Thursday, February 2, 2017

ஐவரானோம்..!!

38 திங்களுக்கு முன்னம் 
எங்களுக்கு ஒரு பதவி உயர்வைத் தந்து 
எங்கள் வாழ்வென்னும் இசைப்பயணத்தில் 
லயம் இணைந்தது! 
:) 
நாட்களும் வருடங்களும் கணப்பொழுதில் ஓடி மறைய...
என் கைக்குள் அடங்கியிருந்த குட்டிக்கை மெல்ல மெல்ல
ஓடி ஆடித் திரிந்து..
சின்னஞ்சிறு குழந்தை 
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து..
எனக்கு நல்லதொரு நட்பாய்ப் பரிமாணமெடுக்க...
இதயத்தின் ஒரு மூலையில் என் குட்டிப் பெண்,
 குழந்தைமை மறைந்து சிறுமியாய் மாறுகிறாளே என்ற சிறு ஆதங்கம் மெல்லியதாய்த் தோன்ற ஆரம்பிக்கையில்..
உன் ஏக்கத்தைப் போக்குகின்றேன்..
உங்கள் வாழ்க்கையில் லயத்துடன் ஸ்வரமும் சேரட்டும் 
என்று இறைவன் புன்னகைக்க..
எங்கள் குடும்பத்தில் தன் குட்டிப்பாதங்களைப் 
பதித்திருக்கின்றாள் எங்கள் இரண்டாவது தேவதை!!!
ஒருவர் இருவரானோம்..
எங்கள் நாலுகால்ப் பிள்ளையுடன் மூவரானோம்...
லயாவுடன் நால்வரானோம்..
இப்போது, 
ஸ்வரா-வுடன் ஐவராகி இருக்கிறோம்!!! 
:)))))) 
மழையின் துளியில் லயம் இருக்குது..
துளிகள் இணைந்து ஸ்வரம் பிரிக்குது!! 
வாழ்க்கை இனி இன்னும் இனிக்கப்போகுது!! 
:))))) 
We are Blessed with Another Beautiful Girl!! 
~~~~~
வழமை போல உங்களனைவரின் ஆசிகளை நாடி..
லயா, ஸ்வரா, ஜீனோ, அருண் 
மகி 

42 comments:

  1. Replies
    1. நன்றி டிடி அண்ணா! :)

      Delete
  2. ஸ்வரமும் லயமும் இணைந்து எந்நாளும் உங்கள் குடும்பம் ஓர் இனிய பாடலாக ஒலித்துக் கொண்டேயிருக்க வாழ்த்துக்களும், ஆசிகளும் .

    ReplyDelete
    Replies
    1. ராஜி மேடம், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

      Delete
  3. Congratulations on the coming of your new angel Mahi Family,,
    Wishing loads of happiness joy and Gods Blessings ..

    ReplyDelete
    Replies
    1. அக்கா, தேங்க் யூ! :) இங்கே வாழ்த்தியதுமில்லாம உங்க ப்ளாக்ல, ஃபேஸ்புக்ல என்று செய்தியை சிட்டுக்குருவியாய்ப் பகிர்ந்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்! வெறும் தேங்க்யூ-ல எல்லாம் அதை சொல்லீர முடியாது! ஐ யம் வெரி ஹேப்பி!! :D :)

      Delete
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள் பா. குழந்தைக்கு எல்லா வளமும் கிடைத்து நலமுடன் இருக்கட்டும்.. நீங்களும் உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதி! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும், அக்கறையான வார்த்தைகளுக்கும்! ரொம்ப சந்தோஷம்!! :)

      Delete
  5. மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள் மகி.மகிழ்ச்சிக்கு இனி சொல்லவா வேணும்.விரைவில் உடல் வலிகளில் இருந்து தேறி ஐவரும் கூடி கும்மியடிக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஜினி! //ஐவரும் கூடி கும்மியடிக்க வாழ்த்துகிறேன்.// அவ்வ்வ்வ்...!! ;) :) கும்மியடிக்க கேட்கவா வேணும்...நம்ம உடல்நலம் எப்படி இருந்தாலும் குட்டீஸ் போடற ம்யூசிக்குக்கு நம்ம கும்மியடிக்கத்தானே வேணும்!! அதெல்லாம் ஆரம்பமாகிருச்சு. கி கிக் கி கி!! ;)

      Delete
  6. இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நாலு கால் குழந்தையுடன் இரண்டு கால் கொண்ட செல்வங்கள் சேரும் போது அந்த குடும்பத்தில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை அந்த மகிழ்ச்சி என்றென்ரும் நிலைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அவர்கள் உண்மைகள்! கரெக்டாச் சொன்னீங்க, ஜீனோவுக்கு இன்னும் குட்டித் தங்கை மேல இருக்க க்யூரியாசிட்டி தீரலை!! அவர்மீதான என்னோட கவனிப்பு கொஞ்சம் கம்மியாகிடுச்சு...:-| அதனால தாத்தா பாட்டி கூட ஐக்கியமாகியிருக்கார் தற்போதைக்கு! :) சீக்கிரம் சரி பண்ணிருவோமில்ல! B-)

      Delete
  8. வாழ்த்துக்கள் மகி, உங்கள் ஐவரின் மகிழ்ச்சியும் இன்றுபோல் என்றும் லயமும், ஸ்வரமுமாக இனிக்க எங்களின் வேண்டுதல்கள் !

    ReplyDelete
    Replies
    1. சித்ராக்கா, நன்றி, நன்றி, நன்றி! :)

      Delete
  9. குழந்தைக்கு ஆசிகள்.

    லயா, ஸ்வரா, ஜீனோ, அருண்
    &
    மகி ஐவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. கோமதிம்மா, வருகைக்கும் வாழ்த்துகள் & ஆசிகளுக்கும் நன்றிம்மா!!

      Delete
  10. Congratulations Pa.
    Uma

    ReplyDelete
  11. Replies
    1. நன்றீங்க வெங்கட் ஜி! :)

      Delete
  12. Replies
    1. கிரேஸ், ரொம்ப நன்றிங்க!

      Delete
  13. Replies
    1. நன்றிங்க ஶ்ரீராம் அண்ணா...நான் பலநாளா எங்கள் ப்ளாக்-ல (கமெண்ட் போட நேரம் அனுமதிக்காத காரணத்தால்) சைலண்ட் ரீடர்..அதனால் நீங்க, துளசிதரன் & கீதா அவர்கள் எல்லாரும் எனக்கு ரொம்ப பரிச்சயமான ஆட்கள்! உங்களுக்குதான் நான் புதுசா இருப்பேன். இருந்தாலும் இங்கே வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்!

      Delete
  14. அட! நாலுகால் செல்லமும் இருக்கிறதா! சூப்பர்! புது வரவிற்கு வாழ்த்துகள்! லயா ஸ்வரா பேர் மிக மிக அருமை!! ம்கிழ்ச்சி!! என்றென்றும் லயம் ஸ்வரமுடன் ஸ்ருதியும் அதான் ஜுனோ.. மீட்டி இனிய இசை என்றென்றும் பொழிய வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் துளசி அண்ணா & கீதா அக்கா, வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றிகள்! நீங்களெல்லாம் எனக்கு பழகிய முகம் போல...நேரமெடுத்து இங்கே வந்து வாழ்த்துச் சொன்னதுக்கு மிக்க நன்றி! :)

      பிள்ளைகளின் பேர் செலக்‌ஷன் ...முதல் பொண்ணுக்கு நான் பேர் தேர்ந்தெடுத்தேன், இரண்டாமவருக்கு அவர் செலக்ட் பண்ணினார்! ஜீனோ..அஃப்கோர்ஸ், எழுத்தாளர் சுஜாதா வைத்த பேர், நாங்க அதை உபயோகித்துட்டோம்! ;) :)

      Delete
  15. Mahi..surprise news.. very happy to hear. take care dear. Almighty bless always.

    ReplyDelete
    Replies
    1. ஆசியாக்கா, தேங்க் யூ!! சர்ப்ரைஸ் ஸ்வீட்டா இருக்கணும்ல அதான் ரகசியமா வைச்சுட்டேன்! :) ;) நன்றி அக்கா!

      Delete
  16. மனம் கனிந்த வாழ்த்துகள்... ஸ்வரா... அருமையான பெயர்...

    ReplyDelete
    Replies
    1. நன்றீங்க கார்த்திக்! ஸ்வரா-வின் அப்பா செலக்ட் செய்த பெயர்..எங்களோட ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் எல்லாத்தையும் நிறைவு செய்ததால் அதையே வைச்சாச்சு..பெரியவங்க தான் பாப்பா பேரைச் சொல்ல கொஞ்சம் சிரமப்பட்டாங்க ஆரம்பத்தில, இப்ப பழகியாச்சு! :)

      Delete
  17. Replies
    1. நன்றீங்க அனு காவ்யா!

      Delete
  18. வாழ்த்துக்கள் மகி...

    ReplyDelete
  19. Hearty congratulations, Mahi! Sweet Surprise!

    ReplyDelete
    Replies
    1. :) உங்களுக்கும் சர்ப்ரைஸா??! எனக்கு இந்தமாதிரியான ஸ்வீட் சர்ப்ரைஸ் கண்ணில் படும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்..அதை உங்களுக்கும் இந்த முறை கொடுக்க முடிந்ததில் மீ ஹேப்பி!! :) :D
      நன்றிங்க!!

      Delete
  20. Vaazhthukkal Mahi.....😊
    Kuttikkum my heartly Blessings ....😋

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க இனியா!! புதுசா இருக்கீங்க..இல்லை, எனக்கு தெரிந்தவர்தானோ..பேர் மட்டும் புதுசோ என டவுட்டா இருக்கே!! ;) :)

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails