ஆம்லெட் செய்வது என்ன பெரிய கம்ப சூத்திரமா? இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா?? என்று பெரும்பாலானவர்கள் எண்ணினாலும்....அப்படி என்னதான் இருக்குன்னு படிச்சுப்பார்க்க ஒரு க்யூரியாஸிட்டியோட எட்டிப்பார்க்கிறதுக்கு பெரிய டாங்க்ஸூ!! :))))))
அது பாருங்க, இந்த ஆம்லெட் செய்யறது ஈஸியான வேலைதான், தோசைக்கல்ல காயவச்சோமா, அதுக்குள்ள வெங்காயத்தை நறுக்கினோமா, முட்டைய ஒடச்சு கலக்கினோமா..சுட்டு சாப்ட்டோமானு அஞ்சு நிமிஷத்தில முடியற வேலைதான். ஆனா இன்னிக்கு அதில ஒரு ஷார்ட்கட் மெதட் உங்களுக்கெல்லாம் சொல்லித்தரப்போறேன்(!!!??!! )..ஓகே ரெடி, ஸ்டார்ட் மீசிக்!!
ஆம்லெட் செய்யற வேலை ஈஸியா இருந்தாலும் அதில மீ ஃபேஸ் பண்ணற ஒரு சில டிஃபிகல்டீஸ் ஃபார் யுவர் ரெஃபரன்ஸ் :
1. எவர் சில்வர் கிண்ணத்தில் முட்டைய உடைச்சு ஊத்தி ஸ்பூன் , ஃபோர்க் அல்லது விஸ்க்-ஆல முட்டைய கலக்கினா என்னோட அழகான கிண்ணங்கள் எல்லாம் காயமாகிருது யுவர் ஹானர்!!
...சரின்னு இல்லாத மூளைய கசக்கி உலுக்கி, கண்ணாடி கிண்ணங்கள்லதான் முட்டைய உடைச்சு கலக்கணும்னு வீட்டுல ஒரு ரூல் போட்டாச்சுன்னு வைங்க.
2. இப்ப அடுத்த பிரச்சனை..முட்டை கலக்கின கிண்ணத்தை கழுவி வைக்கிறது. என்னதான் ஆம்லெட்ட ருசிச்சு சாப்ட்டாலும் இந்த முட்டைக்கிண்ணத்தை கழுவுறது மீ-க்கு புடிக்காத வேலை...அந்த சுமெல் (!!??@@) ரொம்ப கஷ்டமா இருக்கும் கழுவி வைக்கிறதுக்குள்ள...!!
சரி, வெங்காயமிளகாயே போடாம செய்யலாம்னா நல்லா நாலு முழம் வளத்தி வைச்சிருக்க நாக்கு அது போதாது, போதாதுன்னு மல்லுக்கட்டுது. அவசரத்துக்கு எப்பவாவது அப்படியே சாப்பிடலாம், ஆனா ஒவ்வொருக்காவும் ப்ளெயின் ஆம்லெட்டே சாப்பிட போரடிக்குதுல்ல? நீங்க என்ன சொல்றீங்க?
இப்படியான தலையாய பிரச்சனைகளால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த சோம்பேறி டெக்னிக் ஃபார் ஆம்லெட். ஓகே, போதுமான முன்னுரை குடுத்தாச்சு, வாங்க ஆம்லெட் போட போலாம்!!
அடுப்ப ஆன் பண்ணி, தோசைக்கல்ல வைச்சுட்டு கொஞ்சம் வெங்காயம், ஒரு பச்சைமிளகாயை பொடியா கட் பண்ணிக்குங்க. அதுக்குள்ள கல்லு காய்ஞ்சிருக்கும். ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் டைரக்ட்டா தோசைக்கல்லயே நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாயைப் போடுங்க...
கொஞ்சம் உப்பையும் தூவி நல்லா வதக்குங்க. வெங்காயம் வதங்கினதும் முட்டைய டமால்னு உடைச்சு வெங்காயத்து மேல ஊத்துங்க...
கையோட சட்டுவத்தில முட்டைய கலக்கி, வெங்காயமிளகாயோட சேர்ர மாதிரி கலந்துடுங்க..
அப்புறம், இன்னுங்கொஞ்சம் எண்ணெய் ஊத்திட்டு, மிளகுத்தூளையும் தூவிருங்க..
ஒரு புறம் வெந்ததும், திருப்பிப்போட்டு அடுப்பை ஆஃப் பண்ணிருங்க. கல்லு சூட்டிலயே அடுத்த பக்கம் பதமா வெந்துரும். (ஆம்லெட்டோட மறுபக்கத்தை பாக்கறதுக்குள்ள, "பார்க்க அப்பெடைஸிங்-ஆவே இல்லையே!!" அப்புடின்னெல்லாம் யோசிக்கக்குடாது..கர்ர்ர்ர்ர்ர்!!)
சில விநாடிகளில் ஆம்லெட் ரெடி...தட்டில வச்சு சுடச்சுட சாப்பிடுங்க.
எப்புடி நம்ம ஷார்ட்கட்டு?? இதை விட வேற எதாச்சும் குறுக்கு வழி உங்க கைவசமிருந்தா அதையும் சொல்லுங்க!! ;)