Sunday, March 10, 2019

கடலை வறுக்கலாமா? :)

U.S. வந்து பலநாட்கள் நம்ம ஊர் வேர்க்கடலை கிடைக்கவில்லை/ கிடைக்குமிடம் எனக்குத் தெரியவில்லை..ஹிஹி!! வால்மார்ட்-ல் கிடைக்கும் Planters ப்ராண்ட் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையையே பலகாலம் உபயோகித்தேன். 

இந்தியன் ஸ்டோர்ஸில் கடலை பேக்கட்டை பார்த்திருந்தாலும், பச்சைக்கடலை..அதை வாங்கி வறுக்கவேண்டுமே என்ற கவலை (கவனிக்க..12 வருடங்கள் முன்பு! ;))..அதான் வால்மார்ட்டில வறுத்து தோல் நீக்கியதே கிடைக்கிறதே என வாங்கிய காலங்கள்!! பிறகொருமுறை வாங்கித்தான் பார்ப்போமே என வாங்கி உப்புத்தண்ணீர் தெளித்து வறுத்து வைத்திருக்கிறேன்.,2010 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அப்போது நேரம் நிறைய்ய்ய்ய இருந்தது. பிறகு பெர்ஷியன் கடையில் வறுத்த கடலை கிடைத்தது..அது வால்மார்ட் கடலையை விட கொஞ்சம் பெட்டர்!! அதனால் அங்கே வாங்க ஆரம்பித்தாயிற்று.

மறுபடி ஒரு சின்ன கொசுவர்த்தி...சிறுவயதில் பக்கத்தில் இருக்கும் மளிகைக்கடை (எங்க சொந்தக்காரங்க கடைதான்!! )யில் நாலணாவுக்கு "கள்ள" வாங்கி அதை அரைமணி நேரம் நிதானமாக சோடனைகள் செய்து சாப்பிடுவேன்..முதல்ல கடலையைத் தேய்த்து தோலை எல்லாம் ஊதி அப்புறப்படுத்திவிட்டு, பிறகு இரண்டிரண்டாகப் பிரித்து, பிறகு அதிலே இருக்கும் குட்டி கொண்டையையும் பிரித்து முதலில் அதைச் சாப்பிட்டுவிட்டு பிறகு ஒவ்வொன்றாக கடலையைத் தின்பது!! :) :) :)  அந்தக் கடலையின் ருசி இங்கே கிடைக்காததால் கடலையை சட்னி, புளிசாதத்துக்கு உபயோகிப்பதோடு நின்றுபோனது.  

2013-ஆம் ஆண்டு மாமனார்-மாமியார் இங்கே வந்திருந்தபோது மறுபடி கடலை தேடல் ஆரம்பமாயிற்று..இருவரும்  வேர்க்கடலையை விரும்பிச் சாப்பிடுவார்கள், அவர்கள் மகனும் அப்படியே என அப்போதான் எனக்குத் தெரியவந்தது வேற கதை!! மாமியாருக்கு நான் வாங்கும் பெர்ஷியன் கடலை ருசி பிடிக்கவில்லை..வேறு கிடைக்குமா கிடைக்குமா எனக் கேட்டு இந்தியன் ஸ்டோரில் மறுபடி பச்சைக்கடலை வாங்கி வந்தேன். அதனை மைக்ரோவேவ்-ல வறுக்கலாமென எங்கோ இண்டர்நெட்டில் படித்தது..எக்ஸ்பெரிமெண்ட்ஸ் செய்து மெல்ல மெல்ல என்ன செய்ய வேண்டுமென பிடிபட்டது.. அப்போதிருந்து இதே முறைதான். என்ன தான் சொல்லுங்க, நம்ம ஊர் சிறு வேர்க்கடலையின் ருசி அமெரிக்காவின் மெகா சைஸ் வேர்க்கடலைல இல்லவே இல்லை!!   

இவ்வளைவையும் பொறுமையாப் படிச்சுட்டீங்க, அப்படியே கடலையையும் வறுத்துடலாம், வாங்க..

இது இங்கே இண்டியன் ஸ்டோரில் வாங்கிய பச்சைக்கடலை..
 பேக்கட்டை பிரிச்சு, ஒரு மைக்ரோவேவ் பவுல் (உயரம் குறைவான, அகலமான பவுல் அல்லது ப்ளேட் நன்று) இல் எடுத்துக்கொள்ளவும். ஆர்வக்கோளாறுல அதிகமா எடுத்துகிட்டீங்கனா அதுக்கேற்ற மாதிரி நேரம் அதிகரிக்கும். நான் எடுத்திருப்பது  ஏறத்தாழ ஒரு கப். மைக்ரோவேவில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். மைக்ரோவேவ் ஆஃப் ஆன உடனே அதனைத் திறக்காமல் சில நிமிடங்கள் கழித்து திறக்கணும்..பாத்திரச்சூட்டில் கடலை இன்னும் வறுபட்டுக்கொண்டிருக்கும்.
 2 நிமிடங்கள் வறுபட்ட கடலை...வெளியே வைத்து ரூம் டெம்பரேச்சருக்கு ஆறிய பின்னர் கலந்துவிட்டு, மீண்டும் 2 நிமிடங்கள் வைக்கவேண்டும். 
அதே போல ஆறவிட்டு, கலந்துவிட்டு மீண்டும் 2 நிமிடங்கள்.. 
நன்றாக ஆறிய பிறகு, சுவை பார்த்துக்கொண்டு விரும்பினால் மீண்டும் ஒரு நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்து ஆறவைத்தால், 
சுவையான வறுத்த கடலை ரெடி..
குறிப்பு 
இது என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு..ச்சீ,ச்சீ...ஆர்ட்டிஸ்ட்களுக்கு வசதியான மெத்தட்..மைரோவேவ்-ல இரண்டு நிமிஷம் முடிந்ததை மறந்தே போய் சிலமணி நேரங்கள் விட்டாலும் பாதகமில்லை...ஆடி அசைந்து 2 நாட்கள் நிதானமாக வறுத்தாலும் ஓகேதான்.. ஸ்டவ் பக்கத்திலேயே நின்னுகிட்டு கறுகாமப் பாத்து பாத்து வறுக்கும் டென்ஷன் இல்ல.. Oven- ல ரோஸ்ட் பண்ணியும் எடுக்கலாம் என்றாலும், நம்ம கவனக்குறைவா அவரை (oven) கவனிக்காமல் விட்டா மைக்ரோவேவ் மாதிரி அமைதியா இல்லாம, கடலையைக் கறுக்கி, கத்தி, புகை வரவச்சுன்னு ரெம்ப வேலை குடுப்பார்..ஸோ, மைக்ரோவேவ் இஸ் ஈஸி யு ஸீ!! ;) :) :D :D

12 comments:

  1. இண்டியன் ஸ்டோரில் உப்பு போட்ட வறுத்த கடலை ஏர் டைட் பேக்கில் கிடைக்கிறதே .....இந்தியாவில் இருந்து வந்ததுதான் அப்படி கிடைக்கவில்லை என்றால் நீயூஜெர்ஸிக்கு வீடு மாற்றி வந்துவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. இங்கே இந்தியன் ஸ்டோர்களில் பார்த்ததில்லைங்க..கடலைக்காக ஊரையே மாத்திடசொல்றீங்களா?? நல்லாதான் இருக்கு..!! :) :)

      Delete
  2. ஓவன்லயும் வறுக்கலாமேனு சொல்ல வந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க...நான் இங்கயே அப்ப்டித்தான் வறுப்பது. ஹிஹிஹி

    சூப்பர் மஹி!! உங்கள் கடலை வறுத்தல்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நமக்கு டிஸ்ட்ராக்‌ஷன் ரொம்ப ஜாஸ்தி கீதாக்கா..டெரிபிள் 2 ல இருக்க சின்னம்மிணி ரொம்ப பெண்ட நிமுத்தறாங்க..அதனால மைக்ரோவேவே போதும்னு இப்போதைக்கு இப்படியேதான் வறுக்கிறது. :)
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. கடலை இப்படி ஈசியா வறுக்கலாமா. நான் ரெடிமேட் கச்சாந்தான் இங்கு கிடைக்கிறது. பச்சை கடலை இருக்கா என பார்க்கனும். நேரம் மிச்சம் மைக்ரோவேவ் ல

    ReplyDelete
    Replies
    1. பாருங்க ப்ரியா...பச்சைக்கடலை நிச்சயம் இந்தியன் கடைகளில் கிடைக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

      Delete
  4. நல்லாத்தான் வறுத்திருக்கிறீங்க. நான் இதை எப்பவும் மொத்தமா வறுக்க மாட்டேன், தேவைப்படும்போது அளவா எடுத்து கொஞ்சம் எண்ணெY மி தூள் உப்பு சேர்த்து பிரட்டி மைக்குரோவே வ் ல வைப்பேன்... மொறு மொறு நறுந்று என வரும்:)..

    ReplyDelete
    Replies
    1. நானும் மொத்தமா வறுக்கிறதில்ல அதிராவ்..அப்பப்ப வறுப்பேன். எண்ணெய்,உப்பு மி.தூள் பிரட்டி??? ஓக்கே..செய்து பாத்திடறேன்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா! :)

      Delete
  5. Your style is so unique in comparison to other people I have read
    stuff from. Thanks for posting when you've got the
    opportunity, Guess I'll just book mark this web site.

    ReplyDelete
    Replies
    1. Anony..thanks for making my day! :)
      I do like to give just the cooking recipes but time to time my inner instinct gets really bored and try to write up "mokkai" like this and consoles itself!! haha!! :D

      Delete
  6. நல்ல ஐடியா... ஆனால் இங்க 10 ரூபாய்க்கு வறுகடலை தினம் கிடைக்கும். எதுக்கு இந்தக் கஷ்டம்?

    ReplyDelete
    Replies
    1. அது சரி!! ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை!! இது வறுகடலை கிடைக்காத எங்களைப் போன்ற ஆட்களுக்கு! :)

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails