தேவையான பொருட்கள்
பழுத்த வாழைப்பழம் -1
ரவை-1/2கப்
மைதாமாவு-1/4கப்
சர்க்கரை -1/4கப்
பேக்கிங் சோடா-1சிட்டிகை
ஏலக்காய்(விரும்பினால்)-1
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஒன்றை தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
அதனுடன் ரவை-மைதா-பேக்கிங் சோடா-சர்க்கரை-ஏலக்காய்ப் பொடி இவற்றை சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவை குறைந்தது 2 மணி நேரங்களாவது ஊறவேண்டும். [அதிக நேரம் ஊறினாலும் சுவை நன்றாக இருக்கும். கரைத்து குளிர்சாதனப்பெட்டியில் 8-9 மணி நேரங்கள் வைத்தும் உபயோகிக்கலாம்.]
எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து கச்சாயக் கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போடவும்.பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு ஆறவைத்து பரிமாறவும்.
இந்தக் கச்சாயம் அறை வெப்பநிலையில் 1-2 நாட்கள் நன்றாக இருக்கும். பழசானால்தான் சுவை அதிகரிக்கும். முதல் நாள் செய்து அடுத்த நாள் சாப்பிட்டுப் பாருங்க..உங்களுக்கே தெரியும்! :)
குறிப்பு
வாழைப்பழத்தின் சுவையே போதுமானதாக இருந்ததால் நான் ஏலப்பொடி சேர்க்கவில்லை.
மாவில் சர்க்கரை சேர்த்து கரைத்திருப்பதால் கச்சாயம் சீக்கிரம் சிவக்கும். கவனமாக கருக விடாமல் எடுக்கவேண்டும்.