப்பத்தான் தெரியும் எனக்கு! வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி அக்கா!
~~
சரண்யா, நன்றிங்க!
~~
ரஞ்சனி மேடம், வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றிங்க!
~~
மேனகா, நன்றி!
~~
ஃபாயிஸா, படத்தில பூவைப் பார்த்து மனசை தேத்திகுங்க! :)லண்டன்ல மல்லிப்பூ கிடைக்குமே,நன்றி பாயிஸா!
~~
மூணு மூணா தொடுத்தா நெருக்கமா வருமே ......
ReplyDeleteஉல்லன்ல கட்டி இருக்கீங்களா ?
மூணு பூக்களாகத்தான் வைச்சு தொடுத்திருக்கேன்ங்க! :) இது சாதாரண நூல்லதான் கட்டியிருக்கிறேன். பூ நீளமான பூவா இருந்து, உல்லன் நூலில், காலில் கட்டினா மிக அழகா இருக்கும். பட்டையா அழகா இருக்கும்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
சுவாமிக்கு தொடுக்கும் போது காலில் கட்டக்கூடாது என்று நாற்காலியில் கட்டி தொடுத்தால் மிக நெருக்கமாக வரும்.. கிராஸ்கட் ரோடு மல்லிகைப்பூ காலில்தான் கட்டுகிறார்களாம்..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
கனகாம்பாள்?
ReplyDelete